The message reached Parikshit! | Adi Parva - Section 42 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...
சௌதி சொன்னார், "அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "ஓ தந்தையே! நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே! நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை" என்றான்.(2)
சமீகர், "ஓ குழந்தாய்! {சிருங்கினே}, நீ பெரும் ஆற்றலுடையவன் என்பதும், உண்மை பேசுபவன் என்பதும் எனக்குத் தெரியும். இதற்கு முன்பு நீ பொய் சொன்னதில்லை. எனவே, உனது சாபமும் பொய்க்காது.(3) ஒரு மகன் தகுந்த வயதை அடைந்தாலும் கூட, அவன் தந்தையால் அறிவுறுத்தப்பட்டால்தான் நற்குணங்களை அடைந்து புகழையும் அடையமுடியும்.(4) {அவ்வாறிருக்க} நீயோ சிறுவனாகையால் எவ்வளவு அதிகமான ஆலோசனைகள் உனக்கு தேவைப்படும்? நீ எப்போதும் தவத்துறவுகளிலேயே ஈடுபடுகிறாய். அறுகுணங்கள் கொண்ட சிறப்புமிக்கவர்கள் கூட, கோபவசப்பட்டால் அந்தக் கோபம் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.(5) ஓ விதிகளைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவனே! நீ எனது மகனாக இருப்பதாலும், சிறுவனாக இருப்பதாலும், உன் அவசரத்தை நான் கண்டதாலும், நான் உனக்கு அறிவுரை வழங்க வேண்டும்.(6)
ஓ மகனே! {சிருங்கியே}, காட்டிலுள்ள பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே உண்டு அமைதியுடன் வாழ்ந்து வருவாயாக. உனது இந்தக் கோபத்தைக் கொன்றுவிடு, உனது தவச் செயல்களின் நற்பலன்களை இப்படிக் கெடுத்துக் கொள்ளாதே.(7) கோபமானது, பெரும் வலிகளை {கடினமான விரதங்களை} அனுபவித்துத் தவசிகள் அடையும் அறங்களை {தர்மங்கள்} நிச்சயமாக அழித்து விடுகிறது. பிறகு அறமிழந்தவர்களான அவர்களுக்கு அருள் நிலை இருக்காது.(8) மன்னிக்கும் தன்மையுள்ள துறவிகளுக்கு, அமைதியே எப்போதும் வெற்றியைத் தந்திருக்கிறது. ஆகவே, மன்னிக்கும் குணம் கொண்டவனாக, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, வாழக் கற்றுக் கொள்வாயாக. மன்னிக்கும் தன்மையினால், பிரம்மனாலும் எட்ட முடியாத உலகங்களை நீ அடைவாய்.(9,10) நான் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும், என்னால் முடிந்த அளவு நன்மையைச் செய்ய வேண்டும் என்பதாலும், என் சக்திக்குத் தகுந்த எதையாவது இதில் நான் செய்ய வேண்டும். மன்னனிடம் {பரீக்ஷித்திடம்}, 'ஓ ஏகாதிபதி, என்னை நீ அவமதித்ததால், அறிவு முதிர்வுறாத எனது இளவயது மகன் கோபம் கொண்டு உன்னைச் சபித்திருக்கிறான்', என்று செய்தியனுப்ப வேண்டும்" என்றார் {சமீகர்}."(11,12)
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பெரு முனிவர் {சமீகர்}, பெரும் நோன்புகளை நோற்பவர், கருணையால் உந்தப்பட்டுச் சரியான உத்தரவுகள் கொடுத்து, மன்னன் பரீக்ஷித்திடம் தனது சீடனை அனுப்பினார்.(13) முதலில் மன்னனின் {பரீக்ஷித்தின்} நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு உண்மையான செய்தியைக் கூறுமாறு அறிவுறுத்தி, ஆன்மிகத் தவங்களில் ஈடுபட்டவனும், நன்னடத்தையுள்ளவனுமான கௌர்முகன் என்ற தனது சீடனை அனுப்பினார்.(14) அந்தச் சீடனும் விரைவில் குரு {கௌரவ} குலத்தின் தலைவனான அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} அடைந்தான். வாயில்காப்போன் மூலம் தன் வரவைத் தெரிவிக்குமாறு முதலில் சொல்லிவிட்டு, {பிறகு} மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(15) அந்த இருபிறப்பாளனான {பிராமணனான} கௌர்முகன் அந்த ஏகாதிபதியால் {பரீக்ஷித்தால்} தகுந்த முறையில் வழிபடப்பட்டான். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மன்னனிடம் {பரீக்ஷித்திடம்}, அவனது அமைச்சர்கள் முன்னிலையில், தனக்கு அறிவுறுத்தியிருந்தபடி அந்தச் சமீகரின் கொடூரமான வார்த்தைகளை முழுமையாகச் சொன்னான்.(16)
கௌர்முகன், "ஓ மன்னர்களுக்கு மன்னா, அற ஆன்மா கொண்ட, உணர்ச்சிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அமைதி நிறைந்த, கடினமான ஆன்மீக வழிபாடுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சமீகர் என்ற பெயர் கொண்ட, ஒரு முனிவர் உனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓ மனிதர்களில் புலியே, அவர் {சமீகர்} பேசா நோன்பிருக்கும்போது அவரது தோளில் உனது வில்லின் நுனியால் இறந்த பாம்பைக் கிடத்தினாய். அவரே {சமீகரே} உன்னை மன்னித்துவிட்டார். ஆனால் அவரது மகனால் {சிருங்கியால்} அது முடியவில்லை.(17-19) ஓ மன்னர்களின் மன்னா {பரீக்ஷித்}, பின்னவனால் {சிருங்கியால்} அவன் தந்தைக்குத் தெரியாமல், இப்போதிலிருந்து ஏழு இரவுகளுக்குள் தக்ஷகன் (என்னும் பாம்பு) உன் மரணத்தை ஏற்படுத்தும் என்று சபிக்கப்பட்டிருக்கிறாய்.(20) சமீகர் உன்னைக் காப்பாற்றத் தனது மகனிடம் {சிருங்கியிடம்} மீண்டும் மீண்டும் வேண்டினார். ஆனால் அவரது மகனுடைய சாபத்தைப் பொய்யாக்க யாரும் இல்லை[1].(21) தனது மகனின் {சிருங்கியின்} கோபத்தை அமைதிப்படுத்தத் அவரால் இயலாத காரணத்தால்[2], ஓ மன்னா, உனது நன்மைக்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்றான் {கௌர்முகன்}.(22)
குரு பரம்பரையில் உதித்தவனும், தவ பயிற்சிகளில் ஈடுபடுபவனுமான அந்த மன்னன் {பரீக்ஷித்}, இந்தக் கொடூர வார்த்தைகளைக் கேட்டுத் தனது பாவகரமான காரியத்தை நினைவுகூர்ந்து, மிகவும் வருந்தினான்.(23) அந்த முனிவர்களிலே முதன்மையானவர் {சமீகர்}, பேசா நோன்பு நோற்றிருந்தார் என்பதை அறிந்ததும், இருமடங்கு துயருற்று, அந்த முனிவர் சமீகரின் கருணையையும், தனது பாவகரக் காரியத்தையும் நினைத்துப் பார்த்து மிகவும் வருந்தினான்.(24,25) ஒரு தேவனைப் போன்று காட்சியளித்த அந்த மன்னன், முனிவருக்கு {சமீகருக்கு} இழைக்கப்பட்ட செயலை எண்ணி வருத்தப்பட்ட அளவிற்குக் கூடத் தன் மரணச் செய்திக்காக வருந்தவில்லை.(26)
அதன்பிறகு, "அந்த வழிபடத்தகுந்தவர் {சமீகர்} என்னிடம் கருணையோடு இருக்கட்டும்" என்று சொல்லி கௌர்முகனை மன்னன் {பரீக்ஷித்} அனுப்பி வைத்தான்.(27) அவன் {கௌர்முகன்} சென்றவுடன், ஆழ்ந்த கவலையுடன் இருந்த மன்னன் {பரீக்ஷித்}, சிறிதும் நேரத்தை வீணாக்காமல் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினான்.(28) ஆலோசனைகளில் சிறந்தவனான அந்த மன்னன் பரீக்ஷித்} அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஒரே தூணில் ஒரு மாளிகையை எழுப்பச் செய்தான். அஃது {அம்மாளிகை} இரவும் பகலும் நன்கு காக்கப்பட்டது.(29)
மருத்துவர்களும், மருந்துகளும், மந்திரங்களில் திறமை மிகுந்த பிராமணர்களும் அந்த மாளிகையில் நிறைய இருந்தனர்.(30) அனைத்துப் புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது கடமைகளை அறம் மிகுந்த அமைச்சர்கள் புடைசூழ அங்கிருந்தே நிறைவேற்றினான்.(31) எவரும் அங்கிருக்கும் மன்னனை நெருங்க முடியவில்லை. காற்று கூடப் புகமுடியாதபடி அந்த இடம் பாதுகாக்கப்பட்டது.(32) ஏழாவது நாள் வந்தபோது, பிராமணர்களில் சிறந்தவரும், பெரும் கல்வி கற்றவருமான கசியபர் (பாம்பு கடித்தபின்)[3] மன்னனைக் குணப்படுத்த விரும்பி (மன்னனின் இருப்பிடம் நோக்கி) வந்துகொண்டிருந்தார்.(33) அவர் நடந்தனவற்றை எல்லாம் கேள்விப்பட்டிருந்தார். பாம்புகளில் முதன்மையான தக்ஷகனால் அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பரீக்ஷித்} எமனுலகு அனுப்பப்படுவான் என்பதை அறிந்திருந்தார்.(34) ‘அந்த முதன்மையான பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட பிறகு, அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} குணப்படுத்த வேண்டும். அதனால், எனக்குச் செல்வமும் கிடைக்கும், நற்பேறும் கிடைக்கும்’ என்று அவர் எண்ணினார்.(35)
ஆனால், மன்னனைக் குணப்படுத்த இதயத்தில் எண்ணியிருந்த கசியபர், தனது வழியில் நெருங்கி வருவதை, முதிர்ந்த பிராமண வேடத்தில் இருந்த பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் கண்டான்.(36) அந்தப் பாம்புகளின் இளவரசன் { தக்ஷகன் }, அந்த முனிவர்களில் காளையிடம் {கசியபரிடம்}, "இவ்வளவு வேகமாக எங்குச் செல்கிறீர்? இப்படி நீங்கள் செல்வதன் நோக்கம் என்ன?" என்று கேட்டான் {முதிர்ந்த பிராமணரின் உருவில் இருந்த பாம்பான தக்ஷகன் }.(37) இப்படிக் கேட்கப்பட்ட கசியபர், "குரு பரம்பரையில் வந்தவனும், எதிரிகள் அனைவரையும் ஒடுக்குபவனுமான, மன்னன் பரீக்ஷித்தைத் தனது விஷத்தால் இன்று தக்ஷகன் எரிக்கப் போகிறான்.(38) ஓ மனதிற்கினியவரே, அக்னியைப் போன்ற சக்தி படைத்த தக்ஷகன் அவரைக் கடித்த பிறகு, பாண்டவப் பரம்பரையின் ஒரே பிரதிநிதியான அந்த அளவற்ற வீரமிக்க மன்னனை {பரீக்ஷித்தை} குணப்படுத்தவே நேரத்தை வீணடிக்காமல் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறேன்" என்று மறுமொழி சொன்னார்.(39) அதற்குத் தக்ஷகன், "நான்தான் தக்ஷகன், ஓ பிராமணரே {கசியபரே}, நானே அந்தப் பூமியின் தலைவனை {பரீக்ஷித்தை} எரிக்கப் போகிறேன். நில்லும், என்னால் கடிபட்டவனை உம்மால் குணப்படுத்த முடியாது" என்றான்.(40) கசியபர், "எனது கல்வியின் ஆற்றலால், அங்குச் சென்று உன்னால் கடிபட்ட ஏகாதிபதியைக் {பரீக்ஷித்தைக்} குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார் {கசியபர்}."(41)

[1] தகுதியில் உயர்ந்தவரால் ஒருவருடைய சாபத்திலிருந்து விலக்கு அளிக்கமுடியும் அல்லது பலனை குறைக்க மடியும். உதா. கத்ருவின் சாபத்தைப் பிரம்மா மாற்றியமைத்தது. அதுபோலச் சிருங்கியின் சாபத்தை மாற்ற அப்போது யாரும் இல்லை.
[2] சிருங்கி கோபத்தை விட்டால் அவனாலேயே சாபத்தை மாற்றமுடியும். அவன் கோபத்தைத் தணித்துக் கொள்ள முடியாததால் சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. உதா. பௌஷ்யனால் உதங்கருக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.
குரு பரம்பரையில் உதித்தவனும், தவ பயிற்சிகளில் ஈடுபடுபவனுமான அந்த மன்னன் {பரீக்ஷித்}, இந்தக் கொடூர வார்த்தைகளைக் கேட்டுத் தனது பாவகரமான காரியத்தை நினைவுகூர்ந்து, மிகவும் வருந்தினான்.(23) அந்த முனிவர்களிலே முதன்மையானவர் {சமீகர்}, பேசா நோன்பு நோற்றிருந்தார் என்பதை அறிந்ததும், இருமடங்கு துயருற்று, அந்த முனிவர் சமீகரின் கருணையையும், தனது பாவகரக் காரியத்தையும் நினைத்துப் பார்த்து மிகவும் வருந்தினான்.(24,25) ஒரு தேவனைப் போன்று காட்சியளித்த அந்த மன்னன், முனிவருக்கு {சமீகருக்கு} இழைக்கப்பட்ட செயலை எண்ணி வருத்தப்பட்ட அளவிற்குக் கூடத் தன் மரணச் செய்திக்காக வருந்தவில்லை.(26)
அதன்பிறகு, "அந்த வழிபடத்தகுந்தவர் {சமீகர்} என்னிடம் கருணையோடு இருக்கட்டும்" என்று சொல்லி கௌர்முகனை மன்னன் {பரீக்ஷித்} அனுப்பி வைத்தான்.(27) அவன் {கௌர்முகன்} சென்றவுடன், ஆழ்ந்த கவலையுடன் இருந்த மன்னன் {பரீக்ஷித்}, சிறிதும் நேரத்தை வீணாக்காமல் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினான்.(28) ஆலோசனைகளில் சிறந்தவனான அந்த மன்னன் பரீக்ஷித்} அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஒரே தூணில் ஒரு மாளிகையை எழுப்பச் செய்தான். அஃது {அம்மாளிகை} இரவும் பகலும் நன்கு காக்கப்பட்டது.(29)
மருத்துவர்களும், மருந்துகளும், மந்திரங்களில் திறமை மிகுந்த பிராமணர்களும் அந்த மாளிகையில் நிறைய இருந்தனர்.(30) அனைத்துப் புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது கடமைகளை அறம் மிகுந்த அமைச்சர்கள் புடைசூழ அங்கிருந்தே நிறைவேற்றினான்.(31) எவரும் அங்கிருக்கும் மன்னனை நெருங்க முடியவில்லை. காற்று கூடப் புகமுடியாதபடி அந்த இடம் பாதுகாக்கப்பட்டது.(32) ஏழாவது நாள் வந்தபோது, பிராமணர்களில் சிறந்தவரும், பெரும் கல்வி கற்றவருமான கசியபர் (பாம்பு கடித்தபின்)[3] மன்னனைக் குணப்படுத்த விரும்பி (மன்னனின் இருப்பிடம் நோக்கி) வந்துகொண்டிருந்தார்.(33) அவர் நடந்தனவற்றை எல்லாம் கேள்விப்பட்டிருந்தார். பாம்புகளில் முதன்மையான தக்ஷகனால் அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பரீக்ஷித்} எமனுலகு அனுப்பப்படுவான் என்பதை அறிந்திருந்தார்.(34) ‘அந்த முதன்மையான பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட பிறகு, அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} குணப்படுத்த வேண்டும். அதனால், எனக்குச் செல்வமும் கிடைக்கும், நற்பேறும் கிடைக்கும்’ என்று அவர் எண்ணினார்.(35)
[3] இந்தக் கசியபரும், கருடனின் தந்தையான முனிவர் கசியபரும் வேறு வேறானவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆதிபர்வம் பகுதி 20ல் கருடனின் தந்தையான கசியபருக்கு விஷமுறிவு ஞானத்தைப் பிரம்மன் அருளியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இருப்பினும் இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள கால வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டால் இரண்டு கசியபர்களும் வேறு வேறு என்ற தீர்வையே நாம் எட்ட வேண்டியிருக்கும். அதே சமயம், முனிவர்களின் ஆயுள் மிக நீண்டது எனவும் உணர்தல் வேண்டும். ஆனால் தக்ஷகன் கசியபரின் மகன். கசியபர் - தக்ஷகன் உரையாடல் தந்தை மகன் உரையாடலாக இல்லை என்பதால் இது வேறு கசியபர் என்று முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது.
ஆனால், மன்னனைக் குணப்படுத்த இதயத்தில் எண்ணியிருந்த கசியபர், தனது வழியில் நெருங்கி வருவதை, முதிர்ந்த பிராமண வேடத்தில் இருந்த பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் கண்டான்.(36) அந்தப் பாம்புகளின் இளவரசன் { தக்ஷகன் }, அந்த முனிவர்களில் காளையிடம் {கசியபரிடம்}, "இவ்வளவு வேகமாக எங்குச் செல்கிறீர்? இப்படி நீங்கள் செல்வதன் நோக்கம் என்ன?" என்று கேட்டான் {முதிர்ந்த பிராமணரின் உருவில் இருந்த பாம்பான தக்ஷகன் }.(37) இப்படிக் கேட்கப்பட்ட கசியபர், "குரு பரம்பரையில் வந்தவனும், எதிரிகள் அனைவரையும் ஒடுக்குபவனுமான, மன்னன் பரீக்ஷித்தைத் தனது விஷத்தால் இன்று தக்ஷகன் எரிக்கப் போகிறான்.(38) ஓ மனதிற்கினியவரே, அக்னியைப் போன்ற சக்தி படைத்த தக்ஷகன் அவரைக் கடித்த பிறகு, பாண்டவப் பரம்பரையின் ஒரே பிரதிநிதியான அந்த அளவற்ற வீரமிக்க மன்னனை {பரீக்ஷித்தை} குணப்படுத்தவே நேரத்தை வீணடிக்காமல் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறேன்" என்று மறுமொழி சொன்னார்.(39) அதற்குத் தக்ஷகன், "நான்தான் தக்ஷகன், ஓ பிராமணரே {கசியபரே}, நானே அந்தப் பூமியின் தலைவனை {பரீக்ஷித்தை} எரிக்கப் போகிறேன். நில்லும், என்னால் கடிபட்டவனை உம்மால் குணப்படுத்த முடியாது" என்றான்.(40) கசியபர், "எனது கல்வியின் ஆற்றலால், அங்குச் சென்று உன்னால் கடிபட்ட ஏகாதிபதியைக் {பரீக்ஷித்தைக்} குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார் {கசியபர்}."(41)
ஆங்கிலத்தில் | In English |