Types of counsels! | Sabha Parva - Section 13 | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் ராஜசூய வேள்வி செய்வது குறித்து தனது தம்பிகளுடனும், நண்பர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசிப்பது; அமைச்சர்கள் வேள்வியை நடத்துமாறு ஆலோசனை வழங்குவது; யுதிஷ்டிரன் மறுபடி மறுபடி சிந்திப்பது; இக்காரியத்தில் கிருஷ்ணனின் முடிவை ஏற்பது எனத் தீர்மானிப்பது; துவாரகைக்குத் தூதுவரை அனுப்பவது; கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்தை அடைவது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்பது...
வைசம்பாயனர் சொன்னார், "நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் கடுமையாக பெருமூச்சு விட ஆரம்பித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, ராஜசூயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மன அமைதியை இழந்தான்.(1) அந்தச் சிறப்பு வாய்ந்த (பழங்காலத்தின்) ஏகாதிபதிகளின் புகழைக் கேள்விப்பட்டும், வேள்விகள் செய்பவர்களும், புனித காரியம் செய்பவர்களும் வற்றாத இன்பம் உள்ள பகுதிகளை அடைவார்கள் என்பதில் உறுதி கொண்டான். குறிப்பாக, அந்த வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்த அரசமுனி ஹரிச்சந்திரனை நினைத்துப் பார்த்த மன்னன் யுதிஷ்டிரன், ராஜசூய வேள்விக்கான தயாரிப்புகள் செய்ய விரும்பினான்.(2,3) பிறகு தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, அந்தச் சபையில் இருந்தவர்களையும் வணங்கி, அவர்களால் வணங்கப்பட்டு வேள்வி குறித்த விவாதங்களில் ஈடுபட்டான்.(4) அதிகமாக சிந்தித்த அந்த மன்னர்களின் மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த குருக்களின் காளை, ராஜசூயத்துக்கான தயாரிப்புகளில் தனது மனத்தை ஈடுபடுத்தினான்.(5)
இருப்பினும், அற்புதமான வீரமும், சக்தியும் கொண்ட இளவரசன் {யுதிஷ்டிரன்}, அறம் மற்றும் நீதியை நினைத்துப் பார்த்து, மக்களுக்கு எது நன்மையைத் தரும் என்ற ஒரு முடிவுக்கு வர தனது இதயத்தை நிலைக்க வைத்தான்.(6) அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன் தனது குடிமக்களிடம் அன்போடு இருந்தான்.(7) எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் அனைத்து மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டான். கோபத்தையும் கடுமையையும் தவிர்த்த யுதிஷ்டிரன் எப்போதும், "ஒவ்வொருவருக்கும் எது கொடுக்கப்பட வேண்டுமோ, அதை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும்" என்று சொல்வான். "அறம் {தர்மம்} அருளப்பட்டிருக்கட்டும், அறமும் யுதிஷ்டிரனும் அருளப்பட்டிருக்கட்டும்" என்பவை மட்டுமே அவன் கேட்கக்கூடிய ஒலிகளாக இருந்தன.(8) யுதிஷ்டிரன் தன்னை அப்படி வழிநடத்திக் கொண்டு, பகை வளர்த்தலை ஆதரிக்கும் எவரும் அந்த நாட்டில் இல்லாதவாறு அனைவருக்கும் ஒரு தகப்பன் கொடுக்கும் உறுதியைக் கொடுத்தான். அதனாலேயே அவன் {யுதிஷ்டிரன்} அஜாதசத்ரு (எதிரிகள் இல்லாதவன்) என்று அழைக்கப்பட்டான்.(9)
அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/ வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான்.(10) ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் நாடு கலகங்களிலும், அனைத்துவிதமான அச்சங்களில் இருந்தும் விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர்.(11) மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும், வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன.(12) உண்மையில் வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, நஞ்சு அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ அந்த நாட்டில் இல்லாதிருந்தது.(13) திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னனிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. ஆறு சந்தர்ப்பங்களில் {போர், ஒப்பந்தம் போன்றவை மூலம்} கைப்பற்றப்பட்ட மன்னர்கள், அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எப்போதும் நன்மை செய்ய காத்திருந்தனர். பல வகைப்பட்ட வணிகர்கள் தாங்கள் செய்த தொழிலுக்கு ஏற்றவாறு கட்டவேண்டிய வரியை சரியாகக் கட்டி வந்தனர். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில் அவனது நாடு பெரும் வளமையை அடைந்தது.(14-16) உண்மையில், நாட்டின் வளமை இவற்றால் மட்டும் வளராமல், சிற்றின்பப் பற்றுள்ளவர்களாலும், நிறைவான இன்பங்களில் ஈடுபட்டு வந்தவர்களாலும் கூட அதிகரித்தது. மன்னர்களுக்கு மன்னன் யுதிஷ்டிரன் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, அனைத்து சாதனைகளையும் சாதித்தான்.(17) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கொண்டாடப்பட்ட சிறப்பு மிகுந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} எந்தெந்த நாடுகளை எல்லாம் கைப்பற்றினானோ, அந்தந்த நாடுகளில் பிராமணர்களில் இருந்து குடியானவன் வரை, அனைவரும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} தங்கள் தந்தையிடமும் தாயிடமும் உள்ள பிணைப்புடன் இருந்தனர்".(18)
வைசம்பாயனர் சொன்னார், "வாக்கில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} தம்பிகளையும் அழைத்து அவர்களிடம் ராஜசூய வேள்வி குறித்துத் தொடர்ந்து கேட்டான்.(19) வேள்வி செய்ய விரும்பிய ஞானமுள்ள யுதிஷ்டிரனிடம் அந்த அமைச்சர்கள் இயல்பான வார்த்தைகளைக் கூறினர். அவர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(20) "ஏற்கனவே நாட்டை அடைந்திருக்கும் ஒருவன், மாமன்னர்களுக்கு {சக்ரவர்த்திகளுக்கு} உரிய எல்லா குணங்களையும் அடைய விரும்புகிறான். அந்த வேள்விகள், வருணனின் குணங்களை அடைய அந்த மன்னனுக்கு உதவி செய்கின்றன.(21) ஓ குரு குல இளவரசனே {யுதிஷ்டிரனே}, உமது நண்பர்கள் உம்மை மாமன்னர்களுக்குரிய அனைத்து தகுதிகளும் உடையவராக நினைக்கின்றனர். நீர் ராஜசூய வேள்வியை நடத்தும் சமயம் வந்துவிட்டது.(22) சாம வேதங்களின் மந்திரங்களைக் கொண்டு ஆறு நெருப்புகளை மூட்டும், கடும் நோன்புகள் நோற்கும் முனிவர்களைக் கொண்டு வேள்வியைத் தொடங்க, உமது க்ஷத்திரிய சக்தியால் உமக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.(23) ராஜசூய வேள்வியின் முடிவில், அந்த வேள்வியை நடத்திய நாட்டின் ஆட்சி உரிமை பெற்றவன், அக்னிஹோத்ரம் உள்ளிட்ட பல வேள்விகளைச் செய்ததன் கனிகளை {பயன்களை} அடைகிறான். இதனாலேயே அவன் {மன்னன்} அனைத்தையும் கைப்பற்றுபவன் என அழைக்கப்படுகிறான்.(24) ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இந்த வேள்வியைச் செய்ய உம்மால் முடியும். நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்பட்டவர்கள். ஓ மாமன்னா, விரைவில் உம்மால் ராஜசூய வேள்வியை நடத்த முடியும்.(25) எனவே, மேலும் விவாதங்களை நடத்தாமல் வேள்வியை நடத்த தீர்மானியும்" என்று மன்னனின் {யுதிஷ்டிரனின்} நண்பர்களும் ஆலோசகர்களும் தனித்தனியாகவும் சேர்ந்தும் சொன்னார்கள்.(26)
மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, எதிரிகளைக் கொல்லும் யுதிஷ்டிரன், அறம்சார்ந்தவையும், துணிவு, இனிமை மற்றும் கனம் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளை மனதார ஏற்றுக் கொண்டான்.(27) ஓ பாரதா {ஜனமேஜயா}, நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, தனது பலத்தையும் அறிந்து கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்தக் காரியம் குறித்து மீண்டும் மீண்டும் ஆலோசித்தான்.(28) அதன் பிறகு, ஆலோசனை வழங்குவதில் ஞானமுள்ள, புத்திகூர்மையுள்ள அறம் சார்ந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், சிறப்புமிகுந்த ரித்விஜர்களுடனும், தனது அமைச்சர்களுடனும், தௌமியருடனும், துவைபாயணருடனும் {வியாசர்}, மேலும் மற்றவர்களுடனும் ஆலோசித்தான்.(29)
யுதிஷ்டிரன், "மாமன்னர்கள் செய்யத் தகுதி வாய்ந்ததும், சிறந்தவேள்வியுமான ராஜசூயத்தை செய்யும் எனது விருப்பம், நான் கொண்டிருக்கும் நம்பிகை மற்றும் பேச்சால் மட்டுமே கனி கொடுத்துவிடுமா?", என்று கேட்டான்[1].(30)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே {ஜனமேஜயா}, இப்படிப் பேசிய யுதிஷ்டிரனிடம் அவர்கள் {நண்பர்களும் ஆலோசகர்களும்} அனைவரும்,(31) "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அறத்தின் விதிகளை அறிந்த நீர், இந்தப் பெரும் வேள்வியான ராஜசூயத்தைச் செய்யத் தகுதி வாய்ந்தவரே" என்றனர். ரித்விஜர்களாலும், முனிவர்களாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மன்னன்,(32) தனது அமைச்சர்கள் மற்றும் தம்பிகளின் பேச்சைப் பெரிதும் அங்கீகரித்தான். இருப்பினும், பெரும் ஞானம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மனத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உலகத்திற்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, மறுபடியும் இந்தக் காரியத்தை மனத்தில் நினைத்து, தனது பலத்தையும் ஆதாரங்களையும் நினைத்து, நேரம், இடம், வரவு, செலவு ஆகியவற்றையும் எண்ணிப்பார்த்தான்.(33,34)
நன்கு ஆலோசிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு செயலால் ஞானமுள்ளவர்கள் துயரடைய மாட்டார்கள் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான். இந்த வேள்வியைச் செய்யும் முடிவைத் தான் மட்டுமே எடுத்துவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவனும்,(35) இந்தச் சுமையைத் தனது தோள்களில் தாங்கிக் கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரன், ’அனைவரையும் பாவங்களில் இருந்து காப்பாற்றும் கிருஷ்ணனே, இந்தக் காரியத்தை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன்’ என்று நினைத்தான்.(36) அவனே {கிருஷ்ணனே} மனிதர்களில் முதன்மையானவன், அளவிடமுடியா சக்தி கொண்டவன், பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன், தனது சுயவிருப்பதின் மூலம் மட்டுமே மனிதனாகப் பிறந்த அவனே {கிருஷ்ணனே} இதை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான்.(37) தெய்வம் போன்ற அவனது {கிருஷ்ணனது} செயல்களை நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவன் {கிருஷ்ணன்} அறியாத எதுவும் கிடையாது என்றும், அவனால் {கிருஷ்ணனால்} அடைய முடியாததும் எதுவு இல்லை என்றும், அவனால் {கிருஷ்ணனால்} தாங்கக்கூடாது எதுவும் இல்லை என்று நினைத்தான். இந்தத் தீர்மானத்துக்கு வந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன்,(38,39) விரைவாக ஒரு தூதுவனை அனைத்து உயிர்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுப்பி வைத்தான்.
தனது வாழ்த்துகளையும், மூத்தவர் இளையவருக்கு உரிய மதிப்புடனும் செய்திகளைத் தூதுவனிடம் சொல்லி அனுப்பினான். விரைவாகச் செல்லும் தேரில் சென்ற அந்தத் தூதுவன் யாதவர்களுக்கு மத்தியில் துவாராவதியில் {துவாரகையில்} வசித்த கிருஷ்ணனை அணுகினான்.(40) தன்னைக் காண பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} விருப்பம் கொண்டுள்ளான் என்பதை அறிந்த அச்யுதன் {கிருஷ்ணன்}, தனது மைத்துனனைக் காண ஆவல் கொண்டான்.(41)
வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் பல பகுதிகளை வேகமாகக் கடந்த கிருஷ்ணன், இந்திரசேனனுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான்.(42) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நேரத்தைக் கடத்தாமல் யுதிஷ்டிரனை அணுகினான். யுதிஷ்டிரன் கிருஷ்ணனை ஒரு தந்தையின் அன்புடன் வரவேற்றான்.(43) பீமனும் அதே போல வரவேற்றான். பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தனது தந்தையின் தங்கையிடம் {குந்தியிடம்} சென்றான். அங்கே இரட்டையர்களால் {நகுலன் மற்றும் சகாதேவனால்} வழிபடப்பட்டு, தன்னைக் கண்டதால் பெருமகிழ்ச்சி அடைந்த தனது நண்பன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாகப் பேசத்தொடங்கினான். சிறிது நேரம் அற்புதமான அறையில் ஓய்வெடுத்த பிறகு, யுதிஷ்டிரன் அவனை {கிருஷ்ணனை} அணுகி, ராஜசூய வேள்வியைக் குறித்துச் சொன்னான்.(44,45)
யுதிஷ்டிரன், "நான் ராஜசூய வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். அந்த வேள்வியை ஒருவரின் தீர்மானத்தால் செய்ய முடியாது. ஓ கிருஷ்ணா, சாதிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீ அறிவாய்.(46) அனைத்தையும் செய்ய முடிந்தவனால் மட்டுமே இந்த வேள்வியைச் செய்ய முடியும். எவனை அனைவரும் வழிபடுகின்றனரோ, எவன் மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக இருக்கிறானோ அவன்தான் இந்த வேள்வியைச் சாதிக்க முடியும்.(47) எனது நண்பர்களும் ஆலோசகர்களும் என்னை அணுகி இந்த வேள்வியைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், ஓ கிருஷ்ணா, இக்காரியத்தில் உன் சொற்களே எனக்கான வழிக்காட்டிகளாகும்.(48) ஆலோசகர்களில் சில நண்பர்கள் சிரமங்களைக் கவனிக்க மாட்டார்கள்; சிலர் சுய விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்வார்கள்.(49) சிலர் ஒரு காரியத்தால் தங்களுக்கு விளையும் நன்மையை எண்ணி அப்படிச் செய்ய சொல்வார்கள். முடிவை நோக்கி இருக்கும் தீர்மானங்களில் மனிதர்கள் இப்படித்தான் ஆலோசனை வழங்குகிறார்கள்.(50) ஆனால் கிருஷ்ணா, நீ அந்த நோக்கங்களுக்கு மேலானவன். நீ ஆசையையும், கோபத்தையும் வென்றவன். உலகத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடியது எது என்பதை எனக்கு நீதான் சொல்ல வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(51)

[1] கும்பகோணம் பதிப்பில், "அரசர்க்கரசன் செய்யத்தக்க சிறந்த யாகமாகிய ராஜஸூயமென்னும் மஹாயாகம் சிரத்தையுள்ள எனக்கு எப்படி முடியும்? நீங்கள் சொல்லுங்கள்" என்றிருக்கிறது.

ஆங்கிலத்தில் | In English |