The meeting of Krishna and Arjuna! | Adi Parva - Section 220 | Mahabharata In Tamil
(அர்ஜுன வனவாச பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : மேற்கு கடற்கரை புனித இடங்களைக் கண்டு களித்த அர்ஜுனன் பிரபாசத்துக்கு வருவது; அங்கே கிருஷ்ணனைச் சந்திப்பது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் ரைவதக மலை செல்வது; பிறகு அங்கிருந்து துவாரகை செல்வது...
வைசம்பாயனர் சொன்னார், "[1]அளவிடமுடியா ஆற்றல் கொண்ட அர்ஜுனன், ஒன்றன் பின் ஒன்றாக மேற்குக் கடற்கரையில் இருந்து அனைத்துப் புனித நீர்நிலைகளையும், புண்ணிய இடங்களையும் கண்டான். அவை அனைத்தையும் கண்டு இறுதியாக பிரபாசையை அடைந்தான்.(1,2) வெல்லப்பட முடியாதவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பிரபாசம் என்ற புனிதமான இடத்தை அடைந்தான். யாராலும் வெல்லமுடியாத அர்ஜுனன் அந்தப் புனிதமான மகிழ்ச்சிகரமான இடத்தை அடைந்ததும், மதுசூதனன் (கிருஷ்ணன்) அதைக் கேள்விப்பட்டான்.(3) மாதவன் {கிருஷ்ணன்}, குந்தி மகனான தனது நண்பனைக் {அர்ஜுனனைக்} காண உடனே அங்குச் சென்றான். கிருஷ்ணன், அர்ஜுனன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து அணைத்துக் கொண்டு, ஒருவர் நலனை மற்றவர் கேட்டனர். பழங்காலத்தின் முனிவர்களான நரனும் நாராயணனுமான அந்த இரு நண்பர்களும் கீழே அமர்ந்தனர்.(4,5)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் அவனது பயணங்களைக் குறித்து, "ஓ பாண்டவனே {அர்ஜுனா}, நீ ஏன் புனித நீர்நிலைகளையும் புண்ணிய இடங்களையும் தரிசித்துக் கொண்டு உலகத்தைச் சுற்றி வருகிறாய்?" என்று கேட்டான்.(6)
பிறகு அர்ஜுனன் நடந்தது அத்தனையும் சொன்னான். அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தின் வீரன் {கிருஷ்ணன்}, "இஃது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது" என்றான்.(7)
கிருஷ்ணனும் அர்ஜுனனும் சிறிது நேரம் பிரபாசத்தில் தாங்கள் விரும்பியபடி உலவி, ரைவதக மலையில் சில நாட்களைக் கடத்தச் சென்றனர்.(8) அவர்கள் ரைவதகத்திற்கு வருவதற்கு முன்பே, கிருஷ்ணனின் உத்தரவின் பேரால் அந்த மலை பல கலைஞர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. கிருஷ்ணனின் உத்தரவின் பேரில் நிறைய உணவு வகைகளும் சேகரித்து வரப்பட்டன.(9) சேகரிக்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்த {உண்ட} அர்ஜுனன், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அமர்ந்து நடிகர்கள் மற்றும் ஆடற்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தான்.(10) அனைவருக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து அனுப்பி வைத்த அந்த உயர் ஆன்மப் பாண்டவன் {அர்ஜுனன்} நல்ல அழகான அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் தன்னைக் கிடத்திக் {படுத்துக்} கொண்டான்.(11)
அந்த அற்புதமான படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட பலம் வாய்ந்த கரம் கொண்டவன் {அர்ஜுனன்}, தான் சென்று புனித நீர்நிலைகள், ஏரிகள், மலைகள், ஆறுகள், கானகங்கள் ஆகியவற்றைப்பற்றிக் கிருஷ்ணனுக்குத் தெரிவித்தான்.(12) இதையெல்லாம் சொல்லிக் கொண்டே, தெய்வீகப் படுக்கையில் நீட்டிய அவனை {அர்ஜுனனை}, ஓ ஜனமேஜயா! தூக்கம் களவாடியது.(13) காலையில் இனிமையான பாடல்களுடனும், வீணையின் இன்னிசைச் சுரங்களுடனும், பாடகர்களின் துதி மற்றும் வாழ்த்துகளுடனும் {அர்ஜுனன்} எழுப்பப்பட்டான்.(14) அத்தியாவசியச் செயல்கள் மற்றும் சடங்குகளுக்குப் பிறகு, விருஷ்ணி குலத்தவனால் {கிருஷ்ணனால்} பாசத்தோடு அழைக்கப்பட்டான். தங்க தேரில் சென்ற அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவர்களின் தலைநகரான துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(15)
ஓ ஜனமேஜயா! குந்தியின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மரியாதை செலுத்துவதற்காக, அந்தத் துவாரகை நகரம் மட்டுமல்லாது, அதிலிருந்த வீடுகளும், தோட்டங்களும் கூட நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.(16) குந்தியின் மகனைக் காண விரும்பிய துவாரகைவாழ் குடிமக்கள், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வீதிவழிகளில் குவிந்தனர்.(17) பொது இடங்களிலும் பொது வழிகளிலும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான பெண்கள், ஆண்களுடன் கலந்து நின்றது, போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரின் கூட்டத்தைப் பெருகச் செய்தது.(18) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகியோரின் மகன்கள் அனைவரும் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்றனர். பதிலுக்கு அவனும், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு, அவர்கள் அருளைப் பெற்றுக் கொண்டான்.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவக் குல இளைஞர்களால் பாசத்துடன் வரவேற்கப்பட்டான். தன் வயதுக்கு நிகரானவர்கள் அனைவரையும் மறுபடி மறுபடி அணைத்தான்.(20) ரத்தினங்களாலும், இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நிரம்பிய கிருஷ்ணனின் மகிழ்ச்சிகரமான மாளிகைக்குச் சென்றான். அங்கே கிருஷ்ணனுடன் பல காலம் தங்கியிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)
[1] இந்த இடத்திற்கு முன்பே கும்பகோணம் பதிப்பில் மேலதிகத் தகவல்கள் இருக்கின்றன. அதன் சுருக்கம் பின்வருமாறு: அர்ஜுனன் பிரபாசத்தை அடைந்தான். கதன் எனும் யாதவன் மூலம் சுபத்திரை குறித்து அறிகிறான் அர்ஜுனன். அவளைக் கவர நினைக்கிறான். திரிதண்டம் தரித்து, தலையை மொட்டையடித்துக் கொண்டு, கமண்டலம் தரித்து சந்நியாச வேடமிட்டு கிருஷ்ணனைத் தியானித்தான். சத்தியபாமாவுடன் இருந்த கிருஷ்ணன், அர்ஜுனனின் எண்ணத்தை அறிந்து சிரித்தான். சிரிப்பின் காரணத்தைக் கேட்ட சத்தியபாமாவிடம் அர்ஜுனன் செய்ய இருக்கும் காரியத்தைக் குறித்துச் சொல்லி, தான் சிரித்தது மகிழ்ச்சியின் காரணமாக என்றும் சொன்னான். அர்ஜுனன் தீர்த்தங்கள் திரிந்து பிரபாசத்தை அடைந்திருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தான்." பிறகு கங்குலியில்வருவதைப் போலவே தொடர்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியின் பதிப்பிலும் மேற்கண்ட தகவல்கள் இல்லை.
வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் அவனது பயணங்களைக் குறித்து, "ஓ பாண்டவனே {அர்ஜுனா}, நீ ஏன் புனித நீர்நிலைகளையும் புண்ணிய இடங்களையும் தரிசித்துக் கொண்டு உலகத்தைச் சுற்றி வருகிறாய்?" என்று கேட்டான்.(6)
பிறகு அர்ஜுனன் நடந்தது அத்தனையும் சொன்னான். அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தின் வீரன் {கிருஷ்ணன்}, "இஃது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது" என்றான்.(7)
கிருஷ்ணனும் அர்ஜுனனும் சிறிது நேரம் பிரபாசத்தில் தாங்கள் விரும்பியபடி உலவி, ரைவதக மலையில் சில நாட்களைக் கடத்தச் சென்றனர்.(8) அவர்கள் ரைவதகத்திற்கு வருவதற்கு முன்பே, கிருஷ்ணனின் உத்தரவின் பேரால் அந்த மலை பல கலைஞர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. கிருஷ்ணனின் உத்தரவின் பேரில் நிறைய உணவு வகைகளும் சேகரித்து வரப்பட்டன.(9) சேகரிக்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்த {உண்ட} அர்ஜுனன், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அமர்ந்து நடிகர்கள் மற்றும் ஆடற்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தான்.(10) அனைவருக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து அனுப்பி வைத்த அந்த உயர் ஆன்மப் பாண்டவன் {அர்ஜுனன்} நல்ல அழகான அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் தன்னைக் கிடத்திக் {படுத்துக்} கொண்டான்.(11)
அந்த அற்புதமான படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட பலம் வாய்ந்த கரம் கொண்டவன் {அர்ஜுனன்}, தான் சென்று புனித நீர்நிலைகள், ஏரிகள், மலைகள், ஆறுகள், கானகங்கள் ஆகியவற்றைப்பற்றிக் கிருஷ்ணனுக்குத் தெரிவித்தான்.(12) இதையெல்லாம் சொல்லிக் கொண்டே, தெய்வீகப் படுக்கையில் நீட்டிய அவனை {அர்ஜுனனை}, ஓ ஜனமேஜயா! தூக்கம் களவாடியது.(13) காலையில் இனிமையான பாடல்களுடனும், வீணையின் இன்னிசைச் சுரங்களுடனும், பாடகர்களின் துதி மற்றும் வாழ்த்துகளுடனும் {அர்ஜுனன்} எழுப்பப்பட்டான்.(14) அத்தியாவசியச் செயல்கள் மற்றும் சடங்குகளுக்குப் பிறகு, விருஷ்ணி குலத்தவனால் {கிருஷ்ணனால்} பாசத்தோடு அழைக்கப்பட்டான். தங்க தேரில் சென்ற அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவர்களின் தலைநகரான துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(15)
ஓ ஜனமேஜயா! குந்தியின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மரியாதை செலுத்துவதற்காக, அந்தத் துவாரகை நகரம் மட்டுமல்லாது, அதிலிருந்த வீடுகளும், தோட்டங்களும் கூட நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.(16) குந்தியின் மகனைக் காண விரும்பிய துவாரகைவாழ் குடிமக்கள், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வீதிவழிகளில் குவிந்தனர்.(17) பொது இடங்களிலும் பொது வழிகளிலும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான பெண்கள், ஆண்களுடன் கலந்து நின்றது, போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரின் கூட்டத்தைப் பெருகச் செய்தது.(18) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகியோரின் மகன்கள் அனைவரும் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்றனர். பதிலுக்கு அவனும், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு, அவர்கள் அருளைப் பெற்றுக் கொண்டான்.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவக் குல இளைஞர்களால் பாசத்துடன் வரவேற்கப்பட்டான். தன் வயதுக்கு நிகரானவர்கள் அனைவரையும் மறுபடி மறுபடி அணைத்தான்.(20) ரத்தினங்களாலும், இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நிரம்பிய கிருஷ்ணனின் மகிழ்ச்சிகரமான மாளிகைக்குச் சென்றான். அங்கே கிருஷ்ணனுடன் பல காலம் தங்கியிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)
ஆங்கிலத்தில் | In English |