Kadru and Vinata crossed the Ocean! | Adi Parva - Section 22 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : கத்ரு மீது கொண்ட அச்சத்தினால் பாம்புகள் அவள் சொன்னதைச் செய்தது; கடலைக் கடந்த சகோதரிகள்...
"சௌதி சொன்னார், "தாயின் {கத்ருவின்} ஆசை நிராசையானால், அவள் தங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தைத் துறந்து தங்களை எரித்துவிடுவாளோ என்ற பயத்தில், பாம்புகள் தங்களுக்குள் கலந்து பேசி, அவளது ஆணையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தனர்.(1) மற்றொருபுறம், அவள் கருணை தங்களுக்குக் கிடைக்குமானால், தங்களைச் சாபத்திலிருந்து விடுவிப்பாள் என்ற எண்ணத்தில், "நாம் நிச்சயமாகக் குதிரையின் வாலைக் கருப்பாக்குவோம்" என்றனர்.(2) பிறகு அந்தப் பாம்புகள் சென்று குதிரையின் வாலின் முடிகளாக மாறினர் என்று சொல்லப்படுகிறது. பந்தயம் கட்டிக்கொண்ட அந்தச் சக்களத்திகளும் {கசியபரின் மனைவிகள்}, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, தக்ஷனின் மகள்களும், சகோதரிகளுமான கத்ரு மற்றும் வினதை ஆகிய இருவரும், கடலின் அக்கரையைக் காண வான் வெளியில் மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.(3-5)
அப்படிச் செல்லும்போது, எளிதாகக் கலங்கடிக்கப்பட முடியாததான அந்த நீர்ப்பாத்திரமானது, திடீரென்று வலிமைமிகுந்த காற்றால் அசைக்கப்பட்டுப் பேரொலியுடன் கர்ஜிப்பதைக் கண்டனர். திமிங்கலங்களையே விழுங்கும் பெரிய மீன்கள், மகரங்கள்,(6) ஆயிரக்கணக்கான வெவ்வெறு வடிவங்களிலாலான பல்வேறு உயிரிகளுடன், கொடுமையான பெரும் விலங்குகளுடன் அச்சத்தைத் தருவதாக, அணுக முடியாத ஆழத்தோடு பயங்கரமாக,(7) எல்லா வகையான ரத்தினங்களின் சுரங்கமாக, வருணனின் (நீர் கடவுள்) இல்லமாக, நாகர்களின் வசிப்பிடமாக, ஆறுகள் அனைத்திற்கும் அரசனாக,(8) பூமிக்கடியில் உள்ள நெருப்பின் இருப்பிடமாக, அசுரர்களுக்கு வசிப்பிடமாக, எல்லாப் பயங்கரமான உயிரினங்களுக்கும் இருப்பிடமாக, நீர்க்களஞ்சியமாக,(9) அழுகுதலில்லாமல் {கெடாமல்} நறுமணம் மிக்கதாக, அற்புதமானதாக, தேவர்களுடைய அமுதத்தின் ஊற்றாக, அளக்கமுடியாததாக, புத்திக்கு எட்டாததாக, புனிதமான நீரைக் கொண்டதாக,(10) ஆயிரக்கணக்கான பெரிய ஆறுகளின் நீரினால் விளிம்பு வரை நிறைந்திருந்ததாக, அலைகள் நாட்டியமாடிக்கொண்டிருந்த, கடலை அவர்கள் கண்டனர்.(11) புரளும் அலைகளுடன் விண்ணைப் போல் பெரும்பரப்புக் கொண்டதாக, ஆழமானதாக, பூமிக்கடியில் உள்ள நெருப்பினால் சுடர்மேனி கொண்டதாக, கர்ஜனை செய்வதாக இருந்த அந்தக் கடலைச் சகோதரிகள் இருவரும் {கத்ருவும், வினதையும்} வேகமாகக் கடந்தனர்" {என்றார் சௌதி}.(12)

ஆங்கிலத்தில் | In English |