The enquiry of Narada | Sabha Parva - Section 5b | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம்)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நீ சம்பாதிக்கும் செல்வம் உரிய பொருள்களுக்காகச் செலவிடப்படுகிறதா? உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா? நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா? உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்கிவிடவில்லையா? ஓ! மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, மூன்று வகையான (நல்ல, அலட்சிய, தீய வகைகளாக இருக்கும்) உனது குடிகளிடம், உனது மூதாதையர்கள் பயின்றதைப் போல அறம் மற்றும் பொருளுக்கு இசைவான உன்னத நடத்தை கொண்டிருக்கிறாயா?
பொருளுக்காக அறத்துக்கும், அல்லது எளிதாக மயக்கும் இன்பத்துக்காக, அறத்துக்கும் பொருளுக்கும் தீங்கு செய்யாது இருக்கிறாயா? ஓ! அனைவரின் நலனிலும் அர்ப்பணிப்புடன் இருக்கும் அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்ய அறிந்தவனான நீ,
அறம் {அனைத்திலும் நல்லவனாக இருக்க முயற்சித்தல்}, பொருள் {சம்பாதிப்பது}, இன்பம் {மகிழ்ச்சியாக இருப்பது}, வீடு {முக்தி அடைய முயற்சி செய்தல்} ஆகியவற்றுக்கு நீதியுடன் சரியாக நேரத்தைப் பிரித்து செலவிடுகிறாயா?
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, மன்னர்களின் ஆறு{6} பண்புக்கூறுகளைக் கொண்டு {attributes} (பேச்சில் புத்திசாலித்தனம், வழி செய்ய தயாராக இருத்தல், எதிரியைக் கையாள்வதில் புத்திசாலித்தனத்துடன் இருத்தல், நினைவுத் திறனுடன் இருத்தல், அறங்களையும், அரசியலையும் அறிந்து வைத்திருத்தல் ஆகியனவற்றைக் கொண்டு) ஏழு{7} வழிமுறைகளைக் (வேற்றுமை விதைத்தல், தண்டனை அளித்தல், சமரசம், பரிசுகள், மந்திரங்கள், மருத்துவம் மற்றும் மாயம் ஆகியவற்றைக்) கவனிக்கிறாயா?
நீ உனது சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகு எதிரிகளின் பதினான்கு{14} உடைமைகளைப் பரிசோதிக்கிறாயா? அவையாவன: நாடு, கோட்டைகள், ரதங்கள், யானைகள், குதிரைப்படை, காலாட்படை, மாநிலத்தின் {நாட்டின்} முதன்மை அதிகாரிகள், உயர்குடி பெண்களின் அந்தப்புரம், உணவு வழங்கல், இராணுவம் மற்றும் பொருள் வரவுக்கான கணக்கீடுகள், நடைமுறையில் உள்ள சமயக் கட்டுப்பாடுகள் {நடைமுறையில் உள்ள மத ஒப்பந்தங்கள்}, மாநில {நாட்டின் கணக்கு வழக்குகள்} கணக்குகள், வருவாய், மதுக்கடைகள், இரகசிய எதிரிகள் ஆகும்.
ஓ! அறம்சார்ந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, உனது நாட்டிலும் எதிரியின் நாட்டிலும் எட்டு{8} தொழில்களை (விவசாயம், வணிகம் போன்றவை) {விவசாயம், வணிகம், கோட்டை, அணை, யானை பிடித்தல், புதையல் எடுத்தல், தங்கம் வெட்டுதல், காலி இடங்களில் மக்களைக் குடியேற்றுதல் ஆகியன என்று கங்குலி அல்லாத வேறு உரையில் கண்டேன்} சரியாக ஆய்வு செய்து கவனிக்கிறாயா?
ஓ! பாரத குலத்தில் வந்த காளையே {யுதிஷ்டிரா}, உனது நாட்டின் ஏழு{7} முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் சம்பாதித்த செல்வத்தால், சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன். உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா? அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா?
அந்நியர்களிடமும், உன்னிடம் நடுநிலையுடன் நடந்து கொள்பவர்களிடமும் நீ நடு நிலைமையுடன் நடந்து கொள்கிறாயா? ஓ! வீரனே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்களை, வயதில் மூத்தவர்களாக, கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் புரிந்து கொள்பவர்களாக, பிறப்பாலும் இரத்தத்தாலும் சுத்தமானவர்களாக, உன்னிடம் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தகுதியில் உன்னைப் போலவே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாயா?
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அரசர்களின் வெற்றிகளுக்கு நல்ல ஆலோசனைகளே காரணம். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, உனது நாடு, சாத்திரங்களைக் கற்று தங்கள் ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளும் அமைச்சர்களால் காக்கப்படுகிறதா? எதிரிகள் அதை பலவீனப்படுத்தாமல் இருக்கின்றார்களா? நீ தூக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கிறாயா? சரியான நேரத்தில் விழிக்கிறாயா? லாபம் விளைவிக்கும் தேடுதல்களை, இரவின் கடைசி மணிநேரங்களில் நினைத்து, அடுத்த நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாதென்றும் தீர்மானிக்கிறாயா?
எதையும் தனிமையாக நீயே தீர்மானிக்காமலும், அதே நேரத்தில் பல பேரிடம் ஆலோசனை கேட்காமலும் இருக்கிறாயா? நீ செய்ய நினைக்கும் ஆலோசனைகளை உனது நாடு அறியாமல் இருக்கிறதா? சிறிய சாதனையும், பெரிய பயனும் உள்ள காரியங்களைத் தேர்ந்தெடுத்து அப்படிப்பட்டவற்றை இடையூறு வராதவாறு விரைவாகச் செய்கிறாயா? உழவர்களை உனது பார்வையில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா? அவர்கள் உன்னை அணுக அச்சமில்லாமல் இருக்கிறார்களா? நீ உனது காரியங்களை நம்பிக்கைக்குரிய தூய்மையானவர்களையும், அனுபவம் கொண்டவர்களையும் கொண்டு செய்கிறாயா? ஓ! வீர மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் சாதிக்கப்பட்ட சாதனைகளையும் உன்னால் தொடங்கப்பட்டு முடியாத காரியங்களை மட்டுமே மக்கள் அறிந்து, தொடங்கப்படாததையும், ஆலோசனையில் உள்ளதையும் அறியாமல் இருக்கிறார்களா?
இளவரசர்களுக்கும், படைகளின் தலைவர்களுக்கும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும், ஒழுக்க அறிவியலையும் கற்றுக் கொடுக்க அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறாயா? ஆயிரம் பாமரர்களைக் கொடுத்து ஒரு கற்ற மனிதனை விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா? கற்ற மனிதன், நாட்டுக்குத் துயர் நிறைந்த காலங்களில் பெரும் நன்மையைச் செய்கிறான். உனது கோட்டைகளில் எப்போதும், செல்வமும், உணவும் ஆயுதங்களும், நீரும், பொறிகளும் கருவிகளும், இருக்கின்றனவா? அங்கே பொறியாளர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்களா? புத்திசாலித்தனமும், வீரமும் கொண்ட ஒரே அமைச்சர்கூட, தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, ஞானமும் நீதியும் கொண்டிருந்தால், அவனால் ஒரு மன்னனுக்கோ அல்லது மன்னனின் மகனுக்கோ பெரும் வளமையைக் கொடுக்க முடியும். ஆகையால், நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னிடம் அப்படிப்பட்ட அமைச்சர் இருக்கிறாரா?
மூன்று உளவாளிகளைக் கொண்டு உனது எதிரியின் பதினெட்டு{18} தீர்த்தங்களைக் {1.அமைச்சன், 2.புரோகிதன், 3.இளவரசன், 4.தளபதி, 5.வாயில் காப்போன், 6.அந்தப்புர அதிகாரி, 7.சிறைச்சாலை அதிகாரி, 8.செல்வங்களை வாங்கி வைப்பவன், 9.செல்வங்களை செலவழிப்பவன், 10.கட்டளையை நிறைவேற்றுபவன், 11.நகர அதிகாரி, 12.காரியங்களை விதிப்பவன், 13.நீதிபதி 14.சபைத் தலைவர், 15.தண்டனை அளிப்பவன், 16.தண்டனையை நிறைவேற்றுபவன், 17.எல்லைக்காவலாளி, 18.காட்டதிகாரி ஆகியோரைக்} குறித்து அனைத்தையும் அறிந்து கொண்டு, பிறகு உன்னுடைய பதினைந்து{15} தீர்த்தங்களையும் {மேற்கண்டதில் அமைச்சன், புரோகிதன், இளவரசன் நீங்கலாக மற்றது அனைத்தும்} அறிந்து கொண்ட பிறகு அந்த மூன்று உளவாளிகளும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறியாமல் இருக்கின்றனரா?
----------------- நாரதரின் விசாரணை -சபாபர்வம் பகுதி 5இ யில் தொடர்கிறது.