Friday, September 02, 2016

கர்ணனையும், அஸ்வத்தாமனையும் விரட்டிய அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 138ஆ

Arjuna drove away Karna and Aswathama! | Drona-Parva-Section-138b | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 54)

பதிவின் சுருக்கம் : ஆயுதங்கள் தீர்ந்து போனதால் கர்ணனிடம் இருந்து பின்வாங்கிய பீமன்; கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைக் கொண்டு கர்ணனிடம் தன்னைத் தற்காத்துக் கொண்ட பீமன்; அர்ஜுனனின் சபதத்திற்காகப் பீமனும், குந்தியின் வார்த்தைகளுக்காகக் கர்ணனும் ஒருவரையொருவர் கொல்லாமல் விட்டது; வில்லின் நுனியால் பீமனைத் தீண்டிய கர்ணன்; பீமனை நிந்தித்த கர்ணன்; பீமனின் மறுமொழி; கர்ணனையும், அஸ்வத்தாமனையும் விரட்டிய அர்ஜுனன்...


{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “பிறகு ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் அம்மோதலில் போருக்காகக் காத்திருந்த பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான். பிறகு, அறைகூவி அழைத்து ஒருவரையொருவர் அணுகிய அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த மனிதர்களில் காளையரான இருவரும், கோடையின் முடிவில் தோன்றும் மேகங்களைப் போல ஒருவரையொருவர் நோக்கி முழங்கினர்.(75,76) மேலும் போரில் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், அங்கே அந்தச் சினங்கொண்ட சிங்கங்கள் இருவருக்கும் மத்தியில் தோன்றிய ஆயுதப் பாதையானது {போரானது}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக இருந்தது.


எனினும் ஆயுதக் கையிருப்புத் தீர்ந்து போன குந்தியின் மகன் {பீமன்}, (பின்வாங்க வேண்டிய கட்டாயமேற்பட்டதால்) கர்ணனால் தொடரப்பட்டான். அர்ஜுனனால் கொல்லப்பட்டுப் பெரும் மலைகளைப் போல (அருகில்) கிடக்கும் யானைகளைக் கண்ட ஆயுதங்களற்ற பீமசேனன், கர்ணனின் தேருடைய முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவற்றின் {கொல்லப்பட்ட யானைகளின்} மத்தியில் நுழைந்தான்.(79) அந்த யானைத் திரளை அணுகி, தேர் அணுக முடியாத வகையில் அவற்றுக்கு மத்தியில் சென்று தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பிய பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்குவதிலிருந்து விலகினான் (80). உறைவிடத்தை விரும்பியவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட ஒரு யானையைக் கந்தமாதன சிகரத்தைத் தூக்கிய ஹனுமனைப் போல உயரத் தூக்கி அங்கேயே காத்திருந்தான்.(81) எனினும் கர்ணன், பீமன் பிடித்திருந்த அந்த யானையைத் தன் கணைகளால் வெட்டினான்.(82) அதன்பேரில் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்த யானையின் பிணத்துடைய துண்டுகளையும், தேர்ச்சக்கரங்களையும், குதிரைகளையும் கர்ணனின் மீது வீசினான். உண்மையில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, களத்தில் கிடப்பவற்றில் தான் கண்ட அனைத்தையும் எடுத்து கர்ணனின் மீது வீசினான்.(83) எனினும் கர்ணன், இப்படித் தன் மீது வீசப்பட்ட அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(84)

பீமனும், இடியின் பலத்தைக் கொண்ட தன் கடும் கைமுட்டிகளை உயர்த்திக் கொண்டு சூதனின் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பினான். எனினும் விரைவில் அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்தான்.(85) எனவே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, திறன்கொண்டவனாகவே இருப்பினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழியைப் பொய்ப்பிக்காதிருக்க விரும்பி கர்ணனை உயிரை எடுக்காமல் இருந்தான். எனினும், சூதனின் மகன் {கர்ணன்}, துன்புற்றுக் கொண்டிருந்த பீமனைத் தன் கூரிய கணைகளால் மீண்டும் மீண்டும் உணர்வை இழக்கச் செய்தான்.(87) ஆனால், குந்தியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த கர்ணன், ஆயுதமற்ற பீமனின் உயிரை எடுக்காமல் இருந்தான். வேகமாக {பீமனை} அணுகிய கர்ணன், தன் வில்லின் நுனியால் அவனை {பீமனைத்} தீண்டினான் {தொட்டான்}.(88) எனினும் வில்லால் தீண்டப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட அவன் {பீமன்}, கர்ணனின் வில்லைப் பறித்து, அதைக் கொண்டே அவனது {கர்ணனின்} தலையைத் தாக்கினான்.(89)

பீமசேனனால் தாக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, சிரித்துக் கொண்டே, “தாடியற்ற அலியே”, “அறியாமை கொண்ட மூடா”, பெருந்தீனிக்காரா” என்ற இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(90) மேலும் கர்ணன், “ஆயுதங்களில் திறனில்லாமல் என்னுடன் போரிடாதே. போரில் பின்தங்கியிருக்கும் நீ ஒரு குழந்தையே.(92) ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, எங்கே உணவும், பானமும் அதிகம் இருக்கிறதோ, ஓ! இழிந்தவனே, அங்கே நீ இருக்க வேண்டுமேயன்றி போரில் ஒருக்காலும் இல்லை.(92) நீ போரில் திறனற்றவனாக இருப்பதால், ஓ! பீமா, கிழங்குகள், மலர்கள் மற்றும் கனிகளை உண்டு, நோன்புகளையும், தவங்களையும், பயின்று காடுகளிலேயே உன் வாழ்வைக் கழிப்பாயாக.(93) போருக்கும், முனி வாழ்வின் தவத்தன்மைக்கு இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. எனவே, ஓ! விருகோதரா {பீமா}, காட்டுக்குச் செல்வாயாக. ஓ! குழந்தாய், போரில் ஈடுபடும் தகுதி உனக்கில்லை. காடுகளில் வாழ்வதற்கான இயல்பான திறனே உனக்கு இருக்கிறது.(94) ஓ! விருகோதரா, வீட்டிலுள்ள சமையற்கலைஞர்கள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை வேகமாகத் தூண்டி, உன் விருந்துக்காகக் கோபத்துடன் அவர்களை நிந்திக்க மட்டுமே நீ தகுந்தவனாவாய்.(95) அல்லது, ஓ! பீமா, ஓ! மூட அறிவு கொண்டவனே, முனிவர்களின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டு, (உன் உணவுக்காக) உன் கனிகளைச் சேகரிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே {பீமா}, போரில் நீ திறனற்றவனாக இருப்பதால் காடுகளுக்குச் செல்வாயாக.(96) கனிகளையும், கிழங்குகளையும் தேர்ந்தெடுத்தல் {உண்பது}, அல்லது, விருந்தினருக்குப் பணிவிடை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவனான நீ, ஓ! விருகோதரா {பீமா}, எந்த ஆயுத வழியிலும் {எந்தப் போரிலும்} பங்கெடுப்பதற்குத் திறன்றறவனாவாய் என்றே நான் நினைக்கிறேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(97)

மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனின்} இளவயதில் அவனுக்கு {பீமனுக்கு} இழைக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் கடுஞ்சொற்களால் கர்ணன் நினைவுப்படுத்தினான்.(98) மேலும் அவன் {பீமன்} அங்கே பலவீனமாக நிற்கையில், கர்ணன் மீண்டும் அவனை {பீமனை} வில்லால் தீண்டினான். விருஷன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே மீண்டும் பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(99) “ஓ! ஐயா {பீமா}, நீ பிறரிடம் போரிடலாம், ஆனால் என் போன்றவனிடம் ஒருபோதும் முடியாது. எங்களைப் போன்றோரிடம் போரிட நேருவோர் இதையும், இன்னும் பிறவற்றையும் சந்திக்க வேண்டிவரும்.(100) கிருஷ்ணர்கள் {கருப்பர்களான அர்ஜுனனும், கிருஷ்ணனும்} இருவரும் எங்கிருக்கிறார்களோ அங்கே செல்வாயாக. போரில் அவர்கள் உன்னைக் காப்பார்கள். அல்லது, ஓ! குந்தியின் மகனே {பீமா}, வீட்டுக்குச் செல்வாயாக. உன்னைப் போன்ற ஒரு குழந்தைக்குப் போரில் என்ன வேலை இருக்கிறது?” {என்றான் கர்ணன்}.(101)

கர்ணனின் கடுஞ்சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்த பீமசேனன், அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளை அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(102) “ஓ! பொல்லாதவனே {கர்ணா}, என்னால் நீ மீண்டும் மீண்டும் வெல்லப்பட்டாய். இத்தகு வீணான தற்புகழ்ச்சியில் உன்னால் எவ்வாறு ஈடுபட முடிகிறது? பழங்காலத்தவர்கள் இவ்வுலகில் பெரும் இந்திரனின் வெற்றியையும் தோல்வியையும் கூடக் கண்டிருக்கின்றனர்.(103) ஓ! இழி பிறப்பு கொண்டவனே, வெறுங்கையால் தடகள {உடல்திறன்} மோதலில் {மல்யுத்தத்தில்} என்னுடன் ஈடுபடுவாயாக. பெரும் உடற்கட்டைக் கொண்ட வலிமைமிக்கக் கீசகனைக் கொன்றவாறே, மன்னர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் உன்னையும் கொல்வேன்” {என்றான் பீமன்}. (104)

பீமனின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவனும், நுண்ணறிவு கொண்ட மனிதர்களில் முதன்மையானவனுமான கர்ணன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மோதலில் இருந்து விலகினான்.(105) உண்மையில், பீமனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளில் சிங்கம் (கிருஷ்ணன்) மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இத்தகு தற்புகழ்ச்சி மொழியில் அவனை {பீமனை} நிந்தித்தான்.(106)

அப்போது அந்தக் குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), கேசவனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்டவையுமான அக்கணைகள், கிரௌஞ்ச மலைகளுக்குள் செல்லும் நாரைகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தன. காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், பல பாம்புகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தவையுமான அக்கணைகளுடன்கூடிய அந்தச் சூதனின் மகனை {கர்ணனைப்} பீமசேனனின் அருகில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} விரட்டினான்.(107-109) பீமனால் வில் வெட்டப்பட்டவனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான கர்ணன், பீமனிடமிருந்து தன் பெரும் தேரில் தப்பி ஓடினான்.(110) பீமசேனனும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்டு, தன் தம்பியும், பாண்டுவின் மகனுமான சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆற்றலை நினைத்து அந்தப் போரில் முன்னேறிச் சென்றான்.(111)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறி பார்த்து, மரணத்தைத்தூண்டும் காலனைப் போன்ற ஒரு கணையை வேகமாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை, பெரும்பாம்பைத் தேடி ஆகாயத்தில் செல்லும் கருடனைப் போலக் கர்ணனை நோக்கி வேகமாகச் சென்றது. எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தில் இருந்து கர்ணனைக் காக்க விரும்பி அதை நடுவானிலேயே வெட்டினான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அறுபத்து நான்கு {64} கணைகளால் துரோண மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்து, அவனிடம், “ஓ! அஸ்வத்தாமரே, ஒருக்கணம் நிற்பீராக. தப்பி ஓடாதீர்” என்றான்.(112-115) எனினும், அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, மதங்கொண்ட யானைகளும், தேர்க்கூட்டங்களும் நிறைந்த கௌரவப் படைப்பிரிவுக்குள் வேகமாக நுழைந்தான்.

அப்போது அந்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட மற்ற விற்களின் நாணொலிகளை மூழ்கடித்தான். பிறகு வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெகு தொலைவுக்குப் பின்வாங்கிச் சென்றிராத துரோண மகனை {அஸ்வத்தாமனைப்} பின்னாலே தொடர்ந்து சென்று, வழியெங்கும் தன் கணைகளால் அவனை அச்சுறுத்தினான். கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களைத் துளைத்த அர்ஜுனன், அந்தப் படையையே கலங்கடிக்கத் தொடங்கினான். உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான பார்த்தன் {அர்ஜுனன்}, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தப் படையை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(116-120)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top