Birth of Chyavana! | Adi Parva - Section 6 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : சியவனன் பிறப்பும் பெயர்க்காரணமும்; ராட்சசன் மாண்டது; பிருகுவிடமிருந்து அக்னிக்குக் கிடைத்த சாபம்...
சௌதி சொன்னார், "ஓ பிராமணரே {சௌனகரே}, இந்த வார்த்தைகளை நெருப்பு தேவனிடமிருந்து {அக்னியிடமிருந்து} கேட்ட அரக்கன் {புலோமா}, ஆண் காட்டுப் பன்றியின் உருவமெடுத்து, காற்றின் வேகத்துக்கு இணையாக, மனத்தின் வேகத்துடன், அந்த மங்கையைக் {புலோமையைக்} கைப்பற்றித் தூக்கிச் சென்றான்.(1)
இந்தப் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாமல் கோபப்பட்ட பிருகுவின் குழந்தை, கருப்பையிலிருந்து நழுவி விழுந்தது. அதனாலேயே அந்தக் குழந்தைக்குச் சியவனன்[1] என்று பெயர் வந்தது.(2) குழந்தை, தாயின் கருவிலிருந்து நழுவியதையும், அந்தக் குழந்தை சூரியனைப் போல ஒளிர்வதையும் கண்ட ராட்சசன் {புலோமன்} அந்தப் பெண்ணின் {பிருகுவின் மனைவி புலோமையின்} மீதிருந்த பிடியை விட்டுக் கீழே விழுந்து சாம்பலாக மாறினான்.(3)
ஓ பிருகு பரம்பரையில் வந்த பிராமணரே, துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமை, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள்.(4) தனது மைந்தனின் {பிருகுவின்} களங்கமற்ற மனைவி {புலோமை} அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மனே கண்டான்.(5) அனைவருக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, குழந்தையிடம் பாசம் கொண்ட அவளைத் தேற்றினான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உண்டாக்கின.(6) அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியுடைய காலடிகளைத் தொடர்ந்தது. உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியைத் {புலோமாவை} தொடரும் அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதுசாரை[2] என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து செல்கிறது.(7,8) {அதாவது பின்னாளில் இந்த ஆற்றின் கரையில் தன்னுடைய ஆசிரமத்தை சியவனன் அமைத்துக் கொண்டான்}. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான்.
பிருகு, தனது குழந்தை சியவனனையும், அதன் அழகான தாயையும் {மனைவி புலோமையையும்} கண்டார். முனிவர் {பிருகு} கோபத்தில்,(9) "உன்னைக் கடத்த முடிவு செய்து வந்த ராட்சசனிடம் யார் உன்னைக் காட்டிக் கொடுத்தது? ஓ மனதிற்கினிய புன்னகை கொண்டவளே {புலோமையே}, நீ என் மனைவியென்று ராட்சசனுக்குத் தெரிந்திருக்க முடியாது.(10) எனவே, அப்படி உன்னை அரக்கனிடம் சொன்னது {காட்டிக் கொடுத்தது} யார் என்பதைச் சொல், எனது கோபத்தால் அவனைச் சபிக்கப் போகிறேன்" என்று கேட்டார்.(11)
அதற்குப் புலோமை "ஓ, அறுகுணங்கொண்டவரே, அக்னியே (நெருப்பு தேவனே} அந்த ராட்சசனிடம் {புலோமனிடம்} என்னைக் காட்டிக் கொடுத்தது. அவன் (அந்த ராட்சசன் {புலோமன்}}, குராரியைப் {பெண் அன்றிலைப்} போலக் கதறிக் கொண்டிருந்த என்னைக் கடத்திக் கொண்டு போனான்.(12) உமது மகனின் {சியவனனின்} தீவிரப் பிரகாசத்தால் தான் நான் காப்பாற்றப்பட்டேன். அரக்கன் (இந்தக் குழந்தையைப் பார்த்துத்தான்) {சியவனனைப் பார்த்துத்தான்} எனது மீதிருந்த பிடியைவிட்டு, கீழே விழுந்து சாம்பலானான்" என்றாள் {பிருகுவின் மனைவி புலோமை}.(13)
சௌதி தொடர்ந்தார், "புலோமையிடமிருந்து இந்த விவரத்தைக் கேட்ட பிருகு, மிகுந்த கோபங்கொண்டார். கட்டுக்கடங்காத கோபத்தால், "நீ அனைத்தையும் உண்பாயாக" என்று அக்னியைச் சபித்தார்" {என்றார் சௌதி}.(14)

[1] சியவனன் [அ] ச்யவனன் என்றால் நழுவி விழுந்தவன் என்று பொருள். ச்யவனம் என்றால் நழுவுதல் என்று பொருள்.
ஓ பிருகு பரம்பரையில் வந்த பிராமணரே, துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமை, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள்.(4) தனது மைந்தனின் {பிருகுவின்} களங்கமற்ற மனைவி {புலோமை} அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மனே கண்டான்.(5) அனைவருக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, குழந்தையிடம் பாசம் கொண்ட அவளைத் தேற்றினான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உண்டாக்கின.(6) அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியுடைய காலடிகளைத் தொடர்ந்தது. உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியைத் {புலோமாவை} தொடரும் அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதுசாரை[2] என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து செல்கிறது.(7,8) {அதாவது பின்னாளில் இந்த ஆற்றின் கரையில் தன்னுடைய ஆசிரமத்தை சியவனன் அமைத்துக் கொண்டான்}. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான்.
[2] வதுசாரை என்றால் பெண்ணுடன் சென்றது என்று பொருள். வது - பெண்; சாரை - ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் வரிசை.
பிருகு, தனது குழந்தை சியவனனையும், அதன் அழகான தாயையும் {மனைவி புலோமையையும்} கண்டார். முனிவர் {பிருகு} கோபத்தில்,(9) "உன்னைக் கடத்த முடிவு செய்து வந்த ராட்சசனிடம் யார் உன்னைக் காட்டிக் கொடுத்தது? ஓ மனதிற்கினிய புன்னகை கொண்டவளே {புலோமையே}, நீ என் மனைவியென்று ராட்சசனுக்குத் தெரிந்திருக்க முடியாது.(10) எனவே, அப்படி உன்னை அரக்கனிடம் சொன்னது {காட்டிக் கொடுத்தது} யார் என்பதைச் சொல், எனது கோபத்தால் அவனைச் சபிக்கப் போகிறேன்" என்று கேட்டார்.(11)
அதற்குப் புலோமை "ஓ, அறுகுணங்கொண்டவரே, அக்னியே (நெருப்பு தேவனே} அந்த ராட்சசனிடம் {புலோமனிடம்} என்னைக் காட்டிக் கொடுத்தது. அவன் (அந்த ராட்சசன் {புலோமன்}}, குராரியைப் {பெண் அன்றிலைப்} போலக் கதறிக் கொண்டிருந்த என்னைக் கடத்திக் கொண்டு போனான்.(12) உமது மகனின் {சியவனனின்} தீவிரப் பிரகாசத்தால் தான் நான் காப்பாற்றப்பட்டேன். அரக்கன் (இந்தக் குழந்தையைப் பார்த்துத்தான்) {சியவனனைப் பார்த்துத்தான்} எனது மீதிருந்த பிடியைவிட்டு, கீழே விழுந்து சாம்பலானான்" என்றாள் {பிருகுவின் மனைவி புலோமை}.(13)
சௌதி தொடர்ந்தார், "புலோமையிடமிருந்து இந்த விவரத்தைக் கேட்ட பிருகு, மிகுந்த கோபங்கொண்டார். கட்டுக்கடங்காத கோபத்தால், "நீ அனைத்தையும் உண்பாயாக" என்று அக்னியைச் சபித்தார்" {என்றார் சௌதி}.(14)
ஆங்கிலத்தில் | In English |