clone demo

வியாழன், ஜனவரி 03, 2013

சங்கிரக பர்வம்! | ஆதிபர்வம் - பகுதி 2 ஈ

Sangraha Parva! | Adi Parva - Section 2d | Mahabharata In Tamil

(பர்வசங்கிரகப் பர்வம்)

பதிவின் சுருக்கம் : எட்டாவது முதல் பதினெட்டாவது பர்வங்கள் வரையிலான  சுருக்கங்கள்; பாரதம் படிப்பதன் பலன்...

"இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. {8வது பர்வம் - சுருக்கம்}. சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாகப் பணியமர்த்தப்பட்டது, திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு, போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமானப்படுத்த அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது, அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது, தண்டசேனன் மற்றும் தண்டன் மரணம்.


ஆபத்து என்றறிந்தும் கர்ணனிடம் தனித்து யுதிஷ்டிரன் போர் புரிவது, அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் கோபத்துடன் பேசிக்கொள்வது, கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. பீமன் துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இருதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது. மஹாபாரதத்தின் எட்டாவது {8} பர்வமான இந்தப் பர்வம் அறுபத்து ஒன்பது {69} பிரிவுகளில் [1] நாலாயிரத்து தொண்ணூற்று அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.

[1] கங்குலியில் கர்ண பர்வத்தில் 96 பகுதிகள் இருக்கின்றன.

அடுத்ததாக அற்புதமான பர்வமான சல்லிய பர்வம் {9வது பர்வம் - சுருக்கம்}. எல்லாப் பெரிய வீரர்களும் வீழ்ந்த நிலையில் மத்திர மன்னன் சல்லியன் கௌரவப்படைக்குத் தலைவனாக நியமிக்கப்படுகிறான். பல போர்வீரர்களின் போர்க்காட்சிகள் இந்தப் பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. சல்லியன், யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்தப் பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான். படையில் சிறு குழுக்களே எஞ்சியிருக்கத் துரியோதனன் தடாகத்துக்குச் சென்று தன்னைத் தண்ணீருக்கிடையில் மறைத்துக் கொள்கிறான். தந்திரத்தால் எப்படிப் பீமன் துரியோததனை இகழ்ந்த வார்த்தைகளால் பேசி {தடாகத்தைவிட்டு} வெளியே வர வைக்கிறான் என்ற விவரிப்பு வருகிறது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர் துவங்குகிறது, துரியோதனனை பீமன் தொடையில் அடித்து வீழ்த்துகிறான். இவை அனைத்தும் இந்தப் பர்வத்தில் வருகின்றன. மொத்தம் ஐம்பத்து ஒன்பது {59} பிரிவுகளில் [2] மூவாயிரத்து இருநூற்று இருபது {3220} பாடல்களில் {சுலோகங்களில்} வியாசர் இவற்றை விவரிக்கிறார்.

[2] கங்குலியில் சல்லிய பர்வத்தில் 65 பகுதிகள் இருக்கின்றன.

அஸ்வத்தாமன்
இதன் பிறகு வருவது பயமுறுத்தும் நிகழ்வுகள் கொண்ட சௌப்திக பர்வம் {10வது பர்வம் - சுருக்கம்}. பாண்டவர்கள் சென்றவுடன், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் தொடை உடைந்து, இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட துரோணரின் மைந்தன் {அசுவத்தாமன்} கோபங்கொண்டு "பாஞ்சாலர்கள், திருஷ்டத்யுமனன், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைக் கொல்லாமல் போர்க்கோலம் அகற்றுவதில்லை" என்று சபதமேற்கிறான். பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.

ஒரு பெரிய ஆலமரத்தடியில் அவர்கள் மூவரும் உட்கார்ந்திருக்கையில், ஓர் ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் காண்கின்றனர். இக்காட்சியைக் கண்ட அஸ்வத்தாமன், இதயம் நிறைந்த கோபத்தால் பாஞ்சாலர்களைப் பழி வாங்குவது என்று உறுதி செய்கிறான். பாஞ்சாலர்கள் கொட்டகையின் வாசலை ஓர் இராட்சசன் காவல் காக்கிறான். அசுவத்தாமனின் போர்க்கருவிகள் அவனிடம் செயலிழப்பதைக் கண்டு மனத்தில் முக்கண் ருத்திரனை வழிபட்டு அவனைக் {ருத்திரனைக்} குளிர்விக்கிறான்.

பிறகு கிருதவர்மனையும், கிருபரையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்கள் அனைவரையும், திருஷ்டத்யுமனுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரையும் அவர்களது உறவினர்களுடன் சேர்த்துக் கொல்கிறான். ஐந்து பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் இறக்கின்றனர். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், தனது கதையை எடுத்துக் கொண்டு அசுவத்தாமனைத் தேடுகிறான். பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி உத்தரவு கொடுத்து தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான்.

கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு "இது நடக்காது" என்று சொல்லி அந்தக் கணையை அர்ஜுனனைக் கொண்டு செயலிழக்க வைக்கிறான். துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் மாறி மாறி அசுவத்தாமனுக்குச் சாபம் கொடுக்கின்றனர். அசுவத்தாமனிடம் அவனது தலையில் பிறப்பிலிருந்தே இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, அவனைத் துரத்தி விட்டு, துயரத்தில் இருக்கும் திரௌபதியின் முன்பு தங்கள் வெற்றி குறித்துப் பெருமை கொள்கின்றனர் பாண்டவர்கள். இப்படித்தான் பத்தாவது {10} பர்வமான சௌப்திக பர்வம் சொல்லப்படுகிறது. மொத்தம் பதினெட்டு {18} பிரிவுகளில் [3] எண்ணூற்று எழுபது {870} பாடல்களில் {சுலோகங்களில்} சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் வியாசர். இந்தப் பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.

[3] கங்குலியில் சௌப்திக பர்வத்தில் 18 பகுதிகள் இருக்கின்றன.

இதன்பிறகு துயர்நிறைந்த ஸ்த்ரீ பர்வம் {11வது பர்வம் - சுருக்கம்} சொல்லப்படுகிறது. மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த, தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட திருதராஷ்டிரன் முன்னால் "இது பீமன்" என்று கிருஷ்ணன் ஓர் இரும்புச் சிலையைக் காட்ட, பீமன் மீதிருந்த கோபத்தால் அந்தச் சிலையை இறுக பற்றித் தூள் தூளாக்குகிறான் திருதராஷ்டிரன். விதுரன் திருதராட்டிரனின் கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி அறிவுறுத்துகிறான்.

அடுத்து திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்குச் செல்லும் காட்சி விவரிக்கப்படுகிறது. காந்தாரியும் திருதராஷ்டிரனும் கோப மிகுதியால் மயக்கம் கொண்டு நினைவிழப்பது. திரும்பிவராத தங்கள் கணவர்களைத் தேடிக் கொண்டு க்ஷத்திரியப் பெண்மணிகள் போர்பூமிக்கு வந்து சடலங்களைத் தேடுவது. கிருஷ்ணன், காந்தாரிக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வது. சடலங்களுக்கு யுதிஷ்டிரன் இறுதிச்சடங்கு செய்வது, குந்தி கர்ணனைத் தனது மகன் என்று வெளிப்படுத்துவது. இவையனைத்தும் இந்தப் பதினொராவது பர்வமான ஸ்த்ரீ பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. உணர்வுள்ள நெஞ்சங்களில் கண்ணீரை வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு {27} பிரிவுகளில் [4] எழுநூற்று எழுபத்தைந்து {775} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.

[4] கங்குலியில் ஸ்திரீ பர்வத்தில் 27 பகுதிகள் இருக்கின்றன.

அம்புப் படுக்கையில் நீதி உரைக்கும் பீஷ்மர்
{12வது சாந்தி பர்வத்தில் - பீஷ்ம நீதி} பனிரெண்டாவதாகச் சாந்தி பர்வம் {12வது பர்வம் - சுருக்கம்} வருகிறது. யுதிஷ்டிரன் தனது உறவினர்களைக் கொன்றதைக் குறித்து வருந்துவது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடியே அரசனின் கடமைகளை விளக்கி, பீஷ்ம நீதியை அளிப்பது ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. மொத்தம் முந்நூற்று முப்பத்தொன்பது {339} பிரிவுகளில் [5] பதினாலாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு {14732} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.

[5] கங்குலியில் சாந்தி பர்வத்தில் 365 பகுதிகள் இருக்கின்றன.

வரிசையில் அடுத்தது அனுசாசன பர்வம். {13 வது பர்வம் - சுருக்கம்}. பீஷ்ம நீதியைக் கேட்டு யுதிஷ்டிரன் எப்படித் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டான் என்றும், நீதிகளுக்கும், தர்மங்களுக்கும், பொருளீட்டு தர்மங்களுக்குமான விதிகள், தனிப்பட்ட கடமைகள் ஆகியன பற்றி இந்தப் பர்வத்தில் அலசப்படுகின்றன. இந்தப் பர்வத்தில் அந்தணர்கள் மற்றும் பசுக்களின் பெருமைகள் பலவாறாக அலசப்படுகின்றன. காலம் மற்றும் இடத்தின் பரிமாணங்கள் குறித்தும் இந்தப் பர்வம் விரிவாக அலசுகிறது. பீஷ்மர் நல்லுலகம் செல்வது இந்தப் பர்வத்தில் வருகிறது. இந்தப் பதிமூன்றாவது பர்வத்தில் பலதரப்பட்ட மனிதர்களின் கடமைகள் குறித்த நிறைய விளக்கங்கள் உள்ளன. நூற்று நாற்பத்தாறு {146} பிரிவுகளில் [6] எட்டாயிரம் {8000} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.

[6] கங்குலியில் அனுசாசன பர்வத்தில் 168 பகுதிகள் இருக்கின்றன.

அதன்பிறகு வருவது பதினான்காவது பர்வமான அஸ்வமேதிக பர்வம் {14 வது பர்வம் - சுருக்கம்}. இதில் சம்வர்த்தம் மற்றும் மருத்தத்தின் அற்புதமான கதை விவரிக்கப்படுகிறது. பாண்டவர்கள் தங்கப் புதையலைக் கண்டடைவது. அஸ்வத்தாமனின் கணையால் கருவில் எரிந்து போன குழந்தையைக் கிருஷ்ணன் மீட்டெடுத்துப் பரிக்ஷித்தாகப் பிறப்பிப்பது, குதிரை வேள்விக்கான போரில் அர்ஜுனனின் பல நாடுகளைப் பிடிப்பது. சித்திராங்கதையின் {அர்ஜுனனுக்குச் சித்திராங்கதைக்கும் பிறந்த} மைந்தன் பப்ருவாகனனுடன் அர்ஜுனன் போர். குதிரை வேள்வியில் கீரிப்பிள்ளையின் செயல்பாடு ஆகியன அஸ்வமேதிக பர்வத்தில் வருகின்றன. நூற்று மூன்று {103} பிரிவுகளில் [7] மூவாயிரத்து முன்னூற்று இருபது {3320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.

[7] கங்குலியில் அஸ்வமேதிக பர்வத்தில் 92 பகுதிகள் இருக்கின்றன.

அதன்பிறகு வருவது பதினைந்தாவது பர்வமான ஆசிரமவாசிகா பர்வம் {15வது பர்வம் - சுருக்கம்}. திருதராஷ்டிரன் நாட்டைத்துறந்து, தனது மனைவி காந்தாரி மற்றும் விதுரனுடன் கானகமேகுவது. மூத்தவர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் பிருதை {குந்தி} இதைக் கண்டு தனது மைந்தர்களின் {பாண்டவர்களின்} அவையைத் துறந்து அவர்களுடன் தானும் சேர்ந்து கானகமேகுவது. தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் ஆவிகளுடன் மன்னன் திருதராஷ்டிரன் உரையாடுவது ஆகியன ஆசிரமவாசிக பர்வத்தில் வருகின்றன. அதன்பிறகு கவலைகளை விடுத்து புண்ணியமளிக்கும் காரியங்களில் திருதராஷ்டிரன் இறங்குவது. விதுரன் அருள்நிலையை அடைவது. கவல்கணனின் புதல்வன் சஞ்சயன் இந்தப் பர்வத்தில் அருள் நிலையை அடைகிறான். யுதிஷ்டிரன் நாரதரின் வருகையால் விருஷ்ணி குல {யாதவக் குல} அழிவைப் பற்றி அறிகிறான். இந்தப் பர்வம் நாற்பத்திரண்டு {42} பகுதிகளில் [8], ஆயிரத்து ஐநூற்று ஆறு {1506} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்படுகிறது.

[8] கங்குலியில் ஆசிரமவாசிகா பர்வத்தில் 39 பகுதிகள் இருக்கின்றன.

அதன்பிறகு வலிநிறைந்த நிகழ்வுகள் கொண்ட மௌசல பர்வம் {16வது பர்வம் - சுருக்கம்}. இதில், சிங்கம் போன்ற இருதயம் கொண்டு, பல போர்களங்களில் பெற்ற விழுப்புண்களை மார்பில் கொண்ட, விருஷ்ணி குல {யாதவக் குல} நாயகர்கள், ஓர் அந்தணனின் சாபத்தால், குடிவெறியில் ஒருவரை ஒருவர் கோரைப் புற்களால் அடித்துக் கொண்டு உப்புக்கடலருகே அழிந்து போதல், பலராமரும் கிருஷ்ணனும் தங்கள் குலம் அழிந்து போவதைக் கண்டுவிட்டு அவர்கள் நேரமும் வந்ததெனத் திரும்புதல். அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று விருஷ்ணிகள் இல்லாத நகரத்தின் வெறுமையைக் கண்டு துயருறுதல். வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு கடற்கரை அருகே தாங்கள் குடித்த இடத்திலேயே மாண்டு கிடக்கும் விருஷ்ணிகளின் சடலங்களைத் தகனம் செய்துவிட்டு, கிருஷ்ணன் மற்றும் பலராமன் ஆகியோரது சடலங்களைத் தகனம் செய்கிறான் அர்ஜுனன். அர்ஜுனன், துவாரகையில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரும் வேளையில் கள்ளர்களிடம் அகப்படுகிறான். தனது காண்டீவம் மற்றும் தனது தெய்வீகக் கணைகள் செயலிழந்ததை உணர்கிறான். வியாசரிடம் ஆலோசனை செய்து, யுதிஷ்டிரனிடம் சென்று சன்யாச தர்மத்தை ஏற்கப்போவதாகச் சொல்கிறான். இதுதான் பதினாறாவது {16} பர்வமான மௌசல பர்வம். எட்டு {8} பகுதிகளில் [9] முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வத்தை விளக்குகிறார் வியாசர்.

[9] கங்குலியில் மௌசல பர்வத்தில் 8 பகுதிகள் இருக்கின்றன.

அடுத்தது, மஹாபிரஸ்தானிகா {17வது பர்வம் - சுருக்கம்}, பதினேழாவது பர்வம் {17}. மனிதர்களில் சிறந்தவர்களான பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் துறந்து திரௌபதியிடம் சென்று கடைசி நெடும்பயணத்திற்கு (மஹாபிரஸ்தானம்) அழைக்கின்றனர். கடலில் சிவப்பு நீரில் இருந்து வெளிப்படும் அக்னியை சந்திக்கின்றனர். அக்னி தேவனின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் அக்னியை வலம் வந்து, தெய்வீக ஆயுதமான காண்டீபத்தை அவனிடம் ஒப்படைக்கிறான். ஒருவர் பின் ஒருவராக விழும் தனது தம்பிகளையும், அடுத்து விழும் திரௌபதியையும் விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் யுதிஷ்டிரன் செல்கிறான். இதுவே மஹாபிரஸ்தானிக பர்வமாகும். இது மூன்று {3} பகுதிகளில் [10] முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்படுகிறது.

[10] கங்குலியில் மஹாபிரஸ்தானிகா பர்வத்தில் 3 பகுதிகள் இருக்கின்றன.
நாயின் வடிவில் வந்து யுதிஷ்டிரனைச்
சோதித்த யமதர்மராஜன்
அடுத்து வரும் பர்வம் இயல்புக்குமீறிய தெய்வீக நிகழ்வுகள் கொண்ட சுவர்க்க பர்வம் {18வது பர்வம் - சுருக்கம்}. யுதிஷ்டிரனை அழைத்துப் போக தெய்வலோகத் தேர் வந்தும், தன்னுடன் கடைசி வரை வந்த நாய் மீது எற்பட்ட அன்பால், அதில் ஏற மறுக்கிறான். யுதிஷ்டிரனின் நேர்மையை மெச்சி தனது மாற்றுருவத்தைக் களைத்து தர்மதேவன் காட்சி அளிக்கிறான்.அதன் பிறகு நல்லுலகம் ஏறும் வழியில் மிகுந்த வலியை உணர்கிறான் யுதிஷ்டிரன். தெய்வீகத் தூதுவர் நரகத்தைக் காண்பிக்கின்றனர். யமனின் ஆட்சிக்குட்பட்ட இடத்தில் யுதிஷ்டிரன் தனது தம்பிகளின் இருதயம் பிளக்கும் அழுகுரல்களைக் கேட்கிறான். பிறகு தர்மதேவதையும் இந்திரனும் பாவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் காண்பிக்கின்றனர். அதன்பிறகு கங்கையில் மூழ்கி தனது பூவுடலைத் துறந்து இந்திரன் முதலான தேவர்களுடன் இன்பமயமாக இருக்கிறான் யுதிஷ்டிரன். இந்தப் பர்வம் ஆறு {6} பகுதிகளாக [11] இருநூற்று ஒன்பது {209} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்படுகிறது.

[11] கங்குலியில் சுவர்க்க பர்வத்தில் 6 பகுதிகள் இருக்கின்றன.

மேற்குறிப்பிட்டவை பதினெட்டு {18} பர்வங்களின் சுருக்கமாகும். பிற்சேர்கையில் ஹரி வம்சம், பவிஷ்யா ஆகியன வருகின்றன. ஹரி வம்சத்தில் பனிரெண்டாயிரம் {12000} பாடல்கள் {சுலோகங்கள்} உள்ளன. இதுவே பர்வ சங்கரஹா என்ற பகுதியின் அங்கமாகும்.

சௌதி சொன்னார் "பதினெட்டு {18} அக்ஷொஹிணி படைகள் இந்தப் போரில் கலந்து கொண்டன. இந்தப் போர் பதினெட்டு {18} நாட்கள் கொடூரமாக நடந்தது. ஒருவன் நான்கு வேதங்களும் அங்கங்களும் உபநிஷத்துகள் அத்தனையும் அறிந்தும் பாரதம் அறியவில்லை என்றால் அவனை விவேகமுள்ளவன் என்று கருத முடியாது. ஒப்பற்ற நுண்ணறிவுள்ள வியாசர், பொருள், அறம் மற்றும் இன்பம் ஆகியவற்றை விளக்கி பாரதத்தைப் படைத்தார். இந்த வரலாற்றைக் கேட்டவர்கள் வேறு வரலாறுகளை எவர் சொன்னாலும் கேட்க விரும்பார். கோகிலப் பறவையின் {குயிலின்} இனிமையான குரலைக் கேட்ட எவரும் காக்கையின் அலறலைக் கேட்க விரும்பார். எப்படி ஐம்பூதங்களால் மூன்று உலகங்களும் உண்டாயிற்றோ, அப்படியே பல புலவர்களின் திறமைகள் இந்த அற்புதமான தொகுப்பால் வளர்கின்றன (உண்டாகின்றன). எப்படி நான்கு வகையான உயிரினங்களும் தான் வசிக்க ஒரு வெளியை நாடி இருக்கின்றனவோ அப்படியே எல்லாப் புராணங்களும் இந்த வரலாற்றை நாடியே உள்ளன. எப்படிப் புலன்கள் அத்தனையும் மனத்தைச் சார்ந்து இருக்கின்றனவோ அப்படியே அனைத்து நற்செயல்களும் நற்பண்புகளும் இந்த ஆய்வைச் சார்ந்து இருக்கின்றன. இந்த வரலாற்றுடன் இணைப்பில்லாத ஒரு கதையும் தற்கால உலகத்தில்கூடக் காணக்கிடைக்காது. அடிமைகள் தங்கள் முதலாளிகளை எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படி, எல்லாப் புலவர்களும் பாரதத்தைக் கொண்டாடுவார்கள். எப்படி இல்லற தர்மத்தை மற்ற மூன்று தர்மங்கள் விஞ்ச முடியாதோ அப்படி இந்தப் பாடல் தொகுப்பை எந்தப் பாடலாசிரியரின் {கவிஞரின்} பாடல்களும் {செய்யுளும்} விஞ்ச முடியாது.

"ஓ துறவிகளே, செயலற்றத் தன்மையை உலுக்குபவர்களே, உங்கள் இருதயம் அறத்தில் நிலைத்திருக்கட்டும். அடுத்த உலகத்திற்குச் செல்பவனுக்கு ஒரே உற்ற நண்பன் அறமே. பொருளையும் மனைவிமாரையும் கொண்டாடும் மிகுந்த புத்திசாலிகள் கூட அவற்றைத் தனது உடைமையாக்க இயலாது. துவைபாயனரின் {வியாசரின்} உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பாரதம் தன்னிகரில்லாதது. அது தன்னியல்பிலேயே புனிதமானதும் அறம் சார்ந்ததுமாய் இருக்கிறது. இது பாவங்களை அழித்து நன்மைகளைத் தருகிறது.

இந்தப் பாரதம் உரைக்கப்படும் போது கேட்ட யாவரும் புஷ்கரை ஆற்றில் நீராட வேண்டிய அவசியம் இல்லை. ஓர் அந்தணன் பகலில் தனது புலன்களால் செய்த பாவங்கள், மாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. செயல்களால், சொற்களால், மனத்தால் செய்யும் பாவங்கள் அதிகாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. கொம்புகளில் தங்கத் தகடு பொருத்தப்பட்ட ஆயிரம் பசுக்களை, வேதம் மற்றும் அனைத்துத் துறைகளையும் அறிந்த அந்தணனுக்குத் தானமளிக்கும் ஒருவனும், தினமும் பாரதத்தைக் கேட்பவனும் ஒரே கதியையே அடைகின்றனர். எப்படிக் கப்பல் வைத்திருப்பவனால் கடலைக் கடக்க முடிகிறதோ, அப்படியே இந்தப் பெரிய வரலாற்றைப் பர்வ சங்கிரகம் என்ற இந்தப் பகுதி கடக்க உதவும்.


ஆங்கிலத்தில் | In English
Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திர்கதமஸ் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 
Creative Commons License
முழுமஹாபாரதம் by முழுமஹாபாரதம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Based on a work at http://mahabharatham.arasan.info.
Permissions beyond the scope of this license may be available at http://mahabharatham.arasan.info.
mahabharatham.arasan.info. Blogger இயக்குவது.
Back To Top