Jarasandha - the bar! | Sabha Parva - Section 14 | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ராஜசூய வேள்வி செய்வதில் இருக்கும் தடைகளைக் குறித்துச் சொல்லல்; ஜராசந்தன், சிசுபாலன், பீஷ்மகன் எனப் பலரைப் பற்றி கிருஷ்ணன் சொல்லல்; யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்…
கிருஷ்ணன், "ஓ மாமன்னா, ராஜசூய வேள்வி செய்வதற்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் நீர் கொண்டிருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர், ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும், நான் உமக்குச் சிலவற்றைச் சொல்கிறேன்.(1) இன்றைய உலகில் இருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாம், முன்பு ஜமதக்னியின் மகன் ராமரால் {பரசுராமனால்} கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களைவிட (அனைத்திலும்) தாழ்ந்தவர்களே.(2) ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, ஓ பாரதக் குலத்தின் காளையே, க்ஷத்திரியர்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாகத் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, விதிகளைத் தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர் என்பதையும், ராஜசூய வேள்வி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என்பதையும் நீர் அறிவீர்.(3) பல்வேறு அரச பரம்பரைகளும், மற்ற சாதாரண க்ஷத்திரியர்களும், ஐலா மற்றும் இக்ஷவாகுவின் வழித்தோன்றல்களாகவே இருப்பார்கள். ஓ மன்னா, ஐலனின் வழித்தோன்றல்களும், இக்ஷ்வாகு குலத்தில் வந்த மன்னர்களும், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இன்று நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளாகிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளும்.(4,5) யயாதியின் வழித்தோன்றல்களும் போஜர்களும் குலம், எண்ணிக்கை மற்றும் சிறப்புகளிலும் பெரியவர்களாக இருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இறுதியில் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.(6)
அந்த ஏகாதிபதிகளின் செல்வத்தையும், வளத்தையும் அனைத்து க்ஷத்திரியர்களும் வழிபட்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் விட செல்வத்திலும், பலத்திலும் பெருகி இருக்கும் மன்னன் ஜராசந்தன், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான்.(7,8) மேலும் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்யும் அந்த ஜராசந்தன் நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னர்களில் உயர்ந்தவனாக இருக்கும் அம்மன்னனின் ஆளுகையின் கீழே மொத்த அண்டமும் இருக்கிறது. எனவே, அவனே {ஜராசந்தனே} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான்.
மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன், அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான்.
ஓ பெரும் மன்னா, கரூஷர்களின் மன்னனும் பலம் பொருந்தியவனும், மாய சக்திகளைக் கொண்டு போரிடும் தகுதி கொண்டவனுமான மன்னன் வகன் {வக்ரன்}, ஜராசந்தனுக்காகக் {அவனுக்குச் சேவை செய்ய} காத்திருந்து, அவனது சீடனாகவே செயல்பட்டு வருகிறான்.(9-12)
மேலும் பெரும் சக்திபடைத்தவர்களும், உயர் ஆன்மாக்களுமான ஹம்சன் மற்றும் டிம்பகன் என்ற இருவர், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனின் நிழலில் வாழ்கிறார்கள். மேலும், தந்தவக்கிரன், கரூஷன், கரபன், மேகவாஹனன் ஆகியோரும் ஜராசந்தனுக்காகக் {அவனுக்குச் சேவை செய்ய} காத்திருக்கிறார்கள்.
உலகில் அற்புதமான ரத்தினத்தைத் தனது தலையில் தரித்திருப்பவரும், யவனர்களின் மன்னருமான பகதத்தர், உமது தந்தையின் {பாண்டுவின்} பழைய நண்பனாவார். அளவிடமுடியாத சக்தி கொண்ட அவர், முரு மற்றும் நரகனைத் தண்டித்து, வருணனைப் போல மேற்கு உலகத்தை ஆண்டு வருகிறார். அப்படிப்பட்ட பகதத்தனே ஜராசந்தனிடம் பேச்சாலும் செயலாலும் பணிந்திருக்கிறார். இருப்பினும், ஒரு தந்தைக்குத் தனது மகனிடம் இருக்கும் அன்பை உம்மிடம் கொண்டிருக்கிறார்.(13-16)
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பூமியின் மேற்கிலும், தெற்கிலும் தனது ஆட்சிக்குட்பட்ட நாடுகளைக் கொண்டிருக்கும் உமது தாய்வழி மாமன் ஒருவர் புருஜித் என்று அழைக்கப்படுகிறார். பகைவரை அழிப்பவரான அவர் குந்தி குலத்தை தழைக்க வைப்பவராவார். அவர் உன்னிடம் அன்பு கொண்டு மதிப்பு பாராட்டுபவராவார் {அவர் மட்டுமே உம் தரப்பில் இருக்கிறார்}.(17)
முன்னரே என்னால் கொல்லப்படாதவனும், தன்னைத் தானே தெய்வீகமானவன் என்று சொல்லிக் கொள்பவனும், அப்படியே பலராலும் அறியப்படுபவனும், என்னைச் சுட்டும் குறிகளை {சங்கு, சக்கரம் போன்றவை} தன் மூடத்தனத்தால் எப்போதும் தரிப்பவனும், வங்கம், புண்ட்ரம், கிராதம் ஆகிய நாடுகளுக்கு மன்னனாக இருப்பவனும், இந்தப் பூமியில் பௌண்டரகன், வாசுதேவன் என்ற பெயர்களால் அறியப்படுபவனும், சேதி நாட்டில் இருப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தீய பாவியும் {பௌண்டரக வாசுதேவன்} ஜராசந்தனின் பக்கம் இருக்கிறான்.(18-20)
மேலும், ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, போஜர்களின் பலம் பொருந்திய மன்னனும், இந்திரனுக்கு நண்பனும், பகை வீரர்களைக் கொல்பவனும், உலகத்தின் கால் பங்கை ஆள்பவனுமான பீஷ்மகன், தனது கல்வியால் பாண்டியர்களையும், கிருதகௌசிகர்களையும் {க்ருதகைசிகர்களையும்} வென்றவனாவான். அவனும் {பீஷ்மகனும்} மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்குப்} பணியாளாக இருக்கிறான். அவனது சகோதரனான அக்ருதி, ஜமதக்னியின் மகன் ராமரைப் {பரசுராமனைப்} போன்று ஆற்றல்மிக்கவனாவான். அந்தப் போஜமன்னனுக்கு நாம் உறவினராக இருப்பதால், அவனுக்கு விருப்பமானதையே நாள்தோறும் நாம் செய்துவந்தாலும், அவன் நம்மை மதிப்பதில்லை. அவன் {பீஷ்மகன்} எப்போதும் நமக்குத் தீங்கையே செய்கிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் தனது தரத்தையும், பலத்தையும் அறிந்து கொண்டு, ஜராசந்தனின் பார்வையின் கீழ் தன்னை நிறுவிக் கொண்டான்.(21-24)
மேலும், ஓ மேன்மையானவரே {யுதிஷ்டிரரே}, போஜர்களின் பதினெட்டு இனங்களும், ஜராசந்தன் மீது கொண்ட அச்சத்தால், மேற்கு நோக்கி ஓடினார்கள். சூரசேனர்கள், பத்திரகாரர்கள், போதர்கள், சால்வர்கள், படத்சரர்கள், சுஸ்தலர்கள், முகுட்டர்கள் {ஸுகுட்டர்கள்}, குலிந்தர்கள், குந்திகள் ஆகியோரும் அவ்வாறே ஓடினர்.(25,26) சகோதரர்களுடன் கூடிய சால்வயன குலத்தின் மன்னர்கள், தென் பாஞ்சாலர்கள், கிழக்கு கோசலர்கள் என அனைவரும் தங்கள் நாடுகளை விட்டு குந்தியின் நாடு வந்தனர்.(27) அதே போல வடக்கில் இருந்த மத்ஸ்யர்களும், ஸந்யஸ்தபாதர்களும் அச்சத்தால் தங்கள் நாடுகளை விட்டு தென் நாட்டிற்கு ஓடினர். ஜராசந்தனின் சக்திக்கு அஞ்சிய பாஞ்சாலர்களும் தங்கள் நாட்டைவிட்டு எல்லா திசைகளுக்கும் ஓடினர்.(28,29)
சில காலத்திற்கு முன்னர் மூடன் கம்சன், யாதவர்களைக் கொன்ற பிறகு, ஜராசந்தனின் இரு மகள்களைத் திருமணம் செய்திருந்தான்.(30) அவர்கள் அஸ்தி மற்றும் பிராப்தி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சகதேவனின் சகோதரிகள் ஆவர். இப்படிப்பட்ட கூட்டணியால், அந்த மூடன் {கம்சன்} தனது உறவினர்களைக் கொன்று அவர்கள் அனைவரையும்விட உயர்ந்து நின்றான்.(31) ஆனால் அவனது நடத்தையால் தீச்சொல்லையே அவன் ஈட்டினான். மேலும் அந்தப் பாவி போஜ இனங்களின் முதிர்ந்த மன்னர்களை ஒடுக்கத் தொடங்கினான்.(32) அவர்கள் தங்களையும், தங்கள் உறவினர்களையும் காப்பாற்றிக் கொள்ள எங்கள் பாதுகாப்பினை நாடினார்கள். அவர்கள் அக்ரூரனுக்கு அஹுகனின் அழகிய மகளைக் கொடுத்தனர்.(33) நான் சங்கர்ஷணரை {பலராமரைத்} துணையாகக் கொண்டு எனது உறவினர்களுக்குத் தொண்டு செய்தேன். ராமரின் {பலராமரின்} உதவியுடன் நான் கம்சனையும், சுநாமனையும் கொன்றேன்.(34) ஆனால் {கம்சன் இறந்ததால்} உடனடி ஆபத்து அகன்றாலும், அடுத்து அவனது {கம்சனது} மாமனாரான ஜராசந்தன் ஆயுதம் ஏந்தினான்.
பிறகு, பதினெட்டு இளம் கிளைகளைக் கொண்ட யாதவர்கள் அனைவரும் கூடி,(35) எதிரியை {ஜராசந்தனை} அற்புதமான ஆயுதங்களால் முன்னூறு வருடங்களுக்குத் தாக்கினாலும், அவனுக்கு எந்தக் காயத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது என்பதை எங்களுக்குள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.(36) தேவர்களைப் போன்றவர்களும், பெரும் பலம்மிக்கவர்களுமான இரு நண்பர்கள் அவனுக்கு {ஜராசந்தனுக்கு} இருந்தனர். அவர்கள் ஹம்சன் மற்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்டனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. அவர்களுடன் சேர்ந்திருப்பவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான ஜராசந்தனை வெல்ல மூவுலகங்களிலும் எவனும் கிடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இஃது எங்கள் கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த மன்னர்களும் அப்படியே நினைத்தனர்.(37-39)
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஹம்சன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். பதினெட்டு நாள் போர் புரிந்த அவன், ராமரால் {பலராமரால்} வீழ்த்தப் பட்டான் {கொல்லப்பட்டது போல மயக்கமுற்றான்}.(40) ஆனால், ஓ பாரதா, ஓ மன்னா, ஹம்சன் கொல்லப்பட்டான் என்று மக்கள் சொல்வதைக் கேட்ட டிம்பகன், ஹம்சன் இல்லாது தன்னால் வாழ முடியாது என்று நினைத்தான். எனவே, யமுனையின் நீரில் குதித்துத் தன்னைத் தானே அவன் மாய்த்துக் கொண்டான். பிறகு பகை வீரர்களைக் கொல்பவனான ஹம்சன், டிம்பகன் தற்கொலை செய்து கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டு, யமுனைக்கு சென்று, அதன் நீரில் தானும் குதித்தான்.(41-43) பிறகு, ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, ஹம்சனும், டிம்பகனும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட ஜராசந்தன் வெறுமையான இதயத்துடன் தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஜராசந்தன் திரும்பியதும், ஓ எதிரிகளைக் கொல்பவரே, மகிழ்ச்சியால் நிறைந்த நாங்கள், மதுராவிலேயே தொடர்ந்து வாழத் தொடங்கினோம்.(45)
பிறகு ஹம்சனின் விதவை மனைவியும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகானப் பெண், அழகானவளுமான ஜராசஸந்தனின் மகள், தனது தலைவனின் மரணத்துக்காக துக்கமடைந்து, தனது தந்தையைத் தொடர்ந்து தூண்டினாள். அவள் "ஓ எதிரிகளைக் கொல்பவரே, எனது கணவரைக் கொன்றவர்களைக் கொல்வீராக" என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள். ஓ பெரும் மன்னா, முன்பே நாங்கள் எடுத்திருந்த தீர்மானத்தை நினைவுகூர்ந்து உற்சாகமற்ற இதயத்துடன் நாங்கள் மதுராவில் இருந்து தப்பிச் சென்றோம்.(46,47) ஜராசந்தனுக்கு அஞ்சிய நாங்கள், எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, எளிதாகச் சுமந்து செல்லும் வகையில் சிறு சிறு பகுதிகளாக்கி, எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு தப்பி ஓடினோம். அனைத்தையும் நினைத்துப் பார்த்த நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.(48,49) மேற்கில் ரைவதக மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம்.(50) நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாத வகையில் மீண்டும் செப்பனிட்டோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?(51)
ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த {ரைவதக} மலையைக் கடக்க முடியாது என்றும், ஜராசந்தனின் மீதிருந்த அச்சத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்றும் கருதிய மதுவின் வழித்தோன்றல்கள் {யாதவர்கள்} மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.(52,53) இவ்வாறே, ஓ மன்னா {யுதிஷ்டிர்ரே}, பலமும், சக்தியும் பெற்றவர்களாக இருப்பினும், ஜராசந்தனின் ஒடுக்குதலால் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்த மலையை அடைய நாங்கள் பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியில் நூறு வளைவுகளில், நூறு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு வகையான ஆயுதம் தாங்கிய வீரர்களை நிறுத்தினோம். ஒவ்வொரு வாயிலும் ஆற்றல்நிறைந்த வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளைச் சார்ந்த இளையவர்கள், இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.(54,55)
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹுகனுக்கு நூறு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆற்றலில்) தேவர்களைப் போல இருக்கின்றனர்.(56) சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்ரதேவன், சாத்யகி, நான் {கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவர் {பலராமர்}, எனக்குச் சமமான எனது மகன் சாம்பன்(57) ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர மேலும் பலரும் இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன். கிருதவர்மன், அனாதிருஷ்டி, சமீகன், சமிதிஞ்சயன்,(58) கங்கன், சங்கு, குந்தி ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த மன்னனும் சேர்ந்ந்த பத்து பேரும் மஹாரதர்களேயாவர்.(59) அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள் ஒவ்வொருவரும் வஜ்ரத்தைப் போன்றவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் {குசஸ்தலியில்} மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து, விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.(60)
ஓ பாரதக் குலத்திற் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன் {சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரின் மீதும் உமது பேரரசை நிறுவுவதே உமக்குத் தகும்.(61) ஆனால், ஜராசந்தன் உயிரோடு உள்ளவரை உம்மால் ராஜஸூய வேள்வியைக் கொண்டாட இயலாது என்பதே என் தீர்மானம்.(62) சிங்கமானது, மலைகளின் மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் தன்னால் கொல்லப்பட்ட பெரும் யானைகளின் சடலங்களை வைத்திருப்பதைப் போல, {கிரிவ்ரஜத்தின்} ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் அவனால் {ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.(63) ஓ பகைவரைவரையும் கொல்பவரே, வேள்வியில் நூறு ஏகாதிபதிகளைக் காணிக்கையளிக்க விரும்பிய மன்னன் ஜராசந்தன், கடும் தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனுமான உமையின் தலைவனை {சிவனைத்} துதித்தான். இவ்வழியிலேயே பூமியின் மன்னர்கள் அனைவரும் ஜராசந்தனால் வீழ்த்தப்பட்டனர். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே, இவ்வகையிலேயே அவன் தன் வேள்வி தொடர்பான நோன்பை நிறைவேற்ற முடிந்தது.(64,65)
மன்னர்களை அவர்களது துருப்புகளுடன் சேர்த்து வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் கைதிகளாகத் தன் நகரத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம் {மன்னர்களின்} கூட்டத்தை மிக அதிகமாகப் பெருக்கியிருக்கிறான்.(66) ஓ மன்னா, நாங்களும் ஒரு காலத்தில் ஜராசந்தனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மதுராவை விட்டகன்று துவாராவதி நகரத்திற்கு {துவாரகைக்குத்} தப்பி ஓடினோம்.(67) ஓ மன்னா, நீர் இவ்வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்ய விரும்பினால், ஜராசந்தனால் அடைத்து வைக்கப்பட்டுள்ள மன்னர்களை விடுவிக்கவும், அவனைக் கொல்லவும் முனைவீராக.(68) இல்லையெனில், ஓ குருகுலத்தின் மகனே, உமது காரியத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. ஓ நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ராஜஸூயம் உம்மால் செய்யப்பட வேண்டுமானால், அதை நீர் இவ்வழியில் செய்ய வேண்டுமேயன்றி வேறு வழியில் முடியாது.(69) ஓ மன்னா, (இக்காரியத்தில்) இதுவே என் கருத்தாகும். ஓ பாவமற்றவரே, நீர் எண்ணியவாறே செயல்படுவீராக. ஓ மன்னா, இந்தச் சூழ்நிலையில், அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, விளைவுகளையும் குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச் சொல்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(70)

ஆங்கிலத்தில் | In English |