Garuda attacked the Gods! | Adi Parva - Section 32 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : கருடனுடன் மோதிய தேவர்கள்; தோற்றோடிய தேவர்கள்; பல நதிகளின் நீர்கொண்டு அமுதமிருக்கும் இடத்தில் இருந்த நெருப்பை அணைத்த கருடன்...
சௌதி சொன்னார், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே! இப்படித் தேவர்கள் போருக்குத் தயாராக இருக்கையில், பறவைகளின் மன்னன் கருடன், அந்த விவேகமுள்ளவர்கள் முன் விரைவாக வந்தான்.(1) அவனது பெரும்பலத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் நடுங்கி, ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) சோமத்தை (அமுதத்தைக்) காப்பவர்களில் அளவிட முடியா பலத்துடனும், நெருப்பு போன்ற சுடரொளியுடனும், பெரும் சக்தியுடனும் கூடிய பௌமனன் (தேவ தச்சன் {விஸ்வகர்மா}) இருந்தான்.(3) சிறிது நேரமே நீடித்த ஒரு பயங்கர மோதலுக்குப் பிறகு, பறவைகள் மன்னனால் {கருடன்}, கூர்நகங்களாலும், அலகாலும், சிறகுகளாலும் அடிபட்ட அவன் இறந்தவனாகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான்.(4)
அந்த விண்ணோடி {கருடன்}, தனது சிறகுகளால் பெரும்புயலை ஏற்படுத்தி, புழுதிப்படலத்தால் உலகங்களை இருளில் முழ்க வைத்துத் தேவர்களைத் திகைக்கவைத்தான்.(5) பின்னவர்கள் {தேவர்கள்} அங்கு ஏற்பட்ட புழுதியால் தாக்கப்பட்டு, மூர்ச்சையாகி விழுந்தனர். அமுதத்தைக் காத்த இறவாதவர்கள் {தேவர்கள்} அந்தத் தூசிப்படலத்தால் குருடாகி கருடனைக் காண முடியாதவர்களாகினர்.(6)
இப்படிக் கருடன் அந்தத் தேவலோகத்தையே கலங்கடித்தான். தேவர்களைத் துவைத்தெடுத்து, தனது சிறகுகளாலும் அலகுகளாலும் காயங்களை உண்டாக்கினான்.(7) பிறகு அந்த ஆயிரம் கண் கொண்ட தேவன் {இந்திரன்} வாயுவைப் பார்த்து, ‘இந்தத் தூசி மழையை மறைய செய்வாயாக. இஃது உண்மையில் உன்னுடைய வேலையே’ என்றான்.(8) பிறகு, பலம்வாய்ந்த வாயு தேவன் அந்தப் புழுதியை விரட்டியடித்தான். இருள் மறைந்த பிறகு, தேவர்கள் கருடனைத் தாக்கினர்.(9) அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் தேவர்களால் தாக்கப்படும்போது, யுக முடிவில் வரும் பெரும் மேகம் போலப் பெரிதாக முழங்கி அனைத்து உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினான்.(10)
எதிரி வீரர்களைக் கொல்பவனும், சக்திமிக்கவனுமான அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது சிறகுகளைப் பயன்படுத்தி உயர்ந்தான். இருபுறக்கூர் கொண்ட வாட்கள் {பட்டிசங்கள்}, கூர்முனை முட்கள் பதித்த இரும்புத் தண்டங்கள் {பரிகங்கள்}, கூர் ஈட்டிகள், கதாயுதங்கள், பளபளப்பான கணைகள், சூரிய வடிவிலான பல சக்கரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தேவர்களும், இந்திரனும், கருடன் தங்கள் தலைக்குமேல் உயர்வதைக் கண்டனர்.(11-13) அந்தப் பறவைகள் மன்னன் {கருடன்}, அவர்களை அனைத்துத் திக்குகளிலிருந்தும் பலதரப்பட்ட ஆயுதங்களால் அடித்தும்[1] சிறிதும் தள்ளாடாமல் கடும் போர் புரிந்தான். பெரும் வீரம் கொண்ட வினதையின் மைந்தன் {கருடன்}, வானில் ஒளிர்ந்து, அனைத்துப் புறங்களிலும் தேவர்களைத் தனது சிறகாலும், மார்பாலும் தாக்கினான்.(14) கருடனின் கூர்நகங்களாலும், அலகாலும் தாக்குண்ட தேவர்களின் உடலில் இருந்து அதிகமான இரத்தம் வழிந்தது.(15)
பறவை மன்னனால் {கருடனால்} வீழ்த்தப்பட்ட சாத்யர்களும், கந்தர்வர்களும் கிழக்குப்புறம் பாய்ந்து ஓடினர், வசுக்களும் ருத்ரர்களும் தென்புறமாகவும்,(16) ஆதித்யர்கள் மேற்குப்புறமாகவும், அஸ்வினி இரட்டையர்கள் வடபுறமாகவும் ஓடினர். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்கள் போரிலிருந்து ஓடி, ஒவ்வொரு நொடியும் தங்கள் எதிரியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(17)
கருடன், யக்ஷர்களுடனும், பெரும் தைரியம் மிகுந்த அஸ்வக்கிரந்தன், ரேணுகன், துணிவுமிக்கக் கிரதனன், தபனன், உலூகன், சுவசனன்[2], நிமேஷன், பிரருஜன் {ப்ரருஜன்} மற்றும் புளினன் ஆகியோருடனும் போர் புரிந்தான்.(18,19) அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, அனைவரையும் தனது சிறகுகளாலும், கூரியநகங்களாலும், அலகாலும் துவைத்தெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், யுக முடிவில் பினகையை (சிவ தனுசு) ஏந்தி கோபத்துடன் இருக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான்.(20) பெரும் வீரமும் துணிவும் கொண்ட யக்ஷர்கள் அந்த விண்ணோடியால் {கருடனால்} துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தமழையைப் பொழியும் கரும் மேகக்குவியல் போலக் கிடந்தனர்.(21)
கருடன் அவர்கள் உயிரைக் கவர்ந்து, அமுதம் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அஃது அனைத்துப்புறத்திலும் நெருப்பால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான்.(22) அந்தப் பயங்கரமான நெருப்பின் சுடர்கள் வானத்தையே மூடியபடி இருந்தது. அச்சுடர்கள் பெரும் காற்றால் அசைக்கப்பட்டு, சூரியனையே எரித்து விடுவது போல இருந்தன.(23) அந்தப் புகழ்பெற்றவனான கருடன், எட்டாயிரத்து நூறு வாய்களைக் {கொண்ட உருவம் எடுத்துக்} கொண்டு, அந்த வாய்களால் விரைவாகப் பல நதிகளின் நீரைக் குடித்து {வாயில் அடக்கிக் கொண்டு}, பெரும் வேகத்துடன் திரும்பி வந்தான். அந்த நீரைக் கொண்டு அந்த எதிரிகளை அழிப்பவனும், சிறகுகளைத் தன் வாகனமாகக் கொண்டவனுமானவன் {கருடன்} அந்த நெருப்பை அணைத்தான். அந்த நெருப்பை அணைத்தபிறகு (அமுதம் இருக்கும் இடத்தில்) நுழையும் ஆவலினால் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான்" {என்றார் சௌதி}.(24,25)

[1] கருடன் ஆயுதமேதும் கொண்டு வரவில்லை. ஆக அவன் தேவர்களை ஆயுதம் கொண்டு தாக்கியதாகச் சொல்வது பொருத்தமாக இல்லை. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு, பிபேக் திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் கருடன் ஆயுதம் கொண்டு போரிட்டதாகக் குறிப்பேதும் இல்லை.. மேலே அடித்தும் என்றிருக்கும் இடத்தில் "அவர்களால் அடிக்கப்பட்டும்" என்று இருந்திருக்க வேண்டும், தேவர்களால் பலபக்கங்களில் இருந்தும் கருடன் ஆயுதங்களால் தாக்கப்படுகிறான், இருந்தும் அவன் தள்ளாடாமல் தாக்கப்படுகிறான் என்று பொருள்படும். தள்ளாடாமல் போர்புரிந்தான் என்பது அஃதை உறுதி செய்கிறது.
பறவை மன்னனால் {கருடனால்} வீழ்த்தப்பட்ட சாத்யர்களும், கந்தர்வர்களும் கிழக்குப்புறம் பாய்ந்து ஓடினர், வசுக்களும் ருத்ரர்களும் தென்புறமாகவும்,(16) ஆதித்யர்கள் மேற்குப்புறமாகவும், அஸ்வினி இரட்டையர்கள் வடபுறமாகவும் ஓடினர். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்கள் போரிலிருந்து ஓடி, ஒவ்வொரு நொடியும் தங்கள் எதிரியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(17)
கருடன், யக்ஷர்களுடனும், பெரும் தைரியம் மிகுந்த அஸ்வக்கிரந்தன், ரேணுகன், துணிவுமிக்கக் கிரதனன், தபனன், உலூகன், சுவசனன்[2], நிமேஷன், பிரருஜன் {ப்ரருஜன்} மற்றும் புளினன் ஆகியோருடனும் போர் புரிந்தான்.(18,19) அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, அனைவரையும் தனது சிறகுகளாலும், கூரியநகங்களாலும், அலகாலும் துவைத்தெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், யுக முடிவில் பினகையை (சிவ தனுசு) ஏந்தி கோபத்துடன் இருக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான்.(20) பெரும் வீரமும் துணிவும் கொண்ட யக்ஷர்கள் அந்த விண்ணோடியால் {கருடனால்} துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தமழையைப் பொழியும் கரும் மேகக்குவியல் போலக் கிடந்தனர்.(21)
[2] இனிமையாய் பேசுபவன் என்று பொருள்.
கருடன் அவர்கள் உயிரைக் கவர்ந்து, அமுதம் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அஃது அனைத்துப்புறத்திலும் நெருப்பால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான்.(22) அந்தப் பயங்கரமான நெருப்பின் சுடர்கள் வானத்தையே மூடியபடி இருந்தது. அச்சுடர்கள் பெரும் காற்றால் அசைக்கப்பட்டு, சூரியனையே எரித்து விடுவது போல இருந்தன.(23) அந்தப் புகழ்பெற்றவனான கருடன், எட்டாயிரத்து நூறு வாய்களைக் {கொண்ட உருவம் எடுத்துக்} கொண்டு, அந்த வாய்களால் விரைவாகப் பல நதிகளின் நீரைக் குடித்து {வாயில் அடக்கிக் கொண்டு}, பெரும் வேகத்துடன் திரும்பி வந்தான். அந்த நீரைக் கொண்டு அந்த எதிரிகளை அழிப்பவனும், சிறகுகளைத் தன் வாகனமாகக் கொண்டவனுமானவன் {கருடன்} அந்த நெருப்பை அணைத்தான். அந்த நெருப்பை அணைத்தபிறகு (அமுதம் இருக்கும் இடத்தில்) நுழையும் ஆவலினால் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான்" {என்றார் சௌதி}.(24,25)
ஆங்கிலத்தில் | In English |