The Marriage of Arjuna and Chitrangada! | Adi Parva - Section 217 | Mahabharata In Tamil
(அர்ஜுன வனவாச பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் பல சிகரங்களையும், பல புண்ணிய இடங்களையும் கண்டு மணிப்புரம் சென்றது; அங்கே சித்ரவாஹனன் மகள் சித்ராங்கதையை மணந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு அந்த வஜ்ரதாரியின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} (தன்னுடன் வசித்து வந்த) பிராமணர்களிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, இமயத்தின் சாரலை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் அகஸ்தியவடம் எனும் இடத்தை அடைந்து, அங்கிருந்து வசிஷ்டரின் சிகரத்திற்குச் சென்றான். பிறகு அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} பிருகுவின் சிகரத்திற்குச் சென்றான்.(2) அங்கே தன்னை நீராலும், சடங்குகளாலும் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல வீடுகளையும் பரிசாகக் கொடுத்தான்.(3) அந்த மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} ஹிரண்யபிந்து என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்தை நோக்கி முன்னேறினான். அங்கேயும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பாண்டுவின் மகன், அதன் பிறகு பல புனிதமான இடங்களைக் கண்டான் {புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்தான்}.(4)
அந்த உயரங்களில் {சிகரங்களில்} இருந்து இறங்கிய அந்த மனிதர்களின் தலைவன் {அர்ஜுனன்}, ஓ பாரதா {ஜனமேஜயா}, கிழக்கிலிருக்கும் நாடுகளைக் காண ஆவல் கொண்டு, பிராமணர்களுடன் சேர்ந்து கிழக்கு நோக்கிப் பயணித்தான்.(5) அந்தக் குரு குலத்தின் முதன்மையானவன் {அர்ஜுனன்}, பல புண்ணிய நீர்நிலைகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டான். நைமிசவனத்தின் அடர்ந்த காட்டில் (தாமரைகள் நிறைந்த) உத்பலினி என்ற ஆற்றையும், நந்தா நதி மற்றும் அபரநந்தா நதி, கௌசிகி நதி, மற்றும் பெரும் ஆறுகளான கயை மற்றும் கங்கை, புனித நீர்நிலை கொண்ட அனைத்து இடங்களையும் கண்டு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டான். ஓ பாரதா {ஜனமேஜயா}, அப்போது (சில வழக்கமான சடங்குகளுடன்) பிராமணர்களுக்குப் பல பசுக்களைக் கொடுத்தான்.(6-8) அங்கத்திலும், வங்கத்திலும், கலிங்கத்திலும்[1] உள்ள அனைத்துப் புனித நீர்நிலைகளையும், புனித இடங்களையும் அர்ஜுனன் பார்வையிட்டான்.(9)
அவற்றையெல்லாம் கண்டு, முறையான சடங்குகளைச் சரியாகச் செய்து, நிறைந்த செல்வத்தைத் தானமாகக் கொடுத்தான். ஓ பாரதா, அந்தப் பாண்டுவின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்கள் கலிங்க நாட்டு வாயிலில் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி, மேலும் தொடர்ந்து செல்லாமல் நின்று கொண்டனர்.(10) குந்தியின் மகனான அந்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்களிடம் விடை பெற்று சில பணியாட்கள் மட்டுமே உடன்வர பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(11) கலிங்க நாட்டைக் கடந்த அந்தப் பலம் வாய்ந்தவன் {அர்ஜுனன்} பல்வேறு வித்தியாசமான நாடுகளையும், புனித இடங்களையும், வித்தியாசமான மாளிகைகளையும், அழகான வீடுகளையும் வழியில் கண்டு கொண்டே சென்றான்.(12) துறவிகள் நிறைந்த மகேந்திர மலையையும் கண்டு, அதன் பிறகு கடற்கரை வழியாகவே மெதுவாக நடந்து மணிப்புரம் என்ற நாட்டுக்குச் சென்றான்[2].(13)
ஓ மன்னா, அந்த நாட்டில் உள்ள புனிதமான இடங்களையும், புண்ணிய நீர்நிலைகளையும் கண்ட பலம்வாய்ந்த கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன், கடைசியாக மணிபுரத்தின் மன்னனான அறம் சார்ந்த சித்ரவாஹனனிடம் சென்றான். அந்த மணிபுரத்தின் மன்னனுக்கு, பேரழகுடன் விளங்கிய சித்ராங்கதை என்ற பெயர்கொண்ட மகள் ஒருத்தி இருந்தாள்.(14,15) தனது தந்தையின் அரண்மனையில் இன்பமாக உலவிக் கொண்டிருந்த அவளை அர்ஜுனன் சந்திக்க நேர்ந்தது. சித்ரவாஹனனின் அழகான பெண்ணை, அர்ஜுனன் அடைய விரும்பினான்.(16) அவன் அந்த மன்னனிடம் (அவளது தந்தையிடம்) சென்று, தனக்கு வேண்டியதைக் {சித்ராங்கதையைக்} கேட்டான் {அர்ஜுனன்}.
அவன் {அர்ஜுனன்} சித்ரவாஹனனிடம், "ஓ மன்னா, ஒரு சிறப்புவாய்ந்த மகன் நான். உமது மகளை {சித்ராங்கதையை} எனக்குக் கொடுப்பீராக" என்று கேட்டான். (17) இதைக் கேட்ட மன்னன், "நீ யாருடைய மகன்?" என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், "நான் தனஞ்சயன், பாண்டு மற்றும் குந்தியின் மகன்" என்றான்.(18) இதைக் கேட்ட மன்னன் அவனிடம் இனிமையான சொற்களால், "எங்கள் குலத்தில் பிரபஞ்சனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(19) அவன் பிள்ளை இல்லாது இருந்தான். ஒரு பிள்ளையைப் பெற அவன் தீவிர தங்கள நோன்புகளை நோற்றான். அவனது கடுந்தவத்தால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அவன் தேவர்களுக்குத் தேவனும், உமைக்குக் {உமாவுக்குக்} கணவனுமான மகாதேவனை, பிநாகையை (பெரும் வில்லை) ஏந்திய தன்னிகரில்லா தலைவனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அந்தச் சிறப்புமிக்கத் தலைவன், அவனது குலத்தில் வரும் ஒவ்வொருவனுக்கும் ஒரே குழந்தையை {மட்டுமே} வரமாகக் கொடுத்தான்.(20,21) அந்த வரத்தின் காரணமாக எங்கள் குலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. எனது எல்லா மூதாதையர்களும் ஆண் மகவைத் தான் ஈன்றனர்.(22) இருப்பினும், ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனனே}, எனது குலத்தைத் தழைக்கச் செய்ய எனக்குப் பெண் மகவையே கொண்டேன். ஆனால், ஓ மனிதர்களில் காளையே, நான் எப்போதும் எனது மகளை {சித்ராங்கதையை} மகனைப் போலவே பார்க்கிறேன்.(23)
அதனால் அவளை நான் புத்ரிகையாக்கி இருக்கிறேன் {புத்திரிகை ஆக்க சடங்கு செய்தால், அவள் மூலம் பிறக்கும் பிள்ளைகள் அவளது தகப்பனுக்கு வாரிசாகும்}.
எனவே, ஓ பாரதா {அர்ஜுனா}, அவளிடம் {சித்ராங்கதையிடம்} உன்னால் பெறப்படும் மகன்களில் ஒருவனே எனது குலத்தைத் தழைக்க வைக்க வேண்டும். அந்த மகனை வரதட்சனையாக எனக்கு நீ கொடுத்தால், எனது மகளை {சித்ராங்கதையை} உனக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். ஓ பாண்டுவின் மகனே, இதை நீ ஏற்றால், இந்த உடன்பாட்டின் படி நீ அவளை அடையலாம்" என்றான்.(24,25)
அந்த மன்னனின் {சித்ரவாஹனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். சித்ரவாஹனனின் மகளைப் {சித்ராங்கதையை} (தனது மனைவியாகப்) பெற்ற குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்த நகரத்தில் மூன்று வருடங்கள் வசித்தான்.(26) இறுதியில் சித்ராங்கதை ஒரு மகனைப் பெற்றாள். அர்ஜுனன் அந்த அழகிய இளவரசியைப் {சித்ராங்கதையைப்} பாசத்துடன் வாரி அணைத்துக் கொண்டான். பிறகு மன்னனிடம் (அவளது தந்தை {சித்ரவாஹனனிடம்}) விடைபெற்றுக் கொண்டு, தனது ஊர் சுற்றலைத் திரும்பத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}[3].(27)

[1] வங்கம்- மேற்கு வங்காளம் மாநிலமும், பங்களாதேஷ் நாட்டையும் உள்ளடக்கியது; கலிங்கம்- இன்றைய ஒடிசா=ஒரிஸ்ஸா மாநிலத்தையும் குறிக்கிறது. அர்ஜுனன் தெற்கு நோக்கியே வந்திருக்க வேண்டும்.
அவற்றையெல்லாம் கண்டு, முறையான சடங்குகளைச் சரியாகச் செய்து, நிறைந்த செல்வத்தைத் தானமாகக் கொடுத்தான். ஓ பாரதா, அந்தப் பாண்டுவின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்கள் கலிங்க நாட்டு வாயிலில் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி, மேலும் தொடர்ந்து செல்லாமல் நின்று கொண்டனர்.(10) குந்தியின் மகனான அந்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்களிடம் விடை பெற்று சில பணியாட்கள் மட்டுமே உடன்வர பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(11) கலிங்க நாட்டைக் கடந்த அந்தப் பலம் வாய்ந்தவன் {அர்ஜுனன்} பல்வேறு வித்தியாசமான நாடுகளையும், புனித இடங்களையும், வித்தியாசமான மாளிகைகளையும், அழகான வீடுகளையும் வழியில் கண்டு கொண்டே சென்றான்.(12) துறவிகள் நிறைந்த மகேந்திர மலையையும் கண்டு, அதன் பிறகு கடற்கரை வழியாகவே மெதுவாக நடந்து மணிப்புரம் என்ற நாட்டுக்குச் சென்றான்[2].(13)
[2] இந்தக் கதையைக் கொண்டுதான் தென்னகப் பதிப்புகளில் அல்லிராஜ்யம் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தேவதத் கூறுகிறார். அவற்றில் மணிப்புரம் {மணலூரபுரம்} பாண்டிய நாடாகச் சொல்லப்படுவதாகவும் சொல்கிறார் தேவதத்.
இதற்கு வலு சேர்ப்பது போல, கும்பகோணம் பதிப்பில், "மஹாபலசாலியான அவன் ரிஷிகளால் சோபிக்கின்ற மஹேந்திர பர்வதத்தைக் கண்டு, அதன்பிறகு கோதாவரியில் ஸ்நானஞ்செய்து, அதைத் தாண்டி ஸமுத்திர ஸங்கமத்தில் பிரசித்தி பெற்ற காவேரியையடைந்து ஸ்நானஞ்செய்து, தேவரிஷி பிதிர் தர்ப்பணஞ்செய்து, ஸமுத்திரக் கரையாலேயே கிரமமாக மணலூரென்னும் இடத்திற்குச் சென்றான்" என்றிருக்கிறது.
பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் தவசிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மஹேந்திர மலையைக் கண்டான். மெதுவாகப் பெருங்கடலின் கரையில் பயணித்த அவன் விரவில் மணலூரத்திற்கு வந்து சேர்ந்தான்" என்றிருக்கிறது. இங்கே ஊரின் பெயரில் கும்பகோணம் பதிப்பும், பிபேக்திப்ராயின் பதிப்பும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் பிபேக்திப்ராயின் பதிப்பில் கும்பகோணம் பதிப்பில் காணப்படும் தென்ன ஆறுகளைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஓ மன்னா, அந்த நாட்டில் உள்ள புனிதமான இடங்களையும், புண்ணிய நீர்நிலைகளையும் கண்ட பலம்வாய்ந்த கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன், கடைசியாக மணிபுரத்தின் மன்னனான அறம் சார்ந்த சித்ரவாஹனனிடம் சென்றான். அந்த மணிபுரத்தின் மன்னனுக்கு, பேரழகுடன் விளங்கிய சித்ராங்கதை என்ற பெயர்கொண்ட மகள் ஒருத்தி இருந்தாள்.(14,15) தனது தந்தையின் அரண்மனையில் இன்பமாக உலவிக் கொண்டிருந்த அவளை அர்ஜுனன் சந்திக்க நேர்ந்தது. சித்ரவாஹனனின் அழகான பெண்ணை, அர்ஜுனன் அடைய விரும்பினான்.(16) அவன் அந்த மன்னனிடம் (அவளது தந்தையிடம்) சென்று, தனக்கு வேண்டியதைக் {சித்ராங்கதையைக்} கேட்டான் {அர்ஜுனன்}.
அவன் {அர்ஜுனன்} சித்ரவாஹனனிடம், "ஓ மன்னா, ஒரு சிறப்புவாய்ந்த மகன் நான். உமது மகளை {சித்ராங்கதையை} எனக்குக் கொடுப்பீராக" என்று கேட்டான். (17) இதைக் கேட்ட மன்னன், "நீ யாருடைய மகன்?" என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், "நான் தனஞ்சயன், பாண்டு மற்றும் குந்தியின் மகன்" என்றான்.(18) இதைக் கேட்ட மன்னன் அவனிடம் இனிமையான சொற்களால், "எங்கள் குலத்தில் பிரபஞ்சனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(19) அவன் பிள்ளை இல்லாது இருந்தான். ஒரு பிள்ளையைப் பெற அவன் தீவிர தங்கள நோன்புகளை நோற்றான். அவனது கடுந்தவத்தால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அவன் தேவர்களுக்குத் தேவனும், உமைக்குக் {உமாவுக்குக்} கணவனுமான மகாதேவனை, பிநாகையை (பெரும் வில்லை) ஏந்திய தன்னிகரில்லா தலைவனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அந்தச் சிறப்புமிக்கத் தலைவன், அவனது குலத்தில் வரும் ஒவ்வொருவனுக்கும் ஒரே குழந்தையை {மட்டுமே} வரமாகக் கொடுத்தான்.(20,21) அந்த வரத்தின் காரணமாக எங்கள் குலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. எனது எல்லா மூதாதையர்களும் ஆண் மகவைத் தான் ஈன்றனர்.(22) இருப்பினும், ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனனே}, எனது குலத்தைத் தழைக்கச் செய்ய எனக்குப் பெண் மகவையே கொண்டேன். ஆனால், ஓ மனிதர்களில் காளையே, நான் எப்போதும் எனது மகளை {சித்ராங்கதையை} மகனைப் போலவே பார்க்கிறேன்.(23)
அதனால் அவளை நான் புத்ரிகையாக்கி இருக்கிறேன் {புத்திரிகை ஆக்க சடங்கு செய்தால், அவள் மூலம் பிறக்கும் பிள்ளைகள் அவளது தகப்பனுக்கு வாரிசாகும்}.
எனவே, ஓ பாரதா {அர்ஜுனா}, அவளிடம் {சித்ராங்கதையிடம்} உன்னால் பெறப்படும் மகன்களில் ஒருவனே எனது குலத்தைத் தழைக்க வைக்க வேண்டும். அந்த மகனை வரதட்சனையாக எனக்கு நீ கொடுத்தால், எனது மகளை {சித்ராங்கதையை} உனக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். ஓ பாண்டுவின் மகனே, இதை நீ ஏற்றால், இந்த உடன்பாட்டின் படி நீ அவளை அடையலாம்" என்றான்.(24,25)
அந்த மன்னனின் {சித்ரவாஹனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். சித்ரவாஹனனின் மகளைப் {சித்ராங்கதையை} (தனது மனைவியாகப்) பெற்ற குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்த நகரத்தில் மூன்று வருடங்கள் வசித்தான்.(26) இறுதியில் சித்ராங்கதை ஒரு மகனைப் பெற்றாள். அர்ஜுனன் அந்த அழகிய இளவரசியைப் {சித்ராங்கதையைப்} பாசத்துடன் வாரி அணைத்துக் கொண்டான். பிறகு மன்னனிடம் (அவளது தந்தை {சித்ரவாஹனனிடம்}) விடைபெற்றுக் கொண்டு, தனது ஊர் சுற்றலைத் திரும்பத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}[3].(27)
[3] கும்பகோணம் பதிப்பில் இங்கே பப்ருவாகனன் பிறப்பு சொல்லப்படவில்லை. "அர்ஜுனன், "அப்படியே ஆகட்டும்" என்று பிரதிஜ்ஞை செய்து அந்தக் கன்னிகையை வாங்கிக் கொண்டு பதிமூன்றாவது மாஸத்தில் விவாஹச் சடங்கைச் செய்து அங்கே மூன்று மாத காலமிருந்தான் என்றிருக்கிறது" இதில் கால வேறுபாடும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இங்கே பப்ருவாகனின் பிறப்பு சொல்லப்படவில்லை. "சித்திரவாகனனின் மகளை ஏற்றுக் கொண்ட கௌந்தேயன், அங்கே அந்த நகரத்தில் மூன்று குளிர்காலங்கள் இருந்தான்" என்றிருக்கிறது. இது கங்குலியில் உள்ளதைப் போல மூன்று வருடங்களைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் | In English |