Adoration of Astika! | Adi Parva - Section 55 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்…
ஆஸ்தீகர் சொன்னார், "பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே! {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(5)
அஜமீட குலத்தைச் சேர்ந்த தேவ மைந்தன், மன்னன் யுதிஷ்டிரன் நடத்தியதும், தேவலோகத்திலும் அறியப்படுவதுமான வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(6) தானே தலைமைப் புரோகிதராக இருந்து சத்தியவதியின் மைந்தரான கிருஷ்ணர் {கிருஷ்ண துவைபாயனர்=வியாசர்} நடத்திய வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(7) இங்கே இந்த வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் அனைவரும் (ரித்விக்குகளும், சதஸ்யர்களும்) விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலவும், பிரகாசத்தில் சூரியனுக்கு இணையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அறிந்து கொள்ள இனி வேறு எதுவும் இல்லை. அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் யாவும் அழிவற்ற தகுதியைப் {புண்ணியத்தைப்} பெறுகின்றன.(8) உனது ரித்விக்கு, துவைபாயனருக்கு {கிருஷ்ண துவைபாயனருக்கு = வியாசருக்கு} இணையான வேறு எந்த ரித்விக்கும் இந்த உலகத்தில் இல்லை என்பது எனது தீர்மானம். அவரது சீடர்கள் ரித்விக்குகளாகி, தங்கள் கடமைகளுக்குத் தகுந்தவர்களாக, உலகம் முழுவதும் பயணிக்கின்றனர்.(9)
விபாவசு என்றும், சித்ரபானு என்றும் அழைக்கப்படுபவனும், தங்கத்தைத் தன் உயிர்வித்தாகக் கொண்டவனும், கரும்புகையால் அடையாளம் காட்டப்படும் பாதையைக் கொண்டவனும், வலப்புறமாக எரியும் சுடர்களைக் கொண்டவனுமான உயரான்மா (அக்னி), உனது இந்தத் தெளிந்த நெய்யை தேவர்களுக்கு எடுத்துச் செல்லுகிறான்.(10) இந்த மனிதர்களின் உலகத்தில், உன்னைப் போல் குடிகளைக் காக்கும் மன்னன் இன்னொருவன் இல்லை. உனது விரதங்களால் நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். உண்மையில் நீயே வருணனும், நீதிதேவன் யமனும் ஆவாய்.(11)
வஜ்ரத்தைக் கைகளில் தாங்கியிருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் நீயே காக்கின்றாய். இவ்வுலகில் வேள்வி செய்வதில் உனக்கு இணையான பெருமை கொண்ட வேறு எந்த மனிதனோ, எந்த ஏகாதிபதியோ எவனும் இல்லை.(12) நீ கட்வாங்கன், நாபாகன், திலீபன் ஆகியோரைப் போன்றவன். ஆற்றலில் நீ யயாதியைப் போலவும், மாந்தாதா போலவும் இருக்கிறாய். சூரியனைப் போன்ற பிரகாசமும், அற்புதமான சபதங்களும் ஏற்றிருக்கும் ஓ ஏகாதிபதியே, நீ பீஷ்மரை போல் இருக்கின்றாய். சிறந்த நோன்புகளில் நீ பீஷ்மரைப் போன்றவனாவாய்.(13) வால்மீகியைப் போல உனது சக்தியை மறைத்து வைத்திருக்கிறாய். வசிஷ்டரைப் போல உனது கோபத்தை அடக்கி வைத்திருக்கிறாய். இந்திரனின் தலைமையைப் போல உனது தலைமையும் இருக்கிறது. உனது காந்தி{மனதைக் கவரும் ஈர்ப்புத்தன்மை} நாராயணனைப் போல இருக்கிறது.(14) நீதி வழங்குவதில் யமனைப் போல இருகின்றாய். அனைத்து அறங்களும் கொண்ட கிருஷ்ணனைப் போல இருக்கிறாய். நீயே வசுக்களின் நற்பேறுகள் நிறைந்த வீடு. எல்லா வேள்விகளுக்கும் அடைக்கலம் கொடுப்பவன் நீயே.(15) தாம்வோபவனின் பலத்திற்கு ஈடாக உனது பலம் இருக்கிறது. ராமனைப் (ஜமதக்னி மைந்தன் பரசுராமன்) போல, சாத்திரங்களிலும், ஆயுதப்பயிற்சியிலும் சிறந்திருக்கிறாய். அவுர்வா மற்றும் திரித்தனின் சக்திக்கு ஈடாக இருக்கிறது உனது சக்தி. உனது பார்வையால் பகீரதனைப் போல அச்சமூட்டுகிறாய்" {என்றார் ஆஸ்தீகர்}.(16)
சௌதி சொன்னார், "ஆஸ்தீகன் இப்படி அவர்கள் அனைவரையும், மன்னனையும் {ஜனமேஜயனையும்}, சத்யஸ்யர்களையும், ரித்விக்குகளையும், வேள்வி நெருப்பையும் வாழ்த்தி மனநிறைவடையச் செய்தார். மன்னன் ஜனமேஜயன், சுற்றியிருக்கும் சூழ்நிலையின் மாறுதல்களைக் {வேள்வி செய்வோரின் குறிப்புகளை} கவனித்துப் பேசினான்” {என்றார் சௌதி}.(17)
[1] நம் அன்புக்குரியவர்கள் என்பது உன் அன்பிற்குரியவர்கள் மற்றும் என் அன்பிற்குரியவர்கள் என இரண்டாகப் பிரிந்து பொருள் தரும். நாசூக்காக இதை வேள்வியில் சொல்வதன் மூலம் புகழும்பொழுதே என் உறவினர்களுக்கு கருணை காட்டுவாயாக என வேண்டிக் கொள்கிறார் ஆஸ்திகர். நமக்குச் சம்பந்தம் இல்லாதோர் நம் என்னும் வார்த்தையை உபயோகிக்கும் பொழுது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
அஜமீட குலத்தைச் சேர்ந்த தேவ மைந்தன், மன்னன் யுதிஷ்டிரன் நடத்தியதும், தேவலோகத்திலும் அறியப்படுவதுமான வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(6) தானே தலைமைப் புரோகிதராக இருந்து சத்தியவதியின் மைந்தரான கிருஷ்ணர் {கிருஷ்ண துவைபாயனர்=வியாசர்} நடத்திய வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(7) இங்கே இந்த வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் அனைவரும் (ரித்விக்குகளும், சதஸ்யர்களும்) விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலவும், பிரகாசத்தில் சூரியனுக்கு இணையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அறிந்து கொள்ள இனி வேறு எதுவும் இல்லை. அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் யாவும் அழிவற்ற தகுதியைப் {புண்ணியத்தைப்} பெறுகின்றன.(8) உனது ரித்விக்கு, துவைபாயனருக்கு {கிருஷ்ண துவைபாயனருக்கு = வியாசருக்கு} இணையான வேறு எந்த ரித்விக்கும் இந்த உலகத்தில் இல்லை என்பது எனது தீர்மானம். அவரது சீடர்கள் ரித்விக்குகளாகி, தங்கள் கடமைகளுக்குத் தகுந்தவர்களாக, உலகம் முழுவதும் பயணிக்கின்றனர்.(9)
விபாவசு என்றும், சித்ரபானு என்றும் அழைக்கப்படுபவனும், தங்கத்தைத் தன் உயிர்வித்தாகக் கொண்டவனும், கரும்புகையால் அடையாளம் காட்டப்படும் பாதையைக் கொண்டவனும், வலப்புறமாக எரியும் சுடர்களைக் கொண்டவனுமான உயரான்மா (அக்னி), உனது இந்தத் தெளிந்த நெய்யை தேவர்களுக்கு எடுத்துச் செல்லுகிறான்.(10) இந்த மனிதர்களின் உலகத்தில், உன்னைப் போல் குடிகளைக் காக்கும் மன்னன் இன்னொருவன் இல்லை. உனது விரதங்களால் நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். உண்மையில் நீயே வருணனும், நீதிதேவன் யமனும் ஆவாய்.(11)
வஜ்ரத்தைக் கைகளில் தாங்கியிருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் நீயே காக்கின்றாய். இவ்வுலகில் வேள்வி செய்வதில் உனக்கு இணையான பெருமை கொண்ட வேறு எந்த மனிதனோ, எந்த ஏகாதிபதியோ எவனும் இல்லை.(12) நீ கட்வாங்கன், நாபாகன், திலீபன் ஆகியோரைப் போன்றவன். ஆற்றலில் நீ யயாதியைப் போலவும், மாந்தாதா போலவும் இருக்கிறாய். சூரியனைப் போன்ற பிரகாசமும், அற்புதமான சபதங்களும் ஏற்றிருக்கும் ஓ ஏகாதிபதியே, நீ பீஷ்மரை போல் இருக்கின்றாய். சிறந்த நோன்புகளில் நீ பீஷ்மரைப் போன்றவனாவாய்.(13) வால்மீகியைப் போல உனது சக்தியை மறைத்து வைத்திருக்கிறாய். வசிஷ்டரைப் போல உனது கோபத்தை அடக்கி வைத்திருக்கிறாய். இந்திரனின் தலைமையைப் போல உனது தலைமையும் இருக்கிறது. உனது காந்தி{மனதைக் கவரும் ஈர்ப்புத்தன்மை} நாராயணனைப் போல இருக்கிறது.(14) நீதி வழங்குவதில் யமனைப் போல இருகின்றாய். அனைத்து அறங்களும் கொண்ட கிருஷ்ணனைப் போல இருக்கிறாய். நீயே வசுக்களின் நற்பேறுகள் நிறைந்த வீடு. எல்லா வேள்விகளுக்கும் அடைக்கலம் கொடுப்பவன் நீயே.(15) தாம்வோபவனின் பலத்திற்கு ஈடாக உனது பலம் இருக்கிறது. ராமனைப் (ஜமதக்னி மைந்தன் பரசுராமன்) போல, சாத்திரங்களிலும், ஆயுதப்பயிற்சியிலும் சிறந்திருக்கிறாய். அவுர்வா மற்றும் திரித்தனின் சக்திக்கு ஈடாக இருக்கிறது உனது சக்தி. உனது பார்வையால் பகீரதனைப் போல அச்சமூட்டுகிறாய்" {என்றார் ஆஸ்தீகர்}.(16)
சௌதி சொன்னார், "ஆஸ்தீகன் இப்படி அவர்கள் அனைவரையும், மன்னனையும் {ஜனமேஜயனையும்}, சத்யஸ்யர்களையும், ரித்விக்குகளையும், வேள்வி நெருப்பையும் வாழ்த்தி மனநிறைவடையச் செய்தார். மன்னன் ஜனமேஜயன், சுற்றியிருக்கும் சூழ்நிலையின் மாறுதல்களைக் {வேள்வி செய்வோரின் குறிப்புகளை} கவனித்துப் பேசினான்” {என்றார் சௌதி}.(17)
ஆங்கிலத்தில் | In English |