வஞ்சகன் - கண்ணனா? கர்ணனா? என்ற பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகளை அனுப்பியிருக்கிறார்கள். விவாத மேடையிலும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்கள் கர்ணன் போராளியே! வஞ்சகன் அல்ல என்று தனது மறுப்புமொழியை கட்டுரையாக வடித்து நமது விவாத மேடையில் அளித்திருக்கிறார். அதை இங்கே பதிகிறேன்.
வஞ்சகனா? திறமையின் அங்கீகாரத்திர்க்காகப் போராடிய போராளியா?
வணக்கம் , திரு. கட்டுரை ஆசிரியர் எதை மூல நூலாக கொண்டு எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை. நான் எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சமஸ்கிருதத்தின் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பான கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியாரின் மகாபாரதத்தையும், கிசாரி மோகன் கங்குலியின் நேரடி சம்ஸ்கிருத- ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஆதாரமாக எடுத்துவைக்கின்றேன்.
1.திரௌபதியை அவமானப்படுத்திய கர்ணன் - கர்ணனை அவமானபடுத்திய திரௌபதி
இங்கு அனைவரும் திரௌபதியை அவமானப்படுத்திய கர்ணனின் அதர்ம-காரியத்தையே அனைவரும் கண்டு அவனை நிந்திப்பது நியாயம் என்பதுபோல் அக்காரியத்திற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று தேடுவதும் நியாயம்தானே ???
செல்வோம் திரௌபதியின் சுயம்வரத்திற்கு
திரௌபதியின் சுயவரத்தில் வைக்கப்பட்ட வில் தனுர் வித்தையில் உச்சம் அடையாமல் தூக்கவே முடியாது நான்னேற்றுவது அதைவிட கடினம். அப்படி பட்ட வில்லால் ஜராசந்தன் , சிசுபாலன் மற்றும் சல்லியன் போன்ற மாவீரர்களே தூக்கிஎரியப்பட்டனர் . அனால் கர்ணன் அந்த வில்லை அலட்ச்சியமாக தூக்கி நான்னேற்றினான் பிறகு அம்பை இலக்கின் மீது வைத்து இலக்கை வீழ்த்த தயாராக இருந்தான், அதுவும் எப்படி பட்ட இலக்கு ஒன்றை துல்லியமாக குறிபார்த்து அடிப்பதே கடினம் அதிலும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கு மாக கடினம் இன்னும் தண்ணீரில் சுழன்று கொண்டிருக்கும் பிம்பத்தை வைத்து மேலே சுழன்று கொண்டிருக்கும் இலக்கை வீழ்த்துவது என்பது உயிரும் உடலும் ஒன்றிருப்பது போல தனுர் வித்தையும் வீரனும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிததரியமுடியாமல் இருக்க வேண்டும், அப்படிப்பட்ட கர்ணன் இலக்கின் மீது இலட்சியம் வைத்து தானும் இலக்கும் ஒன்றானான் அதை மாறுவேடத்தில் பார்த்துக்கொண்டிருந்த பஞ்சபாண்டார்கள் கர்ணன் இலக்கை அடித்துவிட்டான் என்றே நம்பினார்கள்.
அந்த கணப்பொழுதில் கர்ணனுடைய திறமையை முழுவதும் உணர்ந்த திரௌபதி சூதபுத்திரனை என் தலைவானாக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சத்தமாக அறிவிக்கின்றாள். பிறகு மற்றவர்களை தூக்கி எறிந்த வில்லை கர்ணன தூக்கி எரிந்தான். அப்படி கர்ணன் தூக்கியெறிந்த வில்லை எடுத்தவன்தான் அர்ஜுனன்.
நிற்க.., இங்கு அனைத்து மாமன்னர்களும் குழுமியிருக்கும் அவையில் கர்ணன் அடைந்த அவமானம் சாதரமானதா... யாராலையும் செய்ய முடியாத அசாதாரணமான காரியத்தை செய்ய முற்ப்பட்ட அனைவரும் தோல்வியடைந்து அவமானப்பட்டிடுக்கும்போழுது , அந்த அசாதாரணமான காரியத்தில் வெற்றியடையும் நிலையில் ஒருவனை அவமானப்படுத்தி வெளியேற்றுவது கற்ப்புடைய பெண்ணை பல மன்னர்கர்களுக்கு மத்தியில் அவமானப்படுத்துவதற்கு சற்றும் குறைந்தா?????
மேலும் வர்ணமானது பிறப்பின் அடிப்படையில் அல்ல குணத்தின் அடிப்படையில் என்பதால் கர்ணன் ஓர் உயர்ந்த சத்திரியன் என்பதை நிருபிக்கின்றான். இவ்வாறான சாஸ்த்திரங்களை நன்கறிந்த இளவரசி, யாக சாஸ்த்திரங்களின் மூலமாகவே தோன்றிய இளவரசியே இவ்வாறு இருக்கும்போழுது பிறப்பு மற்றும் வர்ணங்களின் சாதாரண மக்களின் புரிதல் எவ்வாறு இருக்கும். மற்றும் இவ்வாறாக திரௌபதி செய்தது மட்டும் எந்த விதத்தில் நியாயம்????? மேலும் உனக்கு கர்ணனை பிடிக்கவில்லை என்றால் அவனுக்கு சுயம்வரத்திற்கு அழைப்பே விடுத்திருக்க கூடாது அல்லது அவன் வில்லை அணுகுவதற்கு முன்பாகவே அவனை தடுத்திருக்க வேண்டும் அதைவிட்டு அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பட்க்கரா என்று விட்டு இலக்கை அடிக்கு கணத்தில் அவனை தடுத்து அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் திரௌபதி????
2) கர்ணன் கொல்லப்பட்ட காட்சி
கர்ணனுக்கும் அர்ஜுனனக்கும் நடந்த இறுதியுத்தம்
(சமஸ்கிருதத்தின் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பான கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியாரின் மகாபாரதத்திலிருந்து)
முதலில் பிரம்மாச்த்திரத்தை கர்ணனின் மீது பிரயோகித்தவன் அர்ஜுனனே
(சான்று வேண்டுமெனில் மின்னஞ்சலை தெரிவுபடுத்தவம் ஏனனில் JPEG வடிவமாகவே என்னிடமுள்ளது.)
கர்ணனுக்கும் அர்ஜுனனனுக்கும் இடையே நடந்த துவந்தயுத்ததை ஆராயுமுன் துவந்த யுத்தத்தின் விதிமுறைகளை காண்போம்.
துவந்த யுத்தமென்பது வீரர்களுக்கிடையே வெற்றி தொல்விகளுக்கு அப்பாற்ப்பட்டு வெற்றி அல்லது வீரமரணம் என்பதற்காக நடப்பது.
எதிராளியைவிட என்னுடைய வீரம் மற்றும் திறமையே சிறந்தது நிருபிபதற்க்காக நடப்பது.
எதிராளியை தன்னுடைய திறமையினால் வில்லையும் தேரையும் இழக்கச்செய்துவிட்டு அவனை வீழ்த்தலாம் , மாறாக வேண்டுமென்றே வில்லை கீழே வைத்து விட்டோ அல்லது வேண்டுமென்றே தேரிலிருந்து இறங்கினாலோ தாக்கக்கூடாது அப்படியும் தாக்கினால் அது அவனுடைய திறமையின்மையையே காட்டும். மயக்கமடியும்போழுதும் தாக்கக்கூடாது.
கர்ணனுக்கும் அர்ஜுனன்னுக்கும் துவந்த யுத்தம் நடந்துகொண்டிருக்கும் பொழுது முதலில் கர்ணன் அர்ஜுனனை மீறி சிறப்பாக செயல்ப்பட்டான் அப்பொழுது பீமன் ... என்ன அர்ஜுனா கர்ணன் உன்னை மீருகின்றான் நீ அவனை வதைக்கின்றாயா அல்லது நான் எனது கதாயுதத்தால் வதம் செய்யட்டுமா என்றான் மேலும் கிருஷ்ணரும் பலவாறு ஊக்கபடுத்தினார்.
இங்கு பீமனின் செயலை சற்று பார்ப்போம்
முதன் முதலில் கர்ணனும் அர்ஜுனனும் விளையாட்டு அரங்கில் தயாராகும் பொழுது கர்ணனின் வளர்ப்புத் தந்தை அதிரதன்(விகர்த்தணன்) விளையாட்டு அரங்கில் கர்ணனை தேடி வந்தார் தந்தையை பாரர்த்த கர்ணன் தந்தையின் காலில் விழுந்து வக்னங்கினான் . இதை கண்ட பீமன் ஓ நீ தேரோட்டி மகனா நீ தேரையோட்டும் சாட்டயை எடுத்துக்கொள் எவ்வாறு யாகத்தின் அவிசை நாய் சாப்பிட தகுதியில்லையோ அவ்வாறு நீயும் அர்ஜுனனின் கையால் வதைபட தகுதியற்றவன். இவ்வாறு குரூர மொழிகளை பொழிந்த அதே பீமன் இப்பொழுது தலைகீழாக “என்ன அர்ஜுனா கர்ணன் உன்னை மீருகின்றான் நீ அவனை வதைக்கின்றாயா அல்லது நான் எனது கதாயுதத்தால் வதம் செய்யட்டுமா” என்கின்றான்” இதுதான் கர்ணன் என்ற போராளியின் வெற்றி.
மீண்டும் போருக்கு செல்வோம்
இவ்வாறாக தூண்டப்பட்ட அர்ஜுனன் கேசவரை நோக்கி இவ்வாறாக உரைக்கலானான் உலகம் க்ஷேமம்ம அடைவதற்காகவும் கர்ணனை கொள்வதற்காகவும் இதோ உக்கிரமான மகாஅஸ்த்திரமான பிரமாச்த்திரத்தை பிரயோகிக்கின்றேன் என்றான். கர்ணனும் அதற்கு எதிர் பிரமாச்த்திரத்தை பிரயோகித்து அதை நீர்த்து போகச்செய்தான்(தயவு செய்து சான்றை மூலநூலில் காணவும்). பின்பு நடந்த நீண்ட யுத்தத்திற்கு பிறகே மறந்து போதல் நிகழ்ச்சியும், தேர் பூமியில் அமிழும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
நிற்க இங்கு.., பிரம்மாஸ்த்திரம் பிரயோகம் செய்யும் சூழ்நிலையை சற்று ஆராய்வோம்.
ஒரு வீரான் பிரம்மாஸ்த்திரத்தை எப்பொழுது பயன்படுத்துவான தன் திறமை மொழுதும் வெளிப்பட்டு வேறு வழியில்லாமல் கடைசிநிலையில் பயன்படுத்துவான். மேலும் தன் உச்சபட்ச தனுர்வித்தையால் அதிராளியை வீழ்த்த முடியாது உச்சபட்ச திவ்யாச்த்திரத்தை கொண்டே வீழ்த்த முடியும் என்ற நிலையிலும், மரணம்பயம் நெருங்கும் நிலையில்தான் அத்தகைய உச்சபட்ச திவ்யாச்த்திரத்தை பிரயோகிப்பான். எனவே இங்கு இருவருமே பிரம்மச்த்திரத்தை ஏவும் மற்றும் திரும்ப பெரும் வித்தையை அறிந்தவர்கள் . எனவே இங்கு முதலில் பிரம்மாஸ்த்திரத்தை முதலில் பிரயோகித்தவனே சற்று பயமடந்திருப்பான் அது அர்ஜுனனே.
பிறகு நடந்த நீண்ட யுத்தத்திற்கு பிறகு கர்ணன் நாகஸ்த்திரத்தை பிரயோகித்ததையும், அதை கிருஷ்ணன் தன் சூழ்ச்சியினால் வென்றதையும் நீங்களே நன்று அறிவீர்கள் . ஆனால் சமஸ்கிருத மூலநூலில் இரண்டுவிதமாக இந்த நகழ்ச்சி கூறப்பட்டுள்ளதாக ம.வீ.இராமானுஜாசாரியாரின் மகாபாரதம் கூறுகின்றது அது என்னவெனில் அஸ்வசேனன் எனற அந்த நாகம் திரும்பவும் தன்னை ஏவும்மாறும் இந்திரனே வந்தாலும் அவனை காக்கமுடியாது என்று கர்னனனிடம் மன்றாடியது அதற்கு கர்ணன் நூறு அர்ஜுனன்களை கொளவதாக இருந்தாலும் ஒரு கனையை ஒருமுறைக்கு மேல் ஏவமாட்டேன்(தாய்க்கு அளித்த வாக்குறுதியை மனதில்கொண்டு) என்று கூறி நிராகரித்தான். பிறகு நடந்த கொடூர யுத்தத்திற்கு பின்பு கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் மாட்டிக்கொண்டது பிர்ம்மாஸ்த்திர பிரயோக மந்திரமும் மறந்துவிட்டது. இந்நிலையில் அர்ஜுனனு சற்று போரை நிறுத்த சொல்கின்றான் அனால் கிருஷ்ணர் மறுத்து போரிட சொல்கின்றார்.
{{நிற்க இங்கு நாம் தர்ம அதர்மங்களுக்கு அப்பார்ப்பட்டு கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் சிறுவயதிலிருந்தே யார் சிறந்த வில்வீரன் என்ற போட்டி பொறாமை இருந்துள்ளது. இக்கண்ணோட்டத்தில் போரை சற்று ஆராய்வோம்.}}
கிருஷ்ணனால் அவ்வாறு சொல்லப்பட்ட பின்பு கர்ணன் தேரிலேறி ஒரு மகா கோரமான அஸ்த்திரத்தை பிரயோகித்தான் அது அது அர்ஜுனனின் மார்பை பிளந்து சென்றது , அர்ஜுனன் காண்டீவத்தை நழுவவிட்டு மூரச்சையடைந்தான் . கர்ணன் பெற்ற வெகுமதிகளான இரு சாபங்கள், கவசகுனடலங்களை இழந்த நிலை, சக்தியாயுதம் இழந்த நிலை நாகாஸ்த்திரத்தை மறுமுறை பிரயோக்கிக்க முடியாத நிலை , தேர் இயங்க முடியாத நிலைய இவ்வாறான மகாதுரதிஷ்ட நிலையிலும் கர்ணன் மயக்கமடைந்த என்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தாமல் அம்மாஞ்சி மாதிரி தேரை தூக்க சென்றான். இங்கு சல்லியநெல்லாம் தேரை தூக்கவில்லை கர்ணன்தான் தூக்கினான் அது எப்படியிருந்ததாம் பூமியே சில அங்குலம் மேலே வந்தது என்று வியாசர் குறிப்பிடுகிறார்.
பிறகு மயக்கம் தெளிந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணன்ர் இவ்வாறு கூறுகின்றார்
கர்ணன் தேரிலேறி தனுசை கையிலெடுக்கும் முன்பாக கர்ணனை வீழ்த்துவாயாக என்றார். பிறகு அவ்வாறாகவே வீழ்த்தினான்.
இங்கு கிருஷன்ரின் கூற்றை சற்று ஆராய்வோம்: ஏற்கனவே அர்ஜுனனால் கர்ணன் இருமுறை தொல்வியடைந்துள்ளான். மேலும் மகா துரதிஷ்ட நிலையில் இருக்கின்றான் அப்படியிருக்கும் பொழுது கிருஷ்ணணனும் அர்ஜுனணனும் தாராளாமாகவே துவந்தயுத்த போரின் விதிமுறைகளின் படி சிறிது அவகாசம் கொடுக்கலாம். அதுவும் அர்ஜுனன் முன்பு கர்ணனை இருமுறை வீழ்த்தியதை போல இப்பொழுதும் வீழ்த்தலாம் ஆனால் ஏன் கிருஷணர் அவகாசம் கொடுக்க மறுக்கின்றார் அதையும் சற்று பார்ப்போமே
ஒரு வில்வீரன் என்னதான் மகா திறமைசாலியாக இருந்தாலும் அவனுடைய வெற்றியை தீர்மானிப்பது அவனுடைய திறமை மட்டுமல்ல அவன் அப்பொழுது பயன்படுத்தும் தனுசு, தேர் , தேரோட்டி மற்றும் குதிரைகள் , போன்றவைகள் ஒரு தேர்வீரனின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பது. இங்கு அர்ஜுனன் எப்பொழும் ஜாக்கிரதையாக உடைக்கமுடியாத அவனுடைய காண்டீவம் ,காண்டீவத்தின் நான் கயிற்றை பட்டும் அறுக்க முடியம். உடைக்க முடியாத தேர் மற்றும் அழிக்க முடியாத தேவலோக குதிரைகள் போன்றவற்றை எல்லா போரிலும் பயன்படுத்துவான்.
அனால் கர்ணன்.., திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பயன்படுத்திய விஜய தனுசை சிவபெருமான் இந்திரனுக்கு அளித்தார் , இந்திரன் அதை பரசுராமருக்கு அளித்தார் பரசுராமர் அதை கர்ணனுக்கு அளித்தார் . விஜய தனுசு காண்டீவத்தை விட சிறந்தது ஏனெனில் காண்டீவத்தில் நான் கையிற்றை அறுக்க முடியும் விஜயதனுசில் நான் கயிற்றை அறுக்க முடியாது. அந்த விஜயதனுசை 17-வது நாள் போரில் மட்டுமே பயன்படுத்தினான் இதை 16-வது நாள் இரவிலேயே துரியோதனிடம் கர்ணன் தெரிவித்தான். மேலும் கடோத்கஜனை தனது சக்தி ஆயுதத்தினால் வீழ்த்திய பிறகு “சாத்யகி கிருஷ்ணரிடம் கர்ணன் இதற்கு முன்பே சில முறை அர்ஜுனனை போரில் சந்தித்துள்ளான் ஆனால் அப்பொழுதெல்லாம் ஏன் தனுது அந்த திவ்யாஸ்த்திரத்தை பயன்படுத்தவில்லை என்று கேட்டான்”
அதற்கு கிருஷ்ணர் நான் கர்ணனை எனது மாயை சக்தியினால் அந்த எண்ணம் ஞாபகம் வராதவாறு மயக்கிவிடுவேன் என்றார். இதுக்கு மேல கர்ணனால என்னதாங்க பண்ணமுடியும். மேலும் கர்னனனுக்கும் அர்ஜுனனனுக்கும் கடைசி துவந்த யுத்தம் ஆரம்பிக்குமுன் இவ்வாறு கூறுகிறார் கிருஷ்ணர் அர்ஜுனானிடத்தில் அர்ஜுனா நான் கர்ணனை உனக்கு சமமாகவும் கருதலாம் ஏன் உயர்வாகவும் கருதாலாம். கர்ணன் முழுசிந்தனையுடன் கையில் விஜயதனுசு இருந்து அலட்சியமில்லாமல் போராடினால் அவனை யாருளும் வெல்லமுடியாது. அதனால்த்தான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கர்ணன் தேரிலேறி தனுசை கையிலேடுக்கும்முன் அவனை வீழ்த்துவாய் என்று சொன்னதன் “மிகமுக்கிய காரணம்” கையில் விஜயதனுசு இருந்து அலட்சியமில்லாமல் போராடினால் அவனை யாருளும் வெல்லமுடியாது என்பதற்காகவே . மேலும் அர்ஜுனன் என்ன சாதாரணமானவனா வில்வித்தையில் கசடறக் கற்றவன் யுத்தத் நெறிமுறைகளை அனைத்தையும் உணர்ந்தவன் அப்படிப்பட்டவன் தரும முறையில் கர்ணனை கொல்ல முடியும் என்றால் நிச்சயம் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பான் . ஏனெனில் இப்பொழுது கர்ணன் தனுது முழுகவனத்தையும், தெய்வீக தனுசையும் வைத்து போரிடுகின்றான் எனவே முன்பு போன்று அவனை வீழ்த்த முடியாது என்பதற்காவே தவிர இரண்டாவது மூன்றாவது காரணங்களான கர்ணன் செய்த அதர்ம செயலுக்காகவும் , சாலையில் மணிக்கு 70 கிமீ
வேகத்தில் பயணம் செய்தாலும் அல்ல.
3) அபிமன்யு ஆறு மகாரதர்கள் சேர்ந்து தாக்கியது
போர் முறைகளில் சில முறைகளான துவந்த இத்தம், சங்குல யுத்தம், குழுவாக ஒருவனை சேர்ந்து தாக்குதல் போன்றவைகள் இருக்கின்றன.
அதில் அபிமன்விடம் போரிட்ட முறை குழுவாக தாக்கும் முறை இது அங்கிகரக்கப்பட்ட முறையாகவே இருக்கின்றது கர்ணபருவத்தில் கூட கர்ணனை பல மகரதர்கலான சாத்யகி, திருஷ்ட்டதுய்மன் ,பீமன் , யுதிஷ்டிரன், நகுல சகாதேவர்கள், ய்தாமன்யு, சிகண்டிகை, இளம் பஞ்ச பாண்டவர்கள். அனைவரும் சேர்ந்து கர்ணன் ஒருவனையே தாக்கினார்கள் , கர்ணன் ஒருவானாகவே அவர்கள் அனைவரையும் சமாளித்து நொடிப்பொழுதில் தேரிழ்ந்தவர்கலாக்கினான் என்று வியாசர் அற்புதமாக விளக்குகின்றார். இங்கு ஒருவேளை கர்ணன் இறந்திருந்தாள் அபிமன்யுக்கு சொல்லப்பட்ட கூறுகளையும் கர்ணனுக்கும் சொல்லிருப்பார்கள். மேலும் கர்ணன் அபிமன்யுவின் பின்னாலிருந்து அவன் வில்லை உடைத்தான் என்று மூல மகாபாரதத்தில் எந்த குறிப்புமில்லை துரோணரின் கட்டளையின் பேரில் அபிமன்யுவின் வில்லை உடைத்து கேடையத்தையும் உடைத்தான் என்றே உள்ளது . மாறாக பின்னாலிருந்து மறைந்திருந்து என்ற எந்த சொல்லுமில்லை. இருந்தால் தயவு செய்து காட்டவும் நானு என் என்னத்தை திருத்திக்கொள்கின்றேன்கின்றேன்.
4) கர்ணன் மிகச்சிறந்த வில்லாளி மட்டும்மல்ல சிறந்த மல்யுத்தத் பலசாலியும் கூட
அப்படிப்பட்ட கர்ணன் தனது அலட்சிய குணத்தாலே சில போர்களில் தொல்வியடைந்துள்ளான்.
த்ரௌபதியின் சுயம்வரத்தின் பொழுது அர்ஜுனனிடம் ஏற்ப்பட்ட சண்டையில் அர்ஜுனனை கர்ணன் பிரம்மாஸ்த்திரம் தெரிந்த பிரம்மனனாகவே எண்ணினான். வெற்றி தோல்வியின்றி போட்டியிலிருந்து விலகினான்.
கந்தவர்களுடான யுத்தத்தில் தனியோருவனாகவே பல ஆயிரக்ககணக்கான கந்தர்வர்களை வீழ்த்தினான். இதைக்கண்ட கந்தர்வர்களின் தலைவன் சித்திரசேனன் அனத்து கந்தர்வர்களுடன் சேர்ந்து மாயப்போர் புரிய ஆரம்பித்தான் ஆனால் கர்ணன் தனது திவ்ய சக்தி படைத்த விஜய தனுசை மகா சக்தி வாய்ந்த அஸ்திரங்கலையும் எடுத்து செல்லவில்லை அதனால் சாதாரண வில்லை தேரையும் இழந்தான் இதனால் பின்வாங்கிச்சென்றான் இவ்விடயத்தில் அர்ஜுனன் கர்ணனை விட ஒருபடி மேலாக இருக்கின்றான அர்ஜுனன் எப்பொழுது தந்து தெய்வ சக்தி படைத்த காண்டீவத்தையும், அழிக்க முடியாத தெரியும் வைத்திருப்பவன். அதனாலையே அவனுக்கு வெற்றி எப்பொழுதும் சாத்தியமானது ஆனால கர்ணன் தனுர்வித்தை ஆயுத உபகரணங்களை விட தனுர்வித்தை தெர்ச்சியையே பெரிதென கருதினான் இந்த என்னத்தை சூரிய பகவானிடம் கர்ணனே வெளிப்படுத்தினான்.
கர்ணனின் அலட்சிய குணம் சில தருணங்கள் உள்ளன அவை..,
பீமனும் கர்ணனும் 14-வது நாள் யுத்தத்தில் கடுமையாக பலமுறை மோதிக்கொண்டார்கள் முதலில் கர்ணனே தளர்ச்சியடைந்து பின்வாங்கினான் கடைசியில் பீமன் ஆயுங்களை இழந்து கர்ணன்னிடம் மாட்டிகொண்டான். அப்பொழுது கர்ணன் ஒரு கணையைவிட்டு வதைத்திருக்கலாம் அல்லது தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக சும்மா சென்றிருக்கலாம் ஆனால் கர்ணன் தன்னுடைய வில்லின் நுனியில் மாட்டிகொண்ட பீமனின் தொப்பையில் தட்டி அவனுடைய பெருவயிற்றை கிண்டலடிக்கின்றான். இச்செயலை எவ்வாறு புரிந்துக்கொலவது.
சகாதேவனும் மாட்டிகொண்டு கர்ணன் புத்திமதி சொல்லி அனுப்புகின்றான். இன்னும நகுலன் மாட்டிக்கொண்ட பொழுது வில்லை அவன் கழுத்தில் மாட்டி அனுப்புகின்றான் இவையெல்லாம் அவனுடைய அலட்ச்சிய குணத்தையே வெளிப்படுத்துகின்றது. கர்ணனிடம் மகாகோரமான பார்க்கவஸ்த்திரம், ரௌத்திராஸ்த்திரம் போன்றவைகள் இருந்தன ஆனால் அவைகளை பீமனிடம் பின்வாங்கும் பொழுதும், அபிமன்யுவிடமும் பிரோயோகிக்கவில்லை பிரயோகித்திருந்தால் யமதருமராஜா அரண்மனைக்கு விருந்தாளியாக செல்வதை யாருளும் தவிர்க்க முடியாது இதை சால்லியநிடமே 17-து நாளில் சல்லையா என்னிடம் நாகாஸ்த்திரம் போன்ற மகாகோரமான பலமுறை பயன்படுத்தப்படும் அஸ்த்திரங்கள் உள்ளன அதை அர்ஜுனன் போன்ற திவ்யாஸ்த்திரங்கள் தெரிந்த மகாவில்லாளி மேல்தான் பிரயோகிப்பேன் மற்றவர்களின் மேல் அவ்வாறு செய்யமாட்டேன் அது எனக்கு அழகுமல்ல என்றான். இந்த அலட்சிய மனோபாவம் இல்லாமல் இருந்திருந்தால் பீமனும் அபிமன்யுவும் கர்னனனிடம் போரிட்ட சில நொடிகளிலேயே வீர சுவர்கத்தை அடைந்திருப்பார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக பீமன் மல்யுத்தத்தில் ஜராசந்தனை பலநாட்கள் போரிட்டும் அவனை வீழ்த்த முடியவில்லை ஆனால் கர்ணன் ஒரு சுயம்வரத்தில் கர்ணனுக்கும், ஜராசந்தனுக்கும் நடைபெற்ற மல்யுத்தத்தில் கர்ணன் ஜராசந்தனை இருகூறாக கிழித்து போட்டான். ஜராசந்தன் கர்னணனின் திறமையை மெச்சி தனது மகத நாட்டின் ஒரு பகுதியான மாலினி தேசத்தை கர்ணனுக்கு அளித்து நட்பை ஏற்ப்படுத்தினான். அனால் பீமன் கிருஷ்ணரின் போசனைப்படியே பல நாட்கள் போராட்டத்திற்கு ஜராசந்தனை இருகூறாக கிழித்து உடலை மாற்றிப்போட்டான்.
5) தானம் வழங்கிய சூழ்நிலை
{ஆசிரியர் : ஒரு விதத்தில்
கர்ணனின் செயல் போற்றத்தக்கது என்றபோதிலும், ஏதேனும்
ஒன்றை வேண்டி அதற்காக தானம் கொடுப்பது முறையான
தானமா? ஆழமாகப் பார்த்தால் இஃது ஒரு வியாபாரம் போலத்
தோன்றுகிறதே!}
நானும் அதையேத்தான் சொல்கின்றேன் இன்னும் ஆழமாக ஆராயலாம்
கவசகுனடலங்களை தானமளிக்கின்ற சுழ்நிலை வனபருவத்தின் கடைசி துனைபருவமான குண்டலஹாரண்ய பருவத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்திரன் கர்ணனிடம் வஞ்சகமாக கவசகுனடலங்களை பெறப்போவதை அறிந்துகொண்டான். எனவே தனது மகனை காக்க எண்ணிய சூரியதேவன் கர்னணனின் கனவில் வந்து நடக்கவிருக்கும் போரில் அர்ஜுனணனை காக்க இந்திரன் பிராம்மன் வேடத்தில் வந்து உம்மிடம் அமுதத்தாலும் சொர்ணத்தாலும் செய்யப்பட கவசகுனடலங்களை யாசிப்பான் தயவு செய்து கொடுத்துவிடாதே.
இல்லை சூரிய தேவனே அவ்வாறு செய்வது நானேடுத்துகொண்ட சபத்தத்திற்கு விரோதமானதாகும் இந்திரன் கேட்டால் நிச்சயம் நான் அதை கொடுப்பேன் அது எனக்கு மேலும் புகழையே சேர்க்கும்.
வேண்டாம் கர்ணா அந்த முடிவை எடுக்காதே அந்த கவச குண்டலங்கள் இருந்த அந்த இந்திரனே அம்பாக மாறினாலும் உன்னை வீழ்த்தமுடியாது எனவே தயவு செய்து கொடுத்துவிடாதே. இதற்க்கு மாறாக வேறேதுனும் செய்தால் உன் வீழ்ச்சி உறுதிபட்டுவிடும் . என்பிரிய சூரியதேவனே நான் துரோனரிடமும், பரசுராமரிடம் கற்ற தனுர்வித்தையையே பெரிதாக எண்ணுகின்றேன் . அது ஒன்றே பொது அர்ஜுனனை வீழ்த்த. என்வே எனக்கு தயவு செய்து இச்செயலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் .
உண்முடிவில் உறுதியாக இருப்பனேயாகில் நான் இப்பொழுது சொல்வதையாவது கேள். இந்திரன் உன்னிடம் கவசகுனடலங்களை கேட்க்கும்பொழுது முடிந்தளவுக்கு மறுத்து பேசு, அப்படியும் இந்திரன் விடாப்படியாக இருந்தால் அவனிடம் சகத் ஆயுதத்தை பெற்றுக்கொண்டு கவசகுனடலங்களை தருவாதக சொல். இதை நான் உன்ன நனமைக்காகவும் உன்னைச்சார்ந்த நண்பர்களின் நன்மைக்காவும் சொல்கின்றேன்.
சரி சூரிய தேவா. அப்படியே செய்கின்றேன்.
கர்ணா தெரியாத தெய்வ இரகசியம் ஒன்றுள்ளது அதை சமயம் வரும்பொழுது நீ தெரிந்துகொள்வாய் .
நிற்க. இங்கு கர்ணன் சக்தி ஆயத்தை இந்திரனிடம் கேட்டது தன்னுடைய நலவிரும்பியான சூர்யதேவனின் மனத்திருப்ப்திக்காகதான். நீங்களே சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் ஏற்றுக்கொண்ட சபத்தத்தையும். இயல்பையும் பயன்படுத்திக்கொண்டு உயிருக்கு பாதுகாப்பளிக்கின்ற பொருளை கேட்க வருகிறார் அதை முன்னாடியே தெரிந்து கொண்ட நீங்கள் பெரிதும் மதிக்கும் உங்கள் நலவிரும்பி எச்சரிக்கிறார் அனால் நீங்கள் அதை ஏற்க பருகிண்றீர்கள் , அந்த நல்விரும்பியும் விடாமல் சாபத்தையும் இயல்பையும் மீறாத ஒரு யோசனையை அளிக்கின்றார்.., தானம் கேட்பவரையும் ஏமாற்றக்கூடாது , நமக்கு உதவி செய்தற்காக தன் நலம்விரும்பியின் மனதையும் நோகடிக்கூடாது என்ற நிலையில் அந்த நலம்விரும்பி சொன்ன யோசனை படி செய்வதை விட வேறென்ன செய்ய முடியும். இப்பொழுது புரிந்திருக்குமே கர்ணன் ஏன் சக்தி ஆயுதம் வேண்டினான் என்று.
6) கர்ணனின் தயாள குணம்
//திரௌபதியைத் தன்னால் மணக்க முடியவில்லை
என்ற ஆதங்கமும் வெறியும் அவனது மனதில் நீண்ட காலமாக
எரிந்து கொண்டிருந்தது//
என்ற ஆதங்கமும் வெறியும் அவனது மனதில் நீண்ட காலமாக
எரிந்து கொண்டிருந்தது//
கர்ணன் திரௌபதியை மனக்கமுடியவில்லை என்று அவள்மேல் ஆதங்கமும், வெறியும் கொண்டிருந்தான் என்பதற்கு மகாபாரத்ததில் எந்தவித பின்புலமும் இல்லை மாறாக திரௌபதி கர்ணனை சுயம்வரத்தில் அவனுடைய உயர்ந்த வில்வித்தையை அங்கிகரிக்காததாலும் , அவமானப்படுத்தியதாலும் அவனுக்கு அவள் மேல் கோவம் ஏற்ப்பட்டதே தவிர மணக்க முடியாததால் அல்ல மேலும் திரௌபதியை அவமானபடுத்தியதர்க்காக மன்னிப்பும் கேட்டான் , ஆனால் திரௌபதி கர்ணனை அவமானப்படுத்தியதற்கு பிறகாவது வருந்தினாளா என்றால் சிறிதுமில்லை. இதை நாம் ,கிருஷ்ணரும் ,கர்னணனும் தனியாக பேசியதிலிருந்து அறியலாம்.
கிருஷ்ணர் கர்ணனை அழைத்து குந்தியின் மூத்த மகன் பாண்டவர்களுக்கும் மூத்தவன் சாஸ்த்திர விதிகளின் படி கண்ணிபென்னுக்கு தெய்வ சம்பந்தமாக குழந்தை பெற்றால் பிறகு கன்னிகையை கைபிடிக்குக்கும் கணவனே அக்குழந்தையின் தந்தையாகின்றான் . அதன்படி அஸ்த்தினாபுரத்தை ஆளா முதல் உரிமை உனக்கே மேலும் பஞ்ச பாண்டவர்களும் மகிழ்ச்சியோடு சேவை செய்வார்கள், திரௌபதியும் ஆறாம் காலத்தில் உனக்கு மனைவியாக இருப்பாள். எனறார்.
கர்ணன் இவற்றை மறுத்து எனக்கு இவ்வுலகமே கிடைத்தாலும் அதை நான் துரியோதனக்கே அளிப்பேன் அனால் அது நியாயமாகுது , எனது விருப்பமும் யுதிஷ்டிரன் அரசால்வதே. மேலும் நான் துரியோததனை மகிழ்ச்சி படுத்துவதற்க்ககாக அவர்களின் மீது கடுஞ்ச்சொர்களை பேசியுள்ளேன் ஆதாலால் என்னை மன்னித்துவிடுங்கள் . இந்த போரில் நீங்கள் கடவுள் அர்ஜுனன் பூசாரி நான் , திரோனர், பீஷ்மர் எல்லாம் பலியாடுகள் எனிவே எனவே இதில் இறப்பவர்களுக்கேல்லாம் சுவர்கத்தை அளிக்க வேண்டும் என்றான்.
கர்ணன் கிருஷனரை பற்றி உணர்ந்தததிலிருந்தே தான் என்னென செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கர்மவீரானாக கடைசி நொடிவரை போராடினான்.
உண்மையில் மகாபாரத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சில சமயங்களில் தவறிழத்தவர்களே அதில் கர்ணன் முக்கியமானவன் ஆனால் அவன் செய்த பல தியாக செயல்கள் அவன் செய்த தவறுகளை விட மிக அதிகமாக பிராகாசிகின்றன எனவே அவன் பல கோடி இதயங்களை பஞ்ச பாண்டவர்களை விட எளிதாக வெல்கின்றான்.
மேற்க்கண்டவைகள் அனைத்தும் முடிவான உண்மைகள் அல்ல எதோ எனக்கு புரிந்தவை அவ்வளவுதான் மேலும் புரிந்து கொள்ளவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.
நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களுக்கு நான் அளித்த மறுமொழி பின்வருமாறு:
நண்பரே! (மெய்யப்பன் அருண்)
நல்ல விவாதம்.
//உண்மையில் மகாபாரத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சில சமயங்களில் தவறிழத்தவர்களே அதில் கர்ணன் முக்கியமானவன் ஆனால் அவன் செய்த பல தியாக செயல்கள் அவன் செய்த தவறுகளை விட மிக அதிகமாக பிராகாசிகின்றன எனவே அவன் பல கோடி இதயங்களை பஞ்ச பாண்டவர்களை விட எளிதாக வெல்கின்றான்.// என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நன்று.
நல்ல விவாதம்.
//உண்மையில் மகாபாரத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சில சமயங்களில் தவறிழத்தவர்களே அதில் கர்ணன் முக்கியமானவன் ஆனால் அவன் செய்த பல தியாக செயல்கள் அவன் செய்த தவறுகளை விட மிக அதிகமாக பிராகாசிகின்றன எனவே அவன் பல கோடி இதயங்களை பஞ்ச பாண்டவர்களை விட எளிதாக வெல்கின்றான்.// என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நன்று.
- திரௌபதியை அவமதித்தது (அவளை நிர்வாணமாக அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பிய கர்ணன், அவளது உடையை முற்றிலுமாக அவிழ்த்து நிர்வாணமாக்கும்படி துச்சாதனனுக்கு கட்டளையிட்டான்)
- சூதாட்டத்தின் முடிவில் திரௌபதியின் வேண்டுகோளுக்கிணங்க, திருதராஷ்டிரன் பாண்டவர்களை விடுவித்த பிறகும்,கர்ணனின் ஆலோசனையின் பேரில் மீண்டும் சூதாட்டம் அரங்கேற்றப்பட்டது.
- அபிமன்யு கொலை (இதில் நீங்கள் பலர் சேர்ந்து ஒருவரைத் தாக்குவது யுத்த மரபு என்று சொல்லியிருக்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. பாண்டவர்கள் தரப்பிலும் அந்த அறமீறல் நடந்திருந்தாலும் அதுவும் தவறுதான்).
- கந்தர்வனிடம் துரியோதனனை அகப்பட விட்டு புறமுதுகிட்டது.
- "நாக்கை அறுத்துவிடுவேன்" என்று கிருபாசாரியரிடம் கூறுமளவிற்கு அகந்தை கொண்டிருந்தது.அர்ஜுனன் மீது கொண்ட காரணமற்ற பொறாமை
ஆகியவை, இன்னும் நெருடிக் கொண்டேதான் இருக்கிறது.
திறமை என்று பார்த்தால், கிருஷ்ணன் துணையில்லாமலேயே இரு முறை அர்ஜுனன் கர்ணனை வென்றிருக்கிறான். அப்படி ஒரு முறை கூட கர்ணன் அர்ஜுனனை வெல்லவில்லையே. அலட்சியம் கொண்டவன் ஒருபோதும் நிபுணனாக மாட்டான். தானத்தில் மட்டுமே அவன் பாண்டவர்களை விஞ்சியிருக்கிறான். அதுவும் உடலோடு தோன்றிய கவசத்தை அறுத்துக் கொடுத்ததால் அது பெரிதாகத் தெரிகிறது. யுதிஷ்டிரன் அவன் ஆண்ட காலத்தில், வனவாசத்திலும் கூட பலருக்கு உணவளித்ததாக வனபர்வம் சொல்கிறது
கர்ணனின் மேல் தீராக் காதல் ஏற்பட, அவன் அகப்பட்டிருந்த தர்மசங்கட நிலையே துணைபுரிகிறது என்று நினைக்கிறேன்.
மேலும் இவ்விவாதம் வளர வேண்டும் என விரும்புகிறேன்.
நன்றி
அன்புடன்
திறமை என்று பார்த்தால், கிருஷ்ணன் துணையில்லாமலேயே இரு முறை அர்ஜுனன் கர்ணனை வென்றிருக்கிறான். அப்படி ஒரு முறை கூட கர்ணன் அர்ஜுனனை வெல்லவில்லையே. அலட்சியம் கொண்டவன் ஒருபோதும் நிபுணனாக மாட்டான். தானத்தில் மட்டுமே அவன் பாண்டவர்களை விஞ்சியிருக்கிறான். அதுவும் உடலோடு தோன்றிய கவசத்தை அறுத்துக் கொடுத்ததால் அது பெரிதாகத் தெரிகிறது. யுதிஷ்டிரன் அவன் ஆண்ட காலத்தில், வனவாசத்திலும் கூட பலருக்கு உணவளித்ததாக வனபர்வம் சொல்கிறது
கர்ணனின் மேல் தீராக் காதல் ஏற்பட, அவன் அகப்பட்டிருந்த தர்மசங்கட நிலையே துணைபுரிகிறது என்று நினைக்கிறேன்.
மேலும் இவ்விவாதம் வளர வேண்டும் என விரும்புகிறேன்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Post by முழு மஹாபாரதம்.