The Palace was constructed in fourteen months! | Sabha Parva - Section 3 | Mahabharata In Tamil
(சபா கிரியா பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் :அர்ஜுனனின் அனுமதி பெற்ற மயன் வடகிழக்கு திசையில் சென்றது; கைலாசத்துக்கு வடக்கே சென்று அங்கிருந்து பல செல்வங்களை எடுத்து வந்து பாண்டவர்களுக்கு மாளிகை கட்ட ஆரம்பித்தது. அந்த அரண்மனைக்குள்ளேயே ஒரு குளத்தை அமைத்தது; வேலை நிறைவை மயன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தது…
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு மய தானவன், வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனிடம், "நான் இப்போது உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு, விரைவில் திரும்பி வருகிறேன்.(1) கைலாச மலைக்கு வடக்கில் மைநாகம் என்ற மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் {பிந்துசரஸின்} கரையில், தானவர்கள் வேள்வி செய்தார்கள். அப்போது நான், காண்பதற்கினிய பல வண்ண ரத்னங்களாலும், தங்கத்தாலும் ஆன பண்டா[1] என்ற பொருளை அங்கே பெரும் அளவில் சேகரித்து வைத்தேன். அவை எப்போதும் தன்னை உண்மைக்கு அர்ப்பணித்திருந்த விருஷபர்வனின் மாளிகையில் வைக்கப்பட்டது.(2,3) அவை இப்போதும் அங்கே இருக்குமானால், ஓ பாரதா {அர்ஜுனா}, நான் அவற்றுடன் திரும்பி வருகிறேன். அதன் பிறகு, நான் அனைத்து வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உலகத்தால் கொண்டாடப்படப் போவதுமான பாண்டவர்களின் அரண்மனையை கட்டத் தொடங்குவேன். ஓ குரு குலத்தில் வந்தவனே, (தானவ} மன்னனால் எதிரிகளைக் கொல்லப் பயன்படுத்துப்பட்ட ஒரு கொடும் கதாயுதமும் அந்த நதியில் இருப்பதாக நினைக்கிறேன். வலுவும் எடையும் நிறைந்ததான அது, பல வண்ணங்களிலான தங்கக் குமிழ் கொண்டிருந்தது. அது பெரும் எடையைத் தாங்க வல்லதாகவும், எதிரிகளைக் கொல்ல வல்லதாகவும், நூறு கதாயுதங்களுக்கு சமமானதாகவும் இருந்தது. உனக்கு காண்டீபம் பொருந்தியிருப்பதைப் போல, அந்த ஆயுதம் பீமனுக்குப் பொருந்துவதாக இருக்கும்.(4-7) அங்கு, வருணனிடம் இருந்து வந்ததும், தேவதத்தம் {Devadatta} என்ற பெயரைக் கொண்டதும், பெருத்த ஒலியை எழுப்பவல்லதுமான பெரிய சங்கு ஒன்றும் இருக்கிறது. நான் இவை அனைத்தையும் உனக்குத் தருவேன் என்பதில் ஐயமில்லை" என்றான்.(8)
இப்படி பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய அந்த அசுரன் {மயன்} வட கிழக்கு திசையில் புறப்பட்டு சென்றான். கைலாசத்துக்கு வடக்கில் மைநாக மலையில்,(9) ஹிரண்யசிருங்கம் என்ற பெயரைக் கொண்ட ரத்தினங்களால் ஆன ஒரு பெரிய சிகரம் இருக்கிறது. அந்த சிகரத்திற்கு அருகில்தான் பிந்து என்ற பெயரில் இனிமையான ஒரு தடாகமும் இருக்கிறது. அங்கே, அதன் கரையில், முன்பொரு சமயம் பகீரதன் என்ற மன்னன்,(10) தெய்வீக கங்கையைக் காண விரும்பி, பல வருடங்களாக அங்கு வசித்தான். அதனாலேயே அதற்கு {கங்கைக்கு}, அந்த மன்னனின் பெயரை ஒட்டி பாகீரதி என்ற பெயரும் உண்டு.(11) அங்கே அதன் கரையில், ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு வாய்ந்த தலைவனான இந்திரன், நூறு வேள்விகளைச் செய்தான். அங்கே விதிப்படி அல்லாமல் வெறும் அழகுக்காக ரத்தினங்களால் ஆன கம்பங்களும், தங்கத்தாலான பலிபீடங்களும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே அந்த வேள்விகளைச் செய்த ஆயிரம் கண் கொண்டவனான சச்சியின் தலைவன் வெற்றி மகுடம் சூட்டப்பட்டான் {சித்தி அடைந்தான்}.(12,13)
அங்கே, அனைத்து உயிர்களுக்கும் நிலைத்த தலைவனான கடும் மஹாதேவன் {சிவன்}, அனைத்து உலகங்களையும் படைத்துவிட்டு, பல ஆயிரக்கணக்கான ஆவிகளால் {கணங்களால்} வழிபடப்பட்டு, தனது வசிப்பிடத்தை இங்கே அமைத்துக் கொண்டான்.(14) நரனும் நாராயணனும், பிரம்மனும், யமனும், ஐந்தாவவதாக ஸ்தாணுவும் அங்கே ஆயிரம் யுகங்களின் முடிவில் தங்கள் வேள்விகளைச் செய்தனர்.(15) அங்கே, வாசுதேவன் {கிருஷ்ணன்}, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் நிறுவ, நேர்மையான அர்ப்பணிப்புடன், பல பல வருடங்களுக்கு நீண்ட தனது வேள்விகளைச் செய்தான்.(16) அங்கே கேசவனால் {கிருஷ்ணனால்} ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக் கணக்கிலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வேள்விக் கம்பங்களும், பெரும் பிரகாசமுடைய வேள்விப்பீடங்களும் வைக்கப்பட்டன.(17)
ஓ பாரதா {ஜனமேஜயா}, அங்கே சென்ற மயன் கதாயுதத்தையும், சங்கையும், மன்னன் விருஷபர்வனுக்குச் சொந்தமான பளிங்கினாலான கண்ணாடி போன்ற பல்வேறுவகை பொருட்களையும் கொண்டு வந்தான்.(18) அந்தப் பெரும் அசுரனான மயன், அங்கே சென்று யக்ஷர்களாலும் ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வந்த பெரும் செல்வத்தைக் கொண்டு வந்தான்.(19) அப்படிக் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் வைத்து, பெரும் அழகுடனும், தெய்வீகக் கலையம்சத்துடனும், ரத்தினங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்ட இணையற்ற ஓர் அரண்மனையைக் கட்டினான்.(20) அவன் அந்தச் சிறந்த கதாயுதத்தைப் பீமசேனனிடம் கொடுத்தான். அற்புதமான அந்த சங்கை {தேவதத்தம் என்ற சங்கைக்} அர்ஜுனனிடம் கொடுத்தான்.(21) அதன் ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் அனைத்து உயிரினங்களும் நடுங்கத் தொடங்கின.
மயன் கட்டிய அந்த அரண்மனை தங்கத் தூண்கள் கொண்டிருந்தது. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அது ஐயாயிரம் சதுர முழத்திற்கான[2] பகுதியைப் பிடித்துக் கொண்டது. மிகுந்த அழகான வடிவம் கொண்ட அந்த அரண்மனை அக்னியைப் போலவும், சூரியனைப் போலவும், சோமனை {சந்திரனைப்} போவலவும், பிரகாசத்தில் ஒளிர்ந்து, சூரியனையே கருத்துவிட்டது போலத் தெரியச் செய்தது.(22-24) அது வெளிப்படுத்திய பிரகாசம், ஆகாயம் மற்றும் பாதாளத்தின் ஒளிகளைக் கலந்து, நெருப்பைப் போல இருந்தது. வானத்தில் தெளிவாய்த் தெரிகிற மேகத்திரள் போல, அந்த மாளிகை அனைவரும் பார்க்க எழுந்து நின்றது. திறமை வாய்ந்த மயனால் கட்டப்பட்ட அந்த அரண்மனை, மிகுந்த அகலமாக, இனிமையானதாக, அற்புதமான பொருட்களால் ஆனதாக. தங்கச் சுவர்களும், வளைவுகளும் கொண்டு, பல வித்தியாசமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து செல்வங்களும் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட போது,(25,26) அது தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சுதர்மாவைக் {சுதர்மம் என்ற சபையைக்} காட்டிலும், பிரம்மனின் வசிப்பிடத்தைக் காட்டிலும் விஞ்சி இருந்தது.
பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டவர்களும், தாமிரம் போலச் சிவந்த கண்களைக் கொண்டவர்களும், அம்புகள் போலக் காதுகள் நீண்டவர்களும், கடுமையானவர்களும், விண்ணில் செல்லும் சக்தியும் கொண்டவர்களும், அனைத்து ஆயுதங்களையும் தரிந்திருந்தவர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுமான எட்டாயிரம் ராட்சசர்கள், அந்த அரண்மனையைப் பாதுகாத்து வந்தனர்.(27-29) மயன், அந்த அரண்மனைக்குள்ளேயே ஓர் இணையற்ற குளத்தை உண்டாக்கினான். கரிய நிறம் கொண்ட ரத்தினங்களாலான இலைகள், பிரகாசமான நகைகளாலான தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட தாமரைகளும், தங்க இலைகள் கொண்ட மற்ற மலர்களும் அந்தக் குளத்தில் இருந்தன. அதன் மார்பில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் விளையாடித் திரிந்தன. முழுதும் மலர்ந்த தாமரைகளுடனும், மீன்களும் நிறைந்து, தங்க நிற ஆமைகளும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது அந்தக் குளம். மண் கலவாமல் தெளிந்த நீரை அது கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையில் இருந்து நீர் வரை பளிங்கினால் ஆன படிக்கட்டுகள் இருந்தன.(30,31) மிதமாக வீசிய தென்றல் அதன் {குளத்தின்} மார்புகளை மெதுவாகத் தழுவி, அங்கே நின்று கொண்டிருந்த மலர்களை குலுக்கி விட்டு சென்றது. அந்தக் குளத்தின் கரைகள் விலை மதிப்புமிக்க வெண்பளிங்கினாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(32)
இப்படி பல வித நகைகளாலும், மதிப்பு மிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த குளத்தைக் கண்ட மற்ற மன்னர்கள், தங்கள் கண்கள் அகலமாக விரிந்திருக்கும் போதே, தவறுதலாக நிலம் என்று நினைத்து, அதற்குள் விழுந்தனர்.(33) பல்வேறு வகையான மரங்கள் பலவும் அந்த அரண்மனையைச் சுற்றி நடப்பபட்டன. அடர்த்தியான பச்சை வண்ணத்துடன், குளிர்ந்த நிழலைக் கொடுத்துக் கொண்டு,(34) எப்போதும் மலர்ந்து கொண்டே இருந்த அந்த மரங்கள் பார்பதற்கு அழகாக இருந்தன. அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை கானகம் {நந்தவனம்} எப்போதும் நறுமணத்தை வீசிக்கொண்டே இருந்தது. அங்கே இன்னும் பல குளங்களும இருந்தன. அதில் அன்னப் பறவைகளும், கறந்தவங்களும் {நீர்க்காக்கைகளும்}, சக்கரவாகப் பறவைகளும் இருந்தன. நீரில் மலர்ந்த தாமரையின் மணத்தைச் சுமந்து வந்த தென்றல், பாண்டவர்களின் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கூட்டியது.(35,36) மயன் தெய்வீக சபை கொண்ட அத்தகையை அரண்மனையை பதினான்கு மாதங்களில் கட்டி முடித்து, அதன் நிறைவு குறித்து யுதிஷ்டிரனிடம் தெரிவித்தான் {மயன்}" {என்றார் வைசம்பாயனர்}.(37)
[1] பண்டா Vanda-ஒரு வகை கரடு முரடான பொருள்

[2] கும்பகோணம் பதிப்பில், "சுற்றிலும் பதினாயிர முழம் விஸ்தாரமுள்ளதாகவிருந்தது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பத்தாயிரம் கிஷ்குவின் அளவுக்குச் சுற்றளவைக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. கிஷ்கு என்பது முழமாக இருக்க வேண்டும்.
பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டவர்களும், தாமிரம் போலச் சிவந்த கண்களைக் கொண்டவர்களும், அம்புகள் போலக் காதுகள் நீண்டவர்களும், கடுமையானவர்களும், விண்ணில் செல்லும் சக்தியும் கொண்டவர்களும், அனைத்து ஆயுதங்களையும் தரிந்திருந்தவர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுமான எட்டாயிரம் ராட்சசர்கள், அந்த அரண்மனையைப் பாதுகாத்து வந்தனர்.(27-29) மயன், அந்த அரண்மனைக்குள்ளேயே ஓர் இணையற்ற குளத்தை உண்டாக்கினான். கரிய நிறம் கொண்ட ரத்தினங்களாலான இலைகள், பிரகாசமான நகைகளாலான தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட தாமரைகளும், தங்க இலைகள் கொண்ட மற்ற மலர்களும் அந்தக் குளத்தில் இருந்தன. அதன் மார்பில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் விளையாடித் திரிந்தன. முழுதும் மலர்ந்த தாமரைகளுடனும், மீன்களும் நிறைந்து, தங்க நிற ஆமைகளும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது அந்தக் குளம். மண் கலவாமல் தெளிந்த நீரை அது கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையில் இருந்து நீர் வரை பளிங்கினால் ஆன படிக்கட்டுகள் இருந்தன.(30,31) மிதமாக வீசிய தென்றல் அதன் {குளத்தின்} மார்புகளை மெதுவாகத் தழுவி, அங்கே நின்று கொண்டிருந்த மலர்களை குலுக்கி விட்டு சென்றது. அந்தக் குளத்தின் கரைகள் விலை மதிப்புமிக்க வெண்பளிங்கினாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(32)
இப்படி பல வித நகைகளாலும், மதிப்பு மிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த குளத்தைக் கண்ட மற்ற மன்னர்கள், தங்கள் கண்கள் அகலமாக விரிந்திருக்கும் போதே, தவறுதலாக நிலம் என்று நினைத்து, அதற்குள் விழுந்தனர்.(33) பல்வேறு வகையான மரங்கள் பலவும் அந்த அரண்மனையைச் சுற்றி நடப்பபட்டன. அடர்த்தியான பச்சை வண்ணத்துடன், குளிர்ந்த நிழலைக் கொடுத்துக் கொண்டு,(34) எப்போதும் மலர்ந்து கொண்டே இருந்த அந்த மரங்கள் பார்பதற்கு அழகாக இருந்தன. அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை கானகம் {நந்தவனம்} எப்போதும் நறுமணத்தை வீசிக்கொண்டே இருந்தது. அங்கே இன்னும் பல குளங்களும இருந்தன. அதில் அன்னப் பறவைகளும், கறந்தவங்களும் {நீர்க்காக்கைகளும்}, சக்கரவாகப் பறவைகளும் இருந்தன. நீரில் மலர்ந்த தாமரையின் மணத்தைச் சுமந்து வந்த தென்றல், பாண்டவர்களின் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கூட்டியது.(35,36) மயன் தெய்வீக சபை கொண்ட அத்தகையை அரண்மனையை பதினான்கு மாதங்களில் கட்டி முடித்து, அதன் நிறைவு குறித்து யுதிஷ்டிரனிடம் தெரிவித்தான் {மயன்}" {என்றார் வைசம்பாயனர்}.(37)
ஆங்கிலத்தில் | In English |