The Great History! | Adi Parva - Section 59 | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : சௌதியிடம் மஹாபாரதத்தைச் சொல்லும்படி கேட்ட சௌனகர்; மஹாபாரதப் பீடிகை...
சௌனகர் சொன்னார், "ஓ மகனே! {சௌதியே}, விரிவானதும், அற்புதமானதுமான இந்த வரலாற்றை, பிருகு பரம்பரையின் தொடக்கத்தில் இருந்து எனக்குக் கூறினாய். ஓ சூத மைந்தா {சௌதி}, உன்னால் நான் மனநிறைவடைந்தேன்.(1) உன்னை மறுபடியும் கேட்கிறேன். ஓ சூத மைந்தா {சௌதி}, வியாசர் தொகுத்த வரலாற்றைச் சொல்வாயாக. ஓ சூத மைந்தா {சௌதி}, அந்த வேள்வியில் கூடியிருந்த சிறப்புமிக்கச் சதஸ்யர்கள், அந்த நீண்ட விழாவில் தம் கடமைகளுக்கு இடையில் கிடைத்த இடைவெளிகளில் ஓதிய சிறந்தவைகளும், அற்புதமானவைகளுமான அந்த வர்ணனைகளையும், அவற்றின் பொருளையும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஆகையால் முழுமையாகச் சொல்" என்றார் {சௌனகர்}.(2-4)
சௌதி சொன்னார், "தங்கள் கடமைகளின் {வேள்விகளின்} இடைவேளைகளில் அந்த பிராமணர்கள் வேதங்களில் காணப்படும் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டனர். ஆனால் வியாசரோ அற்புதமான பெரும் வரலாறான பாரதத்தை உரைத்தார்" என்றார்.(5)
சௌனகர், "பாண்டவர்களின் புகழைப் பரப்புவதான மஹாபாரதம் என்றழைக்கப்படும் புனிதமான வரலாறானது, ஜனமேஜயனால் கேட்கப்பட்டு, வேள்வியின் முடிவில்[1] கிருஷ்ணத் துவைபாயனரால் முறையாக உரைக்கப்பட்டது. அதை முறையாகக் கேட்க விரும்புகிறேன்.(6,7) அவ்வரலாறானது, யோகத்தால் தூய்மையடைந்த ஆன்மா கொண்ட அப்பெருமுனிவருடைய {வியாசரின்} பெருங்கடல்போன்ற மனத்தில் பிறந்ததாகும். நன்மக்களில் முதன்மையானவனே {சௌதியே}, ஓ சூத மைந்தா {சௌதியே}, நீ சொன்னது அனைத்தையும் கேட்டும் எனது தாகம் தணியவில்லை என்பதால் அதை எனக்கு உரைப்பாயாக" என்றார் {சௌனகர்}.(8)
சௌதி, "கிருஷ்ண துவைபாயனரால் தொகுக்கப்பட்டு, மஹாபாரதம் என்றழைக்கப்படும் அந்தச் சிறந்த பெரும் வரலாற்றைத் தொடக்கத்திலிருந்து உரைக்கப் போகிறேன்.(9) ஓ பிராமணரே! {சௌனகரே} நான் சொல்லும்போது அதை முழுவதுமாகக் கேட்பீராக. அதை உரைப்பதில் நானும் பெரும் மகிழ்வையடைகிறேன்" என்றார் {சௌதி}.(10)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "வேள்வியின் இடைவேளைகளில் ஜனமேஜயனுக்குச் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலும், "ஸர்ப்பயாககாலத்தில் சாஸ்திரப்பிரகாரம் நடந்த கிரியைகளின் மத்தியில் ஜனமேஜயர் கேட்கும்போது, கிருஷ்ணத்வைபாயனர் பாண்டவர்களுடைய புகழை விருத்திச்செய்யத்தக்க மஹாபாரதமென்கிற சரித்திரத்தைச் சொன்னாரல்லவா? அந்தப் புண்ணியக் கதையை நான் ஒழுங்காகக் கேட்க விரும்புகிறேன்" என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயின் பதிப்பிலும் இடைவேளைகளில் சொல்லப்பட்டது என்றே இருக்கிறது. கங்குலியின் பதிப்பிலேயேகூட இதற்கு முன்னர் சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் இடைவேளைகளில் சொல்லப்பட்டது என்றே இருக்கிறது. இன்றும் யாகங்களின் இடைவேளைகளில் புராணம் உரைக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
சௌதி, "கிருஷ்ண துவைபாயனரால் தொகுக்கப்பட்டு, மஹாபாரதம் என்றழைக்கப்படும் அந்தச் சிறந்த பெரும் வரலாற்றைத் தொடக்கத்திலிருந்து உரைக்கப் போகிறேன்.(9) ஓ பிராமணரே! {சௌனகரே} நான் சொல்லும்போது அதை முழுவதுமாகக் கேட்பீராக. அதை உரைப்பதில் நானும் பெரும் மகிழ்வையடைகிறேன்" என்றார் {சௌதி}.(10)
ஆங்கிலத்தில் | In English |