The enquiry of Narada | Sabha Parva - Section 5c | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம்)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
"நாரதர் சொன்னார், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, உனது எதிரிகளை அவர்களுக்குத் தெரியாமல் கவனத்துடன் கண்காணித்து வருகிறாயா? உன்னால் மதிக்கப்படும் உனது புரோகிதர், எளிமையும், சுத்தமான இரத்தமும், புகழ் கொண்டவருமாக இருந்து, பொறாமை அற்றவராகவும், தாராளத்தன்மை அற்றவராகவும் இருக்கிறாரா? கட்டளை இடும் அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தில், நன்னடத்தையுள்ள, புத்திசாலியான, வஞ்சனை அற்ற ஒரு அந்தணனை, நெருப்பு முன்பான உனது தினசரி சடங்குகளுக்காக நியமித்திருக்கிறாயா? அவர் சரியான நேரத்தில் எப்போதெல்லாம் ஹோமங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறாரா? நீ நியமித்திருக்கும் சோதிடர் பொருள்களின் பொது அமைப்பை அறியும் திறன் வாய்ந்தவரா? சகுனங்களை அறிந்து சொல்லத்தக்கவரா? இயற்கைத் தடங்கல்களை சமன்படுத்தவல்ல தகுதி வாய்ந்தவரா?
மதிப்புமிக்க அலுவல்கள் நடைபெறும் இடங்களில், மதிப்புக்குரிய வேலையாட்களை நியமித்திருக்கிறாயா? அலட்சியமான அலுவல்களில் அலட்சியமானவர்களையும், கீழ்மையான அலுவல்களில் கீழ்மையானவர்களையும் நியமித்திருக்கிறாயா? உயர்ந்த அலுவல்களில் வஞ்சனையற்றவர்களாகவும், பரம்பரை பரம்பரையாக நன்னடைத்தைக்குப் பேர் போன குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவும், இயல்பானவர்களுக்கு மேலான குணம் கொண்டவர்களாகவும் இருக்கும் அமைச்சர்களை நியமித்திருக்கிறாயா? உனது மக்களை கடுமையான மற்றும் கொடூரமான தண்டனைகள் கொடுத்து தண்டிக்காமல் இருக்கிறாயா?
மேலும், ஓ! பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்கள் உனது கட்டளையின் பேரிலேயே நாட்டை ஆள்கிறார்களா? வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் சில வீழ்ந்த மனிதர்களிடம் லேசாகச் {மேலும் அவர்களால் வேள்விகளைச் செய்ய இயலாதவர்கள் என்று} சொல்வது போலவும், அல்லது கர்வம் கொண்ட கணவர்களை மனைவிகள் லேசாக எடுத்துக் கொண்டு அவமதித்து தன்னடக்கமற்றவர்களாக இருப்பது போல உனது அமைச்சர்கள் உன்னை அவமதிக்காமல் இருக்கின்றனரா?
உனது படைகளின் தளபதி, போதுமான நம்பிக்கையும், வீரமும், புத்திசாலித்தனமும், அமைதியும், நன்னடத்தையும், கொண்டு நல்ல பிறப்பாகப் பிறந்து, உனக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானா? அனைத்து வகையிலும் திறன்வாய்ந்த, நன்னடத்தையுள்ள, பெரும் வீரம் கொண்ட உனது படையின் தலைமை அதிகாரிகளை மரியாதையுடன் கருதியும், நடத்தியும் வருகிறாயா? உனது படைகளுக்குத் தேவையான சலுகைகளையும், ஊதியத்தையும் குறித்த நேரத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? இவற்றை {சலுகை + ஊதியம்} கொடுக்காதிருந்து அவர்களை ஒடுக்காமல் இருக்கிறாயா? ஊதியத்தை நிலுவையில் வைப்பதாலும், சலுகைகளை முறையான, குறித்த நேரங்களில் கொடுக்காமல் நினைத்த நேரங்களில் கொடுத்துக் கொண்டிருந்தாலும், படைகளைக் கலகம் செய்ய வைக்கும் என்றும், இதுவே தீமைகளில் பெரும் தீமை என்று கற்றவர்கள் கருதுகிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறாயா?
உயர் குடி மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உன்னிடம் அர்ப்பணிப்புடனும், போரில் உனக்காக தங்கள் உயிரைக் கொடுக்க தாயாராகவும் இருக்கிறார்களா? படையைப் பொறுத்தவரை எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒருவன் தான் நினைத்தவாறு உத்தரவிட்டுக்கொள்ள நீ அனுமதிக்காமல் இருக்கிறாயா?
உனது பணியாட்களில் யாராவது, தனித்திறமையுடன் ஒரு சாதனையைச் செய்த பிறகு, உன்னிடம் கூடுதல் மரியாதையாக கூடுதல் உணவையும் கூடுதல் ஊதியத்தையும் அடைவதில் ஏமாற்றம் கொள்ளாமல் இருக்கின்றனரா? கற்ற எளிமையானவர்களையும், அனைத்து வகை அறிவிலும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் சரியானபடி செல்வங்களைப் பரிசளித்தும், அவரவர் தகுதிக்கேற்ப மரியாதை கொடுத்தும் கௌரவித்து வருகிறாய் என நான் நம்புகிறேன்.

ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா?
ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா?
ஓ! பூமியின் தலைவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, அவர்கள் எளிதாக பயமற்று, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல உன்னை அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா?
ஓ! பாரதகுலத்தின் காளையே, உனது எதிரியின் துயரைக் கேட்டவுடன், நேரத்தைக் கடத்தாமல் உனது முப்படைகளையும் நினைத்துப் பார்த்து, அவற்றை அங்கே நடத்திச் செல்கிறாயா? ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, நேரம் வந்ததும், அனைத்து சகுனங்களையும் கண்டு, அவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்து, வெற்றியை அளிக்கும் பனிரெண்டு மண்டலங்களையும் {சேமிப்பு, மறைவிடம், போன்றவையும் படைவீரர்கள் ஊதியத்தை முன்பணமாகக் கொடுத்தல் ஆகியவையும்} குறித்துக் கொண்டு படைகளை நடத்துகிறாயா?
----------------- நாரதரின் விசாரணை -சபாபர்வம் பகுதி 5ஈ யில் தொடர்கிறது.