Arjuna's Motivation! | Sabha Parva - Section 16 | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் ஜராசந்தனை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடலாம் என்று சொல்லல்; அர்ஜுனன் அதற்குச் சமாதானம் கூறல்…
யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, தகுந்த மாட்சிமையில் விருப்பம் கொண்டு, என் ஆற்றலை மட்டுமே நம்பி சுய நல நோக்கத்துடன் செயல்பட்டு, எப்படி என்னால் அவனை {ஜராசந்தனை} அழிக்க முடியும்?(1) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமனையும், அர்ஜுனனையும் எனது கண்களாகவும், உன்னை எனது மனமாகவும் நான் நினைக்கிறேன். எனது கண்களையும், மனத்தையும் இழந்து என்னால் எப்படி வாழ முடியும்?(2) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ஜராசந்தனை யமனாலும் வீழ்த்த முடியாதே! அவற்றுக்கு எதிராக என்ன வகையான ஆற்றலை உன்னால் வெளிப்படுத்த முடியும்?(3) இந்தக் காரியத்தை முடிக்க வில்லை என்றால், நாம் பேரழிவிற்குள் தள்ளப்படுவோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே, வெல்லப்பட முடியாத காரியத்தைச் செய்யக்கூடாது என்பதே எனது கருத்து.(4) ஓ கிருஷ்ணா, நான் அடிக்கடி நினைப்பதை நீ கேட்பாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தக் காரியத்தைச் செய்வதில் இருந்து ஒதுங்குவதே நமக்கு நன்மை என எனக்குத் தெரிகிறது. இன்று எனது இதயம் துயரால் பீடிக்கப்பட்டிருக்கிறது. ராஜசூயம் அடைய முடியாத சாதனையாக எனக்குத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.(5)
வைசம்பாயனர் சொன்னார், "விற்களில் அற்புதமான வில்லையும், வற்றாத இரு அம்பறாத்தூணியையும், கொடியுடன் கூடிய தேரையும், சபா மண்டபத்தையும் அடைந்தவனான அர்ஜுனன்,(6) யுதிஷ்டிரனிடம், "ஓ மன்னா, நான் வில்லையும், ஆயுதங்களையும், கணைகளையும், சக்தியையும், கூட்டாளிகளையும், நாடுகளையும், புகழையும், பலத்தையும் அடைந்துள்ளேன். அவை விரும்பப்பட்டாலும், அவற்றை அடைவது மிகக் கடினமாகும்.(7) கல்விமான்களும், புகழ்வாய்ந்தவர்களுமான மனிதர்கள், நல்ல சமுதாயத்தில் பிறந்த உயர்ந்த பிறப்பைப் புகழ்கின்றனர். ஆனால் ஆற்றலிற்கீடானது எதுவும் இல்லை.(8) உண்மையில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆற்றலைவிட நான் விரும்புவது வேறு எதையும் அல்ல. அற்றலுக்குப் பெயர்பெற்ற குலத்தில் பிறந்தும், ஆற்றலின்றி இருப்பவன் மதிப்பற்றவனாவான்.(9) இருப்பினும், ஆற்றலுடைய, குறிப்பிடத் தகாத குலத்தில் பிறந்தவன், முன்னவனை {வீரமற்றவனை} விட மிகவும் மேன்மையானவன். எதிரிகளை அடக்கி, அனைத்திலும் தனது புகழை வளர்த்துக் கொள்பவன் அனைத்து வகையிலும் க்ஷத்திரியன் எனப்படுவான்.(10)
வேறு எந்தத் தகுதியும் இல்லாமல் இருந்தாலும், ஆற்றலை மட்டும் கொண்டவன் தனது எதிரிகளை வீழ்த்துகிறான். இருப்பினும் ஆற்றலற்றவன், அனைத்துத் தகுதிகளைக் கொண்டிருந்தாலும், எதையும் சாதிப்பதில்லை. தொடக்க நிலையில் இருக்கும் வீரத்தால் மட்டுமே அனைத்துத் தகுதிகளும் வருகின்றன.(11) கவனத்தைக் குவித்தலும் {ஒரு முகப்படுத்தலும்}, முயற்சியும், விதியும் வெற்றியின் மூன்று காரணங்களாகும். இருப்பினும், வீரத்தைக் கொண்டிருந்தாலும், கவனக்குறைவாக இருப்பவன் வெற்றியை அடையத் தகுதியடைவதில்லை. அதன்காரணமாகவே, சில நேரங்களில், பெரும் பலம் கொண்ட எதிரிகள்கூட அவர்களது எதிரிகளின் கையில் மரணத்தைச் சந்திக்கின்றனர். பலவீனத்தை அற்பத்தனம் வெல்வதைப் போல, சில சமயங்களில் பலமானவனை அவன் செய்யும் தவறுகள் வீழ்த்திவிடும். எனவே, வெற்றியில் விருப்பமுள்ள ஒரு மன்னன், இந்த இரு காரணங்களையும் {கவனக்குறைவு மற்றும் தவறுகளை} விலக்க வேண்டும்.(12-14) நமது வேள்விக்காக ஜராசந்தனைக் கொல்ல நாம் பெரு முயற்சி செய்து, அவனது தீய காரியத்திற்காகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் மன்னர்களை விடுவித்தால், அதைவிட நாம் ஈடுபடும் உயர்ந்த காரியம் வேறு எதுவும் இல்லை.(15) இருப்பினும், நாம் அந்தக் காரியத்தை மேற்கொள்ளவில்லை என்றால், உலகம் நம்மைத் தகுதியற்றவர்களாகக் கருதும். நமக்கு நிச்சயம் தகுதி இருக்கிறது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}! எனவே, நீர் ஏன் நம்மைத் தகுதியற்றவர்களாக நினைக்க வேண்டும்?(16) ஆன்ம அமைதியை விரும்பும் முனிவர்கள், வசதியாக மஞ்சள் ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். நாம் அந்த எதிரியை {ஜராசந்தனை} வீழ்த்தினால், மாட்சிமை கொண்ட தகுதி நமதாகும். அகையால், நாம் அந்த எதிரியை {ஜராசந்தனை} எதிர்த்துப் போரிடலாம்." என்றான் {அர்ஜுனன்}.(17)

ஆங்கிலத்தில் | In English |