Janamejaya and Vapushtama! | Adi Parva - Section 44 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் : பரீக்ஷித் இறந்ததும் பாலகன் ஜனமேஜயன் மன்னனானது; காசி மன்னன் சுவர்ணவர்மனின் மகள் வபுஷ்டமையை மணந்த ஜனமேஜயன்; இன்புற்றிருந்த ஜனமேஜயன்...
சௌதி சொன்னார், "தக்ஷகனின் சுருளுக்குள் அகப்பட்டுக் கிடந்த மன்னனைப் {பரீக்ஷித்தைப்} பார்த்த சபை உறுப்பினர்கள் பயத்தினால் வெளிறி போய்த் துயரம் கொண்டு அழுதனர்.(1) தக்ஷகனின் முழக்கத்தைக் கேட்ட அனைத்து அமைச்சர்களும் தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடியபோது, ஒரு பெண்ணின் தலையுச்சியின் அடர்ந்த கூந்தலின் நடுவே உள்ள சிவந்த வகிட்டைப் போல, நீல வானத்திலே தாமரை நிறக் கோடாக அந்தப் பாம்புகளில் அற்புதமானவனும், பாம்புகளின் அரசனுமான தக்ஷகன் செல்வதைக் கண்டனர்.(2,3)
மன்னன் {பரீக்ஷித்} வாழ்ந்த வந்த அந்த மாளிகை தக்ஷகனின் விஷத்தால் பற்றி எரிந்தது. இதையெல்லாம் கண்ட மன்னனின் சபை உறுப்பினர்கள் எல்லாத் திக்குகளுக்கும் பறந்து சென்றனர். மன்னனோ {பரீக்ஷித்} இடியால் தாக்குண்டவன் போல் கீழே விழுந்தான்.(4) தக்ஷகனின் விஷத்தால் கீழே வீழ்த்தப்பட்ட மன்னனுக்கான {பரீக்ஷித்துக்கான}, இறுதிச் சடங்குகள் அனைத்தையும் அவனது சபை உறுப்பினர்களும், பிராமணர்களான அரச புரோகிதரும் சேர்ந்து செய்தனர்.(5) குடிமக்கள் அனைவரும் சேர்ந்து, இன்னும் வயதை அடையாதவனும், இறந்து போன தங்கள் ஏகாதிபதியின் மகனுமான சிறுவனைத் தங்கள் மன்னனாக்கினர். அம்மக்கள் குரு பரம்பரை நாயகனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான அந்தப் புது மன்னனை ஜனமேஜயன் என்று அழைத்தனர்.(6)
அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனான ஜனமேஜயன் சிறுவனாக இருந்தாலும், எண்ணத்தில் விவேகமுள்ளவனாக இருந்தான். குரு பரம்பரையினரில் காளையான பரீக்ஷித்தின் அந்த மூத்த மகன் {ஜனமேஜயன்}, தனது அமைச்சர்கள் மற்றும் புரோகிதரோடு அந்த நாட்டைத் தனது முப்பாட்டனைப் (யுதிஷ்டிரனை) போலவே சிறப்பாக ஆண்டான்.(7) அந்த இளம் ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} அமைச்சர்கள், அவன் தற்போது எதிரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை வாய்ந்தவனாக ஆகிவிட்டதைக் கண்டு {தகுந்த வயதடைந்ததைக் கண்டு}, காசி மன்னன் சுவர்ணவர்மனிடம், அவனது மகள் வபுஷ்டமையைத் தங்கள் மன்னனுக்கு மணமகளாகக் கேட்டனர்.(8) காசிமன்னன் {சுவர்ணவர்மன்}, தகுந்த விசாரணைகளுக்குப் பிறகு, குரு பரம்பரையின் அந்தப் பலம்வாய்ந்த வீரனுக்கு {ஜனமேஜயனுக்கு}, தனது மகள் வபுஷ்டமையை முறையான சடங்குகளுடன் மணமுடித்துக் கொடுத்தான். மன்னன் மணவாட்டியைப் பெற்று பெரு மகிழ்ச்சியோடு இருந்தான். அவன் {ஜனமேஜயன்} எந்நேரத்திலும் வேறு எந்தப் பெண்ணுக்கும் தனது இதயத்தைக் கொடுக்காமல் இருந்தான்.(9)
பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, நிறைந்த இதயத்துடன், இன்பத்தை விரும்பி, நீர்நிலைகளிலும், கானகங்களிலும், மலர்ச்சோலைகளிலும் திரிந்து கொண்டிருந்தான். பழங்காலத்தில் தேவலோக மங்கை ஊர்வசியை அடைந்த புரூரவஸ் எப்படி மகிழ்ச்சியாக இருந்தானோ அப்படி இந்த முதன்மையான ஏகாதிபதியும் காலத்தைக் கழித்தான்.(10) அழகுக்காகப் போற்றப்பட்டவளும், அழகானவர்களிலேயே அழகானவளுமான அந்த மங்கை வபுஷ்டமையும், தான் விரும்பியவாறு கணவன் கிடைத்தான் என்றெண்ணி, அவன் தன்னோடு இன்பமாக இருந்தபோதெல்லாம், அர்ப்பணிப்புடனும், மிகுந்த பாசத்துடனும் தனது கணவனை {ஜனமேஜனை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்" {என்றார் சௌதி}.(11)

ஆங்கிலத்தில் | In English |