Ani Mandavya! | Adi Parva - Section 107 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் :
மௌனவிரதம் இருந்த மாண்டவ்ய முனிவர்; கள்வர்கள் பதுக்கி வைத்த கொள்ளைப் பொருள்; கழுவிலேற்றப்பட்ட முனிவர் சாகாமலிருந்தது...
ஜனமேஜயன் வைசம்பயானரிடம், "சபிக்கப்படும்படி தர்மதேவன் அப்படி என்ன காரியம் செய்தான்? அவனைச் சூத்திர வர்ணத்தில் பிறக்கும்படி சாபம் தந்த அந்த பிராமணத் துறவி யார்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் சொன்னார், "மாண்டவ்யர் என்ற பெயருடன் ஒரு பிராமணர் இருந்தார். அவர் அறம், உண்மை {சத்தியம்}, துறவு ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்துத் தனது கடமைகளில் தெளிவுடன் இருந்தார்.(2) அந்தப் பெரும் துறவி, தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தினடியில் அமர்ந்து, உள்ளங்கைகளை வானம் பார்க்கத் தனது மடியில் வைத்துப் பேசா நோன்பு (மௌன விரதம்) இருப்பது வழக்கம்.(3) இதை அவர் பல வருடங்களாகச் செய்து வந்தார். ஒரு நாள், அவரது ஆசிரமத்திற்குக் கொள்ளையடித்த பொருட்களுடன் கள்வர்கள் வந்தனர்.(4)
ஓ பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, அந்தத் திருடர்களைத் தொடர்ந்து அமைதியைக் காக்கும் காவலர்களும் வந்தனர். அந்தக் காவலர்கள் வருவதற்கு முன்பே, அக்கள்வர்கள், தங்கள் கொள்ளைப் பொருளை அந்த ஆசிரமத்தில் மறைத்து வைத்துத் தாங்களும் மறைந்து கொண்டனர். அவர்கள் மறைவதற்கும் காவலர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.(5,6) அக்காவலர்கள், மரத்தினடியில் அமர்ந்திருக்கும் முனிவரைக் கண்டு அவரிடம், "ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இங்கே வந்த திருடர்கள் எந்த வழியாகச் சென்றார்கள்? அதைக் குறித்துக் காட்டினீர் என்றால், நேர விரயமில்லாமல் அவர்களை நாங்கள் தொடர முடியும்" என்று கேட்டனர்.(7,8) ஓ மன்னா! அமைதியின் காவலர்களால் இப்படிக் கேட்கப்பட்ட துறவி நல்லதாகவோ, அல்லதாகவோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை.(9) இருப்பினும், மன்னனின் அதிகாரிகள் ஆசிரமத்தைச் சோதனையிட்டு, அங்கே மறைந்திருந்த திருடர்களை அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் கண்டுபிடித்தனர்.(10)
இதனால், அந்த முனிவரின் மேல் அவர்களுக்கு ஐயம் எழுந்தது. திருடர்களுடன் முனிவரையும் அழைத்துக் கொண்டு போய் மன்னன் முன்பு நிறுத்தினர்.(11) மன்னன், திருடர்களுடன் சேர்த்து முனிவரையும் சூலத்திலேற்ற {கழுவேற்ற} உத்தரவிட்டான். அறியாமையில் இருந்த அதிகாரிகளும் அந்தத் தீர்ப்பை அமலாக்கும் பொருட்டு அந்தக் கொண்டாடப்பட்ட முனிவரைச் சூலத்திலேற்றினர்.(12) அப்படிக் சூலத்திலேற்றிவிட்டுக் கைப்பற்றப்பட்ட கொள்ளைப் பொருட்களுடன் மன்னனைக் காணச் சென்றனர்.(13) அந்த அறம் சார்ந்த முனிவர் சூலத்திலேற்றப்பட்ட பிறகும், நீண்ட நேரமாக உணவு இல்லாமலிருந்தும், அசைவில்லாமல் அதே நிலையில் சாகாமல் உயிருடன் இருந்தார்.(14)
அந்த முனிவர் தனது ஆன்ம சக்தியால் உயிருடன் இருந்தது மட்டுமல்லாமல் மற்ற முனிவர்களையும் அங்கு அழைத்தார்.(15) அவர்களனைவரும் இரவில் பறவை ரூபத்தில் வந்து, சூலத்திலேற்றப்பட்ட பிறகும் ஆன்மத் தவத்தில் மூழ்கியிருந்த அந்தத் துறவியைக் கண்டு மிகவும் வேதனைப்பட்டனர்.(16) அவர்கள் யார் என்பதை அந்த முனிவருக்குச் சொல்லி, அவரிடம் "ஓ பிராமணரே! சூலத்தில் ஏற்றப்பட்டுக் கொடுமைகளை அனுபவிக்கும் அளவுக்கு நீர் என்ன பாவம் செய்தீர் என்பதை அறிய விரும்புகிறோம்" என்று கேட்டனர்".(17)

ஆங்கிலத்தில் | In English |