The wrath of the Valakhilyas! | Adi Parva - Section 31 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : சௌனகர் கேட்ட கேள்விகள்; கசியபர் செய்த வேள்வியில் வாலகில்யர்களை அவமதித்த இந்திரன்; மற்றொரு இந்திரனை உருவாக்கத் தவமிருந்த வாலகில்யர்கள்; கருடனின் பிறப்புக்குக் காரணமாக அமைந்த வாலகில்யர்கள்...
சௌனகர், "ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, ”இந்திரன் செய்த தவறு என்ன? அவன் கவனக்குறைவாகச் செய்த செயல் என்ன? எப்படி வாலகில்யர்களின் தவப்பயனின் விளைவால் கருடன் பிறந்தான்?(1) கசியபர் எப்படிப் பறவைகளின் அரசனை {கருடனை} மகனாக அடைந்தார்? எப்படி எல்லா உயிரினங்களாலும் வெல்ல முடியாதவனாகவும், கொல்ல முடியாதவனாகவும் அவன் {கருடன்} இருக்கிறான்?(2) எப்படி அந்த விண்ணோடியால் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லவும், விரும்பிய சக்தியை அடையவும் முடிகிறது? இவ்விவரங்கள் புராணங்களில் உள்ளதெனில் நான் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டார் {சௌனகர்}.(3)
அதற்குச் சௌதி, "நீர் கேட்பவையெல்லாம் உண்மையில் புராணங்களில் உள்ளவைதான். ஓ இருபிறப்பாளரே {பிராமணரே}, நான் அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக.(4) முன்பொரு காலத்தில், உயிரினங்களின் தலைவரான {பிரஜாபதியான} கசியபர், புத்திரப்பேறுக்காக வேள்வி நடத்தினார், முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும் அவருக்கு உதவி செய்தனர்.(5) கசியபர், இந்திரனையும், அவனுக்கு உதவியாகத் துறவிகளான வாலகில்யர்களையும், மற்ற தேவர்களையும் வேள்விக்குத் தேவையான எரிபொருளைக் {சமித்துக்களை} கொணர்வதற்கு நியமித்திருந்தார்.(6) தேவனான இந்திரன், மலைக்கு நிகரான பெரும் சுமையைத் தன் பலத்திற்கேற்றபடி எந்தவொரு சிரமுமின்றிக் கொண்டு வந்தான்.(7) வரும் வழியில், கட்டைவிரல் அளவே உள்ள வாலகில்ய முனிவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பலாச இலையின் குச்சியைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டான்.(8)
அந்த முனிவர்கள் உணவில்லாமல் மிகவும் உடல்மெலிந்து, அவர்கள் உடலுக்குள்ளே தங்கள் உடல் மறைந்திருந்தனர் {எலும்போடு ஒட்டி இருந்தனர்}. பாதையிலே மாடுகளின் குளம்புகள் ஏற்படுத்திய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மிகவும் சிரமப்படும் அளவுக்குப் பலவீனமாக அவர்கள் இருந்தனர்.(9) புரந்தரன் (இந்திரன்), தனது பலத்தில் கர்வங்கொண்டு, அவர்கள் தலைக்குமேல் தாண்டிச் சென்றது[1] மட்டுமல்லாமல், அவர்களைத் திரும்பிப்பார்த்து, கேலியாகச் சிரித்தும் அவமதித்தான்.(10) இப்படி அவமதிக்கப்பட்ட முனிவர்கள் மிகுந்த கோபமும், துன்பமும் கொண்டு ஒரு பெரிய வேள்விக்கு ஏற்பாடு செய்து, இந்திரனைப் பீதியடையச் செய்தனர்.(11)
ஓ சௌனகரே! கேளும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, விரதங்களை மேற்கொள்பவர்களும், ஞானமுள்ளவர்களும், சிறந்தவர்களுமான அந்தத் துறவிகள் வேள்வித்தீயில், சுத்தமான நெய்யை விட்டு, சத்தமாக,(12) “அனைத்து இடத்திற்கும் தன் விருப்பப்படி செல்லக்கூடியவனும், விரும்பிய அளவு சக்தியை அடையக்கூடியவனும், (இப்போது) இருக்கும் தேவர்களின் தலைவனுக்கு அச்சத்தைத் தரக்கூடியவனாக இன்னொரு இந்திரன் உண்டாகட்டும். எங்கள் தவங்களின் பயனாக மனம் போல் வேகங்கொண்டவனாகவும்[2], பயங்கரமானவனாகவும் ஒருவன் தோன்றட்டும்” என்று மந்திரங்களைச் சொன்னார்கள்.(13,14) இதைக் கேள்விப்பட்டவனும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனுமான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பெரும் அச்சங்கொண்டு, நோன்புகள் நோற்கும் கசியபரிடம் தஞ்சம் புகுந்தான்.(15)
பிரஜாபதியான கசியபர் இந்திரனிடம் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு, வாலகில்யர்களிடம் சென்று அவர்களது வேள்வி வெற்றிகரமாக முடிந்ததா என்று கேட்டார்.(16) அந்த உண்மை பேசும் முனிவர்கள், "நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்" என்றனர். பிரஜாபதியான கசியபர் அவர்களை அமைதிப்படுத்தி,(17) "பிரம்மனின் வார்த்தைகளால், இவன் (இந்திரன்) மூன்று உலகங்களிலும் தேவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளான். துறவிகளே, நீங்களும் மற்றுமொரு இந்திரனை உற்பத்தி செய்யப் பாடுபடுகிறீர்கள்!(18) சிறந்தவர்களே, பிரம்மனின் வார்த்தைகளைப் பொய்யாக்காமல் இருக்கச் செய்வதே உங்களுக்குத் தகும். உங்களுடைய இந்த முயற்சியும் பலனில்லாமல் போகவேண்டாம்.(19) பெரும்பலம் கொண்டவனாக, சிறகுள்ள உயிரினங்களுக்கு இந்திரனாக (தலைவனாக) ஒருவன் தோன்றட்டும். உங்கள் முன் பணிந்து நிற்கும் இந்த இந்திரன் மீது கருணை கொள்ளுங்கள்" என்று சொன்னார் {கசியபர்}.(20) கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட வாலகில்யர்கள், முனிவர்களில் முதல்வரான பிரஜாபதி கசியபருக்குத் தங்கள் மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பேசத் தொடங்கினர்.(21)
அந்த வாலகில்யர்கள், "ஓ பிரஜாபதி! எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஓர் இந்திரனுக்காக நடைபெறுகிறது! உண்மையில் அவன் உமக்கு மகனாகப் பிறக்கவே இந்த வேள்வி நடைபெறுகிறது.(22) இதன் பலனை உம் கையிலேயே விடுகிறோம். இந்த விஷயத்தில் எது நன்மையாகவும், சரியாகவும் இருக்குமோ அதைச் செய்யும்" என்று சொன்னார்கள்.(23)
சௌதி தொடர்ந்தார், "அப்பொழுது, மனதிற்கினியவளும், நற்பேறு பெற்றவளும், நோன்பு நோற்பவளும், தக்ஷனின் நன்மகளுமான வினதை, பிள்ளைப்பேற்றின் மீதுள்ள ஆசையால், தனது நோன்புகளை முடித்துக் குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உறவுக்கான சரியான கனிதரும் காலம் வந்தவுடன் தனது நாயகனை நெருங்கினாள். கசியபர் அவளிடம்,(24,25) "மதிப்புக்குரியவளே, நான் நடத்திய வேள்வி இப்போது கனி தந்திருக்கிறது. நீ என்ன ஆசைப்பட்டாயோ அஃது உனக்குக் கிடைக்கும். மூன்று உலகங்களுக்கும் தலைவர்களான வீர மகன்கள் இருவர் உனக்குப் பிறப்பார்கள்.(26) எனது வேள்வியின் தூய்மையான நோக்கத்தாலும், வாலகில்யர்களின் தவப்பயனாலும், அந்த மகன்கள் மிகுந்த நற்பேறு பெற்றவர்களாகவும், மூவுலகங்களாலும் வழிபடத் தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்" என்று சொன்னார்.(27)
புகழ்பெற்றவரான கசியபர் மீண்டும் அவளிடம் {வினதையிடம்}, "இந்தப் புனிதமான விதைகளை, மிகுந்த கவனத்துடன் சுமந்து வா.(28) இந்த இருவரும் எல்லாச் சிறகுள்ள உயிரினங்களுக்கும் {பறவைகளுக்கும்} தலைவர்கள் ஆவார்கள். நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை அடையும் இந்த வீரமிக்க விண்ணோடிகள் மூன்று உலகங்களாலும் மதிக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.(29)
நடைபெற்ற காரியங்களால் திருப்தியடைந்த பிரஜாபதி {கசியபர்}, ஆயிரம் வேள்வி செய்த இந்திரனிடம், "பெரும் பலமும் வீரமும் மிக்க இரு சகோதரர்கள் உனக்கு உதவி செய்யக் கிடைப்பார்கள்.(30) அவர்களால் உனக்கு எந்த இன்னலும் ஏற்படாது. உன் வருத்தம் தீரட்டும், நீயே எல்லோருக்கும் தலைவனாக இருப்பாய்.(31) இனி எப்போதும், பிரம்மனின் பெயரை உச்சரிப்பவர்களைச் சிறுமைப்படுத்தாதே. கோபக்காரர்களை, இடியைப் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களை அவமதிக்காதே" என்று அறிவுரை கூறினார்.(32)
இதைக் கேட்ட இந்திரன் பயத்தை விட்டு, தேவலோகம் சென்றான். வினதையும், தனது நோக்கம் நிறைவேறியதால், மிகவும் மகிழ்ந்தாள்.(33) அவள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள். குறை உடலுடன் பிறந்தவனான அருணன் சூரியனுக்குச் சாரதியாக நின்றான்.(34) கருடனுக்குப் பறவைகளின் தலைமை கொடுக்கப்பட்டது. ஓ பிருகுவின் வழித்தோன்றலே! {சௌனகரே}, கருடனின் பெரும் சாதனைகளைக் கவனமாகக் கேளும்" {என்றார் சௌதி}.(35)

[1] தலையைத் தாண்டிச் செல்வது அவமதிக்கும் செயலாகவே இன்றும் நம்மால் கொள்ளப்படுகிறது.
ஓ சௌனகரே! கேளும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, விரதங்களை மேற்கொள்பவர்களும், ஞானமுள்ளவர்களும், சிறந்தவர்களுமான அந்தத் துறவிகள் வேள்வித்தீயில், சுத்தமான நெய்யை விட்டு, சத்தமாக,(12) “அனைத்து இடத்திற்கும் தன் விருப்பப்படி செல்லக்கூடியவனும், விரும்பிய அளவு சக்தியை அடையக்கூடியவனும், (இப்போது) இருக்கும் தேவர்களின் தலைவனுக்கு அச்சத்தைத் தரக்கூடியவனாக இன்னொரு இந்திரன் உண்டாகட்டும். எங்கள் தவங்களின் பயனாக மனம் போல் வேகங்கொண்டவனாகவும்[2], பயங்கரமானவனாகவும் ஒருவன் தோன்றட்டும்” என்று மந்திரங்களைச் சொன்னார்கள்.(13,14) இதைக் கேள்விப்பட்டவனும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனுமான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பெரும் அச்சங்கொண்டு, நோன்புகள் நோற்கும் கசியபரிடம் தஞ்சம் புகுந்தான்.(15)
[2] மனம் போன்ற வேகம் என்றால் அளவிட முடியாத வேகம் என்று பொருள். இங்கிருந்து நாம் சூரியனை நினைத்துக் கொள்கிறோம். அப்படியானால் நம் மனமானது சூரியனை அடைந்த விட்டதாகப் பொருள். இதுவே அளவிட முடியாத மனோவேகமாகும்.
பிரஜாபதியான கசியபர் இந்திரனிடம் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு, வாலகில்யர்களிடம் சென்று அவர்களது வேள்வி வெற்றிகரமாக முடிந்ததா என்று கேட்டார்.(16) அந்த உண்மை பேசும் முனிவர்கள், "நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்" என்றனர். பிரஜாபதியான கசியபர் அவர்களை அமைதிப்படுத்தி,(17) "பிரம்மனின் வார்த்தைகளால், இவன் (இந்திரன்) மூன்று உலகங்களிலும் தேவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளான். துறவிகளே, நீங்களும் மற்றுமொரு இந்திரனை உற்பத்தி செய்யப் பாடுபடுகிறீர்கள்!(18) சிறந்தவர்களே, பிரம்மனின் வார்த்தைகளைப் பொய்யாக்காமல் இருக்கச் செய்வதே உங்களுக்குத் தகும். உங்களுடைய இந்த முயற்சியும் பலனில்லாமல் போகவேண்டாம்.(19) பெரும்பலம் கொண்டவனாக, சிறகுள்ள உயிரினங்களுக்கு இந்திரனாக (தலைவனாக) ஒருவன் தோன்றட்டும். உங்கள் முன் பணிந்து நிற்கும் இந்த இந்திரன் மீது கருணை கொள்ளுங்கள்" என்று சொன்னார் {கசியபர்}.(20) கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட வாலகில்யர்கள், முனிவர்களில் முதல்வரான பிரஜாபதி கசியபருக்குத் தங்கள் மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பேசத் தொடங்கினர்.(21)
அந்த வாலகில்யர்கள், "ஓ பிரஜாபதி! எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஓர் இந்திரனுக்காக நடைபெறுகிறது! உண்மையில் அவன் உமக்கு மகனாகப் பிறக்கவே இந்த வேள்வி நடைபெறுகிறது.(22) இதன் பலனை உம் கையிலேயே விடுகிறோம். இந்த விஷயத்தில் எது நன்மையாகவும், சரியாகவும் இருக்குமோ அதைச் செய்யும்" என்று சொன்னார்கள்.(23)
சௌதி தொடர்ந்தார், "அப்பொழுது, மனதிற்கினியவளும், நற்பேறு பெற்றவளும், நோன்பு நோற்பவளும், தக்ஷனின் நன்மகளுமான வினதை, பிள்ளைப்பேற்றின் மீதுள்ள ஆசையால், தனது நோன்புகளை முடித்துக் குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உறவுக்கான சரியான கனிதரும் காலம் வந்தவுடன் தனது நாயகனை நெருங்கினாள். கசியபர் அவளிடம்,(24,25) "மதிப்புக்குரியவளே, நான் நடத்திய வேள்வி இப்போது கனி தந்திருக்கிறது. நீ என்ன ஆசைப்பட்டாயோ அஃது உனக்குக் கிடைக்கும். மூன்று உலகங்களுக்கும் தலைவர்களான வீர மகன்கள் இருவர் உனக்குப் பிறப்பார்கள்.(26) எனது வேள்வியின் தூய்மையான நோக்கத்தாலும், வாலகில்யர்களின் தவப்பயனாலும், அந்த மகன்கள் மிகுந்த நற்பேறு பெற்றவர்களாகவும், மூவுலகங்களாலும் வழிபடத் தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்" என்று சொன்னார்.(27)
புகழ்பெற்றவரான கசியபர் மீண்டும் அவளிடம் {வினதையிடம்}, "இந்தப் புனிதமான விதைகளை, மிகுந்த கவனத்துடன் சுமந்து வா.(28) இந்த இருவரும் எல்லாச் சிறகுள்ள உயிரினங்களுக்கும் {பறவைகளுக்கும்} தலைவர்கள் ஆவார்கள். நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை அடையும் இந்த வீரமிக்க விண்ணோடிகள் மூன்று உலகங்களாலும் மதிக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.(29)
நடைபெற்ற காரியங்களால் திருப்தியடைந்த பிரஜாபதி {கசியபர்}, ஆயிரம் வேள்வி செய்த இந்திரனிடம், "பெரும் பலமும் வீரமும் மிக்க இரு சகோதரர்கள் உனக்கு உதவி செய்யக் கிடைப்பார்கள்.(30) அவர்களால் உனக்கு எந்த இன்னலும் ஏற்படாது. உன் வருத்தம் தீரட்டும், நீயே எல்லோருக்கும் தலைவனாக இருப்பாய்.(31) இனி எப்போதும், பிரம்மனின் பெயரை உச்சரிப்பவர்களைச் சிறுமைப்படுத்தாதே. கோபக்காரர்களை, இடியைப் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களை அவமதிக்காதே" என்று அறிவுரை கூறினார்.(32)
இதைக் கேட்ட இந்திரன் பயத்தை விட்டு, தேவலோகம் சென்றான். வினதையும், தனது நோக்கம் நிறைவேறியதால், மிகவும் மகிழ்ந்தாள்.(33) அவள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள். குறை உடலுடன் பிறந்தவனான அருணன் சூரியனுக்குச் சாரதியாக நின்றான்.(34) கருடனுக்குப் பறவைகளின் தலைமை கொடுக்கப்பட்டது. ஓ பிருகுவின் வழித்தோன்றலே! {சௌனகரே}, கருடனின் பெரும் சாதனைகளைக் கவனமாகக் கேளும்" {என்றார் சௌதி}.(35)
ஆங்கிலத்தில் | In English |