Takshaka Killed Parikshit! | Adi Parva - Section 43 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 31)
பதிவின் சுருக்கம் : தன் திறனை தக்ஷகனுக்கு நிரூபித்துக் காட்டிய கசியபர்; கசியபரிடம் சமாதானம் பேசிய தக்ஷகன்; புழுவாகிக் கனியில் இருந்த தக்ஷகன்; பரீக்ஷித் கொல்லப்பட்டான்...
சௌதி சொன்னார், "அதன் பிறகு தக்ஷகன் {பாம்பு மன்னன்}, என்னால் கடிபட்ட எந்த உயிரையும் உம்மால் குணப்படுத்த முடியும் என்றால், ஓ கசியபரே என்னால் கடிக்கப்படும் இந்த மரத்திற்கு உயிரைத் தாரும்.(1) ஓ பிராமணர்களில் சிறந்தவரே {கசியபரே}, இந்த ஆலமரத்தை உங்கள் பார்வை முன்பே {விஷத்தினால்} எரிக்கிறேன். உங்களால் முடிந்ததைச் செய்து, நீங்கள் சொன்னது போல உங்கள் மந்திரங்களின் திறமையை எனக்குக் காட்டும்" என்றான்.(2) கசியபர், "அப்படி நீ நினைத்தாயானால் ஓ பாம்புகளின் மன்னா {தக்ஷகா}, இந்த மரத்தைக் கடி. உன்னால் கடிபட்டாலும், ஓ பாம்பே, அதை நான் காப்பாற்றுவேன்" என்றார்."(3)
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்}, சிறப்புமிக்கக் கசியபர் இப்படிச் சொன்னவுடன், அந்த ஆலமரத்தைக் கடித்தான்.(4) அந்தச் சிறப்புமிக்கப் பாம்பால் கடிக்கப்பட்ட அந்த மரமானது, பாம்பின் விஷம் ஊடுருவி அனைத்துப்புறங்களும் பற்றி எரிந்தன.(5) ஆலமரத்தை அப்படி எரித்ததும் அந்தப் பாம்பு {தக்ஷகன்}, கசியபரிடம், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உம்மால் ஆனதை முயற்சித்து, இந்தக் கானகத்தின் மன்னனை {ஆலமரத்தை} காப்பாற்றும்" என்றான்."(6)
சௌதி தொடர்ந்தார், "பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்} ஏற்றிய விஷத்தால் {அந்த} மரம் {ஆலமரம்} சாம்பலாகியிருந்தது. அந்தச் சாம்பலை எடுத்த கசியபர்,(7) "ஓ பாம்புகளின் மன்னா, இந்தக் கானகத்தின் மன்னன் மீது என் வித்தையின் பலத்தை நான் பிரயோகிப்பதை பார். ஓ பாம்பே {தக்ஷகனே}, உனது மூக்கின் அருகிலேயே {உன் முன்னாலேயே} நான் அவனுக்கு உயிர் தருகிறேன்" என்றார்.(8) பிறகு பிராமணர்களில் சிறந்தவரும், சிறப்புமிக்கவரும், நன்கு கற்றவருமான அந்தக் கசியபர் சாம்பல் குவியலாக்கப்பட்ட அந்த மரத்திற்குத் தன் வித்தையினால் உயிரூட்டினார்.(9) முதலில் மொட்டு ஒன்றை உருவாக்கினார். அதன் பிறகு, அதைச்சுற்றி இலைகள் இரண்டை உருவாக்கினார். அதன்பிறகு, மரத்தின்தண்டையும், அதன் கிளைகளையும், பிறகு இலைகளுடன் கூடிய முழுவதும் வளர்ந்த மரத்தையே உருவாக்கினார்.(10)
சிறப்புமிக்கக் கசியபரால் புத்துயிர் பெற்ற மரத்தைக் கண்ட தக்ஷகன், அவரிடம் {கசியபரிடம்} "எனது விஷத்தையோ அல்லது என்னைப் போன்ற இன்னொருவரின் விஷத்தையோ நீர் முறிப்பது ஆச்சரியமன்று. ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, எந்தச் செல்வத்தை விரும்பி நீர் அங்குச் செல்கிறீர்?(11,12) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனிடம் {பரீக்ஷித்திடம்} என்ன பரிசு கிடைக்கும் என்று நீர் நம்புகிறீரோ, அதை அடைவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும், நானே அதைத் தருகிறேன்.(13) புகழால் அலங்கரிக்கப்பட்டவரே, பிராமணரின் {சிருங்கி} சாபத்தால் பாதிக்கப்பட்டவனும், வாழ்நாள் குறுகியவனுமான மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} தங்கள் வெற்றிச் சந்தேகத்திற்கிடமானதே.(14) அப்படி ஆகி விட்டால், மூவுலகிலும் பரவியிருக்கும் தங்கள் ஒளி வீசும் புகழானது (கிரகணத்தின் போது) ஒளியை இழக்கும் சூரியனைப் போல மறைந்துவிடும்.(15)
அதற்குக் கசியபர், "பொருட்செல்வத்திற்காகவே நான் அங்குச் செல்கிறேன். அதை நீ எனக்குக் கொடுப்பாயாக. ஓ பாம்பே, உனது தங்கத்தை எடுத்துக் கொண்டு, நான் வந்த வழியே திரும்புகிறேன்" என்றார்.(16) தக்ஷகன், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, நீர் அந்த மன்னனிடம் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே தருகிறேன். அதனால் நீர் அங்கே செல்லாதீர்" என்றான்."(17)
சௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்டவரும், பெரும் சக்தியும் அறிவும் கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்தக் கசியபர் அம்மன்னனை {பரீக்ஷித்தை} நினைத்துத் தியானத்தில் அமர்ந்தார்.(18) அந்த முனிவர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், ஆன்மிக ஞானத்தைக் கொடையாகக் கொண்டவருமான கசியபர் பாண்டவ குலத்தில் வந்த மன்னனின் {பரீக்ஷித்தின்} வாழ்நாள் உண்மையிலேயே தீர்ந்ததைக் கண்டு தக்ஷகனிடம் தான் விரும்பிய அளவிற்குச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனார். அப்படி வந்த வழியே சிறப்புமிக்கக் கசியபர் சென்றதும், சரியான நேரத்தில் தக்ஷகன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.(19,20) வழியிலேயே, மன்னன் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்வதாகவும், விஷமுறிவுக்கான மந்திரங்களாலும், மருந்துகளாலும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தான் {தக்ஷகன்}."(21)
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு {தக்ஷகன்}, "அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} எனது மாயையால் ஏமாற்றப்பட வேண்டும். ஆனால் அதற்கு என்ன வழி?" என்று சிந்தித்தான்.(22) பிறகு தக்ஷகன் சில பாம்புகளைத் துறவிகள் போல வேடம்பூணச் செய்து, பழங்கள், தர்ப்பைப் புற்கள், தண்ணீர் ஆகியவற்றோடு அனுப்பினான்.(23) பின் தக்ஷகன் அவர்களிடம், ‘அவசர வேலையிருப்பதாகக் காட்டிக்கொண்டு, பொறுமையின்மைக்கான எந்த அடையாளத்தையும் காட்டிக் கொள்ளாமல், அரசனிடம் {பரீக்ஷித்திடம்} சென்று (நீங்கள் அவனுக்குப் பரிசாக எடுத்துச் செல்லும்) பழங்களையும், பூக்களையும், தண்ணீரையும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} ஏற்குமாறு மட்டும் செய்யுங்கள்’ என்றான்."(24)
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்புகளும், தக்ஷகன் உத்தரவிட்டவாறே நடந்து கொண்டன. அவை தர்ப்பைப் புல்லையும், நீரையும், பழங்களையும் கொண்டு சென்றன.(25) பெரும் சக்தி கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவன் {பரீக்ஷித்} அந்தக் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டான். அவர்கள் {வந்தவர்களின்} வேலை முடிந்தவுடன், "சென்று வாருங்கள்" என்று சொன்னான்.(26) துறவிகளைப் போல வேடம்பூண்டு வந்த பாம்புகள் சென்றவுடன், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களிடமும், நண்பர்களிடமும்,(27) "அந்தத் துறவிகள் கொண்டு வந்த, இந்த அருஞ்சுவைக் கனிகளை என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்" என்றான்.(28) விதியின் உந்துதலாலும், முனிவரின் {சிருங்கியின்} வார்த்தைகளாலும், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களுடன் அந்தப் பழங்களை உண்ண விரும்பினான்.(29) தக்ஷகன் புகுந்திருந்த, அந்தக் குறிப்பிட்ட பழத்தை மன்னனே {பரீக்ஷித்தே} உண்பதற்காக எடுத்தான். அப்படி அவன் அதை எடுத்து உண்ணும்போது, ஓ சௌனகரே, அதன் உள்ளிருந்து கண்கள் கருப்பாகவும், செம்பு நிற உடலுடனும், புரிந்துகொள்ள முடியாத உருவத்துடனும், ஓர் அருவருக்கத்தக்க புழு வெளியே வந்தது.
அந்த மன்னர்களில் முதன்மையானவன் அதை எடுத்துத் தனது சபை உறுப்பினர்களிடம்,(30,31) "கதிரவன் மறைகிறான். விஷத்தால் எனக்கு இனிமேல் கண்ணீரில்லை. அதனால், எனது பாவகாரியத்திற்குப் பரிகாரமாகவும், அத்துறவியின் {சிருங்கின்} வார்த்தைகள் உண்மையாகவும், இந்தப் புழுவே தக்ஷகனாக மாறி என்னைக் கடிக்கட்டும்" என்றான். அச்சபை உறுப்பினர்களும், விதியால் உந்தப்பட்டு, அவனது பேச்சை அங்கீகரித்தனர்.(32,33) பிறகு அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது நேரம் வந்ததும், புலனுணர்வை இழந்தவனைப் போல புன்னகையுடன், அந்தப் புழுவை உடனே எடுத்துத் தனது கழுத்தில் விட்டுக்கொண்டான்.(34) அவன் அப்படிப் புன்னகைத்துக் கொண்டிருக்கும்போதே, மன்னனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து வெளியே வந்த (புழுவின் உருவத்தில் இருந்த) தக்ஷகன், அந்த ஏகாதிபதியின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்டான். விரைவாக மன்னனின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்புகளின் மன்னன் தக்ஷகன் பேரொலியுடன் முழங்கியவாறு, புவியைக் காப்பவனைக் கடித்தான்" {என்றார் சௌதி}.(35,36)

ஆங்கிலத்தில் | In English |