Thy daughter,shall be the common wife of us all! | Adi Parva - Section 197 | Mahabharata In Tamil
(வைவாஹிக பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : துருபதன் விசாரிக்கும்போது தாங்கள் பாண்டவர்களே என்று சொன்ன யுதிஷ்டிரன்; திரௌபதி ஐவருக்கு மனைவியாக எதிர்ப்பு தெரிவித்த துருபதன்; வியாசர் வருகை...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் ஆயுதங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, சிறப்புமிகுந்த பாஞ்சால மன்னன் {துருபதன்}, குந்தியின் சிறப்புமிக்க மகனான, அந்த பிராமண வடிவில் இருக்கும் யுதிஷ்டிரனிடம் மகிழ்ச்சியாக, "நாங்கள் உங்களை க்ஷத்திரியர்கள் என்று அறிவதா? அல்லது பிராமணர்கள் என்று அறிவதா?(1,2) அல்லது சாதித்த வைசியர்களா? அல்லது சூத்திரர்களுக்குப் பிறந்தவர்களா? அல்லது திரௌபதியின் கைப்பிடிக்க மாயசக்தியைப் பயன்படுத்தி பிராமண வடிவில் பூமியில் உலவும் தேவர்கள் என்று அறிவதா? உண்மையைச் சொல்வீராக. எங்களுக்குப் பெரும் ஐயங்கள் எழுகின்றன.(3,4) எங்கள் சந்தேகங்கள் களையப்பட்டால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டோமா? ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, எங்கள் விதி எங்களுக்கு நன்மையைச் செய்யுமா?(5) விருப்பத்துடன் உண்மையைச் சொல்லுங்கள். கிணறுகளை அர்ப்பணம் {உபயம்} செய்வதை விடவும், வேள்விகளைச் செய்வதை விடவும், உண்மையை பேசுவதே ஓர் ஏகாதிபதிக்குத் தகுந்ததாகும். எனவே, எங்களிடம் பொய்யுரைக்க வேண்டாம். (6) ஓ தெய்வீக அழகுடையவரே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது மறுமொழியைக் கேட்ட பிறகே, நான் எனது மகளின் திருமணத்தை உங்கள் முறையில் செய்ய ஏற்பாடு செய்ய முடியும்" என்றான்.(7)
துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ மன்னா, மகிழ்வற்றவராக இருக்காதீர். உற்சாகமடைவீராக. நீர் உமது மனத்தில் வளர்த்து வந்த விருப்பம் ஈடேறியது.(8) நாங்கள் க்ஷத்திரியர்களே, ஓ மன்னா, நாங்கள் சிறப்புமிக்க பாண்டுவின் மகன்களே. குந்தியின் மகன்களில் என்னை மூத்தவனாக அறிந்து கொள்வீராக. இவர்கள் பீமனும், அர்ஜுனனும் ஆவர்.(9) ஓ மன்னா இவர்களாலேயே, உமது மகள் {திரௌபதி}, அந்த மன்னர்கள் கூட்டத்தின் முன்னிலையில் வெல்லப்பட்டாள். இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), குந்தியும் கிருஷ்ணை {திரௌபதி} இருக்கும் இடத்தில் காத்திருக்கிறார்கள்.(10) ஓ மனிதர்களில் காளையே, நாங்கள் க்ஷத்திரியர்களே, ஆதலால் துயரத்தை உமது இதயத்தில் இருந்து விரட்டுவீராக. ஓ ஏகாதிபதி! தாமரையைப் போன்ற உமது மகள் ஒரு தடாகத்தில் இருந்து மற்றொரு தடாகத்திற்கு மாற்றப்படுகிறாள். அவ்வளவுதான்.(11) ஓ மன்னா, நீர் மரியாதைக்குரிய பெரியவரும், எங்கள் முக்கியப் புகலிடமும் ஆவீர். நான் உம்மிடம் முழு உண்மையையும் சொல்லிவிட்டேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(12)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன் பரவசத்தால் மெய்மறந்து கண்களை உருட்டினான். மகிழ்ச்சி நிறைந்த அம்மன்னனால் சிறிது நேரத்திற்கு யுதிஷ்டிரனுக்குப் பதில் அளிக்க இயலவில்லை.(13) பெருமுயற்சியுடன் தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு முறையான வார்த்தைகளால் யுதிஷ்டிரனுக்குப் பதில் கூறினான்.(14) அறம் சார்ந்த ஏகாதிபதி {துருபதன்} வாரணாவத நகரத்திலிருந்து பாண்டவர்கள் எப்படித் தப்பினார்கள் என்பதைக் கேட்டான். பாண்டுவின் மகன் அந்த ஏகாதிபதியிடம் அரக்கு மாளிகை எரியூட்டல் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தான்.(15) குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்னதைக் கேட்ட மன்னன் துருபதன், மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனைப் பழித்தான்.(16) அப்போது, அந்த ஏகாதிபதி! குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு அனைத்து உறுதிகளையும் கொடுத்தான். அந்தச் சொல்திறன் வாய்ந்தவர்களில் முதன்மையான {துருபதன்}, யுதிஷ்டிரனிடம் அவனது தந்தைவழி அரியணையை மீட்டுத் தருவதாக உறுதிமொழியளித்தான்.(17)
குந்தி, கிருஷ்ணை {திரௌபதி}, பீமன், அர்ஜுனன், இரட்டையர் ஆகியோர் மன்னனின் உத்தரவின் பேரில் அங்கேயே தங்கி,(18) அந்த யக்ஞசேனனால் {துருபதனால்} உரிய மரியாதையுடன் நடத்தப் பட்டனர். மன்னன் துருபதன் தனது மகன்களுடன் நடந்தது அத்தனையும் உறுதி செய்து கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி,(19) "ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே, குரு இளவரசனான அர்ஜுனன், நன்னாளான இன்றே உரிய சடங்குகளுடன் எனது மகளின் {திரௌபதியின்} கரத்தைப் பற்றட்டும். எனவே, அவன் திருமணத்திற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்யட்டும்" என்றான்".(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், "ஓ பெரும் மன்னா! நானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றான்.(21)
இதைக் கேட்ட துருபதன், "உமக்கு விருப்பம் இருந்தால், நீரே எனது மகளின் {திரௌபதியின்} கரத்தை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொள்ளும். அல்லது கிருஷ்ணையை {திரௌபதியை} நீர் விரும்பிய சகோதரனுக்குக் கூடத் திருமணம் செய்து கொடுக்கலாம்" என்றான்.(22)
யுதிஷ்டிரன், "ஓ மன்னா, உமது மகள் எங்களுக்குப் பொது மனைவியாக இருப்பாள். ஓ ஏகாதிபதியே, இப்படியே எங்கள் அன்னை உத்தரவு இட்டிருக்கிறாள்.(23) எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, பாண்டுவின் மகன்களில் பீமனும் அப்படியே {திருமணம் ஆகாமல்}[1] இருக்கிறான். இந்த ரத்தினம் போன்ற உமது மகள் அர்ஜுனனால் வெல்லப்பட்டாள்.(24) ஓ மன்னா, எந்த ரத்தினத்தை நாங்கள் அடைந்தாலும், அதைச் சமமாக அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி எங்களுக்குள் இருக்கிறது. ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே, அந்த நடத்தை விதியை எங்களால் கைவிட முடியாது.(25) எனவே, கிருஷ்ணை, எங்கள் அனைவராலும் மணந்து கொள்ளப்படும் மனைவியாக இருப்பாள். அவள், நெருப்பின் {அக்னியின்} முன்னிலையில், எங்கள் வயதின் வரிசைப்படி எங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றட்டும்" என்றான்.(26)
அதற்குத் துருபதன், "ஓ குரு குலத்தின் வழித்தோன்றலே, ஒரு மனிதன் பல மனைவிகளைக் கொள்ள வழிகாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு பெண்மணி பல கணவர்களைக் கொண்டதை நாம் கேள்விப்பட்டதே இல்லை.(27) ஓ குந்தியின் மகனே, நீர் தூய்மையானவராகவும், அறவிதிகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பதால், நீர் இத்தகு பாவ காரியத்தைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட பழக்கம் நடைமுறையிலும் இல்லை, வேதங்களிலும் இல்லை. ஓ இளவரசே, ஏன் உமது புரிதல் இப்படி ஆனது? {ஏன் உமது புத்தி இப்படிச் செல்கிறது?}" என்று கேட்டான்.(28)
அதற்கு யுதிஷ்டிரன், "ஓ ஏகாதிபதி! அறநெறியானது நுட்பமானது, நாம் அதன் போக்கை {வழியை} அறிவதில்லை. எனவே, பழங்காலத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் சென்ற வழியில் நாம் நடக்கலாம்.(29) எனது நாக்கு ஒருபோதும் பொய்யைச் சொல்லாது. எனது இதயமும் ஒருபோதும் பாவத்தின் பக்கம் திரும்பாது. எனது தாய் அப்படிக் கட்டளையிட்டாள்; எனது இதயமும் அதை அங்கீகரிக்கிறது.(30) எனவே, ஓ மன்னா, இஃது அறத்தின் நியமங்களுக்குக் கட்டுப்பட்டதே. எந்தப் பழிக்கும் அஞ்சாமல் அதன்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ஓ மன்னா, இக்காரியத்தில் அச்சத்தை ஊக்கப்படுத்தாதீர்" என்றான்.(31)
துருபதன், "ஓ குந்தியின் மகனே, என்ன செய்யப்பட வேண்டும் என்பதை உமது தாயும், எனது மகன் திருஷ்டத்யும்னனும், நீரும் கலந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து ஆராய்ந்து எடுத்த உங்கள் முடிவை, நாளை என்னிடம் சொல்லுங்கள். நான் எது சரியோ அதைச் செய்கிறேன்" என்றான்".(32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, அதன்பிறகு, யுதிஷ்டிரனும், குந்தியும், திருஷ்டத்யும்னனும் இக்காரியம் குறித்துக் கலந்து பேசினர். இருப்பினும், சரியாக அதே நேரத்தில், ஓ ஏகாதிபதி, தீவில் பிறந்தவர் {துவைபாயனர் = வியாசர்}, பயணம் போகும் வழியில் அங்கே வந்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(33)

ஆங்கிலத்தில் | In English |