நண்பர்களே,
மகாபாரதம் போன்ற இதிகாசத்தைப் படிப்பதைவிட, ஒருவர் படிக்கும்போது அதைக் கேட்பது நன்றாக இருக்கும் என்று சொல்வார் என் அன்பப்பா {தாய் வழி தாத்தா}. அவர் காலத்திலெல்லாம் டிவி கிடையாதல்லவா? ஊர்த்திண்ணையில் மகாபாரதம் படிக்கப்படும்போது, அதை ஊர்மக்கள் அனைவரும் கூடி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். இன்று நம்மிடையே அந்த நிலையில்லை.
நமது பதிவுகளை ஒலிவடிவத்தில் மக்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நான் கருதியதுண்டு. அதற்காக நானே கூட பதிவுகளைப் படித்து, அதை ஒலிப்பதிவு செய்து முயற்சி செய்து பார்த்தேன். அது கேட்பதற்கு நன்றாக இல்லாததால் அம்முயற்சியைக் கைவிட்டேன்.
முகநூலில் சமீபத்தில் தீபா நடராஜன் என்ற வாசக நண்பர், மகாபாரதத்தை ஏன் ஒலிவடிவத்தில் கொடுக்கக்கூடாது என்று கேட்டார். நான் செய்த முயற்சியைச் சொல்லி, வேறு யாராவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். நான் செய்கிறேன் என்றார். செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்வேன் என்று நான் சொன்னேன்.
சொல்லி சில நாட்களிலேயே முதல் பதிவை ஒலியாகப் பதிந்து, எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள், திருத்தங்கள் வேண்டியிருக்கிறதா என்று கேட்டார். நான் சில திருத்தங்கள் இருந்தாலும் பரவாயில்லை, நாம் அடுத்தடுத்த பதிவுகளுக்குச் சென்றுவிடலாம். திருத்தங்கள் தோன்றும்போது அதை அடுத்த பதிவிலிருந்து திருத்திக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
தீபா நடராஜன் குறித்து ஒரு அறிமுகம்
(இது நான் அவரிடமே கேட்டுப் பெற்றது}
தீபா நடராஜன் பிரஞ்சு மொழி பேராசிரியராவார். தஞ்சாவூர் ஓவியக்கலை நிபுணர். வேலூரில் வசிக்கிறார். இவரது பூர்வீகம் திண்டிவனம். கல்வி {academic}, சான்றிதழ் {certificate}, குடியேற்றும் {immigration} சார்ந்த தேர்வுகளுக்காக மாணவர்களை ஆன்லைன் மூலமாகவும் தனிவகுப்புகள் மூலமும் பயிற்றுவிக்கிறார். மேலும் தஞ்சாவூர் ஓவியக்கலை மற்றும் பிற கலைகளையும் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.
அவர் அனுப்பித் தந்த ஆதிபர்வத்தின் முதல் பதிவை இங்கே பதிவிறக்கத்திற்குக் கொடுக்கிறேன்.

ஆன்லைனிலேயே கேட்க...
யூ-டியூபில்...
இனி அவர் அனுப்பித்தரும் ஒலிப்பதிவுகளை அந்தந்தப் பதிவின் கீழேயே பதிவிறக்கத்திற்குக் கொடுக்க இருக்கிறேன். வாசகர்கள் இம்முயற்சிக்குத் தங்கள் ஆதரவைத் தரவேண்டும்.
எப்படி ஆதரவு தருவது என்று கேட்கிறீர்களா? இந்த ஒலிக்கோப்பை பதிவிறக்கும் செய்து, உங்கள் தாய் தந்தைக்கோ வேறு பெரியோருக்கோ கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். அவர்கள் தரும் பின்னூட்டங்களை எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். அதுவே நீங்கள் எங்களுக்குத் தரும் ஆதரவாகும்.
தானாக முன்வந்து ஆடியோ கோப்பை அனுப்பித் தந்த தீபா நடராஜன் அவர்களுக்கு நன்றி.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.