The Sabha of Brahma! | Sabha Parva - Section 11 | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : பிரம்மாவின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது...
நாரதர் சொன்னார், "ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, யாராலும் விவரிக்க முடியாத பெருந்தகப்பனின் சபா மண்டபத்தைப் பற்றி அப்படியே சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) பழங்காலத்தில், கிருத யுகத்தில் (பொற்காலத்தில்), ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க தேவனான ஆதித்தியன் {சூரியன்} (ஒரு முறை) விண்ணுலகில் இருந்து மனிதர்களின் மண்ணுலகுக்கு இறங்கி வந்தான்.(2) சுயம்புவான பிரம்மனின் சபா மண்டபத்தை ஏற்கனவே கண்டிருந்த ஆதித்தியன் பூமியில் மனித உருவோடு மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தான். அச்சந்தர்ப்பத்தில், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அளவிடமுடியாத, பொருளாலாகாத, விவரிக்க முடியாத, உருவம் மற்றும் வடிவம் குறித்து சொல்ல முடியாத, பிரகாசத்தால் அனைத்துயிர்களின் இதயங்களையும் மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் சபையான பெருந்தகப்பனின் தெய்வீக சபையைப் பற்றி அந்தப் பகலின் தேவன் {சூரியன்} என்னிடம் பேசினான்.(3,4)
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சபையின் நற்தகுதிகளைக் கேட்டு, ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் அதைக் காண விரும்பினேன். பிறகு நான் ஆதித்தியனிடம் {சூரியனிடம்},(5) "ஓ மேன்மையானவனே {சூரியவனே}, நான் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} புனிதமான சபையைக் காண விரும்புகிறேன். ஓ ஒளியின் தலைவனே {சூரியனே}, ஓ மேன்மையானவனே எனக்குச் சொல். எந்த ஆன்ம நோன்புகளால், அல்லது எந்த செயல்களால் அல்லது எந்த வசீகரத்தால் அல்லது எந்த சடங்குகளால், நான் அந்த அற்புதமான பாவங்களை விலக்கும் சபையைக் காண முடியும்?" என்று கேட்டேன்.(6,7)
எனது வார்த்தைகளைக் கேட்ட பகலின் தேவனான ஆதித்தியன் {சூரியன்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட அந்தத்தேவன் {சூரியன்}, ஓ பாரத குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இப்படி பதிலளித்தான், "மனத்தைத் தியானத்தில் ஒருமுகப்படுத்தி, பிரம்மனை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும்." என்றான். நான் இமய மலைச்சாரலுக்குச் சென்று, அந்தத் தவத்தைச் செய்தேன்.(8,9) தவத்தின் முடிவில் அந்த மேன்மையான பாவங்களற்ற பெரும் சக்தி கொண்ட களைப்பறியா தேவனான சூரியன், பிரம்மனின் சபைக்கு என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(10)
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாத வகையில் இருந்தது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு வடிவை ஏற்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது.(11) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், வடிவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை.(12) அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும்.(13) அந்த சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனதாகும். அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது.(14-16) விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன் {பிரம்மன்}, மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.
தக்ஷன், பிரசேதஸ், புலஹர், மரீசி, குரு கசியபர்,(17,18) பிருகு, அத்திரி, வசிஷ்டர், கௌதமர், அங்கிரஸ், புலஸ்தியர், கிரது, பிரஹலாதன், கர்த்தமர் ஆகிய {பதினான்கு} பிரஜாபதிகளும் {சிருஷ்டிகர்த்தர்களும்}, அதர்வண வேதத்தின் அங்கிரஸ் {அதர்வாங்கிரஸர்}, வாலகில்லியர், மரீசிபர், புத்திகூர்மை, விண்வெளி, ஞானம், காற்று, வெப்பம், நீர், பூமி,(19,20) ஒலி, தீண்டல் {தொடு உணர்ச்சி}, வடிவம், சுவை, மணம், இயற்கையும் அதன் வகைகளும், உலகின் அடிப்படை மற்றும் முக்கிய காரணங்கள் ஆகிய அனைத்தும் அங்கே தலைவன் பிரம்மனின் மாளிகையிலேயே வசிக்கின்றன.(21)
பெரும் சக்தி படைத்த அகஸ்தியர், பெரும் ஆன்ம சக்தி படைத்த மார்க்கண்டேயர், ஜமதக்னி, பரத்வாஜர், சம்வர்த்தர், சியவனர், மேன்மையான துர்வாசர், அறம்சார்ந்த ரிஷ்யசிருங்கர், பெரும் ஆன்மத் தகுதிகள் சிறப்புமிக்க சனத்குமாரர்கள், யோககுருக்களான அசிதர் மற்றும் தேவலர், உண்மையை அறிந்த ஜைகீஷவ்யர், ரிஷியர், அஜிதசத்ரு, பெரும் சக்தி கொண்ட மணி,(22-24) எட்டு கிளைகளுடன் கூடிய குணப்படுத்தும் சிகிச்சைகளின் அறிவியல் ஆகியவை வடிவம் கொண்டும், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, நட்சத்திரங்களுடனும் நட்சத்திர இணைப்புகளுடனும் கூடிய சந்திரன், தனது அனைத்து கதிர்களுடன் கூடிய ஆதித்தியன் {சூரியன்},(25) காற்றுகள், வேள்விகள், {வேள்விகளில்} நோக்கங்களின் தீர்மானங்கள், முக்கிய கொள்கைகள், ஆகிய சிறப்பு மிகுந்தவையும், நோன்பு நோற்கும் உயிர்களும் உருவம் கொண்டு அங்கே பிரம்மனின் சபையில் இன்னும் பலருடன் கூடி அவரைச் சேவிக்க இருக்கின்றனர். செல்வம், அறம், ஆசை, இன்பம், வெறுப்பு, துறவு, அமைதி ஆகியவை அந்தத் தலைமை தேவனின் அரண்மனையில் காத்திருக்கின்றன.(26,27)
கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இருபது {இருபத்தேழு}[1] இனங்களும் மற்றும் அவர்களின் ஏழு இனங்களும் {மொத்தம் இருபத்தேழு இனங்கள்}, லோகபாலர்கள் (பல பகுதிகளைக் காக்கும் தலைவர்கள்),(28) சுக்ரன், பிருஹஸ்பதி, புதன், அங்காரகன் (மங்களன் {செவ்வாய்}), சனி, ராகு, மேலும் பல கிரகங்களும், (சாம வேதத்தின்) மந்திரங்களும், (அதே வேதத்தின்) சிறப்பு {ரதந்திர} மந்திரங்களும், ஹரிமத் {ஹரிமான்} மற்றும் வசுமத் {வசுமான்} (சடங்குகள்), இந்திரனுடன் கூடிய ஆதித்தியர்கள், அக்னிசோமன், இந்திராக்னி என்ற இரு அக்னிகள் {அக்னீஷோமா, மித்ராவருணா முதலிய இரட்டை தேவர்கள்}, {ஏழு} மருத்துகள்,(29,30) விஸ்வகர்மன், வசுக்கள், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பித்ருக்கள், அனைத்து வகையான புனிதமான படையல்கள் {ஹோமத்திரவியங்கள்}, ரிக், சாம, யஜுர், மற்றும் அதர்வண ஆகிய நான்கு வேதங்கள், கல்வி அறிவியல்கள்,(31,32) வரலாறுகள் மற்றும் அனைத்து சிறு பிரிவிலான கல்விகள், வேதங்களில் பல்வேறு கிளைகள், கோள்கள், வேள்விகள், சோமன் {சந்திரன்}, அனைத்து தேவர்கள்,(33) சாவித்ரி {காயத்ரி}, ஏழு வகையான செய்யுட்கள் {வாக்குகள்}, புத்தி, பொறுமை, நினைவு {ஞாபகம்}, ஞானம், நுண்ணறிவு, புகழ், மன்னிக்கும்தன்மை,(34) சாம வேதங்களின் பாடல்கள் {சுலோகங்கள்}, பொதுவான பாடல்களின் {சுலோகங்களின்} அறிவியல், பல்வேறு உரைகளும் பாடல்களும், பல்வேறு உரைகளுடன் கூடிய விவாதங்கள் ஆகியவை அனைத்தும் உருவம் கொண்டு, ஓ மன்னா, பல தரப்பட்ட அறங்களும், செய்யுட்களும், கதைகளும், சுருக்கப்பட்ட விரிவுரைகளும் ஆகிய அனைத்தும் அந்தத் தலைமைத் தேவனின் {பிரம்மனின்} சபையில் காத்திருக்கின்றன.(35,36)
க்ஷணம் {பொழுது}, லவங்கள், முகூர்த்தங்கள், பகல், இரவு, பக்ஷங்கள் {தேய்பிறை, வளர்பிறை நாட்கள்}, மாதங்கள், ஆறு பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வருடங்கள், யுகங்கள், நான்கு வகையான பகல்களும் இரவுகளும் (மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், பிரம்மா ஆகியோருக்கு தனித்தனி பகல்களும் இரவுகளும் இருக்கின்றன) நித்தியமானவை, அழிவில்லாதவை, தேயாதவை, அருமையான காலச்சக்கரம், அறச்சக்கரம் ஆகியவை அங்கே காத்திருக்கின்றன. ஓ யுதிஷ்டிரா, அதிதி, திதி, தனு, ஸுரஸை, வினதை, இரை, காலிகை, சுரபி, தேவி, ஸரமை, கௌதமி,(37-40) பிரபை, கத்ரு ஆகிய தேவர்களின் அன்னையர், ருத்ராணி, ஸ்ரீ, லக்ஷ்மி, பத்ரை,(41) சஷ்டி, பூமி {பிருத்விதேவி}, கங்கை, ஹ்ரீ, ஸ்வாஹா, கீர்த்தி, ஸுராதேவி, சச்சி {இந்திராணி}, புஷ்டி, அருந்ததி, ஸம்விருத்தி, ஆசை, நியதி, ஸ்ருஷ்டி, ரதி ஆகிய பல தேவிமார் அங்கே அனைத்தையும் படைத்தவனுக்காகக் {பிரம்மனுக்காகக்} காத்திருக்கின்றனர்.(42,43) ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துக்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள், ஸாத்தியர்கள், மனோ வேகம் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் பெருந்தகப்பனுக்காகக் காத்திருக்கின்றனர்.(44)
ஓ மனிதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, பித்ருக்களில் ஏழு வகை உண்டு என்பதை அறிந்து கொள்வாயாக. அதில் நான்கு வகையினருக்கு வடிவம் உண்டு, மீதம் மூன்று வகையினருக்கு வடிவம் கிடையாது.(45) சிறப்பு வாய்ந்த வைராஜர்கள், அக்னிஷ்வாத்தர்கள், கர்ஹபத்தியர்கள் (உடல் இல்லா மூன்று வகையான பித்ருக்கள்) விண்ணுலகில் உலவுகிறார்கள் என்பது நன்கு அறியப்பட்டதாகும்.(46) சோமபர்கள், ஏகசிருங்கர்கள், சதுர்வேதர்கள், கலர்கள் ஆகிய பித்ருக்கள் நான்கு வகை மனிதர்களால் எப்போதும் வழிபடப்படுகின்றனர்.(47) சோம பானத்தால் நிறைவடைந்த அவர்கள் சோமனை {சந்திரனை} முதலில் நிறைவடையச் செய்கின்றனர். பித்ருக்களின் அந்த அனைத்து இனங்களும் படைப்புத் தலைவனுக்காக,(48) அந்த அளவிடமுடியா தலைமைத் தேவனுக்காக மகிழ்ச்சியாக அங்கே காத்திருக்கின்றனர்.
ராட்சசர்கள், பிசாசங்கள், தானவர்கள், குஹ்யர்கள்,(49) நாகர்கள், பறவைகள் மற்றும் பலவகைப்பட்ட விலங்குகள் அசைவன அசையாதன ஆகியன அனைத்தும் பெருந்தகப்பனை வணங்கி நிற்கின்றன.(50) தேவர்களின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, வருணன், குபேரன், யமன், உமையுடன் கூடிய மஹாதேவன் ஆகியோர் அங்கே எப்போதும் வருகின்றனர்.(51) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, மஹாசேனன் (கார்த்திகேயன் {முருகன்}), பெருந்தகப்பனை வணங்கி நிற்கிறான். நாராயணன், தெய்வீக முனிவர்கள், வாலஹில்ய முனிவர்கள், பெண்களால் பிறந்தவர்களும், பெண்களால் பிறக்காதவர்களும், மேலும் உலகில் உள்ள அனைத்து அசைவன அசையாத ஆகியவையும் என்னால் அங்கே காணப்பட்டதாக அறிந்து கொள்வாயாக.(52,53)
ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, தங்கள் உயிர்வித்தை மேலெழும்பச் செய்த எண்பதாயிரம் முனிவர்களையும், மகன்களைப் பெற்ற ஐம்பதாயிரம் முனிவர்களையும் நான் அங்கு கண்டேன்.(54) விண்ணுலக வாசிகள் அனைவரும் தாங்கள் விருப்பப்படும்போது எல்லாம் தலைமைத் தேவனை {பிரம்மனைக்} கண்டு தலைவணங்கித் திரும்பி வந்தனர்.(55) ஓ மனிதர்களின் மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பனும், பிரபஞ்சத்தின் ஆன்மாவும், அளவிடமுடியா புத்திகூர்மையும், புகழும், அனைத்து உயிர்களிடத்திலும் சமமான அன்பு கொண்டவரும், சுயம்புவுமான பிரம்மாவை தகுதிக்கேற்றவாறு மதித்து, இனிமையான பேச்சாலும், பொருட்களைப் பரிசாகக் கொடுத்தும், தேவர்களும், தைத்தியர்களும், நாகர்களும், பிராமணர்களும், யக்ஷர்களும், பறவைகளும், காலேயர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், மற்றும் அனைத்து மேன்மையான உயிரினங்களும் அங்கே அவரது விருந்தினர்களாக வந்தனர்.(56-58)
ஓ குழந்தாய் (யுதிஷ்டிரா}, அந்த அருமையான சபை எப்போதும் வந்து செல்பவர்களால் கூட்டமாக நிறைந்து இருக்கிறது.(59) அனைத்து சக்திகளும் நிறைந்து, பிரம்மரிஷிகளால் வழிபடப்பட்டிருக்கும் அந்த தெய்வீக சபை பிரம்மனின் அருள்பார்வையினால் ஒப்பற்றத்தாய் பேரெழிலுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.(60) ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த உனது சபை மனிதர்களின் சபைகளில் ஒப்பற்று இருப்பது போல, பிரம்மனின் சபை, அனைத்து உலகங்களிலும் ஒப்பற்று இருக்கிறது.(61) நான், விண்ணுலகில் இருக்கும் இந்தச் சபைகளை எல்லாம் கண்டிருக்கிறேன். இந்த உனது சபை, மனிதர்களின் உலகில் நிச்சயமாக முதன்மையானது என்பதில் மாற்றுக்கேள்வி கிடையாது" {என்றார் நாரதர்}.(62)

[1] கும்பகோணம் மற்றும் மன்மதநாததத்தர் பதிப்புகளில் இந்த எண்ணிக்கை இருபத்தேழு என்றே இருக்கிறது.

ஆங்கிலத்தில் | In English |