Showing posts with label தீபா நடராஜன். Show all posts
Showing posts with label தீபா நடராஜன். Show all posts

Friday, October 24, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 16-18

ஆதிபர்வம் பகுதி 16 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: வெகு காலத்திற்குப் பிறகு, கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இருமுட்டைகளையும் இட்டனர். அவர்களது பெண் உதவியாளர்கள் அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களின் வைத்தனர். ஐநூறு {500} வருடங்கள் இப்படியே சென்றன, கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, குஞ்சுகள் வெளியே வந்தன. ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை. பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தனது முட்டையில் ஒன்றை உடைத்தாள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section16.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதிபர்வம் பகுதி 17 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: காந்தி மிக்க தோற்றத்துடன் தங்கம் போன்ற சூரியக் கதிர்களைத் தன்னகத்தே அடக்கிக் கொண்டு வெளியே விடாத மேரு என்ற பெயர் கொண்ட மலை ஒன்று இருந்தது. அது தங்கத்தால் நிறைந்த அழகான மலை. அதில் தேவர்களும், கந்தர்வர்களும் வசித்தனர். பாவங்கள் நிறைந்த மனிதர்களால் அந்த மலையை நெருங்கக்கூட முடியாது. பயங்கரமான மிருகங்கள் அந்த மலையின் மார்பில் அலைந்து கொண்டிருந்தன. சாதாரண மக்கள் அந்த மலையில் ஏற சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது. மரங்களும், அருவிகளும், இனிய குரலில் மெல்லிசை பாடும் பறவைகளும் அந்த மலையில் நிறைந்திருந்தன. தேவர்கள் அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு அமுதத்திற்காக தவம் இருந்தனர். தேவர்களின் இந்த ஊக்கத்தைக் கண்ட நாராயணர் பிரம்மனிடம், "தேவர்களையும் அசுரர்களையும் கொண்டு அந்த பாற்கடலைக் கடையச் செய்யும். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section17.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 18 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்தக் கடினமானப் பணியைப் பாம்புகளின் இளவரசனான ஆனந்தனுக்கு (பாம்புக்கு) கொடுத்தான், தாமரைக்கண்ணன் (விஷ்ணு). ஓ அந்தணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் வழிகாட்டப்பட்ட அந்த பலம்பொருந்திய ஆனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான். தேவர்கள், பாற்கடலின் கரைக்கு ஆனந்தனுடன் வந்து, கடலிடம், "ஓ கடலே; நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்", என்றனர், அதற்கு அந்தக் கடல், "அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் நீரடிப்பையும், நீர் சுழற்சியையும் (நீர் கலங்குதல்) என்னால் தாங்கிக் கொள்ள முடியும்", என்றது. அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் (திருமாலின் கூர்ம அவதாரம்) சென்று, "ஓ ஆமை மன்னா, நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்." என்றனர். ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை ஆமையின் முதுகில் எடுத்து வைத்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section18.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Tuesday, September 02, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 13-15

ஆதிபர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஆஸ்தீகரின் தந்தை, பிரஜாபதியை {தக்‌ஷனை} போன்ற சக்தி படைத்தவர். அவர் பக்தியில் உறுதிமிக்க ஒரு பிரம்மச்சாரி. காமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த மிகப்பெரிய துறவியான அவர் எப்போதாவதுதான் சாப்பிடுவார். அவர் ஜரத்காரு {Jaratkaru} என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார். யயவரர்களில் முதன்மையான அவர் {ஜரத்காரு}, அறம்சார்ந்த கடுமையான விரதங்களில் (தர்மம் சார்ந்த கடுமையான விரதங்களில்) உறுதிமிக்கவர். பெரும் ஆன்மசக்திகளைக் கொண்டு, பெரிய ஆசி பெற்று, ஒரு முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார். வித்தியாசமான இடங்களுக்குச் சென்றார், புனித ஆறுகளில் நீராடினார். பொழுது எங்கே இருட்டுகிறதோ அங்கே இளைப்பாறினார். இயல்பான மனிதர்களால் செய்ய முடியாத கடும் விரதங்களை பெரும் சக்தியோடு செய்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section13.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதிபர்வம் பகுதி 14 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் அந்தணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் மனைவியைத் தேடி அலைந்தார். கிடைத்தாளில்லை. ஒருநாள், அடர்ந்த கானகத்திற்குள் சென்று தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து உரமில்லாக்குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார். அப்போது வாசுகி {ஆண் பாம்பு} எழுந்து, தனது தங்கையை அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் அந்தணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்க வேண்டுமே என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார். அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்.' என நினைத்துக் கொண்டு வாசுகியிடம், "உமது தங்கையின் பெயர் என்ன என்று உண்மையைக் கூறு, ஓ பாம்பே" என்று கேட்டார் {ஜரத்காரு}. - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section14.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 15 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: பின்பு வெகு காலத்திற்குப் பிறகு, பாண்டவ வழியில் வந்த ஒரு மன்னன் {ஜனமேஜயன்} ஒரு பெரிய நாக வேள்வியை நடத்தினான். அந்த {நாக} வேள்வி பாம்புகளின் அழிவிற்காக நடத்தப்பட்டது. ஆஸ்தீகர், தனது சகோதரர்களும், தாய்வழி மாமன்களுமான அந்தப் பாம்புகளையும் மற்ற பாம்புகளையும் (நெருப்பு மரணத்திலிருந்து) காப்பாற்றினார். தான் பிள்ளைப் பேறு பெற்றதால் அவரது மூதாதையர்களையும் விடுவித்தார். ஓ அந்தணரே {சௌனகரே}, ஜரத்காரு, தனது கடுமையான விரதங்களாலும், தவத்தாலும், ஆழ்ந்த வேத கல்வியினாலும், தனது கடமைகள் அனைத்திலுமிருந்து விடுபட்டார். வேள்விகளால் தேவர்களைத் திருப்தி செய்து, பிரம்மச்சரியத்தால் முனிவர்களைத் திருப்தி செய்து, ஒரு மகனை {ஆஸ்தீகரை} பெற்றதால் தனது மூதாதையர்களையும் {யயவரர்களையும்} திருப்தி செய்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section15.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, August 17, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 6-12

ஆதிபர்வம் பகுதி 6 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமா, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள். தனது மைந்தனின் களங்கமற்ற மனைவி அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மா கண்டான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உருவாக்கியது. அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியின் பாதங்களில் உருண்டோடியது. எல்லா உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியால் {புலோமாவால்} உற்பத்தியான அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதூசரை என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து சென்றது. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section6.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



ஆதிபர்வம் பகுதி 7 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். வருடக் கணக்காக நடைபெறும் வேள்விகளில் இருக்கிறேன். புனித சடங்குகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். வேத மந்திரங்களுடன் எனதுச் சுடர்களின் மேல் இடப்படும் நெய்யை தேவர்களும், பித்ருக்களும் பெற்று சாந்தம் அடைகின்றனர். தேவர்களும், பித்ருக்களும் நீர் ஆவர். வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சம பங்கு உரிமை உள்ளது. ஆகையால் தேவர்களும், பித்ருக்களும் வேறுவேறாகார். அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள். அந்த தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். அதனால், என்னை தேவர்களின் வாய் என்று சொல்வர். முதல்மதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், சுத்திகரிக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், எப்படி எல்லாவற்றையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) என்னால் சாப்பிட முடியும்?" என்றான் {அக்னி} - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section7.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 8 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: முன்பொரு காலத்தில் தவச்சக்தியும், கல்வியும், எல்லா உயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசா என்ற ஒரு முனி இருந்தார். ஓ அந்தண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக மங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான். ஓ பிருகுவின் வழித்தோன்றலே, அந்த அப்சர மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அந்தப் புதிதாகப் பிறந்த குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டாள். ஓ அந்தணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் பாசத்தையும் அவமானத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள். அந்த அந்தண முனி ஸ்தூலகேசர் அந்தக் குழந்தையைக் கண்டார். அது ஒரு பெண்குழந்தை என்பதைக் கண்டார். அதன் அழகையும், காந்தியையும் கண்டு அதன் மீது பரிவு ஏற்பட்டு, அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section8.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 9 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: "தனது துணையை இழந்த ருரு இப்படி கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் {a messenger from heaven} ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்}, "ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உச்சரித்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை. கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த இந்த அப்பாவிக் குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உனது இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே. இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் முன்பே அவளது உயிரின் மீட்பைப் பற்றி சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரம்மத்வாரா கிடைக்க வாய்ப்பிருக்கிறது," என்றான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section9.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அதற்கு துந்துபா, "ஓ அந்தணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவிலேயே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்பாம்புகளை} நீ கொல்லுதல் கூடாது. மற்ற பாம்பு வகைகளிலும் கடிக்கும் வகையுள்ளன. அவற்றின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர் பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவர்களின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் இதையறியாமல் துந்துபாக்களைக் {நீர் பாம்புகளைக்} கொன்றுவிடாதே," என்றது. - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section10.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: துந்துபா வகை பாம்பு {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், எனக்கு காகமா என்ற நண்பன் இருந்தான். அவன் பேச்சில் வல்லவனாக, கடுந்தவங்களின் பயனால் ஆன்மிக சக்தியுடன் இருந்தான். ஒருநாள் அவன் {காகமா} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி அவனை {காகமாவை} பயமுறுத்தினேன்.  அவன் மயக்கமுற்று விழுந்தான். உண்மை பேசும், தனது உறுதிகளில் உறுதியாய் இருக்கும் துறவியான அவனுக்கு புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு, "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை பயமுறுத்தியதால், நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போ" என்ற சபித்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section11.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


ஆதிபர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: மறைந்த முனிவரைத் {சஹஸ்ரபத்தைத்} தேடி ருரு ஓடினான். அந்தக் கானகத்தில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாமல், களைத்து, சோர்வடைந்து தரையில் விழுந்தான். முனிவர் {சஹஸ்ரபத்} சொன்னதை மனதில் நினைத்துப் பார்த்தான். மிகவும் குழம்பிப் போய் புலன் உணர்வை இழந்தான். உணர்வு மீண்டதும், ருரு தனது இல்லத்திற்கு வந்து, தனது தந்தையிடம் {பிரம்மாதியிடம்} இந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டான். அப்படிக் கேட்கப்பட்டதால், அந்த தந்தையும் {பிரம்மாதியும்} கதையைச் சொன்னார்." - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section12.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 

ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Tuesday, August 05, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி5 | பிருகு பரம்பரை!

ஆதிபர்வம் பகுதி 5 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அருள்நிறைந்த பெருமுனிவர் பிருகு {Bhrigu}, தான்தோன்றியாக தன்னாலேயே நிலைத்திருக்கும் பிரம்மாவிடம் (Self Existing - சுயம்புவிடம்) இருந்து ஒரு வருணனின் வேள்வியில் பிறந்தவர். பிருகுவிற்கு சியவனன் {Chyavana} என்று ஒரு மகன் பிறந்தான். அவன்மீது மிகுந்த அன்புடனிருந்தார். சியவனனுக்கு நற்குணமிக்க பிரம்மாதி {Pramati} என்று ஒருவன் பிறந்தான். பிரம்மாதிக்கு தேவலோக நடனமாது கிரிடச்சி {Ghritachi} மூலம் ருரு {Ruru} என்றொரு மகன் பிறந்தான். ருருவுக்கு, பிரம்மத்வாரா {Pramadvara} என்ற தன் மனைவி மூலம் சுனகா {Sunaka} என்றொரு மகன் பிறந்தான். ஓ சௌனகரே! நற்குணமிக்க அவரே உமது மூதாதை. அவர் {சுனகா} தன்னை ஆன்மிகத்திற்கு அர்ப்பணித்திருந்தார். நற்பெயருடன், நீதிமானாக, வேதம் அறிந்தவர்களில் மேம்பட்டவராக, நற்குணத்துடன், உண்மைபேசி தன்னைச் செதுக்கி வைத்திருந்தார்," என்று பதிலுரைத்தார். சௌனகர், "ஓ சூத மைந்தனே {சௌதியே}, ஒப்பற்ற பிருகுவின் மைந்தனுக்கு சியவனன் என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது? எல்லாவற்றையும் சொல்வாயாக!" என்று கேட்டார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section5.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 

ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Monday, August 04, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி4 | சௌனகருக்கு அந்தணர்கள் காத்திருப்பு!

ஆதிபர்வம் பகுதி 4 - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அதற்கு தவசிகள் "ஓ லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, எங்களுக்கு கேட்பதில் ஆர்வமுள்ளதையே உம்மிடம் கேட்போம். நீர் ஒவ்வொரு கதையாகச் சொல்வீராக. எங்கள் குருவான சௌனகர், வேள்வித் தீயின் முன் அமர்ந்திருக்கிறார். தேவர்களும், அசுரர்களும் சம்பந்தப்பட்ட கதைகளில், அவரும் தேர்ந்த புலமையுள்ளவர். அவருக்கு மனிதர்கள், நாகர்கள், கந்தர்வர்கள் குறித்த அனைத்து வரலாறுகளும் தெரியும். ஓ சௌதியே! இந்த வேள்வியில் எங்களுக்கெல்லாம் தலைவர் அந்த படித்த பிராமணரே {சௌனகரே}. அவர் தகுதிவாய்ந்தவர்; தனது உறுதிகளுக்கும் (சத்தியங்களுக்கும்) உண்மையானவர்; ஞானமுள்ளவர்; ஆரண்யகத்திலும், சாத்திரங்களிலும் பண்டிதர், உண்மையைப் பேசுபவர்; அமைதியை விரும்புபவர்; எந்த உயிரையும் துன்புறுத்தாதவர் (அஹிம்சை, புலால் உண்ணாமை); {அவருக்கு} விதிக்கப்பட்டபடி நோன்பிருப்பவர். எங்களால் பெரிதும் மதிக்கப்படுபவர், ஆகையால், அவருக்காக {சௌனகருக்காக} காத்திருப்போம். அவர் எப்போது வந்து, தனது மதிப்புள்ள ஆசனத்தில் அமர்கிறாரோ, அப்போது அவர் கேட்பனவற்றிற்கு பதிலளியும்," என்றார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section4.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 

ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, August 03, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 3இ | ஜனமேஜயன் துயரம்

ஆதிபர்வம் பகுதி 3இ - அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: உதங்கா சாலை வழி நடந்து செல்கையில், அவனை நோக்கி ஒரு அம்மண பிச்சைக்காரன் வருவது போல், தோன்றுவதும் மறைவதுமாக இருந்தான். உதங்கா கம்மல்களைத் தரையில் வைத்துவிட்டு, நீரை நோக்கிச் சென்றான். அந்நேரத்தில் அந்தப் பிச்சைக்காரன் வெகுவிரைவாக அந்த இடத்திற்கு வந்து, கம்மல்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். உதங்கா தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை முடித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, கடவுள்களையும், ஆன்மிக குருக்களையும் வணங்கி வெகுவிரைவாகத் திருடனைப் பின்தொடர்ந்தான். மிகவும் சிரமப்பட்டு அவனை {திருடனை} முந்தி வந்து, கம்மல்களை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்க முயற்சித்தான். உடனே அந்தப் பிச்சைக்காரன் தனது மாற்றுருவத்தைத் துறந்து, உண்மையான உருவான தட்சகன் உருவுடன் தரையில் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தான். அந்தப் பொந்துக்குள் நுழைந்து தனது சொந்த இடமான பாம்புகளின் உலகிற்குச் சென்று சேர்ந்தான். உதங்கா, ராணி {மன்னன் பௌசியனின் மனைவி} சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தான். உடனே பாம்பைப் பின்தொடர அந்தப் பொந்தைத் தனது குச்சியை வைத்துப் பெரிதாக்கிப் பார்த்தான், ஆனால் பெரிய முன்னேற்றத்தை அவனால் {உதங்காவால்} காண முடியவில்லை. இந்திரன் அவனுக்கு {உதங்காவுக்கு} உதவ தனது இடியை (வஜ்ரம்) அனுப்பினான். அந்த இடி, அந்த குச்சிக்குள் நுழைந்து, அந்தப் பொந்தைப் பெரிதாக்கியது. உதங்கா அந்த இடியைப் பின்தொடர்ந்து பொந்துக்குள் சென்றான். உள்ளே சென்று பார்த்ததும், பாம்புகளின் உலகம் ஒரு முடிவே இல்லாதிருப்பதைக் கண்டான். நூற்றுக்கணக்கான அரண்மனைகளும், பெரிய கோபுரங்களுடன் பெரிய வாயிற்கதவுகளுடன் கூடிய மாளிகைகளும், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் உகந்த பல்வேறு அற்புதமான இடங்கள், எனப் பலவும் அங்கே இருந்தன. உதங்கா கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொல்லி பாம்புகளைப் பெருமைப்படுத்தி மனம் நிறைய வைக்க முயற்சித்தான்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 

ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Tuesday, July 29, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 3ஆ

ஆதிபர்வம் பகுதி 3ஆ - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, July 27, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 3அ | முழு மஹாபாரதம்

ஆதிபர்வம் பகுதி 3அ - அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Monday, July 21, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 2ஈ | முழு மஹாபாரதம்

ஆதிபர்வம் பகுதி 2ஈ

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Saturday, July 19, 2014

ஆடியோ கோப்பு - ஆதிபர்வம் பகுதி 2இ | முழு மஹாபாரதம்

ஆதிபர்வம் பகுதி 2இ

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 




இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Wednesday, July 16, 2014

ஆதிபர்வம் பகுதி 2ஆ | முழு மஹாபாரதம் - ஆடியோ கோப்பு

ஆதிபர்வம் பகுதி 2அ

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Saturday, July 12, 2014

ஆதிபர்வம் பகுதி 2அ | முழு மஹாபாரதம் - ஆடியோ கோப்பு

ஆதிபர்வம் பகுதி 2அ

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, July 06, 2014

ஆடியோ கோப்பு - முழு மஹாபாரதம் | ஆதிபர்வம் பகுதி 1ஆ

ஆதிபர்வம் பகுதி 1ஆ

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண

 

எம.பி.3-ஆக பதிவிறக்க 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, June 30, 2014

ஆடியோ கோப்பு - புதிய முயற்சி

நண்பர்களே,

மகாபாரதம் போன்ற இதிகாசத்தைப் படிப்பதைவிட, ஒருவர் படிக்கும்போது அதைக் கேட்பது நன்றாக இருக்கும் என்று சொல்வார் என் அன்பப்பா {தாய் வழி தாத்தா}. அவர் காலத்திலெல்லாம் டிவி கிடையாதல்லவா? ஊர்த்திண்ணையில் மகாபாரதம் படிக்கப்படும்போது, அதை ஊர்மக்கள் அனைவரும் கூடி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். இன்று நம்மிடையே அந்த நிலையில்லை.

நமது பதிவுகளை ஒலிவடிவத்தில் மக்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நான் கருதியதுண்டு. அதற்காக நானே கூட பதிவுகளைப் படித்து, அதை ஒலிப்பதிவு செய்து முயற்சி செய்து பார்த்தேன். அது கேட்பதற்கு நன்றாக இல்லாததால் அம்முயற்சியைக் கைவிட்டேன்.

முகநூலில்  சமீபத்தில் தீபா நடராஜன் என்ற வாசக நண்பர், மகாபாரதத்தை ஏன் ஒலிவடிவத்தில் கொடுக்கக்கூடாது என்று கேட்டார். நான் செய்த முயற்சியைச் சொல்லி, வேறு யாராவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். நான் செய்கிறேன் என்றார். செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்வேன் என்று நான் சொன்னேன்.

சொல்லி சில நாட்களிலேயே முதல் பதிவை ஒலியாகப் பதிந்து, எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள், திருத்தங்கள் வேண்டியிருக்கிறதா என்று கேட்டார். நான் சில திருத்தங்கள் இருந்தாலும் பரவாயில்லை, நாம் அடுத்தடுத்த பதிவுகளுக்குச் சென்றுவிடலாம். திருத்தங்கள் தோன்றும்போது அதை அடுத்த பதிவிலிருந்து திருத்திக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

தீபா நடராஜன் குறித்து ஒரு அறிமுகம்
(இது நான் அவரிடமே கேட்டுப் பெற்றது}

தீபா நடராஜன் பிரஞ்சு மொழி பேராசிரியராவார். தஞ்சாவூர் ஓவியக்கலை நிபுணர். வேலூரில் வசிக்கிறார். இவரது பூர்வீகம் திண்டிவனம். கல்வி {academic}, சான்றிதழ் {certificate}, குடியேற்றும் {immigration} சார்ந்த தேர்வுகளுக்காக மாணவர்களை ஆன்லைன் மூலமாகவும் தனிவகுப்புகள் மூலமும் பயிற்றுவிக்கிறார். மேலும் தஞ்சாவூர் ஓவியக்கலை மற்றும் பிற கலைகளையும் மாணவர்களுக்கு  கற்பிக்கிறார்.

அவர் அனுப்பித் தந்த ஆதிபர்வத்தின் முதல் பதிவை இங்கே பதிவிறக்கத்திற்குக் கொடுக்கிறேன். 

ஆன்லைனிலேயே கேட்க...


யூ-டியூபில்...




இனி அவர் அனுப்பித்தரும் ஒலிப்பதிவுகளை அந்தந்தப் பதிவின் கீழேயே பதிவிறக்கத்திற்குக் கொடுக்க இருக்கிறேன். வாசகர்கள் இம்முயற்சிக்குத் தங்கள் ஆதரவைத் தரவேண்டும்.

எப்படி ஆதரவு தருவது என்று கேட்கிறீர்களா? இந்த ஒலிக்கோப்பை பதிவிறக்கும் செய்து, உங்கள் தாய் தந்தைக்கோ வேறு பெரியோருக்கோ கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். அவர்கள் தரும் பின்னூட்டங்களை எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். அதுவே நீங்கள் எங்களுக்குத் தரும் ஆதரவாகும்.

தானாக முன்வந்து ஆடியோ கோப்பை அனுப்பித் தந்த தீபா நடராஜன் அவர்களுக்கு நன்றி.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்  

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்