The sacrifice stopped! | Adi Parva - Section 58 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 46)
பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...
சௌதி சொன்னார், "இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்" என்றார் {சௌதி}.(2,3)
சௌனகர், “ஓ சூதா! விவேகிகளான அந்த பிராமணர்களின் மந்திரங்கள் சக்திமிக்கவையாக இல்லையா? தக்ஷகன் நெருப்பில் விழாதது ஏன்?” என்று கேட்டார்."(4)
சௌதி சொன்னார், “இந்திரனால் கைவிடப்பட்டு, சுயநினைவை இழந்த அந்தப் பாம்புகளில் சிறந்தவனான தக்ஷகனை நோக்கி ஆஸ்தீகர் ‘நில், நில், நில்’ என்று மூன்று முறைக் கூறினார்.(5) கலங்கிய இதயத்துடன் கூடிய அவன் {தக்ஷகன்} அந்தரத்திலே, பூமிக்கும், ஆகாயத்திற்கும் {சொர்க்கத்திற்கும்} நடுவில் நிற்கும் மனிதனைப் போல் நின்றான்” என்றார்.(6)
பிறகு சதஸ்யர்களால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, "ஆஸ்தீகர் சொன்னது போல் நடக்கட்டும்.(7) இந்த {நாக} வேள்வி இத்துடன் நிற்கட்டும். பாம்புகள் காக்கப்படட்டும், இந்த ஆஸ்தீகரும் மனம் நிறையட்டும். ஓ சூதரே! {லோகிதாக்ஷரே}, உமது வார்த்தைகளும் உண்மையாகட்டும்[1]" என்றான்.(8)
ஆஸ்தீகருக்கு வரம் அருளப்பட்ட போது, மகிழ்ச்சி ஆரவாரங்கள் அந்த இடம் முழுவதையும் நிறைத்தன. பாண்டவ குலத்தில் வந்த மன்னன் {ஜனமேஜயன்}, அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வி அத்துடன் முடிவுக்கு வந்தது. மன்னன் {ஜனமேஜயன்} மனநிறைவுகொண்டு,) ரித்விக்குகளுக்கும், சதஸ்யர்களுக்கும், மற்றும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செல்வத்தைக் கொடுத்தான்.(9-11) கட்டுமானப்பணியில் சிறந்தவரும், கட்டடங்கள் மற்றும் அடித்தளங்களின் விதிகளை அறிந்து, பாம்பு வேள்வி தடைபடுவதற்கு ஒரு பிராமணன் காரணமாவான் என்று முதலிலேயே சொன்னவரும் சூத சாதியைச் சேர்ந்த லோஹிதாக்ஷருக்குப்[2] பெரும் செல்வங்களைக் கொடுத்தான். குறிப்பிடத்தக்க கருணையுடன் மன்னன் {ஜனமேஜயன்}, இன்னும் பல பொருட்களையும், உணவுகளையும், ஆடைகளையும் அவரது {சூதன் லோஹிதாக்ஷரின்} விருப்பத்திற்கேற்பக் கொடுத்து மனநிறைவடைந்தான்.(12,13) உரிய சடங்குகளுடன் வேள்வியை நிறைவு செய்த அவன் {ஜனமேஜயன்}, தன் காரியத்தை முடித்த மனநிறைவுடன் இருந்த ஆஸ்தீகரை மரியாதையுடன் நடத்தி அவரை வீட்டிற்கு விடைகொடுத்தனுப்பினான்.(14,15)
மன்னன் {ஜனமேஜயன்} அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, "நீர் எனது பெரும் குதிரை வேள்வியில் (அஸ்வமேத வேள்வி) சதயஸ்யராக இருக்க நீர் மீண்டும் வர வேண்டும்" என்றான்.(16) ஆஸ்தீகர், "சரி" என்று சொல்லி, அந்த ஏகாதிபதியை {ஜனமேஜயனை} மனநிறைவு கொள்ளச் செய்து, தன் குறிக்கோளை அடைந்த மகிழ்ச்சியுடன் தனது இல்லத்திற்குச் சென்றார்.(17) அப்படி மகிழ்ச்சியாகச் சென்று தனது மாமன் {வாசுகி} மற்றும் தாய் {ஜரத்காரு} ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்று, {நாக வேள்வியில்} நடந்தவை நடந்தபடியே அனைத்தையும் அவர்களிடம் சொன்னார் {ஆஸ்தீகர்}.(18)
சௌதி தொடர்ந்தார், "அவர் {ஆஸ்தீகர்} சொன்னதையெல்லாம் கேட்ட பாம்புகள் பெரும் மகிழ்வு கொண்டன. அவற்றின் அச்சம் நீங்கியது. ஆஸ்தீகரிடம் பெரும் மனநிறைவு கொண்டு அவருக்கு {ஆஸ்தீகருக்கு} ஒரு வரம் தருவதாகச் சொல்லின,(19) "ஓ கற்றவனே {ஆஸ்தீகனே}, உனக்கு நாங்கள் என்ன நன்மை செய்வது? உன்னிடம் நாங்கள் பெரும் மனநிறைவுகொண்டோம். எங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டாய். உனக்காக நாங்கள் என்ன செய்யட்டும் குழந்தாய்" என்றன.(20)
ஆஸ்தீகர், "காலையிலோ, மாலையிலோ, எனது இந்தப் புனிதமான செயலடங்கிய வரலாற்றை கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் படிக்கும் பிராமணர்களும் மற்ற மனிதர்களும், உங்களிடம் எந்தவிதமான அச்சத்தையும் அடையாதிருக்கட்டும்" என்றார்.(21) அதற்கு அந்தப் பாம்புகள் பெருமகிழ்வுடன், "ஓ மருமகனே, உன் வரமானது நீ கேட்டபடியே ஆகட்டும். ஓ மருமகனே, நீ என்ன கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு செய்வோம்.(22) ஆஸ்தீகன், அர்திமான், சுனிதன் என்று பகலிலோ, இரவிலோ மனதால் நினைப்பவர்களுக்கும் பாம்புகளினால் எந்த அச்சமும் ஏற்படாது.(23) ’ஜரத்காருவுக்குப் பிறந்தவரும், பாம்பு வேள்வியிலிருந்து பாம்புகளைக் காத்தவருமான ஆஸ்தீகரை என் மனத்தில் நினைக்கிறேன். எனவே, பெரும் நற்பேறு பெற்ற பாம்புகளே, நீங்கள் என்னைக் கடிப்பது உங்களுக்குத் தகாது.(24) இங்கே இருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் அருளப்படுவீர்கள். கடும் விஷம் கொண்ட பாம்புகளே சென்றுவிடுங்கள். பாம்புகளே, ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்குப் பிறகு ஆஸ்தீகர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்" என்று சொல்பவர் எவருக்கும் பாம்புகளிடமிருந்து அச்சமேற்படாது.(25) எந்தப் பாம்பு ஆஸ்தீகரைக் குறித்துச் சொல்லியும் கடிக்கிறதோ, அந்தப் பாம்புகளின் தலை சிம்சா மரத்தின் கனி போல நூற்றுக்கணக்காகப் பிளந்து போகட்டும்" என்று சொல்லின {அந்தப் பாம்புகள்}."(26)
சௌதி தொடர்ந்தார், "பிராமணர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, அப்படி முக்கியமான பாம்புகள் கூடி சொன்னபோது ஆஸ்தீகர் பெரிதும் மகிழ்ந்தார். அதன்பிறகு அந்த உயர் ஆன்ம முனிவர் {ஆஸ்தீகர்} அங்கிருந்து சென்றுவிடுவதில் தனது இதயத்தைச் செலுத்தினார்.(27) அப்படிப் பாம்பு வேள்வியில் இருந்து பாம்புகளைக் காத்த அந்த பிராமணர்களில் சிறந்தவர் {ஆஸ்தீகர்}, தனக்குரிய காலத்தில் மகன்களையும் பேரன்களையும் விட்டு மேலுலகம் சென்றார்.(28)
ஆஸ்தீகர் வரலாற்றை எப்படி நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டேன். இந்த வரலாற்றைச் சொல்வதால் பாம்புகளின் மேல் இருக்கும் பயம் விலகும்."(29)
சௌதி தொடர்ந்தார், "ஓ பிராமணர்களே, ஓ பிருகு பரம்பரையில் முதன்மையானவரே {சௌனகரே}, உமது முன்னோரான பிரமதி, இதுகுறித்து விசாரித்த ருருவிடம் சொன்னவாறே,(30) அதை {என் தந்தையிடமிருந்து} நான் கேட்டவாறே, கல்விமானான ஆஸ்தீகர் குறித்த இந்த அருள்நிறைந்த வரலாற்றைத் தொடக்கமுதல் {முடிவு வரை} சொன்னேன்.(21) ஓ பிராமணரே {சௌனகரே}, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {சௌனகரே}, {நீர்ப்பாம்பு} துந்துபாவின் கதையைக் கேட்டவுடன் நீர் விரும்பிய அறம்வளர்க்கும் புனிதமான ஆஸ்தீகர் வரலாற்றைக் கேட்டீர். உமது ஆர்வம் நிறைவடையட்டும்" என்றார் {சௌதி}.(32)

[1] பார்க்க: 51:16 {ஆதிபர்வம், பகுதி 51, 16வது சுலோகம்}

[2] கும்பகோணம் பதிப்பில் புராணத்தை நினைவு கூர்ந்த லோஹிதாக்ஷரும், யாகம் நிற்கும் என்று கூறிய கட்டுமானக்கலைஞரும் {ஸ்தபதியும்} ஒருவர் அல்லாது, இருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளில் லோகிதாக்ஷர் ஒருவராகவே கொள்ளப்படுகிறார்.
மன்னன் {ஜனமேஜயன்} அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, "நீர் எனது பெரும் குதிரை வேள்வியில் (அஸ்வமேத வேள்வி) சதயஸ்யராக இருக்க நீர் மீண்டும் வர வேண்டும்" என்றான்.(16) ஆஸ்தீகர், "சரி" என்று சொல்லி, அந்த ஏகாதிபதியை {ஜனமேஜயனை} மனநிறைவு கொள்ளச் செய்து, தன் குறிக்கோளை அடைந்த மகிழ்ச்சியுடன் தனது இல்லத்திற்குச் சென்றார்.(17) அப்படி மகிழ்ச்சியாகச் சென்று தனது மாமன் {வாசுகி} மற்றும் தாய் {ஜரத்காரு} ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்று, {நாக வேள்வியில்} நடந்தவை நடந்தபடியே அனைத்தையும் அவர்களிடம் சொன்னார் {ஆஸ்தீகர்}.(18)
சௌதி தொடர்ந்தார், "அவர் {ஆஸ்தீகர்} சொன்னதையெல்லாம் கேட்ட பாம்புகள் பெரும் மகிழ்வு கொண்டன. அவற்றின் அச்சம் நீங்கியது. ஆஸ்தீகரிடம் பெரும் மனநிறைவு கொண்டு அவருக்கு {ஆஸ்தீகருக்கு} ஒரு வரம் தருவதாகச் சொல்லின,(19) "ஓ கற்றவனே {ஆஸ்தீகனே}, உனக்கு நாங்கள் என்ன நன்மை செய்வது? உன்னிடம் நாங்கள் பெரும் மனநிறைவுகொண்டோம். எங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டாய். உனக்காக நாங்கள் என்ன செய்யட்டும் குழந்தாய்" என்றன.(20)
ஆஸ்தீகர், "காலையிலோ, மாலையிலோ, எனது இந்தப் புனிதமான செயலடங்கிய வரலாற்றை கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் படிக்கும் பிராமணர்களும் மற்ற மனிதர்களும், உங்களிடம் எந்தவிதமான அச்சத்தையும் அடையாதிருக்கட்டும்" என்றார்.(21) அதற்கு அந்தப் பாம்புகள் பெருமகிழ்வுடன், "ஓ மருமகனே, உன் வரமானது நீ கேட்டபடியே ஆகட்டும். ஓ மருமகனே, நீ என்ன கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு செய்வோம்.(22) ஆஸ்தீகன், அர்திமான், சுனிதன் என்று பகலிலோ, இரவிலோ மனதால் நினைப்பவர்களுக்கும் பாம்புகளினால் எந்த அச்சமும் ஏற்படாது.(23) ’ஜரத்காருவுக்குப் பிறந்தவரும், பாம்பு வேள்வியிலிருந்து பாம்புகளைக் காத்தவருமான ஆஸ்தீகரை என் மனத்தில் நினைக்கிறேன். எனவே, பெரும் நற்பேறு பெற்ற பாம்புகளே, நீங்கள் என்னைக் கடிப்பது உங்களுக்குத் தகாது.(24) இங்கே இருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் அருளப்படுவீர்கள். கடும் விஷம் கொண்ட பாம்புகளே சென்றுவிடுங்கள். பாம்புகளே, ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்குப் பிறகு ஆஸ்தீகர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்" என்று சொல்பவர் எவருக்கும் பாம்புகளிடமிருந்து அச்சமேற்படாது.(25) எந்தப் பாம்பு ஆஸ்தீகரைக் குறித்துச் சொல்லியும் கடிக்கிறதோ, அந்தப் பாம்புகளின் தலை சிம்சா மரத்தின் கனி போல நூற்றுக்கணக்காகப் பிளந்து போகட்டும்" என்று சொல்லின {அந்தப் பாம்புகள்}."(26)
சௌதி தொடர்ந்தார், "பிராமணர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, அப்படி முக்கியமான பாம்புகள் கூடி சொன்னபோது ஆஸ்தீகர் பெரிதும் மகிழ்ந்தார். அதன்பிறகு அந்த உயர் ஆன்ம முனிவர் {ஆஸ்தீகர்} அங்கிருந்து சென்றுவிடுவதில் தனது இதயத்தைச் செலுத்தினார்.(27) அப்படிப் பாம்பு வேள்வியில் இருந்து பாம்புகளைக் காத்த அந்த பிராமணர்களில் சிறந்தவர் {ஆஸ்தீகர்}, தனக்குரிய காலத்தில் மகன்களையும் பேரன்களையும் விட்டு மேலுலகம் சென்றார்.(28)
ஆஸ்தீகர் வரலாற்றை எப்படி நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டேன். இந்த வரலாற்றைச் சொல்வதால் பாம்புகளின் மேல் இருக்கும் பயம் விலகும்."(29)
சௌதி தொடர்ந்தார், "ஓ பிராமணர்களே, ஓ பிருகு பரம்பரையில் முதன்மையானவரே {சௌனகரே}, உமது முன்னோரான பிரமதி, இதுகுறித்து விசாரித்த ருருவிடம் சொன்னவாறே,(30) அதை {என் தந்தையிடமிருந்து} நான் கேட்டவாறே, கல்விமானான ஆஸ்தீகர் குறித்த இந்த அருள்நிறைந்த வரலாற்றைத் தொடக்கமுதல் {முடிவு வரை} சொன்னேன்.(21) ஓ பிராமணரே {சௌனகரே}, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {சௌனகரே}, {நீர்ப்பாம்பு} துந்துபாவின் கதையைக் கேட்டவுடன் நீர் விரும்பிய அறம்வளர்க்கும் புனிதமான ஆஸ்தீகர் வரலாற்றைக் கேட்டீர். உமது ஆர்வம் நிறைவடையட்டும்" என்றார் {சௌதி}.(32)
ஆங்கிலத்தில் | In English |