துஷ்யந்தன் சகுந்தலை ₹.70.00/- |
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மூதாதையரான துஷ்யந்தன் ஹஸ்தினாபுரத்தை ஆண்ட ஒரு மன்னனாவான். "தீமையை அழிப்பவன்" என்பதே அவனது பெயரின் பொருளாகும். அவன் இலிலன் மற்றும் ரதந்தரி ஆகியோருக்குப் பிறந்த மகனாவான்.
மஹாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக வரும் இவனது கதையில், இயற்கை வர்ணனையும், மனைவி மற்றும் மகனைக் குறித்த நீதிகளும், விருந்தினரை உபசரிக்கும் முறைகளும், திருமணத்தின் வகைகளும் சிறப்புடன் சொல்லப்படுகின்றன. இக்கதையிலேயே விஷ்வாமித்திரர் மற்றும் மேனகையின் கதையும் சொல்லப்படுகிறது.
மஹாபாரத மூலக்கதையில், துஷ்யந்தன் சகுந்தலையைச் சந்திக்கிறான்; அவளைக் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்கிறான்; தன் நாடு திரும்புகிறான்; பிறகு அவளை மறந்துவிடுகிறான். சகுந்தலை ஒரு மகனை ஈன்றெடுத்து துஷ்யந்தனையே நினைத்துக் காத்திருக்கிறாள். பனிரெண்டு வருடங்கள் கழித்துச் சகுந்தலை மன்னனைச் சந்திக்கிறாள். துஷ்யந்தன் சகுந்தலையை ஏற்க மறுக்கிறான். பிறகு ஏற்றுக் கொள்கிறான்.
காளிதாசரின் சாகுந்தலம் போன்ற பல படைப்புகள், இந்தத் துஷ்யந்தன் சகுந்தலை கதையை வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் துஷ்யந்தன் சகுந்தலையை ஏன் மறந்தான் என்பதற்கான காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. துஷ்யந்தனின் நினைவில் இருந்த சகுந்தலை, தன் ஆசிர வாசலில் காத்திருந்த துர்வாசரைக் கவனிக்கவில்லை என்றும், அதனால் துஷ்யந்தன் சகுந்தலையை மறந்து போகட்டும் என்று துர்வாசர் சபித்தார் என்றும் சொல்லப்படுகின்றன.
இந்த மின்புத்தகத்தில், கிசாரி மோகன் கங்குலியின் மகாபாரதப் பதிப்பில் வரும் "துஷ்யந்தன் சகுந்தலை" கதையே சொல்லப்படுகிறது. சிற்சிற தேவையான இடங்களில் மட்டும் வேறு சில நம்பகமான பதிப்புகளில் இருந்து சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பரந்த பாரத நாட்டின் பெயருக்குக் காரணமான பரதனின் பெற்றோரான துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் கதையை, மஹாபாரத மூலத்தில் உள்ளவாறே அறிவோம் வாருங்கள்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
Product details
- Format: Kindle Edition
- File Size: 2250 KB
- Print Length: 72 pages
- Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
- Language: Tamil
- ASIN: B074CNNGDJ
- Word Wise: Not Enabled
விலை: ₹ 70/-
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகளில் இது நான்காம் புத்தகமாகும்.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகளில் இது நான்காம் புத்தகமாகும்.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.