The enquiry of Narada | Sabha Parva - Section 5d | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம்)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, எதிரியின் முக்கிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப நகைகளையும், ரத்தினங்களையும் எதிரி அறியாதவாறு கொடுத்து வருகிறாயா? ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, முதலில் உனது ஆன்மாவை வெற்றி கொண்டு, உனது புலன்களை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு, உனது எதிரிகள் எந்த மாதிரியான ஆசைளுக்கெல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து வெற்றி கொள்ள முனைகிறாயா?
நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான {1}வேற்றுமையை அகற்றல், {2}பரிசளித்தல், {3}ஒற்றுமையின்மையை விளைவித்தல், {4} பலத்தைப் பிரயோகம் செய்வது போன்ற உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா?
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா? அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா? அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா? உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5}, பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா?

ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ! மாமன்னா {யுதிஷ்டிரா}, எதிரி நாட்டின் பயிர் அறுப்பு காலத்தையும், பஞ்ச காலத்தையும் {பயிரைக் காப்பாற்றும் காலத்தையும்} கருதாமல் எதிரிகளைக் கொல்கிறாயா?
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது பணியாட்களும், முகவர்களும், உனது நாட்டிலும், எதிரிகள் நாட்டிலும் தொடர்ந்து தங்கள் தங்கள் கடமைகளையாற்றி, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள், என நான் நம்புகிறேன்.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உனது உணவு, நீ அணியும் ஆடைகள், நீ பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான பணியாட்களை நியமித்திருக்கிறாய், என நான் நம்புகிறேன்.
ஓ! மன்னா, {யுதிஷ்டிரா} உனது கருவூலம் {பொக்கிஷம்}, தானியக் களஞ்சியம், தொழுவங்கள் {மாட்டுத் தொழுவம், குதிரைக் கொட்டகை போன்றவை}, படைக்கலன்கள், பெண்களின் அந்தப்புரங்கள் ஆகியவை உனது நன்மையை விரும்பி, உனக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பணியாட்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என நான் நம்புகிறேன்.
ஓ! ஏகாதிபதியே, {யுதிஷ்டிரனே} முதலில், உனது வீட்டுப் பணியாட்களிடம் இருந்தும், பொது பணியாட்களிடம் இருந்தும், உனது உறவினர்களின் பணியாட்களிடம் இருந்தும், உன்னை நீ பாதுகாத்துக் கொண்டும், உனது உறவினர்களால் உனது பணியாட்களைப் பாதுகாத்துக் கொண்டும் வருகிறாய் என நான் நம்புகிறேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, காலையில், நீ மதுவுக்கும், விளையாட்டுகளுக்கும், பெண்களுக்கும் செலவு செய்யும் மிதமிஞ்சிய செலவுகளைக் குறித்து, உனது பணியாட்கள் உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களா? எப்போதும் உனது செலவு, உனது வருமானத்தில் நாலில் ஒரு பாகத்திலோ, மூன்றில் ஒரு பாகத்திலோ அல்லது அரை பாகத்திலோ முடிகிறதா? உணவு, செல்வம், உறவினர், மூத்தவர், வணிகர், முதியவர், மற்ற கிளைகள், துயரத்தில் இருப்பவர்கள் ஆகியோரை எப்போதும் ஆதரித்து வருகிறாயா? உனது வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள உன்னால் நியமிக்கப்பட்ட கணக்கர்களும் {accountants} எழுத்தர்களும் {clerks}, ஒவ்வொரு நாளும் காலையில் உன்னிடம் வரவு செலவுகள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறார்களா? காரியங்களைச் சாதிக்கும் பணியாட்களையும், உனது நன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களையும், புகழ் பெற்றவர்களையும் அவர்களிடம் குற்றம் இல்லாதபோதே அவர்களை அதிகாரங்களில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா?

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மேன்மையானவர்கள், அலட்சியமானவர்கள், கீழ்மையானவர்கள் ஆகியோரை சோதனை செய்த பிறகு, அவர்களைத் தகுந்த அலுவலங்களில் நியமிக்கிறாயா?
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, திருடர்களையோ, சலனத்துக்கு ஆட்படுபவர்களையோ, பகையுள்ளவர்களையோ, வயதில் இளையவர்களையோ உனது பணியில் நியமிக்காமல் இருக்கிறாயா? திருடர்களாலும், பேராசைக்காரர்களாலும், சிறுவர்களாலும், பெண்களாலும் உனது நாட்டுக்குத் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்கிறாயா? உனது நாட்டில் இருக்கும் உழவர்கள் திருப்தியுடன் இருக்கிறார்களா? வேளாண்மை வான்மழையை மட்டும் நம்பியிராமல், பெரிய குளங்களும், ஏரிகளும் நாடு முழுவதும் தகுந்த இடைவெளி கொண்ட தூரங்களில் கட்டப்பட்டுள்ளனவா? உனது நாட்டின் உழவர்களுக்கு விதையோ உணவோ பற்றாக்குறையில்லாமல் இருக்கின்றனவா? உழுபவர்களுக்கு அன்புடன் நூற்றுக் கணக்கில் கடன் {விதை நெல்களை} கொடுத்து, அதிகமாக இருப்பதில் நான்காவதை எடுத்துக் கொள்கிறாயா? {4% வட்டி என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Grantest thou with kindness loans (of seed-grains) unto the tillers, taking only a fourth in excess of every measure by the hundred? என்று வருகிறது}

ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான்கு தொழில்களான, {1}விவசாயம், {2}வணிகம், {3}கால்நடை வளர்த்தல், {4}வட்டிக்கு கடன் கொடுத்தல் ஆகியவை நேர்மையான மனிதர்களால் நடத்தப்படுகின்றனவா? ஓ! ஏகாதிபதியே {யுதிஷ்டிரா} இவற்றிலேயே உனது மக்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களும் ஞானவான்களுமான ஐந்து மனிதர்களை, நகரம் {1}, கோட்டை {2}, வணிகர் {3}, உழவர் {4}, குற்றவாளிகளைத் தண்டித்தல் {5}, ஆகிய ஐந்து அலுவலகங்களில் நியமித்து, அவர்களை {அந்த ஐவரை} நாட்டின் நன்மைக்காக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வேலை செய்ய வைக்கிறாயா? உனது நகரங்களின் பாதுகாப்புக்காக, கிராமங்களை நகரங்கள் போலவும், சிறுகிராமங்களும், புறநகர்களும் கிராமங்கள் போலவும் செய்யப்பட்டிருக்கின்றனவா? இவையெல்லாம் உனது நேரடிக் கண்காணிப்பில் செய்யப்பட்டு, உனது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா? உனது நகரத்தைக் கொள்ளையிடும் கொள்ளையரும், திருடர்களும், உனது நகர்க்காவலர்களால் உனது நாட்டின் சமமான மற்றும் சமமற்றப் {மேடு பள்ளமான} பகுதிகளிலும் பின்தொடரப்படுகிறார்களா? பெண்களை ஆறுதலுடன் நடத்துகிறாயா? அவர்களுக்கு உனது ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களிடம் {பெண்களிடம்} நீ எந்த நம்பிக்கையும் கொள்ளாமல், அவர்கள் {பெண்கள்} எதிரில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறாயா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஏதாவது ஆபத்தைக் கேள்விப்பட்டாலும், அது குறித்து சிந்தித்த பிறகு, அந்தப்புரங்களில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு படுத்துக்கிடக்காமல் இருக்கிறாயா? இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில் {மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரங்களை நான்காகப் பிரித்து, முதல் பிரிவு (ஜாமம்) மாலை நேரமாதலால் (6.00 - 9.00) தூங்காமல், இரண்டாவது பிரிவு (ஜாமம்) {9.00 - 12.00) மற்றும் மூன்றாவது பிரிவு (ஜாமம்) (12.00 - 3.00)ல்} தூங்கி, நான்காவது பிரிவில் {(ஜாமத்தில்) 3.00-6.00 மணிக்குள்} அறத்தையும் பொருளையும் சிந்தித்து எழுகிறாயா?
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரியான நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து, நன்றாக உடுத்திக் கொண்டு, அதிர்ஷ்டமான நேரங்களை அறிந்த அமைச்சர்கள் துணையுடன் உன்னை உனது மக்களுக்கு காட்சியளிக்கிறாயா? ஓ! எதிரிகளை நசுக்குபவனே, கைகளில் வாளுடனும், பல ஆயுதங்களுடனும் இருக்கும் சிவப்பு ஆடை உடுத்தியவர்கள் {மெய்காப்பாளர்கள்}, உன்னைக் காப்பதற்காக உனது அருகில் இருக்கிறார்களா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தண்டனைக்குத் உகந்தவர்களிடமும், வழிபாட்டுக்குத் தகுந்தவர்களிடமும், உன்னிடம் அன்புடன் இருப்பர்களிடமும், உன்னை விரும்பாதவர்களிடமும், நீதி தேவன் {தர்மதேவன், யமன்} போல சமமாக நடந்து கொள்கிறாயா?
ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, மருந்துகளாலும், பத்தியங்களாலும், உடல்நோயையும், பெரியவர்கள் அறிவுரைகளால் மன நோயையும் குணப்படுத்திக் கொள்கிறாயா? உனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் எட்டு வகை சிகிச்சைகளை அறிந்து உன்னிடம் பிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்களா?
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உன்னிடம் வந்த வாதி, பிரதிவாதிகளிடையே பேராசையாலோ, அறியாமையாலோ, கர்வத்தாலோ முடிவு காணமுடியாத நிலையில் அகப்படாமல் இருக்கிறாயா? பேராசையாலோ, அறியாமையிலோ, உனது பாதுகாப்பை நாடி நம்பிக்கையுடனும் அன்புடனும் வந்தவர்களை ஏமாற்றாமல் இருக்கிறாயா? உனது ஆட்சியில் வசிக்கும் மக்கள், எதிரிகளால் பொருள் கொடுத்து {லஞ்சம் கொடுத்து} வசப்படுத்தப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து, உன்னிடம் பகை கொள்ளாமல் இருக்கிறார்களா? உனது எதிரிகளில் தளர்ந்தவர்கள், உனது ஆலோசனைகளாலும் வலிமையான துருப்புகளாலும் எப்போதும் நசுக்கப்படுகிறார்களா? உனது நாட்டின் முக்கியத் தளபதிகள் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களா? அவர்கள் உனது உத்தரவின் பேரில் அவர்களது உயிரைக்கூட உனக்காகத் தர சித்தமாக இருக்கிறார்களா?
---------------நாரதரின் விசாரணை- சபாபர்வம் பகுதி 5உ தொடர்கிறது.....