Snakes fell on fire! | Adi Parva - Section 52 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 40)
பதிவின் சுருக்கம் : வேள்வி ஆரம்பித்தது; பாம்புகள் அழிந்தன…
சௌதி சொன்னார், "பாம்பு வேள்வி அதன் விதிகளின்படி தொடங்கியது. சாத்திர விதிகள்படி தங்கள் கடமைகளில் தேர்ந்தவர்களான வேள்விப் புரோகிதர்கள், கருப்பு ஆடை அணிந்து, புகையினால் கண்கள் சிவந்து, சுடர்விட்டெரியும் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு சரியான மந்திரங்களை உச்சரித்தனர்.(1,2) அக்னியின் வாயில் தெளிந்த நெய்யை விட்டு, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி, அந்தப் பாம்புகளைப் பயத்தால் நடுங்க வைத்தனர்.(3) அதன்பிறகு, பாம்புகள் தங்கள் சக்திகளை இழந்து, பரிதாபமாக ஒன்றை ஒன்று அழைத்துக்கொண்டு, அந்த எரியும் நெருப்பில் விழ ஆரம்பித்தன.(4) உடல் உப்பி, மூச்சு விடச் சிரமப்பட்டு, ஒன்றை ஒன்று {அந்த பாம்புகள்} தம் தலைகளாலும், வால்களாலும் பின்னிக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் வந்து நெருப்பில் விழுந்தன.(5)
வெண்மையானவையும், கருப்பானவையும், நீலமானவையும், முதுமையானவையும், இளமையானவையுமாகப் பல பாம்புகள் பலவாறாகக் கதறிக் கொண்டு அந்த எரியும் நெருப்பில் ஒரே மாதிரி விழுந்தன. ஒரு சில ஒரு குரோச நீளமும், ஒரு சில ஒரு யோஜனை நீளமும், ஒரு சில ஒரு கோகர்ண நீளமும் கொண்டு முதன்மையான அந்தத் தீயிலே தொடச்சியாக வந்து விழுந்தன.(6,7) அந்தச் சம்பவத்தில் {வேள்வியில்}, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் பாம்புகள், தங்கள் உறுப்புகளின் கட்டுப்பாட்டையிழந்து அழிந்தன.(8)
அப்படி அழிந்தனவற்றில் சில குதிரைகளைப் போலவும், சில யானையின் துதிக்கையைப் போலவும், மற்றும் சில பெரும் உடலைக்கொண்ட, மதம் பிடித்த யானை போன்று,(9) பல வண்ணங்களில் கொடுமையான விஷத்துடனும், பயங்கரமான தோற்றத்துடனும், இரும்பு முள் கொண்ட கதாயுதம் போலவும், பெரும் பலத்துடன், எப்போதும் கடிப்பதில் குறியாக இருந்த அந்தப் பாம்புகள், தங்கள் தாயின் {கத்ருவின்} சாபத்தால் நெருப்பில் வந்து விழுந்தன" {என்றார் சௌதி}.(10)

ஆங்கிலத்தில் | In English |