2014 ஜூலையில் ஆதிபர்வம் ஆடியோ கோப்புகளைச் செய்யத் தொடங்கி, அது காணொளியாக மாற்றம் பெற்ற பின்னரும் கூட, பல மாதங்களாக ஒரு பர்வம் கூட முழுமையாக முடிக்கப்படாத நிலைதான் தொடர்ந்து வந்தது. இப்போது விராட பர்வம் மட்டும் ஒலிக்கோப்புகளும், காணொளிகளும் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன.
நண்பர்கள் திருமதி.தேவகி ஜெயவேலன் மற்றும் திரு.ஜெயவேலன் அவர்கள் |
விராட பர்வம் முழு பதிவுகளையும் திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் படித்திருக்கிறார். இந்த ஒலிக்கோப்புகளை அவர் படித்து முடித்து மீடியாஃபையரில் பதிவேற்றி மாதம் ஒன்று கடந்து விட்டது. இருப்பினும் என்னால் அதை காணொளியாக மாற்றி யூடியூபில் {youtube} பதிவேற்ற இயலாமல் இருந்தது. இன்று அதுவும் முடிந்து, விராட பர்வப் பதிவுகள் அனைத்தும் ஒலிக்கோப்பாகவும், காணொளியாகவும் பதிவேற்றி நமது வலைப்பூவில் இணைத்தாகிவிட்டது.
ஒலிக்கோப்புகளுக்கும், காணொளிகளுக்கும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையாயினும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நண்பர்களாகிய நாங்கள் இணைந்து, காணொளிகளை விடாமல் பதிவேற்றி வருகிறோம். வயது முதிர்ந்தவர்களும், கண்பார்வை குறைந்தவர்களும் மஹாபாரதம் படிப்பதற்கு, இந்தக் கோப்புகள் நிச்சயம் உதவும். இந்தப் பதிவை அதிகமாகப் பகிர்ந்து காணொளிகளுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.
விராட பர்வக் கோப்புகளை அடைய ஒரு எளிய பட்டியல் http://mahabharatham.arasan.info/p/mahabharatham-virataparvam-audio-in.html என்ற லிங்கில் இருக்கிறது.
காணொளியை மட்டும் காண விரும்புவோர் https://www.youtube.com/playlist?list=PLBsT6KHwtxwL2dvgX91TL3feKXkd0o8xp என்ற லிங்கில் விராட பர்வக் காணொளிகளைக் காணலாம்.
ஒலிக்கோப்புகளை மட்டும் பதிவிறக்க விரும்புவோர் https://www.mediafire.com/#a9c6phwe6eqds என்ற லிங்கில் விராட பர்வ ஒலிக்கோப்புகள் அனைத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.