Ocean - King of rivers! | Adi Parva - Section 21 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 9)
பதிவின் சுருக்கம் : பந்தயத்தின் முடிவுக்காக உச்சைஸ்ரவத்தைக் காண கடலைக் கடந்து சென்ற சகோதரிகள்...
சௌதி சொன்னார், "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, இரவு கழிந்து காலையில் சூரியன் உதித்ததும், அந்த இரு சகோதரிகளான கத்ருவும், வினதையும், அடிமையாவதாகப் பந்தயம் கட்டிக் கொண்டு, பொறுமையின்மையால் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையை அருகில் காண அவசரமாகச் சென்றனர்.(1,2) வழியில் அவர்கள் பெருங்கடலைக் கண்டனர். வெகு அகலமானதாகவும், ஆழமானதாகவும், கடக்கமுடியாததாகவும் இருந்த அந்தப் பெரும் நீர்க்கொள்ளிடம் (கடல்), உருண்டு கொண்டு, பயங்கரமாக உறுமிக் கொண்டு, மிகப் பெரிய, கருத்த, கடுமையான நீர்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்களையே விழுங்கும் பெரிய மீன்கள், மகரங்கள் {மீன் அல்லது நீர்நாயின் உடலும் யானை முகமும் கொண்ட புராண கால விலங்கு}, வெவ்வெறு வடிங்களினாலான ஆயிரக்கணக்கான உயிரினங்கள், மற்றும் எண்ணிலடங்கா ஆமைகள், முதலைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு,(3-5) ரத்தினங்களின் சுரங்கமாக, வருணனின் இல்லமாக (நீர்க்கடவுள்), நாகர்களின் அழகான, மிகச்சிறந்த வசிப்பிடமாக, ஆறுகள் அனைத்திற்கும் அரசனாக,(6) பூமிக்கடியில் உள்ள நெருப்பின் இருப்பிடமாக, அசுரர்களுக்கு நண்பனாக (அல்லது ஆதரவளிப்பவனாக), எல்லா உயிரினங்களுக்கும் பயங்கரமாக, பெரிய நீர்க்களஞ்சியமாக, காலத்திற்கும் மாற்ற முடியாததாக இருந்தது.(7)
அது தெய்வீகமானது; தேவர்களுக்கு நன்மையானது; அமுதத்திற்கு மூலமாக இருப்பது. எல்லையில்லாதது, புத்திக்கு எட்டாதது, புனிதமானது, பெரும் அதிசயமானது.(8) அஃது இருளானது. நீர்வாழ்வனவற்றின் ஒலிகளோடு கூடிய பயங்கரமானது, பெருத்த இரைச்சலுடன் உறுமிக்கொண்டிருப்பது, ஆழமான நீர்ச்சுழல்கள் நிறைந்தது, எல்லா உயிர்களுக்கும் அச்சமூட்டுவது.(9) கரையிலிருந்து வீசும் காற்றினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்குக் கிளர்ந்தெழும்பிக் குழம்பிக் கொண்டே இருப்பது. அதன் அலைகள், எல்லாப்பக்கங்களிலும் கையை உயர்த்தி நடனம் ஆடிக் கொண்டே இருப்பதுபோல் பிரதிபலிக்கும்.(10) வாசுதேவனின் சிறப்புமிக்கச் சங்கான பாஞ்சஜன்யத்திற்குத் தந்தையும், சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது ஈர்க்கப்பட்டு அளவுக்கதிகமான பெரிய அலைகளால் நிறைந்திருப்பதும், ரத்தினங்களுக்குப் பெரும் சுரங்கமாகத் திகழ்வதும்,(11) (மூழ்கிய) பூமியைத் தூக்கிட, அளவிடமுடியாத சக்தி வாய்ந்த கோவிந்தன், முன்பு பன்றி உருவத்தில் கலக்கியபோது பெரும் அதிர்வுக்குள்ளாகி, பெரிய அலைகளை எழுப்பியதும், பாதாள லோகத்தை விட ஆழமான தளத்தைக் கொண்டதும், பெரும் தவம் செய்த அத்ரி முனிவர் நூறு வருடங்கள் உழைத்தும் ஆழம் காணமுடியாதது அது {கடல்}.(12,13)
எல்லையில்லா சக்திக் கொண்டவனும், தாமரை போன்ற வயிறு படைத்தவனுமான விஷ்ணுவுக்கு ஒவ்வொரு யுக முடிவின் போதும் அவனது யோகத் துயிலும், ஆன்மிகத் தவமுமான ஆழ்ந்த உறக்கத்திற்குப் படுக்கையாக இருப்பது {கடல்}.(14) இடியின் தாக்குதலுக்குப் பயந்த மைநாகத்துக்கு {மைநாக மலைக்கு} அடைக்கலம் கொடுத்தது. கடும் போர்களில் பின்வாங்கும் அரக்கர்களுக்குப் புகலிடமானது.(15) வரவராவின் (பெண் கடற்குதிரை) வாயிலிருந்து கிளம்பும் சுடர் நெருப்புக்கு {வடவாக்னிக்கு} இதன் நீர் புனிதமான நெய்யாகப் பயன்படும். இஃது ஆழமறிய முடியாதது, எல்லையற்றது, மிகப் பரந்தது, அளவிடமுடியாதது, ஆறுகளுக்கு அரசனானது.(16)
{கடல் எனும் தங்கள் கணவன் மீது} காதல் வலைவீசும் சக்களத்திகளைப் போலச் செருக்கு நடை கொண்டவையும், ஒன்றையொன்று {கடலைச்} சந்திக்கும் ஆவலில் பிறவற்றைத் {பிற ஆறுகளைத்} தடுத்தவையுமான ஆயிரக்கணக்காகப் பெரிய ஆறுகள் அதற்குள் {அந்தக் கடலுக்குள்} விரைவதை அவர்கள் {கத்ருவும், வினதையும்} கண்டனர்.(17) அந்தக் கடல் எப்போதும் நிறைந்து, எப்போதும் அலைகளின் ஆட்டத்துடன் இருப்பதைக் கண்டனர். எண்ணிலடங்கா சீற்றங்கொண்ட திமிங்கலங்களையும், மகரங்களையும் கொண்ட அஃது {கடல்}, ஆழமாக இருப்பதையும் கண்டனர். அந்தக் கடலானது தன்னகத்தே இருக்கும் நீர் உயிரிகளின் பயங்கரமான ஒலிகளை எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது, பெரிதாகவும், அகலமானதாகவும், விண்ணைப் போல் பெரும்பரப்பு கொண்டதாகவும், ஆழம் காண முடியாததாகவும், எல்லை இல்லாததாகவும், நீருக்குப் பெரிய களஞ்சியமாக இருப்பதையும் கண்டனர்” {என்றார் சௌதி}.(18)

ஆங்கிலத்தில் | In English |