Snakes saved by Indra! | Adi Parva - Section 26 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : மழையைப் பொழிந்த இந்திரன்; மகிழ்ச்சியுற்ற பாம்புகள்; ரமணீயகத் தீவை அடைதல்...
சௌதி சொன்னார், "தேவமன்னனும், குதிரைகளிலே சிறந்தவற்றைத் தன் தேரிலே கொண்டவனுமான இந்திரன், கத்ருவால் இப்படி வழிபடப்பட்ட பிறகு, வானவட்டத்தை நீலநிறப் பெருமேகங்களால் மறைத்து,(1) அம்மேகங்களிடம், 'உயிருண்டாக்கவல்ல, புனிதமான உங்கள் துளிகளைப் பொழியுங்கள்' என்று பணித்தான். அந்த மேகங்கள் மின்னலுடன் கூடிய ஒளி பொருந்தி, தடையேதுமின்றி ஒன்றோடொன்று ஆகாயத்தில் முழங்கியபடியே பெருமழையைப் பொழிந்தன.(2)
அற்புதமானதும், பயங்கரமாகக் கர்ஜிப்பதும், இடைவிடாது பெரும் நிறைகொண்ட நீரைப் பொழிவதுமான அந்த மேகங்களால் வானமானது யுக முடிவு வந்ததைப்போலக் காட்சியளித்தது. பெரும் மழையினால் அலைகள் {போன்ற} மழைத்தாரைகளுடனும், மேகங்களின் முழக்கங்களுடனும், மின்னல்களின் ஒளிகளுடனும், காற்றின் கடுமையாலும், கொந்தளிப்பாலும் ஆகாயமானது பித்துப் பிடித்து ஆடுவதுபோலக் காட்சியளித்தது.(3,4) வானம் முழுவதும் மேகங்களால் மறைக்கப்பட்டது. இடைவிடாத பெருமழையால் கதிரவன் மற்றும் சந்திரனின் கதிர்கள் முற்றிலுமாக மறைந்தன.
இந்திரன் பெருமழைப் பொழிந்ததால் பாம்புகள் மிகுந்த மகிழ்வுற்றன.(5) பூமி எங்கும் நீர் நிறைந்தது, தெளிவான, குளிர்ந்த நீர் பாதாளம் வரை பாய்ந்தது.(6) பூமியெங்கும் எண்ணிக்கையில் அடங்காத அலைகள் நிறைந்த நீர் சூழ்ந்தது. பாம்புகளும் அவர்களின் தாயும் {கத்ருவும்} ரமணீயகமென்னும் தீவை {பத்திரமாக} அடைந்தனர்" {என்றார் சௌதி}.(7)

ஆங்கிலத்தில் | In English |