Indra cast off Takshaka! | Adi Parva - Section 56 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 44)
பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...
ஜனமேஜயன், "இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்" என்றான்.(1)
அதற்குச் சதயஸ்யர்கள், "பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்."(2)
சௌதி தொடர்ந்தார், "மன்னன் {ஜனமேஜயன்} அந்தப் பிராமணச் சிறுவனிடம் {ஆஸ்தீகனிடம்}, "ஒரு வரத்தைக் கேள்" என்றான். இதனால் அதிருப்தி அடைந்த ஹோத்ரி {சண்டபார்கவர்}, "தக்ஷகன் இன்னும் இந்த வேள்விக்குள் வரவில்லை" என்றார்.(3)
ஜனமேஜயன், "உங்கள் பலத்தில் சிறந்ததைச் செய்து, தக்ஷகனை விரைவாக வர வைத்து, இந்த வேள்வியை முடித்து வையுங்கள். அவன் {தஷகன்} எனது எதிரி" என்றான்.(4)
அதற்கு ரித்விக்குகள், "சாத்திரங்கள் அறிவிப்பதும், இந்த நெருப்பு {அக்னி பகவானும்} சொல்வதும், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தக்ஷகன் அச்சத்தால் பீடிக்கப்பட்டு இந்திரனின் இருப்பிடத்தில் இருக்கிறான் (என்றே தெரிகிறது)" என்றனர்.(5)
சௌதி தொடர்ந்தார், "புராணங்களில் தெளிந்த அறிவுடையவரும், லோஹிதாக்ஷன்[1] என்ற பெயரைக் கொண்ட சிறப்புமிக்க சூதர் ஒருவரும் முன்பே இதைச் சொல்லியிருக்கிறார். அவர் {லோஹிதாக்ஷர்}, மன்னனால் {ஜனமேஜயனால்} தற்போது கேட்கப்பட்டு, அந்த ஏகாதிபதியிடம் மீண்டும்,(6) "ஐயா {ஜனமேஜயரே}, பிராமணர்கள் கூறுவதையே புராணங்களை அறிந்த நானும் சொல்கிறேன், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயரே}, இந்திரன் "என்னிடம் மறைவாக இருப்பாயாக. அக்னி உன்னை எரிக்கமாட்டான்" என்ற வரத்தை அவனுக்கு {தஷகனுக்கு} அளித்திருக்கிறான்" என்றார்.(7)
சௌதி தொடர்ந்தார், "வேள்வியில் அமர்த்தப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, இதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டு, ஹோத்ரியைத் {சண்டபார்கவரைத்} தனது கடமையைச் செய்யத் தூண்டினான். அந்த ஹோத்ரி, மந்திரங்களை உச்சரித்து, தெளிந்த நெய்யை நெருப்பில் விடும்போது இந்திரன் அங்கே தோன்றினான்.(8) அந்தச் சிறப்பு மிகுந்தவன், தேவர்கள் சுற்றிலும் நின்று போற்ற, மேகக் கூட்டங்களும், தேவலோக பாடகர்களும், தேவலோக நடன மாதர்களின் கூட்டங்களும் பினதொடர தன் தேரில் தெரிந்தான்.(9)
தக்ஷகன் பயத்தினால் கலக்கமடைந்து இந்திரனின் மேலாடையினுள் ஒளிந்து கொண்டு கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தான். மன்னன் {ஜனமேஜயன்} மிகுந்த கோபம் கொண்டு, தக்ஷகனை அழிக்கும் நோக்கத்தில் மந்திரங்கள் அறிந்த பிராமணர்களிடம்,(10) "அந்தப் பாம்பு தக்ஷகன், இந்திரனிடம் இருந்தால், அவனை {தஷகனை} இந்திரனோடே வந்து இந்த நெருப்பில் விழச்செய்யுங்கள்" என்றான் {ஜனமேஜயன்}.(11)
சௌதி தொடர்ந்தார், "இவ்வாறு தக்ஷகனைக் குறித்து ஜனமேஜயனால் தூண்டப்பட்ட ஹோத்ரி அங்கிருந்த அவனது {தஷகனின்} பெயரைச் சொல்லி நெய்யை ஊற்றினார்.(12) அப்படி ஆகுதி ஊற்றப்படும்போது, கலவரமடைந்த தக்ஷகன், புரந்தரனுடன் {இந்திரனுடன்} உடனே வானத்தில் தெரிந்தான்.(13) புரந்தரன் {இந்திரன்}, அந்த வேள்வியைப் பார்த்து எச்சரிக்கையடைந்து விரைவாகத் தக்ஷகனைக் கைவிட்டுத் தனது இருப்பிடம் திரும்பினான்.(14) இந்திரன் அப்படிச் சென்றதும், அந்தப் பாம்பு இளவரசனான தக்ஷகன் அச்சத்தால் உணர்விழந்து, மந்திரங்களின் வலிமையால் வேள்வி நெருப்பின் அருகே வந்துவிட்டான்.(15)
அப்போது ரித்விக்குகள், "ஓ மன்னர் மன்னா! {ஜனமேஜயா} உனது வேள்வி சிறப்பாக நடக்கிறது. ஓ தலைவா! இனி நீ இந்த பிராமணர்களில் முதல்வனுக்கு {ஆஸ்தீகனுக்கு} வரத்தை அருளலாம்" என்றனர்.(16)
ஜனமேஜயன், "அளவற்ற அழகுடன் குழந்தையைப் போல் இருப்பவரே, உமக்குத் தக்க வரமளிக்க விரும்புகிறேன். அதனால், உமது இதயத்தில் நீர் விரும்புவதைக் கேளும். கொடுக்க முடியாததையும் உமக்குக் கொடுக்கிறேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றான்.(17)
ரித்விக்குகள், "ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} தக்ஷகன் விரைவாக உனது கட்டுப்பாட்டுக்கள் வருவதைப் பார். அவனது {தஷகனது} கொடூரமான கதறலும், சத்தமான உருமலும் கேட்கிறது பார்.(18) நிச்சயமாக வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அந்தப் பாம்பைக் கைவிட்டுவிட்டான். உனது மந்திரங்களால் அவனது உடல் செயலிழந்துள்ளது, அவன் {தஷகன்} மேலுலகில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறான். இப்போது, வானத்தில் உருண்டு, சுய உணர்வை இழந்து, சத்தமாக மூச்சுவிட்டுக் கொண்டு அந்தப் பாம்புகளின் இளவரசன் {தஷகன்} வந்து கொண்டிருக்கிறான்" என்றனர்."(19)
சௌதி தொடர்ந்தார், "அவ்வாறு அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் அந்த வேள்வித்தீயில் விழுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன், அந்தக் குறுகிய காலத்திற்குள் ஆஸ்தீகர்,(20) "ஓ ஜனமேஜயா! நீ எனக்கு ஒரு வரம் அருள்வதாக இருந்தால், இந்த உனது வேள்வி இத்தோடு முடிவுக்கு வரட்டும். மேலும் பாம்புகள் இந்தத் தீயில் விழ வேண்டாம்" என்றார் {ஆஸ்தீகர்}.(21)
ஓ பிராமணரே! {சௌனகரே}, அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்}, ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டதால் மிகவும் வருந்தி அவரிடம் {ஆஸ்தீகரிடம்},(22) "ஓ சிறந்தவரே! தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று நீர் எதை விரும்பினாலும் நான் தருகிறேன். ஆனால் எனது வேள்வி நிற்காதிருக்கட்டும்" என்றான் {ஜனமேஜயன்}.(23)
ஆஸ்தீகர், "நான் தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று எதையும் உன்னிடம் கேட்கவில்லை. ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} உனது இந்த வேள்வி இத்தோடு நிற்கட்டும். எனது தாய்வழி {பெண் பாம்பு ஜரத்காருவின்} உறவினர்கள் {பாம்புகள்} இதனால் விடுதலை அடையட்டும்" என்றார்.(24)
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டு, மீண்டும் மீண்டும் அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவரிடம் {ஆஸ்தீகரிடம்},(25) "பிராமணர்களில் சிறந்தவரே, வேறு ஏதாவது வரத்தைக் கேளும். நீர் அருளப்பட்டு இருப்பீர்!" என்றான். ஆனால், ஓ பிருகு குலத்தோரே! {சௌனகரே} அவர் {ஆஸ்தீகர்} வேறு எந்த வரத்தையும் வேண்டவில்லை.(26) அதன்பிறகு வேதமறிந்த சத்யஸ்யர்களும் அனைவரும் ஒருமித்த குரலில் மன்னனிடம் {ஜனமேஜயனிடம்}, "இந்த பிராமணன் தனது வரத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்" என்றனர்."(27)

[1] சிவந்த கண்களைக் கொண்டவர் என்று பொருள்

ஆங்கிலத்தில் | In English |