Snakes commanding Garuda! | Adi Parva - Section 27 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : ரமணீயகத் தீவில் பொழுதைக் கழித்த பாம்புகள், மீண்டும் கருடனிடம் வேறு தீவுகளுக்குத் தங்களைச் சுமந்து செல்லுமாறு கட்டளையிட்டது; கருடனுக்கும் தாய் வினதைக்கும் இடையில் நடந்த உரையாடல்; அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவிக்கும்படி பாம்புகளிடம் கேட்ட கருடன்; அமுதத்தைக் கோரிய பாம்புகள்...
பாம்புகளிடம் பேசும் கருடன் |
சௌதி சொன்னார், "மழையில் நனைந்த பாம்புகள், அதன்பிறகு மிகவும் மகிழ்ந்திருந்தன. அந்த அழகான இறகுகள் கொண்ட பறவையானவன் {கருடன்} தங்களைச் சுமந்து செல்ல விரைவாகத் தீவை அடைந்தனர்.(1) அந்தத் தீவு, மகரங்களின் இருப்பிடமாக, அண்டம் படைத்தோனால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்கள் பயங்கரமான லவணச் சமுத்திரத்தைக் (உப்புக் கடல்) கண்டனர்.(2) கருடனுடன் வந்தவர்கள் அங்கே நீரால் சுத்தம் செய்யப்பட்ட ஓர் அழகான காடு கடலின் மடியில் இருந்ததையும், இறகுகள் கொண்ட இசைக்கலைஞர்களின் {பாடும் பறவைகளின்} இன்னிசை எங்கும் நிறைந்து இருந்ததையும் உணர்ந்தனர்.(3) {அப்படிப்பட்ட} அக்கானகத்தில் கருடனுடன் அப்பாம்புகள் வந்திறங்கினர். அங்கே, கொத்துக் கொத்தாக மரங்கள் பலவகைப்பட்ட மலர்களுடனும் பழங்களுடனும் நிறைந்து இருந்தன.
அழகான மாளிகைகளும் அங்கு நிறைந்திருந்தன. தாமரை நிறைந்த தடாகங்களாலும் நிறைந்திருந்தன.(4) சுத்தமான நீர் கொண்ட பல ஏரிகள் அங்கு இருந்தன. அங்குத் தவழ்ந்த சுத்தமணங்கொண்ட தென்றலால் உற்சாகம் நிலவியது.(5) மலய மலையில் மட்டுமே விளையும் பல மரங்கள் அங்கே இருந்தன. அவற்றின் உயரங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தன. இன்னும் பல மரங்களில், அவற்றின் மலர்கள் உதிர்ந்து தென்றலின் உதவியால் அழகாகப் பரவிக் கிடந்தன.(6,7) இப்படி அந்தக் கானகம் அழகாகவும், கந்தர்வர்களுக்கு எப்போதும் இன்பத்தைத் தருவதாகவும், விருப்பமானதாகவும் இருந்தது. அது {அந்த கானகமானது} மலர்களில் இருந்து மதுவை உண்டு மதிமயங்கிய வண்டுகளால் நிறைந்திருந்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியைத் தந்தன.(8)
{இப்படி} பல விஷயங்களால் அந்தக் கானகம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், அழகாகவும், புனிதமானதாகவும் இருந்தது. பல பறவைகளின் மெல்லிசைகளை எதிரொலித்த அது கத்ருவின் மைந்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.(9) அந்தப் பாம்புகள் அந்தக் காட்டிற்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்கள் பொழுதைக் கழித்தன. பறவைகளின் மன்னனான சக்தி நிறைந்த கருடனிடம், அவை {பாம்புகள்},(10) "வேறு ஏதேனும் அழகான, சுத்தமான நீர் நிறைந்த தீவுக்கு எங்களை அழைத்துச் செல்வாயாக. நீ விண்ணோடியாதலால், அப்படிப் (காற்றில்) பறக்கும்போது நிறைய அழகான இடங்களைக் கண்டிருப்பாயே" என்று கட்டளையிட்டனர்.(11)
கருடன் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு தனது தாய் வினதையிடம், “தாயே, இந்தப் பாம்புகளின் உத்தரவுகளை எல்லாம் நான் ஏன் நிறைவேற்ற வேண்டும்?” என்று கேட்டான்.(12)
இப்படிக்கேட்கப்பட்ட வினதை, விண்ணோடியும், அனைந்து அறங்களும் நிறைந்தவனும், பெரும் சக்தியும், பலமும் கொண்டவனுமான தன் மகனிடம் {கருடனிடம்}, "ஓ பறவைகளில் சிறந்தவனே, என் கெடுபேறால் {துரதிர்ஷ்டத்தால்} நான் எனது சக்களத்தியிடம் அடிமையானேன். அந்தப் பாம்புகள், ஏமாற்று வேலை செய்து, பந்தயத்தில் தோற்கடித்து, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின" என்றாள் {வினதை}.(13) தனது தாய் இப்படிக் கூறியதைக் கேட்டு, அந்த விண்ணோடி {கருடன்} மிகவும் துன்புற்று, அந்தப் பாம்புகளிடம்,(14) "பாம்புகளே, நான் எந்தப் பொருளைக் கொண்டுவந்தால், அல்லது எந்தப் பொருளைப் பற்றிய அறிவை அடைந்தால், அல்லது எந்த வீரச் செயலைச் செய்தால், இந்த அடிமைத்தனத்திலிருந்து நாங்கள் விடுபடுவோம், சொல்லுங்கள்" என்று கேட்டான்."(15)
சௌதி தொடர்ந்தார், "இதைக் கேட்ட பாம்புகள், "உனது பலத்தால் அமுதத்தைக் கொண்டு வா. ஓ பறவையே {கருடா}, அப்போது நீங்கள் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள்" என்றன {பாம்புகள்}”.(16)

ஆங்கிலத்தில் | In English |