Story continued by Varga! | Adi Parva - Section 219 | Mahabharata In Tamil
(அர்ஜுன வனவாச பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பிராமணனிடம் சாபம் பெற்ற அப்சரஸ்கள்; நாரதர் அப்சரஸ்களுக்கு தெற்கு கடற்கரையில் இருக்கும் புனித நீர்நிலைகளுக்குச் செல்லுமாறு வழிகாட்டியது; அர்ஜுனன் அவர்களை சாபத்திலிருந்து மீட்டது; அர்ஜுனன் மீண்டும் மணிபுரம் சென்று தனது மகன் பப்ருவாஹனன் அரியணையில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காண்பது; அர்ஜுனன் சித்ராங்கதையைக் கண்ட பிறகு கோகர்ணம் செல்வது...
வைசம்பாயனர் சொன்னார், "வர்க்கை தொடர்ந்தாள், "ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இந்தச் சாபத்தின் காரணமாக நாங்கள் அனைவரும் துயர் உற்றோம். நாங்கள் தவத்தை செல்வமாகக் கொண்டு தனது உறுதியில் இருந்து விலகாத அந்த பிராமணரை மனநிறைவு செய்ய நினைத்தோம்.(1) அவனிடம் நாங்கள், "அழகினாலும் இளமையாலும் ஏற்பட்ட கர்வத்தாலும், காம தேவனின் உந்துதலாலும், முறையற்ற செயலைச் செய்தோம்.(2) ஓ அந்தணரே, நீர் எங்களை மன்னியும். உண்மையில், ஓ அந்தணரே, கடும் நோன்பு நோற்று, தவத்தை செல்வமாகக் கொண்ட உம்மை மயக்க நாங்கள் இங்கு வந்தது, மரணத்தை நோக்கி வந்தது போலாயிற்று.(3) இருப்பினும், அறம்சார்ந்தவர்கள், பெண்கள் கொல்லப்படக்கூடாது என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, அறத்தால் நீர் இன்னும் வளர்வீராக.(4) நீர் எங்களைக் கொல்லலாகாது. ஓ அறத்தை நன்கு அறிந்தவரே, ஒரு பிராமணன் என்பவன் அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஓ பெரும் வளமை கொண்டவரே! ஞானமுள்ளோர் வாக்கும் மெய்யாகட்டும்.(5) மேம்பட்டவர்கள் தங்களிடம் பாதுகாப்பை நாடி வருபவரை எப்போதும் காப்பர். நாங்கள் உமது பாதுகாப்பைக் கோருகிறோம். நீர் எங்களை மன்னிப்பதே தகும்" என்றோம்.(6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்டவனும், அற ஆன்மாக் கொண்டவனும், நற்செயல்களாலும், பிரகாசத்தாலும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நிகரானவனுமான அந்தப் பிராமணன், அவர்களிடம் மனநிறைவு அடைந்தான்.(7)
அந்த பிராமணன், "நூறு மற்றும் நூறாயிரம் என்பன நிலைத்த தன்மையைக் குறிக்கும் குறீயீடுகள் ஆகும். நான் நூறு என்ற வார்த்தையை உச்சரித்தேன். அஃது ஒரு குறிப்பிட்ட எல்லை கொண்ட காலத்தைக் குறிக்குமே அன்றி, முடிவற்ற காலத்தைக் குறிக்காது.(8) எனவே நீங்கள் முதலைகளாகி, (நான் சொன்னவாறு நூறு ஆண்டுகளுக்கு) மனிதர்களைப் பிடித்து உண்ணுங்கள். அந்தக் காலத்தின் முடிவில், மேன்மை மிகுந்த ஒருவன் உங்கள் அனைவரையும் நீரில் இருந்து வெளியே நிலத்தின் தரையில் இழுத்துப் போடுவான்.(9) அப்போது நீங்கள் உங்கள் உண்மையான வடிவை அடைவீர்கள். நான் கேலிக்காகக் கூடப் பொய் பேசியதில்லை.(10) எனவே, நான் சொன்னது நடந்தே தீரும்.(10) நீங்கள் வசித்த அந்தப் புனித நீர்நிலைகள் உலக மக்களால் நதி-தீர்த்தங்கள் (பெண்களின் துன்பத்திற்கும், அத்துன்பத்திலிருந்து விடுதலை அடையும் நிலைக்கும் தொடர்புடைய புனித நீர் நிலை) என்ற பெயரால் புகழ் அடையும். அந்த இடங்கள் அத்தனையும், புனிதமானவையாகவும், பாவம் போக்குவனவாகவும் அறம்சார்ந்த ஞானிகளால் காணப்படும்" என்றான் {அப்சரஸ்களிடம் பிராமணன்}.(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வர்க்கை அர்ஜுனனிடம், "பிராமணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் {அப்சரஸ்கள்} அவரை மரியாதையுடன் வணங்கி, வலம் வந்தோம்.(12) அப்போது, "(நாம் முதலையாக மாறிய பிறகு) நமது உண்மை உருவத்தைத் திரும்பத் தரும் மனிதனை எங்குச் சந்திப்போம்" என்று எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு கனத்த இதயத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம்.(13) அப்படி நினைத்துக் கொண்டே வந்த போது, ஓ பாரதா {அர்ஜுனா}, நாங்கள் மேன்மையுடன் கூடிய தெய்வீக முனிவர் நாரதரைச் சந்தித்தோம்.(14) அளவில்லா சக்தி கொண்ட அந்த முனிவரைக் கண்டதால், எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. ஓ பார்த்தா {அர்ஜுனா}, நாங்கள் அவரை மரியாதையுடன் வணங்கி வெட்கம் {அவமானத்தால் வெட்கம்} நிறைந்த முகத்துடன் அவர் முன்பு நின்றோம்.(15) அவர் எங்களது துயரின் காரணத்தைக் கேட்டார். நாங்கள் அவரிடம் அனைத்தையும் சொன்னோம்.
நடந்தது அத்தனையும் கேட்ட அந்த முனிவர்,(16) "தெற்குக் கடலருகே இருக்கும் தாழ்ந்த நிலங்களில், ஐந்து புனிதமான நீர் நிலைகள் இருக்கின்றன. அது மகிழ்ச்சிகரமான, மேன்மையான, புனிதம் நிறைந்த இடமாகும். தாமதமில்லாமல் அங்கே செல்லுங்கள்.(17) பாண்டுவின் மகனும், தூய ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உங்களை இந்த இக்கட்டான சூழலில் இருந்து சந்தேகமற {நிச்சயம்} விடுவிப்பான்" என்றார்.(18)
ஓ வீரரே, அந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும் இங்கே வந்தோம். ஓ பாவமற்றவரே, இன்று உண்மையிலேயே நான் உம்மால் விடுவிக்கப்பட்டுவிட்டேன்.(19) ஆனால் எனது நான்கு தோழிகள் இன்னும் அந்த நீர்நிலைகளில் இருக்கின்றனர். ஓ வீரரே, அவர்களையும் விடுவித்து நல்ல காரியத்தைச் செய்வீராக" என்றாள் {வர்க்கை அர்ஜுனனிடம்}.(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட அந்தப் பாண்டவர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அனைவரையும் சாபத்திலிருந்து விடுவித்தான்.(21) நீரிலிருந்து எழுந்த அவர்கள் தங்கள் சொந்த வடிவை அடைந்தார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த அப்சரஸ்கள் பழைய உண்மையான வடிவுடன் காணப்பட்டனர்.(22) (எந்தக் காரணத்திற்காக அந்த இடங்கள் இழி பெயர் பெற்றிருந்தனவோ அவற்றிலிருந்து) அந்தப் புனித நீர்நிலைகளைக் காப்பாற்றி, அந்த அப்சரஸ்களுக்கும், அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல விடைகொடுத்து அனுப்பினான். அர்ஜுனன் சித்ராங்கதையை மறுபடியும் காண ஆவல் கொண்டான்.(23) எனவே, அவன் மணிபுர {மணலூர்} நகரம் நோக்கி முன்னேறினான். அங்கே வந்ததும், தன்னால் சித்ராங்கதையிடம் பெறப்பட்ட மகனான பப்ருவாஹனன் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்[1]. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மீண்டும் சித்ராங்கதையைக் கண்ட அர்ஜுனன், கோகர்ணம் என்ற இடத்தை நோக்கி முன்னேறினான்” என்றார்.[24]

[1] இதன் பிறகு கும்பகோணம் பதிப்பில், இங்கே தான் பப்ருவாகனனின் பிறப்பு சொல்லப்படுகிறது. மேலும் அதிக தகவல்களும் இருக்கின்றன. அவை பின்வருமாறு: "பிரபுவான அர்ஜுனன் அந்தத் தீர்த்தங்களை அவ்வாறு (உபத்திரவமில்லாமல்) சுத்தமாகச் செய்து அந்த அப்ஸரஸுகளுக்கும் விடைகொடுத்துச் சித்ராங்கதையைப் பார்ப்பதற்காக மறுபடியும் மணலூருக்குச் சென்றான். ராஜ்யத்திற்குரியவனான பப்ருவாகனனென்னும் புத்திரனை அவனிடம் உண்டு பண்ணினான். ராஜாவே, பிறகு, அவன் அந்தப் புத்திரனைப் பார்த்துச் சித்ரவாகனனிடத்திற்போய், "சித்ராங்கதையின் கன்னியாசுல்கமான பப்ருவாகனனை நீ வாங்கிக் கொள். ராஜாவே, நீ வாங்கிக் கொள்வதால் நான் கடனிலிருந்து விடுபட்டவனாவேன்" என்று சொன்னான். மறுபடியும், அர்ஜுனன் சித்திராங்கதையைப் பார்த்து, "நீ இங்கேயே இரு. உனக்கு ஸுகமுண்டாகட்டும். பப்ருவாகனனைப் போஷித்துவா. எனது இருப்பிடமாகிய இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தபிறகு என்னுடன் கலந்திருப்பாய். குந்தி, யுதிஷ்டிரர், பீமன், என்னுடைய இளைய சகோதரர்கள் இவர்களையும் மற்ற என்னுடைய பந்துக்களையும் நீ அங்கே வந்து பார்க்கலாம். சிலாக்கியமானவளே, என் பந்துக்களெல்லாருடனும்சேர்ந்து நீ சந்தோஷமடைவாய். தர்மத்திலிருப்பவரும், ஸத்தியத்தை விடாதவரும் குந்தி புத்திரருமான யுதிஷ்டிர் பூமியை முழுவதும் ஜயித்து ராஜஸூய யாகம் செய்யப் போகிறார். இப்புவியில் ராஜாவென்று பெயர்பெற்ற அரசர்கள் மிகுந்த இரத்தினங்களையெடுத்துக் கொண்டு அதற்கு வருவார்கள். அப்போது உன் பிதாவும் வருவார். அவர் யுதிஷ்டிரரைச் சேவை செய்ய வரும்போது நீயும் சேர்ந்து வருவாய். ,ராஜஸூய யாகத்தில் உன்னைப் பார்ப்பேன். புத்தினைக் காப்பாற்று. துயரப்படாதே. எனது உயிரே பப்ருவாகனனென்னும் பெயரோடு வெளியில் உலாவுகிறது. ஆதலால், வம்சத்தை விருத்தி பண்ணுகிற ஆண் குழந்தையை வளர். ஆதலால், சித்ரவாகனனுடைய தாயபாகத்தைப் பெறுகிறவனும் தர்மப்படி பூருவம்சத்தை விருத்தி பண்ணுகிறவனுமாகிய பாண்டவர்களுடைய அன்புள்ள புத்திரனை எப்போதும் காப்பாற்று. சிலாக்கியமானவளே, என் பிரிவினால் நீ வருத்தப்படாது" என்று சொன்னான். சித்திராங்கதைக்கு இவ்வாறு சொல்லித் தூரத்திலுள்ள கடற்கரையின் இடத்தைச் சேர்ந்து அங்கே ஸ்நானஞ்செய்து மிகுதியான தனங்களைத் தானஞ்செய்து கேரள தேசம் தாண்டித் தர்சனத்தினாலே முக்தியைக் கொடுப்பதும் பசுபதியினுடைய முதன்மையான க்ஷேத்திரமும், பாபியான மனிதனுக்கும் பாபபயமில்லாத உயர்ந்த மேற்கதியைக் கொடுக்கத்தக்கதுமாகிய கோகர்ணக்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றான்" என்றிருக்கிறது.
பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தத் தீர்த்தங்களைத் தூய்மைப்படுத்தி, முதலைகளின் வடிவில் இருந்து விடுபட்ட அப்சரஸ்களுக்கு விடைகொடுத்தனுப்பிய அந்தத் தலைவன் {அர்ஜுனன்}, சித்திராங்கதையைக் காண மணலூர் நகரத்திற்கு மீண்டும் சென்றான். அவள் மூலமாக மன்னன் பப்ருவாகனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகனைப் பெற்றான். ஓ மன்னா, அவனைக் கண்டபிறகு அந்தப் பாண்டவன் கோகர்ணத்திற்குச் சென்றான்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |