The enquiry of Narada | Sabha Parva - Section 5E | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம்)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நீ அந்தணர்களையும், ஞானிகளையும் அவர்களது தரத்துக்கு ஏற்றபடியும், கல்வியின் பல கிளைகளில் அவர்கள் அடைந்த தகுதியின் அடிப்படையிலும் வழிபடுகிறாயா? உனக்கு முன்பே இருந்த மனிதர்களால் பயிலப்பட்ட மூன்று வேதங்களை அடிப்படையாகக் கொண்ட அறத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களை நீயும் பின்பற்றுகிறாயா? சாதித்த அந்தணர்கள் உனது இல்லத்தில் சத்துள்ள அற்புதமான உணவால் உனது பார்வையில் கொண்டாடப்படுகிறார்களா? அந்த விருந்தின் முடிவில் பணம் சம்பந்தமான பரிசுகளை அவர்கள் பெறுகிறார்களா? ஆசைகளை உன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, மனதில் ஒருமையுடன், வாஜபேயம் மற்றும் புண்டரிகம் {Vajapeya and Pundarika} என்ற வேள்விகளை அதன் முழு சடங்குகளுடன் செய்ய முயற்சிக்கிறாயா?
உனது உறவினர்களுக்கும், மூத்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், தேவர்களுக்கும், துறவிகளுக்கும், அந்தணர்களுக்கும், மக்களுக்கும் நன்மையைச் செய்து கொண்டு கிராமங்களில் இருக்கும் நெடிய (ஆல) மரங்களுக்கும் நீ தலை வணங்குகிறாயா?
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, யாருடைய துன்பத்துக்கும் கோபத்துக்கும் காரணமாய் நீ இருக்கிறாயா? மூன்று அதிர்ஷ்டமான கனிகளை அருளும் புரோகிதர்கள் உனது அருகில் இருக்கிறார்களா? ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் சொன்னவாறு உனது நாட்டங்களும் பயிற்சிகளும் இருக்கின்றனவா? இவைகள் {மேலே சொன்னவைகள்} ஒருவனது புகழை பரப்பி, அறம், இன்பம் மற்றும் பொருளுக்குக் காரணமாக இருந்து வாழ்வின் நீட்சியை மேம்படுத்தும். நான் மேற்சொன்ன வழிகளில் தன்னை அமைத்துக் கொள்பவன், தனது நாடு துயரத்திலோ அல்லது பாதிக்கப்பட்டோ இருப்பதைக் காண மாட்டான்; அந்த ஏகாதிபதி முழு உலகத்தையும் வென்று, உயர்ந்த இன்பநிலையை அனுபவிப்பான்.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சாத்திரமறியா அமைச்சர்களின் பேராசை கொண்ட செயலால், நன்னடத்தையுள்ள, தூய ஆன்மா கொண்ட, மரியாதைக்குரிய நபர் யாரும், பொய்க் குற்றச்சாட்டின் பேரிலோ, திருட்டு காரணமாகவோ பாழாக்கப்படாமல், கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்கள் பேராசையின் காரணமாக செல்வத்துடன் பிடிபட்ட உண்மையான திருடர்களை தப்ப விடவில்லை என நான் நம்புகிறேன்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உனது அமைச்சர்களை லஞ்சத்தால் வெல்ல முடியாது என்றும், ஏழை பணக்காரனிடையே நடக்கும் சச்சரவுகளில் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன். மன்னர்கள் ஆட்படக்கூடாத பதின்நான்கு{14} தீமைகளான நாத்திகம் {1}, பொய்மை {2}, கோபம் {3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை} {4}, காலம் கடத்துதல் {5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல் {6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல் {Idle} {7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்} {8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்வது {9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுவது {10}, ஒரு தீர்க்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவது {11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல் {12}, நன்மைக்கான மங்கள காரியங்களைச் செய்யாமை {13}, எதையும் சிந்திக்காமல் செய்வது {14} - ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா? ஓ! மன்னா இவற்றால், ஏகாதிபதிகள் பாழடையாமல் தங்கள் அரியணையில் நிலைத்தும் இருப்பார்கள். உனது வேதகல்வி, உனது செல்வம் மற்றும் சாஸ்த்திர ஞானம், திருமணம் ஆகியவை கனி கொடுத்திருக்கின்றனவா?" என்ற கேட்டார் {நாரதர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "முனிவர் {நாரதர்} முடித்ததும், யுதிஷ்டிரன், "ஓ! முனிவரே, எப்படி வேதம், செல்வம், மனைவி, சாத்திர ஞானம் ஆகியவை கனி கொடுக்கின்றன?" என்று கேட்டான்.
அதற்கு முனிவர் {நாரதர் யுதிஷ்டிரனிடம்}, "வேதங்கள், அதைப் படித்து முடித்து, அக்னிஹோத்ரமும், வேள்விகளும் செய்ய ஆரம்பித்ததும் கனியைக் கொடுக்கிறது. செல்வம், ஒருவன் அதை அனுபவித்து பிறகு அதைத் தானமாகக் கொடுக்கும்போது கனியைக் கொடுக்கிறது. ஒரு மனைவி, அவள் பயன்படும்போதும், பிள்ளைகளைப் பெறும்போதும் கனி கொடுக்கிறாள். சாத்திர ஞானம், அடக்கத்தினாலும், நன்னடத்தையாலும் கனி கொடுக்கிறது," என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பெரும் துறவியான நாரதர், யுதிஷ்டிரனிடம் அப்படிப் பதிலுரைத்து மேலும் அந்த ஆட்சியாளனிடம், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சமூகத்தின் வரிகளில் இருந்து சம்பளம் கொடுக்கப்படும் உனது அரசாங்கத்தின் அதிகாரிகள், லாபத்தின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்படாமல், வெகுதூரத்தில் இருந்து வரும் வணிகர்களிடம் இருந்து சரியான நிலுவைகளைத்தான் {சுங்கத்தைத் தான்} வசூலிக்கிறார்களா? ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது நாட்டுக்கும் தலைநகருக்கும் பொருட்களைக் கொண்டு வரும் வணிகர்கள், போலி காரணங்கள் மூலம் ஏமாற்றப்படாமல் (பொருள் வாங்குபவர்களாலும் {நுகர்வோராலும்}, அதிகாரிகளாலும் {அரசாங்கத்தாலும்}) மரியாதையாக நடத்தப்படுகிறார்களா?
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்த முதியோர்கள் சொல்லும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கிறாயா? விவசாய உற்பத்தி, பசுக்கள், கனிகள் மற்றும் மலர்கள் பெருகவும் அறம் வளரவும் அந்தணர்களுக்கு தேனையும், தெளிந்த நெய்யையும் பரிசாகக் கொடுக்கிறாயா? ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் நியமிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றுக் கலைஞர்களுக்கு, நான்கு மாதத்திற்கு வேண்டிய அளவு வேலைக்குத் தேவையான பொருட்களையும், அவர்களது கூலியையும் முன்பே கொடுக்கிறாயா? உன்னால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த வேலையைக் கண்டு, அவர்கள் சிறப்பை நல்ல மனிதர்கள் முன்னிலையில் பாராட்டி, பரிசளித்து, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறாயா?
ஓ! பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, யானைகள், குதிரைகள், ரதங்கள் குறித்த விஷயங்களில் (முனிவர்களின்) பழமொழிகளைப் {aphorism} பின்பற்றுகிறாயா?
ஓ! பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நகருக்கும் செறிவூட்டப்பட்ட இடங்களுக்கும் பயன்படும், ஆயுத அறிவியல், போரில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் குறித்த பழமொழிகளும், உனது சபையில் படிக்கப்படுகிறதா?
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, புதிர் நிறைந்த அனைத்து மந்திரங்களையும், எதிரிகளை அழிக்கும் அனைத்து விஷங்களின் ரகசியங்களையும் அறிந்து வைத்திருக்கிறாயா? நெருப்பு, பாம்புகள், மற்றும் உயிருக்கு நாசத்தை விளைவிக்கக்கூடிய மற்ற மிருகங்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் இருக்கும் பயத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கிறாயா? அனைத்துக் கடமைகளையும் அறிந்த நீ, உனது தந்தை, குருடர், ஊமை, முடவர், உருக்குலைந்தவர் {அவலட்சணமானவர்}, நண்பர்கள் இல்லாதவர்கள், வீடில்லாத துறவிகள் ஆகியோரை ஆதரித்து வருகிறாயா? ஓ! ஏகாதிபதி, உறக்கம் {1), சோம்பல் {2}, அச்சம் {3}, கோபம் {4}, மன பலவீனம் {5}, காலம் கடத்துதல் {6} என்ற ஆறு தீமைகளை வெளியேற்றிவிட்டாயா?

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், சிறப்பு மிகுந்த குருக்களின் காளை {யுதிஷ்டிரன்}, அந்த அந்தணர்களில் சிறந்தவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவரைப் {நாரதரைப்} பணிந்து வணங்கி, அவரது பாதங்களை வழிபட்டான். அவர் {நாரதர்} கேட்ட அனைத்திலும் திருப்தி கொண்ட அந்த ஏகாதிபதி, தெய்வீக உருவில் இருந்த நாரதரிடம், "நீர் வழிகாட்டிய படியே நடந்து கொள்கிறேன். உமது அறிவுறுத்தலால் எனது ஞானம் விரிந்திருக்கிறது {வளர்ந்திருக்கிறது}," என்று சொல்லிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டு, *கடல்களைக் கச்சையாக அணிந்த முழு உலகையும் சரியான நேரத்தில் பெற்றான். நாரதர் மறுபடியும் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வகைகளைக் காக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மன்னன், அவனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தி, இதற்குப் பிறகு அவன் சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை (விண்ணுலகத்தை) அடைவான்.”{என்றார் நாரதர்}.
----------------------------------------------------------------
*கடல்களை கச்சையாக அணிந்த முழு உலகையும்.....
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம்.
வியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையேச அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம்.
தற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில...
இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.