Do Rajasuya Sacrifice! | Sabha Parva - Section 12 | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : ஹரிச்சந்திரன் மட்டும் எப்படி இந்திரலோகத்தில் இருக்கிறான் என்று யுதிஷ்டிரன் நாரதரிடம் கேட்டது; நாரதர் ஹரிச்சந்திரனின் ராஜசூய வேள்வி குறித்து சொல்வது; பாண்டு யுதிஷ்டிரனை ராஜசூயம் செய்யச் சொன்னதாக நாரதர் யுதிஷ்டிரனிடம் சொன்னது; நாரதர் துவாரகைக்குச் சென்றது...
யுதிஷ்டிரன், "ஓ மேன்மையான மனிதர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நீர் வித்தியாசமான சபா மண்டபங்களை எனக்கு விளக்கிச் சொன்னீர், அதில் பூலோகத்தில் இருந்த அனைத்து ஏகாதிபதிகளும் எமனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(1) மேலும், ஓ தலைவா {நாரதரே}, கிட்டத்தட்ட அனைத்து நாகர்களும், முக்கியமான தைத்தியர்களும், ஆறுகளும், பெருங்கடல்களும் வருணசபையில் இருப்பதாகவும் தெரிகிறது.(2) யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், காளையைத் தனது வாகனமாகக் கொண்டிருக்கும் தேவன் {சிவன்} ஆகியோர் கருவூலத் தலைவனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(3) பெருந்தகப்பனின் {பிரம்மனின்} சபையில் அனைத்துப் பெரும் முனிவர்களும், தேவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளும் இருப்பதாக நீர் சொன்னீர்.(4) சக்ரனின் {இந்திரனின்} சபையைப் பொறுத்தவரை, ஓ முனிவரே {நாரதரே} நீர் கந்தர்வர்களும், பல்வேறு முனிவர்களும் இருப்பதாக அவர்களது பெயர்களைச் சொன்னீர்.(5)
ஆனால், ஓ பெரும் முனிவரே {நாரதரே}, நீர் அரசமுனி ஹரிச்சந்திரன் என்ற ஒருவரை, ஒரே ஒருவரை மட்டும், சிறப்பு மிகுந்த தேவர்கள் தலைவனின் {இந்திர} சபையில் வாழ்வதாகச் சொன்னீர்.(6) அந்தக் கொண்டாடப்பட்ட மன்னனால் என்ன நற்காரியம் செய்யப்பட்டது? அல்லது உறுதிகளுடன் கூடிய என்ன ஆன்மிக நோன்பு மேற்கொள்ளப்பட்டது? எந்தச் செயலால் அவன் {ஹரிச்சந்திரன்} இந்திரனுக்கு நிகராக இருக்கிறான்?(7) ஓ பிராமணரே {நாரதரே}, மேலும், பித்ருக்களின் உலகத்தில் விருந்தினராக இருக்கும் எனது தந்தை மேன்மைமிகு பாண்டுவை நீர் எப்படிச் சந்தித்தீர்?(8) ஓ அற்புத நோன்புகள் கொண்ட மேன்மை மிகுந்தவரே {நாரதரே}, அவர் {பாண்டு} உம்மிடம் ஏதாவது சொன்னாரா? அனைத்தையும் எனக்குச் சொல்லும். நான் உம்மிடம் இருந்து கேட்டுக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(9)
நாரதர், "ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் நீ கேட்ட ஹரிச்சந்திரனைக் குறித்து நான் சொல்லப் போகிறேன்.(10) அவன் {ஹரிச்சந்திரன்} ஒரு பலம் மிகுந்த மன்னன். உண்மையில் அவன் பூமியில் மன்னர்களுக்கு மாமன்னனாக இருந்தான். பூமியின் அனைத்து மன்னர்களும் அவனது ஆளுகைக்குள் கட்டுப்பட்டார்கள்.(11) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, வெற்றிகண்ட தங்க தேரில் தனி ஒரு ஆளாக, அந்த வீரமிகுந்த மன்னன் தனது ஆயுதங்களால், முழு உலகத்தையும் அதன் ஏழு தீவுகளுடன் சேர்த்து தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(12)
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலைகளையும், காடுகளையும் கொண்ட முழு உலகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன், ராஜசூய வேள்வியைச் செய்ய ஆயத்தமானான்.(13) உலகத்தில் இருந்த அனைத்து மன்னர்களும், அவனது {ஹரிச்சந்திரனது} ஆணையின் பேரில் அவனுக்கு பல செல்வங்களை வேள்விக்காகக் கொண்டு வந்து கொடுத்தனர். அவர்கள் {மன்னர்கள்} அனைவரும், அந்த வேள்வியில் நன்குண்டிருந்த பிராமணர்களுக்கு மேலும் உணவுகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்தனர்.(14)
மன்னன் ஹரிச்சந்திரன், அந்த வேள்வியில் கேட்டு வந்த அனைவருக்கும் அவர்கள் கேட்டதைவிட ஐந்து மடங்கு செல்வத்தைக் கொடுத்தான்.(15) அந்த வேள்வியின் முடிவில் அந்த மன்னன் {ஹரிச்சந்திரன்} பல நாடுகளில் இருந்து வந்திருந்த பிராமணர்களுக்கு பெரும் பரிசுகளையும் பல்வேறு செல்வங்களையும் கொடுத்தான்.(16) பலவகைப்பட்ட உணவாலும், மகிழ்ச்சிக்குரிய பொருட்களாலும், தாங்கள் விரும்பியதைவிட அதிக செல்வத்தையும், அதிகமான செல்வங்களையும் பெற்று திருப்தியடைந்த பிராமணர்கள், "மன்னன் ஹரிச்சந்திரனே அனைத்து மன்னர்களிலும் சக்தியிலும் புகழிலும் மேன்மையானவன்", என்று சொல்ல தொடங்கினர்.(17) ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஓ பாரதகுலத்தின் காளையே, இந்தக் காரணத்தினாலேயே ஹரிச்சந்திரன் மற்ற ஆயிரம் மன்னர்களைவிட அதிகமாகப் பிரகாசித்தான்.(18) வலிமைமிக்கவனான ஹரிச்சந்திரன் தனது பெரும் வேள்வியை முடித்து உலகத்தை ஆட்சி செய்து, அவனது அரியணையில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(19)
ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, ராஜசூய வேள்வியைச் செய்யும் அனைத்து ஏகாதிபதிகளும் (இந்திரலோகத்தை அடைந்து) இந்திரனுடன் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்துகின்றனர்.(20) ஓ பாரத குலத்தின் காளையே, போர்க்களத்தில் தங்கள் முதுகைக் காட்டாமல் வாழ்வைத் துறந்த மன்னர்களும் இந்திர மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.(21) கடும் ஆன்மிகத் தவங்கள் இயற்றி தங்கள் உடலைத் துறந்தவர்களும் அதே பகுதியை {இந்திர மாளிகையை} அடைந்து, காலத்திற்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள்.(22)
ஓ குரு குல மன்னா {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஹரிச்சந்திரனின் நற்பேறைக் கண்ட உனது தந்தை பாண்டு, அதனால் மிகுந்த ஆச்சரியமடைந்து, உனக்கு சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்.(23) நான் மனிதர்களின் உலகத்திற்குச் செல்கிறேன் என்பதை அறிந்து, என்னிடம் வந்து, என்னைப் பணிந்து வணங்கி, "ஓ முனிவரே {நாரதரே},(24) "தனது தம்பிகள் தனக்கு கீழ்ப்படிந்து நடக்கும்வரை, யுதிஷ்டிரனால் முழு உலகத்தையும் அடக்கி ஆள முடியும்" என்பதை அவனுக்குச் சொல்லுவீராக. "அதைச் சாதித்தபிறகு, அவன் பெரும் வேள்வியான ராஜசூய வேள்வியை நடத்த வேண்டும்.(25) அவன் எனது மகன். அவன் இந்த வேள்வியைச் செய்தால், நான் ஹரிச்சந்திரனைப் போல இந்திரனின் உலகத்திற்கு சென்று, அவனது {இந்திரனது} சபையில் கணக்கிலடங்கா வருடங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்வேன்" என்று சொன்னான் {பாண்டு}.(26) நான் {நாரதர்} அவனிடம், "ஓ மன்னா {பாண்டு}, நான் மனிதர்களின் உலகத்திற்குச் சென்றால், நீ சொன்னது அனைத்தையும் உன் மகனிடம் சொல்கிறேன்" என்றேன். நான் இப்போது எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டேன்.(27)
ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் இறந்த உனது முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.(28) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.(29) ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்றதொரு வேள்வியைச் செய்வதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம்.(30) ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்வாயாக. மிகவும் விழிப்புடன் இருந்து, நான்கு வகையான உனது குடிமக்களை காப்பதற்கு தயாராக இருப்பாயக.(31) வளமையில் வளர்ந்து, இன்பநிலை அனுபவித்து வா. பிராமணர்களுக்கு செல்வத்தைப் பரிசாகக் கொடுத்து திருப்தி செய். நீ கேட்டது அனைத்திற்கும் நான் விரிவாக பதில் சொல்லி விட்டேன். உனது அனுமதியுடன், நான் தாசார்ஹர்களின் நகரத்திற்கு (துவாராவதி {துவாரகைக்குச்}} செல்கிறேன்" என்றார் {நாரதர்}.(32)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, இவற்றை பிருதையின் {குந்தியின்} மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்ன நாரதர், தன்னுடன் வந்த முனிவர்களுடன் சேர்ந்து, வந்த வழியே திரும்பிச் சென்றார்.(33) நாரதர் சென்றதும்,ஓ குரு குலத்தில் வந்தவனே {ஜனமேஜயனே}, மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் சேர்ந்து வேள்விகளில் முதன்மையான ராஜசூய வேள்வியைக் குறித்து சிந்தித்தான். {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஆங்கிலத்தில் | In English |