Birth of Chyavana! | Adi Parva - Section 6 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : சியவனன் பிறப்பும் பெயர்க்காரணமும்; ராட்சசன் மாண்டது; பிருகுவிடமிருந்து அக்னிக்குக் கிடைத்த சாபம்...
சௌதி சொன்னார், "ஓ பிராமணரே {சௌனகரே}, இந்த வார்த்தைகளை நெருப்பு தேவனிடமிருந்து {அக்னியிடமிருந்து} கேட்ட அரக்கன் {புலோமா}, ஆண் காட்டுப் பன்றியின் உருவமெடுத்து, காற்றின் வேகத்துக்கு இணையாக, மனத்தின் வேகத்துடன், அந்த மங்கையைக் {புலோமையைக்} கைப்பற்றித் தூக்கிச் சென்றான்.(1)
இந்தப் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாமல் கோபப்பட்ட பிருகுவின் குழந்தை, கருப்பையிலிருந்து நழுவி விழுந்தது. அதனாலேயே அந்தக் குழந்தைக்குச் சியவனன்[1] என்று பெயர் வந்தது.(2) குழந்தை, தாயின் கருவிலிருந்து நழுவியதையும், அந்தக் குழந்தை சூரியனைப் போல ஒளிர்வதையும் கண்ட ராட்சசன் {புலோமன்} அந்தப் பெண்ணின் {பிருகுவின் மனைவி புலோமையின்} மீதிருந்த பிடியை விட்டுக் கீழே விழுந்து சாம்பலாக மாறினான்.(3)