Promise of Astika! | Adi Parva - Section 54 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 42)
பதிவின் சுருக்கம் : ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்...
சௌதி சொன்னார், "அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், "ஓ மகனே! {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்" என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)
ஆஸ்தீகர், "ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார்.(3)
தனது உறவினர்களின் நன்மையில் விருப்பம் கொண்டவளும், துயரத்தால் கலங்காதவளுமான, அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} தங்கை ஜரத்காரு,(4) "ஓ மகனே! {ஆஸ்தீகனே}, பாம்புகள் அனைவருக்கும் தாய் கத்ரு என்று அறியப்படுகிறாள். கோபத்தால் தனது மைந்தர்களை {பாம்புகளை} அவள் {கத்ரு} ஏன் சபித்தாள் என்பதை அறிந்து கொள்வாயாக.(5)
அவள் {கத்ரு}[1] பாம்புகளிடம், "வினதையைப் பந்தயத்தில் வீழ்த்தி எனது அடிமையாக்கிக் கொள்ள, அந்தக் குதிரைகளின் இளவரசன் உச்சைஸ்ரவஸின் பொய்யான தோற்றமுண்டாக்க நீங்கள் {பாம்புகள்} மறுத்ததால், வாயுவைச் சாரதியாகக் கொண்டவன் {அக்னியானவன்}, ஜனமேஜயன் வேள்வியில் உங்களை எரிக்கட்டும். அங்கே அழிந்து மீட்கப்படாத ஆவிகளின் உலகத்தை {யமலோகத்தை} நீங்கள் {பாம்புகளாகிய நீங்கள்} அடைவீர்கள்" என்றாள்.(6,7)
[1] கத்ரு பாம்புகளைச் சபித்த விவரங்களை ஏற்கனவே ஆதிபர்வம் - பகுதி 16 மற்றும் பகுதி 20 ஆகியவற்றில் கண்டோம்.
இதைக் கேட்ட அனைத்து உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} அவளிடம் {கத்ருவிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவளது சாபத்தை அங்கீகரித்தான்.(8) {உன் தாய்மாமனான பாம்புகளின் மன்னன்} வாசுகி, அந்தச் சாபத்தையும், பெருந்தகப்பனின் {பிரம்மனின்} வார்த்தைகளையும் கேட்டு, அமுதம் கடையப்பட்ட சந்தர்ப்பத்தில் தேவர்களின் பாதுகாப்பை நாடினார்.(9) ஓ குழந்தாய்! {ஆஸ்தீகனே} தேவர்கள் சிறந்த அமுதத்தை அடைந்து, தங்கள் காரியம் நிறைவேறியதும், வாசுகியை முன்னிட்டுக் கொண்டு பெருந்தகப்பனைச் {பிரம்மனைச்} சந்தித்தனர்.(10) அந்தச் சாபத்தை விலக்க மன்னனான வாசுகியுடன் அனைத்துத் தேவர்களும், தாமரையில் பிறந்தவனிடம் {பிரம்மனிடம்} மன்றாடினர்.(11)
தேவர்கள், "ஓ தலைவா! {பிரம்மனே} பாம்புகள் மன்னன் வாசுகி, தனது உறவினர்களை நினைத்து வருந்துகிறான். அவனது தாயின் {கத்ருவின்} சாபத்தை விலக்குவது எவ்வாறு?" என்றனர்.(12) பிரம்மன், "ஜரத்காரு {முனிவர்}, ஜரத்காரு என்ற மங்கையை மனைவியாக வரிப்பான். அவளுக்குப் பிறக்கும் பிராமணன் {ஆஸ்தீகன்}, அந்தப் பாம்புகளை விடுவிப்பான்" என்று கூறினான்.(13)
ஓ தேவர்களைப் போன்றவனே {ஆஸ்தீகனே}, அந்த வார்த்தைகளைக் கேட்டவரும், பாம்புகளில் சிறந்தவருமான வாசுகி, வேள்வி நடப்பதற்குச் சிறிது காலம் முன்னர், என்னை உனது உயர் ஆன்மத் தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவிற்கு} மணமுடித்துக் கொடுத்தார்.(14) அந்தத் திருமணத்தால் நீ எனக்குப் பிறந்தாய். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. எங்களை இந்த ஆபத்தில் இருந்து நீதான் காக்க வேண்டும்.(15) என்னை உனது விவேகமுள்ள தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவிற்கு} அளித்த காரணம் நிறைவேற எனது தமையனையும் {வாசுகியையும்}, என்னையும் {பெண் பாம்பு ஜரத்காருவையும்} அந்த நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். நீ என்ன நினைக்கிறாய் மகனே?" என்று கேட்டாள் {பெண் பாம்பான ஜரத்காரு}."(16)
சௌதி தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட ஆஸ்தீகர், தனது தாயிடம் {ஜரத்காருவிடம்}, "ஆம், நான் நிறைவேற்றுவேன்" என்று சொல்லிவிட்டு, கலக்கமடைந்திருந்த வாசுகியிடம் அவனுக்கு உயிர் கொடுப்பது போல,(17) "ஓ வாசுகி! பாம்புகளில் சிறந்தவரே, உயர்ந்தவரே, அந்தச் சாபத்திலிருந்து உம்மை விடுவிப்பேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்வேன்.(18) கவலை கொள்ளாதீர். ஓ பாம்பானவரே! {வாசுகியே!} இனிமேல் எந்தப் பயமும் உமக்கு இல்லை. நன்மையைச் செய்ய நான் கடுமையாக முயற்சிப்பேன்.(19) கேலிக்காக நான் கூறிய வார்த்தைகள்கூட, பொய்த்தது என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. இதைப் போன்ற முக்கியமான நேரத்தில் நான் கூறுவதற்கு வேறொன்றுமில்லை. ஓ மாமனே! {வாசுகியே} இன்று அங்கு நான் சென்று, வேள்வியில் அமர்ந்திருக்கும் அந்த ஏகாதிபதிக்கு {ஜனமேஜயனுக்கு} எனது வார்த்தைகளில் அருள் கலந்து அவனை {ஜனமேஜயனைத்} மனநிறைவுப்படுத்தி, ஓ அருமையானவரே {வாசுகியே}, அந்த வேள்வியை நிறுத்துகிறேன்.(20-21) ஓ உயர்ந்த மனம் கொண்டவரே! {வாசுகியே} ஓ பாம்புகளின் மன்னரே {வாசுகியே}, நான் சொல்லும் அனைத்தையும் நம்புங்கள். எனது தீர்மானம் நிறைவடையாமல் இருக்காது என்பதை நம்புங்கள்" என்றார் {ஆஸ்தீகர்}.(22)
வாசுகி, "ஓ ஆஸ்தீகா! எனக்கு மயக்கம் வருகிறது. எனது இதயம் உடைகிறது. நான் தாயின் சாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதால், திசைகளின் புள்ளிகளை என்னால் காண முடியவில்லை" என்றான்.(23) ஆஸ்தீகர், "பாம்புகளில் சிறந்தவரே {வாசுகியே}, நீர் இனி வருந்தவேண்டியதில்லை. அந்த நெருப்பின் மீதான உமது பயத்தை நான் போக்குகிறேன்.(24) யுகத்தின் முடிவைப் போல் எரியும் நெருப்பைப் போன்ற இந்தத் தண்டனையைப் போக்குகிறேன். உமது பயத்தை வளர்க்காதீர்" என்றார்."(25)
சௌதி தொடர்ந்தார், "பிறகு, பிராமணர்களில் சிறந்தவரான ஆஸ்தீகர், வாசுகியின் இதயத்தில் இருக்கும் பயத்தைப் போக்கி, அதைத் தான் எடுத்துக்கொண்டு, பாம்புகளின் மன்னனின் {வாசுகியின்} நன்மைக்காக, எல்லாச் சிறப்புகளுடனும் கூடிய ஜனமேஜயனின் வேள்விக்கு விரைந்தார்.(26,27) அங்குச் சென்ற ஆஸ்தீகர் அருமையான வேள்வி சாலையையும், அங்கு சூரியனுக்கோ, அக்னிக்கோ ஒப்பான ஒளிபொருந்திய எண்ணற்ற சதஸ்யர்களையும் கண்டார்.(28) ஆனால் வாயில் காப்போரால் அவர் {ஆஸ்தீகர்} உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பெரும் துறவி {ஆஸ்தீகர்} அவர்கள் ஏற்கும்படி அவர்களை வாழ்த்தி வேள்வி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தார்.(29) பிராமணர்களில் சிறந்தவரும், அறம் மிக்கோரில் முதன்மையானவருமான அந்த ஆஸ்தீகர், அந்த அருமையான வேள்விமண்டபத்திற்குள்ளே நுழைந்ததும், எண்ணற்ற சாதனைகள் புரிந்த மன்னனையும் {ஜனமேஜயனையும்}, ரித்விக்குகளையும், சதஸ்யர்களையும், புனிதமான அக்னியையும் போற்றி வாழ்த்தினார் {ஆஸ்தீகர்}.(30)

ஆங்கிலத்தில் | In English |