The prophesy of a Suta! | Adi Parva - Section 51 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான்; அந்தணனால் வேள்வி தடைபடும் என்றான் ஒரு சூதன்…
சௌதி சொன்னார், "மன்னன் ஜனமேஜயன் இப்படிச் சொல்லவும், அமைச்சர்களும் அதை உறுதி செய்தனர். அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, பாம்பு வேள்வியை நடத்தப்போவதாகத் தனது முடிவைச் சொன்னான்.(1) பிறகு அந்தப் பூமியின் தலைவன், பாரதக் குலத்தின் புலி, பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்} தனது புரோகிதரையும் ரித்விக்குகளையும், அழைத்தான்.(2)
பேச்சில் வல்லவனான அவன், தன்னுடைய பெரும்பணியை நிறைவேற்றுவது குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான். "எனது தந்தையைக் {பரீக்ஷித்தைக்} கொன்ற அந்தப் பாவி {பாம்பு மன்னன்} தக்ஷகனை நான் பழிதீர்க்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள்.(3) அந்தப் பாம்பு தக்ஷகனும் அவனது உறவினர்களும் சேர்ந்து எரியும் நெருப்பில் விழ நான் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? முன்பு எனது தந்தையைத் {பரீக்ஷித்தைத்} தனது விஷமென்னும் நெருப்பால் எரித்த தக்ஷகனை நானும் எரிக்கவே விரும்புகிறேன்" {என்றான் ஜனமேஜயன்}.(4,5)
அதற்கு அந்தப் புரோகிதர்களின் தலைவர், "ஓ மன்னா! {ஜனமேஜயா}, உனக்காகவே தேவர்கள் ஒரு பெரிய வேள்வியை உருவாக்கியிருக்கிறார்கள். அது பாம்பு வேள்வி (சர்ப்ப வேள்வி) என்று அறியப்படுகிறது. இது புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.(6) ஓ மன்னா {ஜனமேஜயா}, உன்னால் மட்டுமே இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும். வேறு எவராலும் முடியாது. புராணங்களை நன்கு அறிந்தவர்கள் இப்படி ஒரு வேள்வி இருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்."(7)
சௌதி தொடர்ந்தார், "ஓ சிறந்தவரே! {சௌனகரே}, இப்படிப் பதில் சொல்லப்பட்ட மன்னன், வேள்வி நெய்யை உண்ணும் அக்னியின் ஒளிரும் வாயில் தக்ஷகன் எரிந்துவிட்டதாகவே எண்ணம் கொண்டான்.(8) அதன்பிறகு அந்த மன்னன் {ஜனமேஜயன்} மந்திரங்களில் தேர்ந்த பிராமணர்களிடம், "நான் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன். தேவையான பொருட்கள் என்னென்ன வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றான்.(9) ஓ சிறந்த பிராமணரே! {சௌனகரே}, வேதங்களில் தேர்ந்தவர்களும், அந்த வேள்வியின் சடங்குகளை அறிந்தவர்களுமான அரசனின் ரித்விக்குகள், வேள்விமேடை அமைப்பதற்காகச் சாத்திரங்களில் சொன்னபடி நிலத்தை அளந்தனர்.(10)
மேடை விலையுயர்ந்த பொருட்களாலும், பிராமணர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {மேடை} கிடைத்தற்கரிய பொருட்களாலும் நெல்லாலும் நிறைந்திருந்தது. ரித்விக்குகள் அதில் வசதியாக அமர்ந்தனர். அந்த மேடை விதிகளின்படி விரும்பியவாறு கட்டி முடிக்கப்பட்டதும், குறித்த நோக்கம் நிறைவேற மன்னனை {ஜனமேஜயனை} நாக வேள்வியில் அமர்த்தினர். வேள்வி ஆரம்பிப்பதற்கு முன்னர்,(11-13) அந்த வேள்வி பின்னர் தடைபடும் என்பதை முன்னறிவிக்கும் வகையில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. வேள்விக்கான மேடையைக் கட்டும்போது, கட்டுமானக் கலையில் நிபுணரும், சூத சாதியைச்[1] சேர்ந்தவரும், புராணங்களில் தெளிந்த அறிவுடையவரும் அடித்தளங்கள் {அஸ்திவாரங்கள்} அமைப்பதை நன்கறிந்தவருமான {வாஸ்து, மனையடி சாத்திரம் ஆகியவற்றில் வல்ல ஸ்தபதி} ஒருவர்[2], (14,15) "இந்த மேடை அமைந்த மண்ணின் தன்மையும், வேள்வி மேடைக்காக அளவுகள் எடுத்த நேரமும், ஒரு பிராமணனால் இந்த வேள்வி முழுமையடையாமல் போகப் போகிறது என்பதை உணர்த்துகிறது" என்றார்.(16) இதைக்கேட்ட மன்னன் {ஜனமேஜயன்}, மேடையில் அமரும் முன்பு, வாயில் காப்போரிடம் தனது கவனத்துக்கு வராமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டான் {ஜனமேஜயன்}" {என்றார் சௌதி}.(17)

[1] கங்குலி, கும்பகோணம், மன்மதநாததத்தர் ஆகிய பதிப்புகளில் சூதசாதியைச் சேர்ந்தவன் என்றே சொல்லப்பட்டுள்ளது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மட்டும் சூதனான அம்மனிதன் என்று சொல்லப்பட்டுள்ளது. சாதி என்ற சொல் மூலத்தில் இல்லை. மூல ஸ்லோகம். இதி அப்ராவித் சூத்ரதாரா சூத பௌராணிகா ததா. புராணங்களைச் சொல்லும் சூதர் என்கிறது. அதாவது அந்த ஸ்தபதியும் புராணங்களைச் சொல்ல வல்லவர்.
ity abravīt sūtradhāraḥ sūtaḥ paurāṇikas tadā
yasmin deśe ca kāle ca māpaneyaṃ pravartitā
brāhmaṇaṃ kāraṇaṃ kṛtvā nāyaṃ saṃsthāsyate kratuḥ
[2] ஆதி 56:6ல் {ஆதிபர்வம் 56ம் பகுதி 6ம் ஸ்லோகத்தில்} சொல்லப்படும் லோகிதாக்ஷர் என்ற பெயரைக் கொண்ட சூதர் இவராகவே இருக்கக்கூடும்.
ஆங்கிலத்தில் | In English |