clone demo

வியாழன், நவம்பர் 13, 2014

கீசக வதம் - மழையைத் தருமா?


மின்னஞ்சல், முகநூல், தொலைபேசி மூலம் நண்பர்கள் தெரிவிக்கும் வாழ்த்து மழையில் நனைந்தபடியே மூன்று நாட்களாக மொழிபெயர்ப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், அதுவரை அறிமுகமில்லாத ஒரு நண்பரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அந்த நண்பர் நமது ஆடியோ கோப்புகளைக் குறித்துக் கேட்டார். நான், “ஆடியோ மட்டும் அல்ல நண்பரே, இப்போது வீடியோ புத்தகமாகவும் அளித்து வருகிறோம்” என்றேன். “வீடியோ புத்தகமா? அப்படியென்றால்…?” என்று கேட்டார் நண்பர்.


நான் அவரது அலுவலகத்தில் இருந்த கணினியைக் கேட்டு வாங்கி, விராடபர்வத்தின் 18வது பகுதியில் இருந்த காணொளி புத்தகத்தைக் காட்டினேன். பார்த்துக் கொண்டேயிருந்தபோது,  “ஏங்க. இது கீசக வதம் பகுதில. விராட பர்வத்தில் கீசக வதம் படிச்சா மழை வரும்னு ஓர் ஐதீகம் இருக்கு கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றார். நான், “இல்லையே!” என்றேன். “அப்படித்தான் சொல்வாங்கங்க.” என்று என்னைப் பார்த்தார். “அப்படியா! இதை நான் கேள்விப்பட்டது கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பிற விஷயங்களைப் பேசினோம். விடைபெறும் நேரம் வந்த போது, அவர், "கல்கியோட தியாக பூமினு நினைக்கிறேன். அதுல கூட கீசக வதம் மழையைத் தரும்னு ஒரு குறிப்பு இருக்குனு ஞாபகம். இன்னிக்கு பாருங்க மழை கொட்டப்போகுதுனு நினைக்கிறேன்" என்றார். "சரிங்க நல்லா பெய்யட்டும்!" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, நான்  அந்த நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

சிரித்துவிட்டு வந்தேனே தவிர, அந்த நண்பர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. கூகிளில் தேடினேன்.  ஏதோ ஒரு லிங்கில் "தமிழ்நாட்டில் பழங்காலங்களில் மழை வேண்டி கீசகவதம் தெருக்கூத்தாகவும் நிகழ்த்தப்பட்டு வந்தது" என்ற குறிப்பு கிடைத்தது.

மேலும், http://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்பட_வரலாறு என்ற லிங்கில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் {ஒலியில்லாத சலனப்படம்} “கீசக வதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1916ல் அது வெளிவந்திருக்கிறது. 1912லேயே "ஹரிச்சந்திரா" வெளிவந்திருந்தாலும், இந்தியாவின் முதல்படம்தான் “ஹரிச்சந்திரா”வாம். அது மும்பையில் தயாரிக்கப்பட்ட படமாம். இதற்கு மழைக்கும் சம்பந்தம் இல்லைதான். எனினும் தென்னகத்தின் முதல் சலனப்படமே கீசக வதமா என்ற திகைப்பு ஏற்பட்டது.

அடுத்ததாக, கல்கியின் தியாக பூமி குறித்து நண்பர் சொன்னது நினைவுக்கு வரவே, அது குறித்துத் தேடுகையில், http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/thiyaga_boomi_2_1.html#.VGTJ-mf4bcc என்ற லிங்கில், தியாக பூமியின் இரண்டாவது பாகத்தில்

 நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.

     "ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.

     சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.

     பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.

என்ற ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி அது ஒரு கற்பனைக் கதைதானே, நிஜத்திலா நிகழ்ந்துவிட்டது என்று நாளிதழ் செய்திகளில் ஏதாவது அப்படி வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.

அப்படித் தேடிப் பார்த்ததில், http://www.dinamalar.com/news_detail.asp?id=1045988&Print=1 என்ற லிங்கில் ஒரு செய்தி கிடைத்தது. 2014 ஆகஸ்ட் 14ல் வெளிவந்த செய்தி அது. அதன் விபரம் கீழே…

பரமக்குடி : பரமக்குடியில் மழை வேண்டி மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தி வரும் நிலையில், சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டி வருகிறது.
இங்கு மூன்று ஆண்டுகளாக மழை இன்றி, நிலத்தடி நீர் 150 அடிக்கு கீழே போய்விட்டது. மகாபாரதத்தில் "விராட பர்வம்' காதை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன், ஆக., 7 முதல் சொற்பொழிவு நடக்கிறது. அன்று முதல் தினமும் மழை பெய்கிறது. ஆக.,11ல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித்தீர்த்தது. அடுத்து இரு நாட்களும் சாரல் மழை பெய்தது.

என்று அச்செய்திக்குறிப்பில் இருந்தது.

மேலும் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/05/12/மகாபாரதம்-தொடர்-சொற்பொழிவு/article2219426.ece?service=print என்ற லிங்கில் - 2014 மே மாதம் 12 தேதியிட்ட தினமணி நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருக்கிறது..

காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் அரு. சோமசுந்தரன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வில்லி பாரதம் பத்துப் பருவங்கள் 4337 பாடல்கள். அவற்றில் விராட பருவம் 4ஆம் பருவம் 330 பாடல்கள்.

பகவான் கிருஷ்ணரைத் துதித்து முதல் பாடல் தொடங்குகிறது. 5 சருக்கங்கள் மகாபாரதத்தில் நிகழும் காட்சிகள் அனைத்தும் விராட பருவத்தில் நிகழும். ஆகவே இதனை மினி பாரதம் அல்லது பிள்ளை பாரதம் என்பர்.

மகாபாரதத்தில் துரியோதனாதியர் 100 பேர். தீயவர்கள் விராட பருவத்தில் கீசகன் மற்றும் அவன் தம்பியர் 104 பேர் தீயவர்கள். மகாபாரதத்தில் திரௌபதியை காந்தாரி துரியோதனனிடம் அனுப்புகிறாள். விராட பருவத்தில் மகாராணி சுதேஷ்னை திரௌபதியை கீசகனிடம் அனுப்புகிறாள். மகாபாரதத்தில் 18 நாள் போர். இதில் ஏராளமான மழைக்குறிப்புக்கள் உள்ளன. எனவே விராட பருவம் படித்தால் மழை பொழியும் என்றார்.

என்ற செய்திக்குறிப்பு இருந்தது.

இந்தச் செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. நண்பர் கீசக வத பர்வம் என்றார். ஆனால், நமக்குக் கிடைத்த தரவுகள் விராட பர்வம் என்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சரி.... திரு.அரு.சோமசுந்தரன் சொல்லியிருப்பதை தினமணியில் குறிப்பிட்ட்டிருப்பது போல, நமது மொழிபெயர்ப்பில் எங்காவது மழை சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறதா என்று பார்த்ததில் http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section14.html என்ற லிங்கில் மழையோடு சம்பந்தப்படுவது போல, திரௌபதியிடம் கீசகன் பேசும் கீழ்க்கண்ட வசனம் கிடைத்தது.

உன்னோடு சேர முடியும் என்று, எனது இதயம் கொள்ளும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு, எரியும் காட்டைப் போல, கடுமையாகச் சுடர்விட்டெரியும் ஆசைத்தீ {காமத்தீ} என்னைத் தீவிரமாக எரிக்கிறது. ஓ! பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ! நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன்னுடனான சேர்க்கை எனும் ஆசையால் கூராக்கப்பட்டு அடிக்கப்பட்ட மன்மதனின் கடும் கணை, வெறிகொள்ளச் செய்யும் தனது மூர்க்கமான போக்கில், இந்த எனது இதயத்தைத் துளைத்து, அதன் மையத்தில் ஊடுருவிவிட்டது.

என்பதே அவ்வசனம். இன்னும் விராடபர்வத்தில் நிறைய பகுதிகள் இருக்கின்றன. நாம் இதுவரை 18 பகுதிகள்தான் செய்திருக்கிறோம். அவற்றில் ஏதும் மழைக்குறிப்புகள் இருக்கின்றனவா என்பதை நோக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.

நமது இந்திய மரபின் தொன்மங்கள் அனைத்தும் உருவகங்கள்தானே. இதுவும் இயற்கை குறித்த ஓர் உருவகமோ? அந்த உருவகத்தை நினைவுகூர்வதால் ஏதேனும் சக்தி தூண்டப்படுமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்போது வெளியே மழை “சோ”வெனப் பெய்து கொண்டிருக்கிறது... இயற்கையல்லவா நம்மைப் பார்த்து சிரிக்கின்றது...

இது குறித்து விவாதிக்க விரும்பும் நண்பர்கள், விவாத மேடை பகுதியைப் பயன்படுத்தலாமே!

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர் உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன் கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினி கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர் சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலி மாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன் லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன் ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2017, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.
Back To Top