உதங்க சபதம் - ₹.49.00 |
கிருஷ்ணனுடைய விஸ்வரூப தரிசனங்களைக் கண்டவர்களில் ஒருவராக இந்த உதங்கரும் அறியப்படுகிறார். மகாபாரதத்தை இந்த உலகம் அறிந்து கொள்ளமுக்கியமாக அமைந்த காரணங்களில் இவரும் ஒருவராவார். இவரது கதை ஆதிபர்வத்தில் ஒருவிதமாகவும், அஸ்வமேதிக பர்வத்தில் ஒருவிதமாகவும் இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. நாம் இங்கே காணப்போவது ஆதிபர்வத்தில் வரும் கதையாகும்.
குரு வேதாவின் மாணவர்களில் ஒருவராக இருக்கும் உதங்கர், தன் கல்வி முடிவின் போது, தன் குருவுக்குத் தட்சணை கொடுக்க விரும்புகிறார். குருவின் மனைவி கேட்டுக் கொண்டதன் பேரில் பௌசிய மன்னனின் மனைவியிடம் காதணிகளை வாங்கச் செல்கிறார். அந்தக் காதணிகளைத் தக்ஷகன் திருடிச் செல்கிறான். மீண்டும் அந்தக் காதணிகளை அடைய படாத பாடு படுகிறார். குருவுக்குத் தன் தட்சணையைக் கொடுத்தவுடன், உலகத்தில் உள்ள பாம்புகள் அனைத்தையும் அழிக்க எண்ணம் கொண்டு, ஜனமேஜய மன்னனிடம் சென்று சர்ப்ப {நாக} வேள்வி நடத்தச் சொல்கிறார். ஏன் அவன் அந்த வேள்வியைச் செய்ய வேண்டும் என்பதற்கும் உரிய காரணத்தைச் சொல்லி ஜனமேஜயனைப் பாம்பு வேள்வி செய்ய வைக்கிறார். அந்த வேள்வியில் கூடியிருந்த அந்தப் பெருஞ்சபையில் வியாசரின் முன்னிலையில் ஜனமேஜயனுக்கு வைசம்பாயணர் உரைத்ததே நாம் இன்று படிக்கும் மகாபாரதம்.
இப்படி உலகத்துக்கு மகாபாரதம் சொல்லப்படக் காரணமாக அமைந்த உதங்கரின் கதையை மஹாபாரதத்தில் உள்ளபடியே அறிவோம் வாருங்கள்...
Product details
- Format: Kindle Edition
- File Size: 2001 KB
- Print Length: 51 pages
- Simultaneous Device Usage: Unlimited
- Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
- Language: Tamil
- ASIN: B072SL53C9
- Word Wise: Not Enabled
- Enhanced Typesetting: Enabled
விலை: ₹.49/-
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகள் மற்றும் நீதித் தொகுப்புகளையும் இவ்வாறு சிறு சிறு பகுதிகளாக அளிக்க விரும்புகிறேன். நிறைவேறுவது பரமன் செயலே.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.
வேறு சில கிண்டில் புத்தகங்களையும் https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியில் காணலாம்.