The Names of the burnt snakes! | Adi Parva - Section 57 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 45)
பதிவின் சுருக்கம் : எரிந்த பாம்புகளின் பட்டியல் ...
சௌனகர், "ஓ சூத மைந்தா! {சௌதியே} இந்தப் பாம்பு வேள்வியில் தீயில் விழுந்த பாம்புகள் அனைத்தின் பெயர்களையும் கேட்க விரும்புகிறேன்" என்றார்.(1)
சௌதி, "பல்லாயிரக்கணக்கில், கோடிக்கணக்கில் பாம்புகள் அந்த நெருப்பில் விழுந்தன. ஓ பிராமணர்களில் அதியற்புதமானவரே {சௌனகரே}, அதன் எண்ணிக்கை மிக அதிகமானதால் என்னால் எண்ண இயலாது.(2) இதுவரை எனது நினைவில் நிற்கும் அளவுக்குத் தீயில் விழுந்த முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்கிறேன், கேட்பீராக.(3)
நிறத்தால் நீலமாகவும், சிவப்பாகவும், வெள்ளையாகவும் எனக் கொடூரமான உருவங்களில், பெருத்த உடலும், மரணத்தைத் தரும் விஷத்தோடும், உதவியின்றிப் பெரும் சிரமத்திற்குள்ளாகித் தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்டுத் தீயில் நெய் விழுவது போல விழுந்த {பாம்பு மன்னன்} வாசுகியின் குலத்தில் வந்த முக்கியமான பாம்புகளின் பெயரை மட்டும் கேட்பீராக. கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலதந்தகன் - ஆகியோர்{4-6) வாசுகிக்குப் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள்.
ஓ பிராமணரே {சௌனகரே}, பெரும் பலத்துடனும், கொடூரமான உருவத்திலும் எண்ணிலடங்கா பாம்புகள் அந்த எரியும் தீயில் விழுந்து மடிந்தன. இப்போது தக்ஷகனின் குலத்தில் வந்த பாம்புகளின் பெயர்களைச் சொல்கிறேன், கேட்பீராக.(7) அவர்கள் புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சோசிகன், சரபன், பங்கன், பில்வதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமன் மற்றும் மஹாஹனு ஆவர்.(8-11) இவர்கள் தக்ஷகனுக்குப் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள். பாராவதன், பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மேதன், பிரமோதன், சௌஹதாபனன் {அல்லது சம்ஹதாபனன்} - இவை ஐராவதனுக்குப் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள்.(12)
இனி, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, கௌரவ்யன் குலத்தில் பிறந்த பாம்புகளின் பெயர்களை நான் சொல்லக் கேட்பீராக. ஏரகன், குண்டலவேணி, {குண்டலன், வேணி என்று இரண்டு பாம்புளாகவும் சொல்வதுண்டு} வேணிஸ்கந்தன், குமாரகன், பாகுகன், சிருங்கபேரன், துர்த்தகன், பிராதரன் {அல்லது பிராதன்} மற்றும் அஸ்தகன் {அல்லது ராதகன்} - இவர்கள் கௌரவ்ய குலத்தில் பிறந்து தீயில் விழுந்த பாம்புகள்.(13,14)
இனி காற்றைப் போன்ற பெரும் வேகமும், கொடுமையான விஷமும் கொண்ட, {பாம்பு} திருதராஷ்டிரன் குலத்தில் பிறந்த பாம்புகளின் பெயர்களைச் சொல்லக் கேட்பீராக.(15) அவர்கள் சங்குகர்ணன், பிடரகன், குடாரமுகன் {அல்லது குதரன்}, சுகணன் சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், குமடகன் {அல்லது காமடகன்}, சுஷேணன், வியயன் {அல்லது அவ்யயன்}, பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உத்ரபாரகன் {அல்லது உதபாரகன்}, ரிஷபன், வேகவத், பிண்டாரகன், ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படாவும், வாசகன்னும் {படவாசகன் என்று ஒரே பாம்பாகவும் சொல்வதுண்டு}, வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேதிகன், பராசரன், தருணகன், மணிஸ்கந்தன் {மணி, ஸ்கந்தன் என்று இரண்டு பாம்புகளாகவும் சொல்வதுண்டு} ஆருணி[1] ஆவர்”.(16-19)
"ஓ பிராமணரே, சாதனைகளுக்காகப் பெரிதும் அறியப்பட்ட முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்லிவிட்டேன். என்னால் எண்ணற்ற பாம்புகளின் பெயர்களை முழுவதுமாகச் சொல்ல இயலாது.(20) அந்தப் பாம்புகளின் மைந்தர்கள், மைந்தர்களின் மைந்தர்கள் எல்லாம் அந்தத் தீயில் விழுந்த எரிந்தனர். அவற்றின் பெயர்களையும் சொல்ல இயலாது. அவை பல!(21) சில மூன்று தலைகளுடனும், சில ஏழு தலைகளுடனும், சில பத்துத் தலைகளுடனும் யுக முடிவில் வரும் நெருப்பைப் போன்ற விஷத்துடன், கொடூரமான உருவத்துடன் இருந்த அவை ஆயிரக்கணக்கில் எரிந்தன.(22)
பெரும் உடலும், பெரும் வேகமும், மலைமுகடுகளைப் போன்ற உயரமும், யமம், ஒரு யோஜனை, இரு யோஜனை நீளம் உள்ளவையும்,(23) நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவையும், பலத்தையும் கொள்ளக்கூடியவையும், எரியும் நெருப்பைப் போன்ற விஷம் கொண்டவையும் தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் பீடிக்கப்பட்டு அந்தப் பெரும் வேள்வியில் எரிந்தன” {என்றார் சௌதி}.(24)

[1] இவை தவிர இன்னும் கூடுதலாக மானஸன், அஷ்டாவக்ரன், கோமலகன், சுவஸனன், மௌனவேபகன், மஹாஹனு என்ற பாம்புகள் கும்பகோணம் பதிப்பில் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளன.
"ஓ பிராமணரே, சாதனைகளுக்காகப் பெரிதும் அறியப்பட்ட முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்லிவிட்டேன். என்னால் எண்ணற்ற பாம்புகளின் பெயர்களை முழுவதுமாகச் சொல்ல இயலாது.(20) அந்தப் பாம்புகளின் மைந்தர்கள், மைந்தர்களின் மைந்தர்கள் எல்லாம் அந்தத் தீயில் விழுந்த எரிந்தனர். அவற்றின் பெயர்களையும் சொல்ல இயலாது. அவை பல!(21) சில மூன்று தலைகளுடனும், சில ஏழு தலைகளுடனும், சில பத்துத் தலைகளுடனும் யுக முடிவில் வரும் நெருப்பைப் போன்ற விஷத்துடன், கொடூரமான உருவத்துடன் இருந்த அவை ஆயிரக்கணக்கில் எரிந்தன.(22)
பெரும் உடலும், பெரும் வேகமும், மலைமுகடுகளைப் போன்ற உயரமும், யமம், ஒரு யோஜனை, இரு யோஜனை நீளம் உள்ளவையும்,(23) நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவையும், பலத்தையும் கொள்ளக்கூடியவையும், எரியும் நெருப்பைப் போன்ற விஷம் கொண்டவையும் தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் பீடிக்கப்பட்டு அந்தப் பெரும் வேள்வியில் எரிந்தன” {என்றார் சௌதி}.(24)
ஆங்கிலத்தில் | In English |