Polyandry! | Adi Parva - Section 198 | Mahabharata In Tamil
(வைவாஹிக பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : ஒருத்திக்கு பலர் கணவராக இருப்பதில் துருபதன் முதலியோருக்குள்ள மறுப்புகளைக் கேட்ட வியாசர்; பிறகு, திரௌபதி ஐவருக்கு மனைவியாவது அறமே எனச் சொன்ன வியாசர்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சாலர்களின் சிறப்பு வாய்ந்த மன்னனும், மற்றும் ஏனையோரும் எழுந்திருந்து சிறப்பு வாய்ந்த முனிவர் கிருஷ்ணருக்கு (துவைபாயனருக்கு) {வியாசருக்கு} மரியாதையுடன் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர்.(1) அந்த உயர் ஆன்ம முனிவர், அவர்கள் அனைவருக்கும் பதில் வணக்கம் செலுத்தி, அனைவரின் நலனையும் விசாரித்தபடி கீழே தங்கத் தரைவிரிப்பில் அமர்ந்தார்.(2) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணரால் (துவைபாயனரால்) {வியாசரால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் தங்கள் விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.(3) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பிருஷதனின் மகன் {துருபதன்} இனிமையான குரலில் சிறப்பு மிகுந்த முனிவரிடம் தனது மகளின் {திரௌபதியின்} திருமணம் குறித்துப் பேசினான்.(4)
அவன், "ஓ சிறந்தவரே, பாவத்தின் கறை படியாமல் ஒரு பெண் எப்படிப் பல மனிதர்களுக்கு மனைவியாக முடியும்? இது குறித்து எனக்கு உண்மையைச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.(5)
இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசர், "ஓ மன்னா, இந்த நடைமுறை பயன்பாட்டுக்கும், வேதங்களுக்கும் எதிராக இருப்பதால் வழக்கற்றுப் போயிற்று. இருப்பினும் நான், இக்காரியத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.(6)
முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, முதலில் துருபதன் பேசினான், "பயன்பாட்டிலும், வேதங்களாலும் எதிர்க்கப்பட்டிருக்கும்போது, இந்த நடைமுறை பாவகரமானது என்பது எனது கருத்து, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, பலர் கூடி ஒரு மனைவியை வைத்திருப்பதை நான் எங்கும் கண்டிலேன்.(7) பழங்காலத்தில் இருந்த சிறப்பு வாய்ந்தவர்கள் கூட இது போன்ற பயன்பாட்டை கொண்டிருக்கவில்லை. ஞானிகள் ஒருபோதும் பாவம் செய்யமாட்டார்கள்.(8) எனவே, நான் இவ்வழியில் செயல்பட எனது மனத்தைத் தயார் செய்ய முடியாது. இந்த நடைமுறை எனக்குச் ஐயத்திற்கிடமான அறமாகவே படுகிறது" என்றான் {துருபதன்}.(9)
துருபதன் சொல்லி முடித்ததும், திருஷ்டத்யும்னன், "ஓ பிராமணர்களில் காளையே, ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஓ பிராமணரே! நல்ல மனநிலையில் உள்ள {நல்ல குணத்தைக் கொண்ட} ஓர் அண்ணன், தனது தம்பியின் மனைவியை எப்படி அணுக முடியும்?(10) அறவழிகள் நுட்பமானவை {தர்மத்தின் பாதைகள் புதிரானவை}, எனவே, அதுகுறித்து நாம் அறிவதில்லை. நாம் அறத்திற்கு உகந்தது எது, எது இல்லை என்பதைச் சொல்ல முடியாது.(11) எனவே, மனசாட்சியுடன் நாம் அத்தகு செயலைச் செய்ய முடியாது. உண்மையில், ஓ பிராமணரே! 'திரௌபதி, ஐந்து சகோதரர்களுக்குப் பொது மனைவியாக இருக்கட்டும்' என்று என்றால் சொல்ல முடியவில்லை" என்று பேசினான் {திருஷ்டத்யும்னன்}.(12)
பிறகு யுதிஷ்டிரன், "எனது நாக்கு ஒருபோதும் பொய்ம்மையைப் பேசுவதில்லை. எனது இதயம் ஒருபோதும் பாவமெனப்பட்டதை நோக்கி உயர்வதில்லை. ஒன்றை எனது இதயம் அங்கீகரிக்கும் போது, ஒருபோதும் அது பாவகரமாக இருக்க முடியாது.(13) புராணங்களில் நான் ஜடிலை என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோதம குலத்தைச் சார்ந்த அந்த அறம்சார்ந்த மங்கையரில் முதன்மையானவள் {ஜடிலை}, ஏழு முனிவர்களைத் திருமணம் செய்தாள்.(14) அதே போல, மரத்தில் பிறந்தவளான ஒரு துறவியின் மகள் {வார்க்ஷி [மாரிஷா]}, முன்பொரு காலத்தில், தவத்தின் உச்சத்தை அறிந்த ஆன்மாக்களான பிரசேதர்கள் என்ற ஒரே பெயரையுடைய பத்து சகோதரர்களைத் திருமணம் செய்தாள்.(15) ஓ அறவிதிகள் அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவரே, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் நன்மை பயக்கத்தக்கது என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லப்படும் பெரியோர்களில் தாயே முதன்மையானவள் என்பது நன்கு அறியப்பட்டது.(16) நாங்கள் பிச்சையாக அடைந்த திரௌபதியை அனைவரும் அனுபவிக்குமாறு அவளே ஆணையிட்டாள். இதன் காரணமாகவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இச்செயலை நான் அறம் சார்ந்ததாகக் கருதுகிறேன்" என்று பேசினான் {யுதிஷ்டிரன்}.(17)
அப்போது குந்தி, "யுதிஷ்டிரன் சொன்னது போலவே இச்செயல் அறம்சார்ந்ததுதான். ஓ பிராமணரே! எனது வார்த்தை பொய்த்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன். பொய்ம்மையிலிருந்து நான் எவ்வாறு காக்கப்படுவேன்?" என்று சொன்னாள்.(18)
அனைவரும் பேசி முடித்த பிறகு, வியாசர், "ஓ இனிமையானவளே, இதுவே நிலைத்த அறமாக இருக்கும் போது, நீ பொய்ம்மையின் விளைவுகளிலிருந்து எவ்வாறு நீ காக்கப்படுவாய்? ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதா}, உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த மாட்டேன். ஆனால், நீ மட்டும் தனியாக அமர்ந்து, இந்த நடைமுறை எப்படி நிறுவப்பட்டது? இதுவே பழமையானதும், நிலைத்ததுமாக ஏன் மதிக்கப்படுகிறது? என்பதைப் பற்றி நான் சொல்லப் போவதைக் கேள். யுதிஷ்டிரன் சொன்னது அறத்திற்குக் கட்டுப்பட்டது என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது" என்றார்".(19,20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அந்தச் சிறப்பு வாய்ந்த வியாசர், அந்தக் குரு துவைபாயனர், எழுந்திருந்து, துருபதனின் கையைப் பற்றி அரண்மனைக்குள் இருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.(21) பாண்டவர்களும், குந்தியும் பிருஷதனின் குலத்தில் வந்த திருஷ்டத்யும்னனும் அங்கேயே அமர்ந்து கொண்டு, வியாசர் மற்றும் துருபதனின் வரவுக்காகக் காத்திருந்தனர்.(22) அதே வேளையில் துவைபாயனர் {வியாசர்} அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, எப்படி பலபதியுடைமை என்ற நடைமுறை பாவகரமாகக் கருதப்பட முடியாது என்பது குறித்துப் விளக்கினார்” {என்றார் வைசம்பாயனர்}.(23)

ஆங்கிலத்தில் | In English |