மையக் கதையான பாண்ட கௌரவப் போருடன் சேர்த்து மஹாபாரதத்தில் ஏராளமான கிளைக்கதைகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான கதைகளைத் தனி நூல்களாகக் கொண்டு வரும் விருப்பத்தின் காரணமாக, "நாக வேள்வி" என்ற இந்த முதல் புத்தகம் வெளிவருகிறது. அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது? அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன? பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன? சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்னென்ன?
நாக வேள்வி நின்றதற்கு ஆஸ்தீகன் மட்டுமே காரணமாக இல்லாமல், பெண் நாயான சரமையின் சாபமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. மஹாபாரதப் பீடிகையான இந்த மேற்கண்ட நிகழ்வுகளை மஹாபாரத்தில் உள்ளபடியே அறிய இந்தப் புத்தகம் உதவும்.
- செ.அருட்செல்வப் பேரரசன்
திருவொற்றியூர்
***
பதிப்பகம்: எழுத்து பிரசுரம் (Zero Degree Publishing)
Paperback விலை: ₹ 250.00
நாக வேள்வி அச்சு நூல் வாங்க - https://bit.ly/nagavelvi
***
***