Krishna arrived at Dwaraka! | Sabha Parva - Section 2 | Mahabharata In Tamil
(சபா கிரியா பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் :தந்தையைக் காணும் ஆவல் கொண்ட கிருஷ்ணன், துவாரகை கிளம்புவது; யுதிஷ்டிரனும் மற்ற பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து செல்வது; அவர்களைத் திரும்பிச் செல்லும் படி கிருஷ்ணன் கேட்டுக் கொள்வது; யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் தலைநகர் திரும்புவது; கிருஷ்ணனும் துவாரகையைச் சென்றடைவது…
வைசம்பாயனர் சொன்னார், "அனைவரின் வழிபாட்டையும் ஏற்கத் தகுதி வாய்ந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காண்டவப் பிரஸ்தத்தில் மகிழ்ச்சியாக சில காலம் வாழ்ந்தான். அங்கு பிருதையின் {குந்தியின்} மகன்களால் மரியாதை கலந்த அன்புடனும், பாசத்துடனும் நடத்தப்பட்டான்.(1) ஒரு நாள் அவனுக்குத் {கிருஷ்ணனுக்குத்} தனது தந்தையைக் {வசுதேவரை} காணும் ஆவல் வந்தது. பிறகு, பிரபஞ்சத்தின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள தகுதி வாய்ந்த அந்தப் பெரிய கண் உடையவன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனையும் பிருதையையும் {குந்தியையும்} வணங்கினான் பிறகு, தனது தந்தையின் {வசுதேவரின்} சகோதரியான குந்தியின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினான். கேசவனால் {கிருஷ்ணனால்} இப்படி மரியாதை செலுத்தப்பட்ட பிருதை, அவனது தலையை முகர்ந்து பார்த்து, வாரி அணைத்துக் கொண்டாள்.(2,3) அந்தச் சிறப்பு வாய்ந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} தனது தங்கையான சுபத்திரையைக் கண்களில் நீர் நிறைந்து ததும்ப, பாசத்துடன் அணுகி, அவளிடம் விடைகூற முடியாமல் சரியானவையும், நல்லவை நிறைந்தவையுமான அற்புதமான உண்மையான வார்த்தைகளைச் சொன்னான்.(4,5) அந்த இனிமையான பேச்சு கொண்ட சுபத்திரையும், தலையைத் தாழ்த்தி வணங்கி, தனது தந்தை வழி உறவினர்களுக்குத் தான் சொல்லி அனுப்ப நினைத்த அத்தனையும் சொன்னாள்.(6) அவன் {கிருஷ்ணன்} தனது அழகான தங்கைக்கு {சுபத்திரைக்கு} நல்ல வாழ்த்துகளைச் சொல்லி அவளிடம் விடைபெற்றான். பிறகு அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} திரௌபதியையும், தௌமியரையும் {பாண்டவர்களின் புரோகிதரையும்} கண்டான்.(7) அந்த மனிதர்களில் சிறந்தவன் {கிருஷ்ண்ன்} தௌமியரைத் தகுந்த முறையில் வணங்கி, திரௌபதிக்கு ஆறுதல் சொல்லி, அவளிடம் இருந்து விடைபெற்றான்.(8) கல்விமானும், பெரும் பலம் வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பிருதையுடன் {குந்தியிடம்} சேர்ந்து தனது மைத்துனர்களிடம் சென்றான்.
அந்த ஐந்து சகோதர்களால் சூழப்பட்ட கிருஷ்ணன், தேவர்களுக்கு மத்தியில் இருந்த சக்ரன் {இந்திரன்} போல இருந்தான்.(9) கருடனின் உருவத்தைக் கொடியில் கொண்டவன் {கிருஷ்ணன்}, பயணத்திற்கு உண்டான ஆரம்பச் சடங்குகளைச் செய்ய எண்ணி, நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது மேனியில் ஆபரணங்கள் பூண்டுகொண்டான்.(10) அந்த யதுகுலக் காளை {கிருஷ்ணன்}, தேவர்களையும் பிராமணர்களையும் பூக்களாலும், மந்திரங்களாலும், தலை வணங்குதலாலும், அற்புதமான நறுமணப் பொருட்களாலும் வணங்கினான்.(11) சடங்குகளை முடித்து, உறுதியான அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, புறப்பட எண்ணி வெளியே வந்தான்.(12) அந்த யது குல தலைவன் {கிருஷ்ணன்}, உள்ள அறையில் இருந்து முற்றத்திற்கு வந்து, பிராமணர்களை வணங்கி அவர்களுக்கு, பாத்திரம் நிறைந்த தயிரும், பழங்களும் மற்றும் வறண்ட தானியங்களையும் கொடுத்தான். இதனால் அந்த பிராமணர்கள் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஆசிகள் வழங்கினர். அவர்களுக்கு மேலும் செல்வங்களைக் கொடுத்து அவர்களை வலம் வந்தான் {கிருஷ்ணன்}.(13) பிறகு தனது அற்புதமான தங்கத் தேரில் ஏறிக் கொண்டான்.
அந்த தேரில் அவனது சாரங்க வில்லும், வாளும், சக்கரமும் கதாயுதமும், மற்ற ஆயுதங்களும் இருந்தன. மேலும் அந்த தேர் தர்க்கியனின் {கருடனின்} கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த தேரில் சைப்பியன் மற்றும் சுக்ரீவன் என்ற குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. தாமரைகள் போன்ற கண்களை உடையவன் {கிருஷ்ணன்}, நல்ல நட்சத்திரமும் அற்புதமான நேரமும் நிறைந்த ஒரு சந்திர நாளில் தனது பயணத்தைத் தொடங்கினான்.(14,15) குருக்களின் மன்னன் யுதிஷ்டிரன் பாசத்தால் கிருஷ்ணனின் தேரில் ஏறி தேரோட்டியான தாருகனை அருகில் நிற்க வைத்துக் கொண்டு, தானே கடிவாளத்தைப் பிடித்தான். நீண்ட கரங்கள் கொண்ட அர்ஜுனனும் அந்த தேரில் ஏறி கிருஷ்ணனை வலம் வந்து, தங்கப் பிடி கொண்ட வெள்ளை சாமரத்தை எடுத்து வீசினான்.(16-18) இரட்டைச் சகோதரர்களான நகுல சகாதேவர்களுடன் பீமசேனனும், புரோகிதர்களும், குடிமக்களாகிய அனைவரும் கிருஷ்ணனைத் தொடர்ந்து பின்னே சென்றனர். அனைத்து சகோதரர்களாலும் தொடரப்பட்டவனும், எதிரி வீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்},(19) சீடர்களால் தொடரப்படும் குருவைப் போலப் பிரகாசித்தான்.
பிறகு கோவிந்தன் {கிருஷ்ணன்} அர்ஜுனனுடன் பேசி, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பிறகு யுதிஷ்டிரனை வழிபட்டு, பீமனையும் இரட்டையர்களையும் வாரி அணைத்துக் கொண்டான்.(20) மூத்த பாண்டவர்கள் மூவராலும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனனாலும்} பதிலுக்கு கட்டி அணைக்கப்பட்டு, இரட்டையர்களால் {நகுலன் சகாதேவன் ஆகியோரால்} மரியாதையுடன் வணங்கப்பட்டான் {கிருஷ்ணன்}.(21) அரை யோஜனை {இரண்டு மைல்கள்} இப்படியே சென்றது, எதிரி நகரங்களை அடக்குபவனான கிருஷ்ணன், ஓ பாரதா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனை மரியாதையுடன் தன்னைத் தொடர்ந்து வருவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.(22) அனைத்து கடமைகளையும் உணர்ந்த கோவிந்தன் {கிருஷ்ணன்}, பிறகு யுதிஷ்டிரனை மரியாதையுடன் வணங்கி, அவனது {யுதிஷ்டிரனது} பாதங்களைப் பற்றிக் கொண்டான். ஆனால் யுதிஷ்டிரன் கேசவனை உடனே எழுப்பி, அவனது தலையை முகர்ந்து பார்த்தான்.(23) பாண்டுவின் மகனான நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணனை எழுப்பி, அவனிடம் "நலமுடன் சென்று வா" என்று சொல்லி, அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் {யுதிஷ்டிரன்}.(24)
பிறகு மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, அவர்களுடனான அடுத்த சந்திப்பை {திரும்பி வரும்போது} சரியான வார்த்தைகளால் உறுதி செய்து, பாண்டவர்கள் தன்னைத் தொடர்ந்து நடத்து வருவதைத் தவிர்த்து,(25) அமராவதியை நோக்கி செல்லும் இந்திரன் போல மகிழ்ச்சியாக தனது சொந்த நகரத்தை நோக்கிச் சென்றான். அவன் {கிருஷ்ணன்} மேல் இருந்த அன்பாலும் பாசத்தாலேயும் அவனை அவ்வளவு நேரம் பாண்டவர்கள் தாங்கினர். பின்பு அவன் {கிருஷ்ணன்} தங்கள் பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டே இருந்தனர். அவன் பார்வையில் இருந்து மறைந்ததும், அவர்களது {பாண்டவர்களது} மனங்கள் அவனைப் {கிருஷ்ணனைப்} பின் தொடர்ந்து சென்றன. மனத்திற்குகந்த நபரான கேசவன் {கிருஷ்ணன்} விரைவாக அவர்களது பார்வையில் இருந்து மறைந்தான். ஆனால், அவர்களது தெவிட்டாத மனங்கள் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தன.(26,27) கோவிந்தனை மனத்தில் நிலைநிறுத்தி வைத்திருந்த அந்த மனிதர்களில் காளைகளான பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள், (மேலும் தொடர்வதை நிறுத்தி) சிறிது நேரம் அங்கேயே நின்று, பிறகு மனமில்லாமல் தங்கள் நகரத்தை நோக்கி விரைவாக சென்றனர். வீரனான சாத்யகியால் தொடரப்பட்ட கிருஷ்ணன், விரைவாக துவாரகையை நோக்கிச் சென்றான்.(28,29) பிறகு, தேவகியின் மகனான சௌரி {Sauri-கிருஷ்ணன்}, தனது தேரோட்டியான தாருகனுடன் சார்ந்து, கருடனின் வேகத்தில் துவாரகையை அடைந்தான்".(30)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதே வேளையில், தனது தம்பிகளுடன் கூடியவனும், மங்காத புகழைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன், நண்பர்கள் சூழ தனது தலைநகருக்குள் {இந்திரப்பிரஸ்த்தத்திற்குள்} நுழைந்தான்.(31) பிறகு அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, தனது உறவினர்கள், சகோதரர்கள், மகன்கள் ஆகியோரை அனுப்பிவிட்டு, திரௌபதியின் துணையுடன் இன்புற்றிருந்தான்.(32) கேசவனும் {கிருஷ்ணனும்}, உக்கிரசேனர் உள்ளிட்ட முக்கியமான யாதவர்களால் வழிபடப்பட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அற்புதமான தனது சொந்த நகருக்குள் நுழைந்தான்.(33) தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்}, தனது முதிர்ந்த தந்தையையும் {வசுதேவரையும்}, சிறப்பு வாய்ந்த தாயையும் {தேவகியையும்}, (தனது அண்ணன்) பலதேவனையும் {பலராமனையும்} வணங்கிய பிறகு தனது இருக்கையில் அமர்ந்தான்.(34) பிரத்யும்னன், சம்பன், நிஷதன், சாருதேஷ்ணன், கதன், அநிருத்தன், பானு ஆகியோரை வாரி அணைத்து, மூத்த மனிதர்களிடம் விடைபெற்ற ஜனார்த்தனன் ருக்மிணியின் அறைக்குள் {அந்தப்புரத்திற்குள்} நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(35)

ஆங்கிலத்தில் | In English |