Draupadi woe stricken on account of her husbands! | Virata Parva - Section 19 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 6)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: விராடனின் நாட்டில் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த நிலையைச் சொல்லி திரௌபதி பீமனிடம் வருந்துவது…
திரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஓ! பாரதரே, நான் சொல்லப்போகும் இஃது, எனது மற்றொரு துயரமாகும். எனது இதயத்தின் துயரத்தால் நான் இதைச் சொல்வதால், நீர் இதில் பழி கூறலாகாது. ஓ! பாரதகுலத்தின் காளையே {பீமரே}, முழுமையிலும் உம்மைக் கீழானவர் என்றும், வல்லவ சாதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டு, இழிந்த சமையல் அலுவலில் ஈடுபட்டுவரும் உம்மைக் கண்டு துயரடையாதவர்கள் யார் இருக்க முடியும்? வல்லவன் என்ற பெயரில் விராடனின் சமையற்காரனாக உம்மை மக்கள் அறிவது, அதனால் அடிமைத்தனத்தில் மூழ்குவது என்பதை விடச் சோகமானது என்ன இருக்க முடியும்?
ஐயோ, மடைப்பள்ளியில் {சமையலறையில்} உமது வேலைகள் முடிந்ததும், விராடனின் அருகே அடக்கமாக அமர்ந்து கொண்டு, உம்மை நீரே சமையற்காரனான வல்லவன் என்று அழைத்துக் கொள்ளும்போது, விரக்தி எனது இதயத்தை ஆட்கொள்கிறது. அந்த மன்னர் மன்னன் {விராடன்} உம்மை யானைகளுடன் மோதச்செய்யும்போதும், (அரண்மனையின்) அந்தப்புர மகளிர் அதைக்கண்டு எப்போதும் சிரிக்கும்போதும் நான் மிகவும் வருந்துவேன். அந்தப்புரத்தில் சிங்கங்கள், புலிகள், எருமைகள் ஆகியவற்றுடன் நீர் போரிடுவதை இளவரசி கைகேயி காணும்போது, கிட்டத்தட்ட நான் மயங்கி விடுவேன்.
அப்போது அந்தக் கைகேயியும், பணிப்பெண்களும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து எனக்குத் துணை செய்ய வந்து, என் அங்கங்களில் காயம் ஏதுமில்லையென்பதையும் வெறும் மயக்கம் மட்டும்தான் என்பதையும் காணும்போது, அந்த இளவரசி {கைகேயி}, தனது பெண்டிரிடம், “பெரும் வலிமைமிக்கச் சமையற்காரன் {வல்லவன்} விலங்குகளுடன் போரிடும்போது, இந்த இனிய புன்னகை கொண்ட மங்கை {மாலினி}, கலவியினால் ஏற்பட்ட கடமையாலும், பாசத்தாலுமே துயரடைகிறாள் என்பது நிச்சயம். இந்தச் சைரந்திரி பெரும் அழகு கொண்டவளாக இருக்கிறாள். வல்லவனும் சிறந்த அழகனாக இருக்கிறான். பெண்ணின் இதயத்தை அறிவது கடினம். அவர்கள் ஒருவருக்கொருவர் {ஏற்றுக்கொள்ள} தகுதியுடையவர்களே என்று நான் கருதுகிறேன். இதன் காரணமாகவே, (இத்தகு சமயங்களில்), தனது காதலனுடன் கொண்ட தொடர்பின் காரணமாகச் சைரந்திரி தவிர்க்க முடியாமல் அழுகிறாள். அந்த இருவரும் இந்த அரச குடும்பத்துக்குள் ஒரே சமயத்தில் நுழைந்தவர்கள் ஆவர்” என்று சொல்கிறாள் {இளவரசி கைகேயி}. இத்தகு வார்த்தைகளால் அவள் {இளவரசி கைகேயி} எப்போதும் என்னைக் கடிந்து கொள்கிறாள். இதன் காரணமாகக் கோபமடையும் என்னை உம்முடன் இணைத்துச் சந்தேகிக்கிறாள். அவள் {இளவரசி கைகேயி} இப்படிப் பேசும்போது நான் அடையும் துயரம் பெரிதாக இருக்கிறது. ஓ! பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமரே, ஏற்கனவே யுதிஷ்டிரரின் விஷயத்தில் துயரத்தில் இருக்கும் நான், இந்தப் பேரிடரில் துன்புறும் உம்மைக் காணும்போது உண்மையில் உயிர்வாழ விரும்பவில்லை.
தனித்தேரில் சென்று தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் வென்ற இளைஞர் {அர்ஜுனர்}, ஐயோ, இப்போது, மன்னன் விராடனின் மகளுக்கு ஆடலாசிரியராக இருக்கிறாரே. காண்டவ வனத்தை எரித்து அக்னியை மனநிறைவுகொள்ளச் செய்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, கிணற்றுக்குள் மறைத்துவைக்கப்பட்ட நெருப்பு போல (அரண்மனையின்) அந்தப்புரத்தில் இப்போது வாழ்கிறாரே. ஐயோ, மனிதர்களில் காளையும், எதிரிகளுக்குப் பயங்கரருமான அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, இப்போது, அனைவரும் நம்பிக்கையற்றுப் போகும் வகையில் {அலியாக} மாறுவேடத்தில் வாழ்கிறாரே. ஐயோ, வில்லின் நாணைச் சுண்டுவதால் ஏற்பட்ட தழும்புகளைக் கொண்ட தண்டாயுதம் போன்ற கரங்களைக் கொண்ட அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, ஐயோ தனது மணிக்கட்டுகளைக் கடகங்கள் கொண்டு மறைத்துத் துயரத்தில் தனது நாட்களைக் கடத்துகிறாரே.
ஐயோ, எந்தத் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} வில்லின் நாணொலியும், தோலுரைகளின் ஒலியும் எதிரிகள் ஒவ்வொருவரையும் நடுங்கச் செய்யுமோ, அப்படிப்பட்டவர் இப்போது தனது பாடல்களால் மகிழ்ச்சியடையும் பெண்களுக்கு, மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறாரே. ஓ!, சூரிய பிரகாசம் கொண்ட கீரீடம் தரித்த தலையில், அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்போது விகாரமாகச் சுருண்டிருக்கும் பின்னல் சடையை அணிந்திருக்கிறாரே. ஓ! பீமரே, பயங்கர வில்லாளியான அந்த அர்ஜுனர், இப்போது பெண்களுக்கு மத்தியில் பின்னல் அணிந்திருப்பதைக் காண்பது, எனது இதயத்தைத் துயர் கொள்ளச் செய்கிறது. தெய்வீக ஆயுதங்கள் அனைத்திலும் முதிர்வடைந்தவரும், அனைத்து அறிவியல்களுக்கும் களஞ்சியமாகவும் இருப்பவரான அந்த உயர் ஆன்ம வீரர் {அர்ஜுனர்}, இப்போது (அழகிய பெண்களைப் போல) காது வளையங்களை அணிந்திருக்கிறாரே.
கண்டங்களை மீற முடியாத பெருங்கடலின் நீரைப் போல, ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட மன்னர்களாலும் போரில் வீழ்த்த முடியாத அந்த இளைஞர் {அர்ஜுனர்}, இப்போது மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடலாசிரியராக இருந்து, மாறுவேடத்தில் அவர்களுக்குச் சேவகம் புரிகிறாரே. ஓ! பீமரே, மலைகள், காடுகள் கொண்ட முழுப் பூமியையும் அதன் அசையும் மற்றும் அசையா பொருட்களுடன் சேர்த்து எந்த அர்ஜுனரின் தேர்ச்சக்கரச் சடசடப்பு குலுங்கச் செய்ததோ! யாருடைய பிறப்பால் குந்தியின் துயரங்கள் அனைத்தும் அகன்றதோ, அந்த உயர்ந்த வீரரான உமது தம்பி {அர்ஜுனர்}, ஓ! பீமசேனரே, இப்போது என்னை அழச்செய்து கொண்டிருக்கிறாரே.
தங்கத்தாலான காது வளையங்களும், பிற ஆபரணங்களும் பூண்டு, சங்கு வளையல்களை மணிக்கட்டில் அணிந்து, என்னை நோக்கி வரும் அவரை {அர்ஜுனரை} நான் காணும்போது, எனது இதயம் விரக்தியால் துயருறுகிறது. இந்தப் பூமியில், பராக்கிரமத்தில் தனக்கு இணையில்லாத வில்லாளியான தனஞ்சயர் {அர்ஜுனர்}, மகளிர் சூழ பாடிக் கொண்டு தனது நாட்களை இப்போது கடத்திக் கொண்டிருக்கிறாரே. அறம், வீரம், சத்தியம் ஆகிவற்றால் உலகத்தால் மிகவும் ரசிக்கப்படும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, பெண்ணின் உருவில் இப்போது வாழ்ந்து வருவதைக் காணும்போது எனது இதயத்தைத் துயரம் பீடிக்கிறது. தேவனைப் போன்ற அந்தப் பார்த்தர் {அர்ஜுனர்}, பெண் யானைகளால் சூழப்பட்ட மதங்கொண்ட {ஆண்} யானை போல, மகளிருக்கு மத்தியில் இருந்து கொண்டு, மத்ஸ்யர்ளின் மன்னனான விராடனின் முன்பு இசைச்சபையில் காத்திருக்குப்பதைக் காணும்போது, திசைகளின் உணர்வையே நான் இழந்துவிடுகிறேன். தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்படிப்பட்ட அதீத துயரத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எனது மாமியார் {குந்தி} அறியமாட்டாள் என்பது நிச்சயம். குருகுலத்தின் வழித்தோன்றலான அஜாதசத்ரு {யுதிஷ்டிரர்}, பேரழிவைக் கொடுக்கும் பகடைக்கு அடிமையாகி, பெருந்துன்பத்தில் மூழ்கியிருக்கிறார் என்பதையும் அவள் {குந்தி} அறியமாட்டாள்.
ஓ! பாரதரே {பீமரே}, உங்கள் அனைவரிலும் இளையவரான சகாதேவர், இடையர் வேடத்தில் மாடுகளை மேற்பார்வையிடுவதைக் காணும்போது, நான் வெளிறிப் போகிறேன். எப்போதும் சகாதேவரின் அவல நிலையை நினைத்துக் கொண்டிருப்பதால், ஓ! பீமசேனரே, என்னால் உறங்க முடியவ
வில்லையெனும்போது, நீர் ஓய்வைக் குறித்துச் என்ன சொல்வீர்? ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, கலங்கடிக்கப்பட இயலாத அந்த வீரர் {சகாதேவர்} இத்தகு துயரத்தால் பீடிக்கப்பட என்ன பாவம் செய்தாரோ? ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {பீமரே}, மத்ஸ்யனால் {விராடனால்} தனது பசுக்களைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட உமது தம்பியைக் {சகாதேவரைக்} காணும்போதெல்லாம் நான் துயரத்தில் மூழ்குகிறேன். கர்வமிக்க அந்த வீரர் {சகாதேவர்} விராடனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனது {மன்னன் விராடனது} இடையர்களுக்குத் தலைவராகச் சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடை அணிந்திருப்பதைக் காணும்போதெல்லாம் நான் நோயால் தாக்கப்படுகிறேன் {மனம் கொதிக்கிறேன்}.
வில்லையெனும்போது, நீர் ஓய்வைக் குறித்துச் என்ன சொல்வீர்? ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, கலங்கடிக்கப்பட இயலாத அந்த வீரர் {சகாதேவர்} இத்தகு துயரத்தால் பீடிக்கப்பட என்ன பாவம் செய்தாரோ? ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {பீமரே}, மத்ஸ்யனால் {விராடனால்} தனது பசுக்களைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட உமது தம்பியைக் {சகாதேவரைக்} காணும்போதெல்லாம் நான் துயரத்தில் மூழ்குகிறேன். கர்வமிக்க அந்த வீரர் {சகாதேவர்} விராடனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனது {மன்னன் விராடனது} இடையர்களுக்குத் தலைவராகச் சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடை அணிந்திருப்பதைக் காணும்போதெல்லாம் நான் நோயால் தாக்கப்படுகிறேன் {மனம் கொதிக்கிறேன்}.
உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தையும், நன்னெறிகளும் கொண்ட வீரரான சகாதேவரை எனது மாமியார் {குந்தி} எப்போதும் பாராட்டுவாள். அவர் {சகாதேவர்} பெருங்காட்டுக்கு {வனவாசத்துக்குப்} (நம்முடன்) புறப்படும்போது, மகன்களிடம் பெரும் பிணைப்புடைய குந்தி, அழுது கொண்டே சகாதேவரை அணைத்துக் கொண்டாள். பிறகு அவள் {குந்தி} என்னிடம், “நாணமும், இனிய பேச்சும், அறமும் கொண்டவன் சகாதேவன். அவனே {சகாதேவனே} எனக்குப் பிடித்தமான மகன். எனவே, ஓ! யக்ஞ்சேனி {திரௌபதி}, இரவும் பகலும் காட்டில் அவனை {சகாதேவனைக்} கவனித்துக் கொள். மென்மையும், துணிச்சலும் கொண்டு, மன்னருக்கு {யுதிஷ்டரருக்கு} அர்ப்பணிப்புடனும், தனது அண்ணனை {யுதிஷ்டிரரை} எப்போதும் வழிபடுபவனுமான அவனுக்கு {சகாதேவனுக்கு}, நீயே உணவூட்டு” என்றாள் {குந்தி}. ஓ! பாண்டவரே {பீமரே}, வீரர்களில் முதன்மையானவரான சகாதேவர், மாடுகளைக் கவனிப்பதில் ஈடுபடுவதையும், இரவில் கன்றின் தோலில் படுத்து உறங்குவதையும் கண்டு என்னால் எப்படி உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்?
அழகு, வலிமை, புத்திக்கூர்மை ஆகிய மூன்று குணங்களால் முடிசூட்டப்பட்டவர் {நகுலர்}, விராடனின் குதிரைகளைக் கண்காணிப்பவராக இப்போது இருக்கிறாரே. காலம் கொண்டு வந்திருக்கும் மாற்றத்தைப் பாரும். போர்க்களத்தில் யாரைக் கண்டால் எதிரிப் படைகள் {அஞ்சி} ஓடுமோ, அந்தக் கிரந்திகர் {நகுலர்}, மன்னரின் {விராடரின்} முன்னிலையில் குதிரைகளைப் பழக்கிக் கொண்டு, அவற்றை விரைந்து ஓட்டிச் செல்கிறாரே. ஐயோ, இப்போது அந்த அழகான இளைஞர் {நகுலர்}, அலங்காரமாகச் சிங்காரிக்கப்பட்ட மத்ஸ்யர்களின் மன்னனான சிறந்த விராடனின் முன்பு, அவனது குதிரைகளைக் காட்டிக் கொண்டு அவனுக்காக {விராடனுக்காகக்} காத்திருக்கிறாரே.
ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே- பீமரே}, யுதிஷ்டிரரின் காரணமாக இதுபோன்ற நூறு வகையான துயரங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, மகிழ்ச்சியாக இருப்பதாக எப்படி நீர் நினைக்கிறீர்? ஓ! குந்தியின் மகனே {பீமரே}, இவற்றையெல்லாம் விஞ்சும் பிற சோகங்களைச் சொல்கிறேன் கேளும். நீங்கள் உயிரோடிருக்கும் போதே, என்னை மெலிவடையச் செய்யும் இதுபோன்ற பலதரப்பட்ட துயரங்களை விட என்ன கொடுமை எனக்கு இருக்க முடியும்?”, என்றாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.