The appeal of Amva to Bhishma! | Udyoga Parva - Section 175 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 2)
பதிவின் சுருக்கம் : காசி மன்னன் மகள்களைச் சத்தியவதியிடம் ஒப்படைத்த பீஷ்மர், தான் கடத்தி வந்த நோக்கத்தை சத்தியவதியிடம் சொல்வது; சத்தியவதி மகிழ்வது; விசித்திரவீரியனுக்கும் அந்த மங்கையருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற போது, அந்தக் கன்னியரில் மூத்தவளான அம்பை பீஷ்மரிடம் வந்து, தான் சால்வ மன்னனை விரும்புவதாகவும், தன்னை அவனிடம் செல்ல அனுமதிக்குமாறும் கேட்பது...

பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, கண்ணீரால் குளித்த கண்களைக் கொண்ட சத்தியவதி, எனது தலையை முகர்ந்து, மகிழ்ச்சியாக, "நற்பேறாலேயே, ஓ! குழந்தாய் {பீஷ்மா} நீ வென்றிருக்கிறாய்!" என்றாள். பிறகு, சத்தியவதியின் சம்மதத்தின் பேரில், திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, காசி ஆட்சியாளனின் மூத்த மகள் {அம்பை}, பெரும் நாணத்துடன், "ஓ! பீஷ்மரே, நீர் அறநெறிகளை அறிந்தவர். சாத்திரங்கள் அனைத்தையும் நன்கு கற்றிருக்கிறீர். எனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அறநெறிக்கு இசைவானதை எனக்கு நீர் செய்வதே உமக்குத் தகும். சால்வர்களின் ஆட்சியாளரை {சால்வ மன்னனை} எனது தலைவராக முன்பே நான் மானசீகமாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். எனது தந்தை அறியாதவண்ணம், அவராலும் {சால்வனாலும்} தனிமையில் நான் வேண்டப்பட்டேன்.
ஓ! பீஷ்மரே, நீர், அதிலும் குறிப்பாக குரு குலத்தில் பிறந்த நீர், அறநெறிகளின் விதிகளை மீறி, மற்றவருக்காகக் காத்திருக்கும் ஒருத்தி உமது வசிப்பிடத்தில் வாழ காரணமாக இருப்பது எப்படி? இதை அறிந்து கொண்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மரே}, உமது மனதில் ஆலோசித்து, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, முறையானதைச் செய்வதே உமக்குத் தகும். ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, சால்வர்களின் ஆட்சியாளர் (எனக்காகக்) காத்திருக்கிறார் என்பது தெளிவானது {நிச்சயமானது}. எனவே, ஓ! குருக்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, நான் புறப்பட அனுமதி அளிப்பதே உமக்குத் தகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! நீதிமிக்க மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, என்னிடம் கருணை கொள்ளும்! ஓ! வீரரே, நீர் உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பது இந்த உலகம் முழுவதும் அறியப்பட்டதாகும்" என்றாள் {அம்பை}".
இந்தப் பகுதியில் குறிப்பிடப்படும் இதே அம்பை, ஆதிபர்வம் பகுதி 102ல் பீஷ்மரிடம் "இதயத்தால் நான் மன்னன் சௌபரைக் {சால்வ மன்னனைக்} கணவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரும், தனது இதயத்தால் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இது எனது தந்தையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தச் சுயம்வரத்தில் நான் அவரையே எனது தலைவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தேன். அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவர் நீர், இதையும் அறிந்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும்." என்றாள். என்று வைசம்பாயனர் சொல்கிறார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section102.html
![]() |
![]() |
![]() |