Indra protected Takshaka! | Adi Parva - Section 53 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 41)
பதிவின் சுருக்கம் : வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது…
சௌனகர், "பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், எந்தப் பெரும் முனிவர்கள், ரித்விக்குகளாக இருந்தனர்?(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்?(2) ஓ சூத மைந்தா! {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று கேட்டார்.(3)
அதற்குச் சௌதி, "அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாகவும், சதஸ்யர்களாகவும் இருந்த அந்த விவேகிகளின் பெயர்களை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) சண்டபார்கவர் என்ற பிராமணர் ஹோத்ரியாக அந்த வேள்வியில் இருந்தார். வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {சண்டபார்கவர்}, சியவனரின் பரம்பரையில் வந்த புகழ் வாய்ந்தவராவார்.(5) கல்விமானும், முதிர்ந்தவரும் பிராமணரான கௌத்சர், வேத சுலோகங்களை உச்சரிக்கும் உத்கத்ரியாக இருந்தார். ஜைமினி பிராமணராகவும், சாரங்கரவர் மற்றும் பிங்களர் அத்வர்யுக்களாகவும்,(6) வியாசர் தனது மகன் {சுகர்} மற்றும் சீடர்களுடனும், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது, பிங்களர்[1] ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் பிராமணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் ஆகியோருடன்,(7-9) வேதங்களை முழுவதும் அறிந்த மற்றும் பல பிராமணர்கள் அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்யர்களாக இருந்தனர்.(10)
அந்தப் பாம்பு வேள்வியில், ரித்விக்குகள் தெளிந்த நெய்யை நெருப்பில் விட ஆரம்பித்ததும், எல்லா உயிரினங்களிடத்திலும் பயத்தை உண்டாக்கும் பயங்கரமான பாம்புகள் அந்த நெருப்பில் வந்து விழத் தொடங்கின.(11) அப்படி விழுந்த அந்தப் பாம்புகளின் கொழுப்பும், மஜ்ஜையும் {எலும்புக்குள் இருக்கும் சத்தும்} உருகி ஆறுகளாக ஓடின. பாம்புகள் தொடர்ந்து வந்து எரிந்ததால், அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் தாங்கமுடியாத கடும் நாற்றமெடுத்தது.(12) அப்படி நெருப்பில் விழுந்த மற்றும் விழுவதற்கு முன் ஆகாயத்தில் இருந்த அந்தப் பாம்புகளின் கதறல்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.(13)
அதே நேரத்தில், ஜனமேஜயன் பாம்புகளின் யாகத்தை நடத்துகிறான், என்று அறிந்ததுமே, அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் புரந்தரனின் (இந்திரன்) அரண்மனைக்குக் சென்றான்.(14) அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {பாம்பு தஷகன்}, நடந்தவைகள் அனைத்தையும் கூறி, தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு பீதியினால் இந்திரனின் பாதுகாப்பை நாடினான்.(15) {அதைக் கேட்டு} நிறைவடைந்த இந்திரன், "ஓ பாம்புகளின் இளவரசனே, ஓ தக்ஷகா, பாம்பு வேள்வியால் இந்த இடத்தில் உனக்கு எந்தப் பயமுமில்லை.(16) உனக்காக என்னால் பெருந்தகப்பன் {பிரம்மன்} சமாதானம் செய்யப்பட்டார். ஆகையால் உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். உனது இதயத்தில் இருக்கும் அச்சமானது தணியட்டும்" என்றான் {இந்திரன்}.(17)
சௌதி தொடர்ந்தார், "இப்படி அவனால் {இந்திரனால்} ஊக்குவிக்கப்பட்ட, அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {தஷகன்} இந்திரனின் இருப்பிடத்திலேயே தங்கி மகிழ்ச்சியுடன் இருந்தான்.(18) ஆனால், வாசுகி {பாம்பு}, இப்படிப் பாம்புகள் தொடர்ந்து நெருப்பில் விழுவதைக் கண்டும், தனது குடும்பம் {பாம்பினம்} ஒரு சில உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டதைக் கண்டும் மிகவும் வருந்தினான். பெரும் துயரம் கொண்ட அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} இதயம் உடையும் நிலையில் இருந்தது. அவன் {பாம்பு மன்னன் வாசுகி} தனது தங்கையை {ஜரத்காருவை} வரவைத்து,(19,20) "ஓ இனிமையானவளே! {ஜரத்காருவே}, எனது உறுப்புகள் எரிகின்றன. தேவலோகத்தின் புள்ளிகள் எனக்குத் தெரியவில்லை. நான் எனது சுயநினைவை இழந்து கீழே விழப்போகிறேன். எனது மனம் குழம்புகிறது {நிலையற்று இருக்கிறது},(21) பார்வை மங்குகிறது, எனது இதயம் உடைகிறது. உணர்விழந்து, இன்று அந்த எரியும் நெருப்பில் விழுந்துவிடப் போகிறேன்.(22)
பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} இந்த வேள்வி நமது இனத்தை அழிக்க உருவானதாகும். மரணதேவனின் வசிப்பிடத்திற்கு நானும் செல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது.(23) ஓ என் தங்கையே! {ஜரத்காருவே}, நம்மையும், நமது உறவினர்களையும் காப்பதற்கு உன்னை எதற்காக ஜரத்காருவுக்கு அளித்தேனோ, அதற்கான நேரம் வந்துவிட்டது.(24) ஓ பாம்பினப் பெண்களில் சிறந்தவளே! {ஜரத்காருவே}, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேள்வியை ஆஸ்தீகன் தடுத்து நிறுத்துவான், என்று பழங்காலத்தில் பெருந்தகப்பன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(25) எனவே, ஓ குழந்தாய்! {ஜரத்காரு} எனது பாதுகாப்புக்காகவும், என்னை நம்பியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும், வேதங்களில் முழுமை கண்டவனும், வயதில் முதிர்ந்தவர்களாலும் மதிக்கப்படுபவனான உனது மைந்தனை {ஆஸ்தீகனைக்} வேண்டிக் கேட்டுக் கொள்வாயாக" என்றான் {பாம்பு மன்னன் வாசுகி}."(26)

[1] மூலத்தில் பிங்களர் இல்லை. மூலத்தில் இவ்விடத்தில் கீழ்கணடவாறு உள்ளது. வியாச புத்திரர் மற்றும் அவர் சீடன், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது ஆகிய ஐவரும் சதஸ்யர்களாக இருந்தனர். அசிது, தேவலர், நாரதர் ஆகிய சிறந்த தேவரிஷிகளுடன் ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் பிராமணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் உள்ளிட்ட பல சன்னியாசிகளும், பிராமணர்களும் இந்த நாக வேள்வியின் சதஸ்யங்களை அறிந்த மற்றும் பலரும் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்ய கர்மத்தில் ஆங்காங்கே உதவினர். சம்ஸ்க்ருதம் அறிந்த நண்பர் தாமரையின் மூலம் கிடைத்த தகவல் இது.
அந்தப் பாம்பு வேள்வியில், ரித்விக்குகள் தெளிந்த நெய்யை நெருப்பில் விட ஆரம்பித்ததும், எல்லா உயிரினங்களிடத்திலும் பயத்தை உண்டாக்கும் பயங்கரமான பாம்புகள் அந்த நெருப்பில் வந்து விழத் தொடங்கின.(11) அப்படி விழுந்த அந்தப் பாம்புகளின் கொழுப்பும், மஜ்ஜையும் {எலும்புக்குள் இருக்கும் சத்தும்} உருகி ஆறுகளாக ஓடின. பாம்புகள் தொடர்ந்து வந்து எரிந்ததால், அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் தாங்கமுடியாத கடும் நாற்றமெடுத்தது.(12) அப்படி நெருப்பில் விழுந்த மற்றும் விழுவதற்கு முன் ஆகாயத்தில் இருந்த அந்தப் பாம்புகளின் கதறல்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.(13)
அதே நேரத்தில், ஜனமேஜயன் பாம்புகளின் யாகத்தை நடத்துகிறான், என்று அறிந்ததுமே, அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் புரந்தரனின் (இந்திரன்) அரண்மனைக்குக் சென்றான்.(14) அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {பாம்பு தஷகன்}, நடந்தவைகள் அனைத்தையும் கூறி, தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு பீதியினால் இந்திரனின் பாதுகாப்பை நாடினான்.(15) {அதைக் கேட்டு} நிறைவடைந்த இந்திரன், "ஓ பாம்புகளின் இளவரசனே, ஓ தக்ஷகா, பாம்பு வேள்வியால் இந்த இடத்தில் உனக்கு எந்தப் பயமுமில்லை.(16) உனக்காக என்னால் பெருந்தகப்பன் {பிரம்மன்} சமாதானம் செய்யப்பட்டார். ஆகையால் உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். உனது இதயத்தில் இருக்கும் அச்சமானது தணியட்டும்" என்றான் {இந்திரன்}.(17)
சௌதி தொடர்ந்தார், "இப்படி அவனால் {இந்திரனால்} ஊக்குவிக்கப்பட்ட, அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {தஷகன்} இந்திரனின் இருப்பிடத்திலேயே தங்கி மகிழ்ச்சியுடன் இருந்தான்.(18) ஆனால், வாசுகி {பாம்பு}, இப்படிப் பாம்புகள் தொடர்ந்து நெருப்பில் விழுவதைக் கண்டும், தனது குடும்பம் {பாம்பினம்} ஒரு சில உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டதைக் கண்டும் மிகவும் வருந்தினான். பெரும் துயரம் கொண்ட அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} இதயம் உடையும் நிலையில் இருந்தது. அவன் {பாம்பு மன்னன் வாசுகி} தனது தங்கையை {ஜரத்காருவை} வரவைத்து,(19,20) "ஓ இனிமையானவளே! {ஜரத்காருவே}, எனது உறுப்புகள் எரிகின்றன. தேவலோகத்தின் புள்ளிகள் எனக்குத் தெரியவில்லை. நான் எனது சுயநினைவை இழந்து கீழே விழப்போகிறேன். எனது மனம் குழம்புகிறது {நிலையற்று இருக்கிறது},(21) பார்வை மங்குகிறது, எனது இதயம் உடைகிறது. உணர்விழந்து, இன்று அந்த எரியும் நெருப்பில் விழுந்துவிடப் போகிறேன்.(22)
பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} இந்த வேள்வி நமது இனத்தை அழிக்க உருவானதாகும். மரணதேவனின் வசிப்பிடத்திற்கு நானும் செல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது.(23) ஓ என் தங்கையே! {ஜரத்காருவே}, நம்மையும், நமது உறவினர்களையும் காப்பதற்கு உன்னை எதற்காக ஜரத்காருவுக்கு அளித்தேனோ, அதற்கான நேரம் வந்துவிட்டது.(24) ஓ பாம்பினப் பெண்களில் சிறந்தவளே! {ஜரத்காருவே}, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேள்வியை ஆஸ்தீகன் தடுத்து நிறுத்துவான், என்று பழங்காலத்தில் பெருந்தகப்பன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(25) எனவே, ஓ குழந்தாய்! {ஜரத்காரு} எனது பாதுகாப்புக்காகவும், என்னை நம்பியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும், வேதங்களில் முழுமை கண்டவனும், வயதில் முதிர்ந்தவர்களாலும் மதிக்கப்படுபவனான உனது மைந்தனை {ஆஸ்தீகனைக்} வேண்டிக் கேட்டுக் கொள்வாயாக" என்றான் {பாம்பு மன்னன் வாசுகி}."(26)
ஆங்கிலத்தில் | In English |