Kunti told the story of Bhadra! | Adi Parva - Section 121 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 57)
பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் நடந்த வியுஷிதாஸ்வன் மற்றும் பத்ரையின் கதையைப் பாண்டுவுக்குச் சொன்ன குந்தி; இறந்து போன கணவனிடம் பிள்ளைகளைப் பெற்ற பத்ரை...
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி, குருக்களில் காளையும், தனது வீரத் தலைவனுமான மன்னன் பாண்டுவிடம்,(1) "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்வது தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே! நான் எப்போதும் உம்மிடம் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், முறையாக மணந்து கொள்ளப்பட்டவளுமான உமது மனைவியாவேன்.(2) ஓ பெரும் கரம் கொண்ட பாரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளைகளைப் பெறுவீர்.(3) அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்றுப் பிள்ளைகளைப் பெறுவீராக.(4) உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட ஏற்கமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்?(5) ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே! நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பைக் கேட்பீராக. நான் உமக்கு அதைச் சொல்கிறேன்.(6)
பழங்காலத்தில் பூருவின் குலத்தில் வியுஷிதாஸ்வன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(7) அறம்சார்ந்த ஆன்மாவையும், பெரும் கரத்தையும் கொண்டிருந்த அவன் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே இந்திரனுடன் பெரும் முனிவர்களும் வந்தனர்.(8) இந்திரன் சோமச்சாற்றாலும், பிராமணர்கள் அவர்கள் பெற்ற பரிசுகளாலும் போதையுண்டிருந்ததால், அவ்வேள்வியில் அந்த அரசமுனி செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர்களே செய்தனர்.(9) எனவே, பனிக்காலம் முடிந்ததும், இருமடங்கு பிரகாசத்துடன் தோன்றும் சூரியனைப் போல அந்த வியுஷிதாஸ்வன், பிற மனிதர்கள் அனைத்துயிர்களையும் விட அதிகமாகப் பிரகாசித்தான்.(10)
பத்து யானைகளின் பலத்தைக் கொண்ட அந்தப் பலம் வாய்ந்த வியுஷிதாஸ்வன், பெரும் குதிரை வேள்வி ஒன்றைச் செய்து கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கிலிருந்த அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(11,12) புராணங்களை உரைப்பவர்கள், ஓ குருக்களில் சிறந்தவரே, இந்த மன்னனைக் குறித்துப் பதியப்படாத ஒரு சிறுகதையைப் பாடுவர்கள்.(13) கடற்கரைவரையுள்ள மொத்த பூமியையும் வென்ற வியுதாஸ்வன், தன் குடிமக்களில் அனைத்து வர்க்கங்களையும் {வர்ணங்களையும்}, ஒரு தகப்பன் பிள்ளைகளைப் பாதுகாப்பதுபோலக் காத்தான்.(14) அவன் பல பெரும் வேள்விகளைச் செய்து, பெரும் செல்வத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தான். அளவிலா நகைகளையும், விலைமதிப்பில்லாக் கற்களையும் சேகரித்தபிறகு பெரும் வேள்விகளைத் துவங்கினான்.(15)
அவன் {வியுஷிதாஸ்வன்} அக்னிஷ்டோமம் என்ற வேள்வியையும் மற்றும் பெரும் சோமச் சாற்றினைப்பிழிந்து சிறப்பான வேத வேள்விகளையும் செய்தான். ஓ மன்னரே, வியுஷிதஸ்வாவுக்கு ஓர் அன்பான மனைவி இருந்தாள். அவள் கக்ஷீவத்தின் {கக்ஷீவானின்} மகள் பத்ரை ஆவாள். அவள் பூலோகத்திலேயே மிகுந்த அழகு வாய்ந்தவளாக இருந்தாள்.(16) அந்த இணை ஆழமான காதல் கொண்டதாக இருந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். மன்னன் வியுஷிதஸ்வா தனது மனைவியுடனேயே எப்போதும் பிரியாமல் இருந்தான். காமத்தின் மிகை, அவனுக்கு மூச்சு சம்பந்தமான நோயைக் கொண்டு வந்தது. மன்னன் தான் புகழோடிருக்கும்போதே, மூழ்கும் கதிரவனைப் போல சில தினங்களுக்குள் இறந்து போனான். பிறகு பத்ரை என்ற அந்த அழகிய அரசி, மகனில்லாத காரணத்தால் மிகுந்த துயர் கொண்டாள். அவள் கொண்ட பெரும் துயரால் மிகவும் அழுதாள். ஓ அறம் சார்ந்த மன்னரே, நான் சொல்வதைக் கேளும்.
பத்ரா கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட,(17-19) "ஓ அறம் சார்ந்தவரே, கணவன் இறந்த பிறகு பெண்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கணவன் இறந்த பிறகு வாழ்பவள், துயர் நிறைந்த இருப்பையே வாழ்க்கையெனப் பெறுகிறாள்.(20) ஓ க்ஷத்திரிய குலத்தின் காளையே, கணவன் இல்லாத பெண்களுக்கு இறப்பே வரமாகும். நான் உமது பாதையிலேயே தொடர விரும்புகிறேன். என்னிடம் அன்புகூர்ந்து என்னையும் உம்மோடு அழைத்துச் செல்வீராக.(21) நீர் இல்லாத உலகத்தில் என்னால் ஒரு நொடியும் வாழ முடியாது. ஓ மன்னா, என்னிடம் அன்பு கொண்டு, விரைவாக என்னை அழைத்துக் கொள்வீராக.(22) ஓ மனிதர்களில் புலியே, நான் சமமான மற்றும் சமமற்ற தரைகளிலும் உம்மைத் தொடர்வேன். ஓ தலைவா, திரும்பிவராத இடத்திற்கு நீர் சென்றுவிட்டீர். நான் உம்மைத் தொடர்ந்து வருவேன்.(23) ஓ மன்னா! உமது நிழலைப் போல வருவேன். ஓ மன்னர்களில் புலியே, (உமது அடிமையைப் போல) நான் உமக்குக் கீழ்ப்படிந்து, உமக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மையானதையும் எப்போதும் செய்வேன்.(24) ஓ தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரே, நீரில்லை ஆகையால், இன்றிலிருந்து மனத்துயரானது, என்னை மீறி எனது இதயத்தை உண்ணப் போகிறது.(25)
முந்தைய பிறவியில் ஏதோ அன்பான காதல் இணையரைப் பிரித்ததாலேயே இன்று நான் இந்தப் பாவகர வாழ்க்கையை வாழ நேர்ந்தது. நான் உமது பிரிவால் துயருறவே படைக்கப்பட்டிருக்கிறேன்.(26) ஓ மன்னா! தன் தலைவனிடம் இருந்து ஒரு நொடியாவது பிரிந்து வாழும் பாவியான அந்தப் பெண், துயர்வாழ்வு வாழ்ந்து, நரகத்தை இங்கேயே அனுபவிப்பாள்.(27) முந்தைய வாழ்வில் நான் நிச்சயம் ஓர் அன்பான இணையரைப் பிரித்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதன்காரணமாகவே நாம் உம்மைப் பிரிந்திருக்கும் இந்தச் சித்திரவதையை அனுபவிக்கிறேன்.(28,29) ஓ மன்னா! நான் இந்த நாளிலிருந்து, ஆடம்பரத்தை விடுத்து, உம்மை மறுபடியும் காணுவேன் என்ற நம்பிக்கையில் தரையில் குசப்புற்களை விரித்து, படுக்கப் போகிறேன். ஓ மனிதர்களில் புலியே, உம்மை என்னிடம் காட்டுவீராக. ஓ மன்னரே, ஓ தலைவரே, துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான உமது மனைவிக்கு மறுபடியும் உத்தரவிடுவீராக" என்றாள் {பத்ரை}.(30)
குந்தி தொடர்ந்தாள், "ஓ மன்னா, இப்படியே அந்த அழகான பத்ரை தனது நாயகனின் மரணத்தால் துயருண்டு அழுதாள். இதயத்தின் துயரத்தால் அழுதுகொண்டிருந்த பத்ரை தனது கரத்தால் {தன் கணவனின்} சடலத்தை அணைத்துக் கொண்டாள்.(31)
அப்போது ஓர் உருவமில்லாத குரல், "ஓ பத்ரா, எழுந்து இந்த இடத்தை விட்டு அகன்று போ. ஓ இனிய புன்னகையுடையவளே, நான் உனக்கு இந்த வரத்தை அளிக்கிறேன். நான் உன்னிடம் சந்ததியை உண்டாக்குவேன்.(32) எட்டாவது அல்லது பதினாலாவது பிறை கொண்ட நாளில், உன் பருவகால குளியலைக் குளித்துவிட்டு, உனது படுக்கையில் என்னுடன் படுப்பாயாக" என்றது.(33)
உருவமற்ற அந்தக் குரலால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், கற்புடையவளுமான பத்ரை, பிள்ளையைப் பெறுவதற்காகத் தனக்குச் சுட்டப்பட்ட வழியின்படியே நடந்து கொண்டாள்.(34) ஓ பாரதர்களில் காளையே, அவளது {பத்ராவின்} கணவனின் {வியுஷிதாஸ்வனின்} சடலமானது, மூன்று சால்வர்கள் மற்றும் நான்கு மத்ரர்களைக் கொண்ட ஏழு பிள்ளைகளை அவளிடம் பெற்றது.(35) ஓ பாரதர்களில் காளையே, நீரும் என்னிடம் அந்தச் சிறப்பு மிகுந்த வியுஷிதாஸ்வனைப் போல, நீர் அடைந்திருக்கும் உமது ஆன்ம பலத்தால் பிள்ளைகளைப் பெறுவீராக" என்றாள் {குந்தி}.(36)

ஆங்கிலத்தில் | In English |